adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மிதுனம்: 2022 டிசம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மிதுனம்:

மிதுனத்திற்கு  தொட்டது துலங்கும் மாதம் இது. தொட்டது துலங்கும் என்கின்ற வார்த்தையினை வெகுகாலமாக நான் மிதுன ராசிக்கு எழுதவில்லை என்பதை இங்கே நினைவு படுத்துகிறேன். யோகாதிபதி சுக்கிரனும் ராசிநாதன் புதனும் இந்த மாதம் முழுவதும் ஏழாம் இடத்தில் இருந்து ராசியை பார்க்கும் நிலையில் உள்ளதால் உங்களின் முன்னேற்றங்கள் ஆரம்பிக்க இருக்கும் மாதம் இது. இதுவரை நடந்த எதிர்மறை பலன்கள் யாவும் விலகிக் கொண்டிருப்பதை இனி நீங்கள் உணர முடியும். இனிமேல் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும். உங்களில் சிலருக்கு சுப காரியங்கள் நடைபெற முன்னேற்பாடுகள் உண்டு. சிலர் திருமணம் நடக்கப் பெறுவீர்கள். அல்லது வாழ்க்கைத் துணையை அடையாளம் காணும் நிகழ்ச்சியாவது இந்தமாதம்  இருக்கும்.


பத்தாம் இடத்தில் வலுவாக உள்ள குரு இரண்டு மற்றும் ஆறாம் இடங்களைப் பார்ப்பது தொழில் வேலை, வியாபாரம் போன்றவைகளுக்கு நல்ல பலனை அளிக்கும். பேசிப் பிழைக்கும் தொழில் அமைப்புகளில் உள்ள மிதுன ராசிக்காரர்கள் அனைவரும் இந்த மாதம் நல்ல பலன்களை அடைவீர்கள்.  குறிப்பாக தொலைபேசியில் பேசி வாடிக்கையாளர்களை கவரக்கூடிய நிலையில்  உள்ள இளைய பருவத்தினருக்கு மாதம் முழுவதும் வருமானமும், டார்கெட் முடிப்பதும் இருக்கும் ஆசிரியர்கள் வழக்கறிஞர்கள் மார்க்கெட்டிங் துறையினருக்கு இனிமேல் நிம்மதி உண்டு ஐந்தில் கேது உள்ளதால் உங்களில் சிலர் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதுவரை குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் இந்தமாதம்  அவற்றை முடிப்பீர்கள்.

இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி இருந்த அனைத்து விஷயங்களும் முடிவுக்கு வரத் துவங்கும். இளைய பருவ மிதுன ராசிக்காரர்கள் அஷ்டமச் சனியால் கடுமையான  கஷ்டங்களை அனுபவித்து விட்டீர்கள். இனி நீங்கள் கலங்கத் தேவையில்லை. சிறிது நல்லவை நடப்பது போல தோன்றியவுடன் உடனே அகலக்கால் வைக்க வேண்டாம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். 2023-ம் வருடம் உங்கள் வருடமாக இருக்கும். எதிலும் ஜெயிப்பீர்கள். கவலை வேண்டாம்.

1,2,3,10,11,12,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ம் தேதி அதிகாலை 3.31 முதல் 27-ம் தேதி அதிகாலை 3.30 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை இந்த நாட்களில் தள்ளி வைக்கவும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.