adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
my cart
ரிஷபம்: 2022 டிசம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

ரிஷபம்:

டிசம்பர் மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன், எட்டில் மறைந்தாலும் ஆட்சி நிலையில் இருப்பதும், இயற்கை சுபரான குரு, லாபத்தில் உள்ளதும் ரிஷபத்திற்கு யோகம் தரும் அமைப்பு. ராசிநாதனோடு தனாதிபதி புதனும் எட்டில் இருப்பதால் இந்த மாதம் உங்களில் சிலருக்கு மறைமுகமான வழியில் எதிர்பாராத பணவரவு இருக்கும். சாதகமான கிரக அமைப்புகள் உங்களுக்கு மன நிறைவைக் கொடுக்கும் என்பதால் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் அடுத்த வருடம் கிடைக்க இருக்கும் நன்மைகளுக்கு அச்சாரம் போடுகின்ற மாதமாக இருக்கும்.  


எட்டாமிடம் சுபத்துவ வலுவை அடைவதால் வெளிநாடு வெளிமாநிலம் போன்ற தூர இடங்களுக்கு கல்வி கற்க மற்றும் வேலை செய்ய விருப்பம் கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு இப்போது வீட்டிலோ அலுவலகத்திலோ அனுமதி கிடைக்கும். தாய்நாட்டை விட்டு வெளியே இருக்கின்றவர்களுக்கு இருக்கும் இடத்திலேயே வேலை தொழில் போன்றவைகள் நல்ல நிலையில் இருக்கும்.  இளைய பருவத்தினருக்கு வாழ்க்கை எவ்விதம் செல்லும் என்பதற்கான அடையாளங்கள் தெரியும். மனதில் உற்சாகமும், எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும். உங்களின் அனைத்துக் கஷ்டங்களும் நீங்குவதற்கான ஆரம்பங்கள் இந்த மாதம் உண்டு. பிரச்னைகள் இனி இருக்காது.

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை இருக்கும். வேலை விஷயமாக பிரிந்து இருக்கும் தம்பதிகள் ஒன்று சேர முடியும். வழக்குகளுக்கு நல்லவித முடிவு இருக்கும். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதம் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மணவாழ்வில் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு அது தீரும். சிலருக்கு வேலை மாற்றம் நடந்து வெளியூரில் வேலை அமையும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு இது மிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும். எல்லாவிதமான வியாபாரமும் இப்போது கை கொடுக்கும்.

4,5,6,13,14,15,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ம் தேதி அதிகாலை 4.02 முதல் 25-ம் தேதி அதிகாலை 3.31 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.