adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
என் குழந்தை பிறந்ததால் தான் கணவர் இறந்தாரா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

வசந்தி, சென்னை.

கேள்வி.

கணவர் கடந்த வருடம் மே மாதம் 22ஆம் தேதி இறந்தார்அப்போது என்னுடைய பெண் குழந்தைக்கு வயது எட்டு மாதம்தான். இந்தக் குழந்தை பிறந்ததால்தான் ன் கணவர் இறந்துவிட்டார் என்று அனேகர் சொல்கின்றனர்தற்போது குழந்தைக்கு சந்திரனோடு சேர்ந்த ராகுவின் தசையும் நடப்பதால் இவளின் கல்வி பற்றிய கலக்கத்திலும் இருக்கிறேன்எட்டு மாதத்திலேயே இவள் தந்தையை இழப்பதற்கான ஜோதிட காரணங்கள் என்ன? இந்தக் கேள்வி என்னை தினமும் தூங்க விடாமல் செய்கிறதுஅநேக வழிகளில் உங்களிடம் பதில் வாங்க ஆயிரம் முறை முயற்சித்தும் தோற்றுப் போய், இப்போது மாலைமலர் வழியாக வருகிறேன். பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில்.

(மகர லக்னம், மிதுன ராசி. 6ல் சந், ராகு, 9ல் செவ், 10ல் சூரி,சுக்,புத, 11ல் குரு, 12ல் சனி, கேது, 19-10-2019, மதியம் 12-28 சென்னை.)

தற்போது மிதுனத்திற்கு அஷ்டமச் சனி நடந்து கொண்டிருப்பதால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே மிதுன ராசிக்காரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத் தலைவர்கள் எவரும் வயதுக்கேற்ற வகையில் நன்றாக இல்லை என்பதை அடிக்கடி எழுதிவருகிறேன்.

வேத ஜோதிடத்தின் விதிகள் துல்லியமானவை. அவை என்றும் பொய்ப்பதில்லை. மகளது ஜாதகப்படி தந்தையைக் குறிக்கும் ஒன்பதாம் வீட்டில் பாபக்கிரகமான செவ்வாய் அமர்ந்து, அந்த வீட்டை சனியும் தனது பத்தாம் பார்வையால் பார்த்ததால் ஒன்பதாம் பாவகம் வலுவிழந்தது. ராசிக்கு 9-ஆம் இடத்தையும் சனி பார்க்கிறார். கூடுதலாக பிதுர்காரகனாகிய சூரியன் திக்பலமாக இருந்தாலும், நீச்சம் அடைந்து, சுக்கிரனோடு இருந்தும் சுபத்துவம் அடையாமல் அதிக தூரம் விலகி, நவாம்சத்தில் சனியோடு இணைந்து பாபத்துவமாக இருக்கிறார்.

இந்த அமைப்பின்படி ஒன்பதாம் பாவகமும், ஒன்பதாம் பாவகாதிபதியும், சூரியனும் பாதிக்கப்பட்டிருப்பதால் பேச ஆரம்பிக்கும் வயதிலிருந்தே உன் மகளுக்கு தந்தை இல்லை என்கின்ற அமைப்பு உண்டு. அதேநேரத்தில் இந்த குழந்தை பிறந்ததால்தான் உன்னுடைய கணவர் இறந்தாரா என்று கேட்டால், கேள்வியே முட்டாள்தனமானது என்று சொல்வேன்.

ஒருவரின் இறப்பு அவர் சம்பந்தப்பட்ட அனைத்து உறவுகளின் ஜாதகங்களிலும் பதிவாகி இருக்கும் என்பதே உண்மை. உன்னுடைய ஜாதகத்தின்படியும் உன் கணவரின் மரணம் நிகழ்ந்திருக்கும். சொல்லப்போனால் அந்த நாளில் தானே இறக்க வேண்டும் என்பது உன் கணவரின் ஜாதகத்திலும் கண்டிப்பாக பதிவாகி இருக்கும். உன்னுடைய கணவனை நீ அந்த நாளில் இழக்க வேண்டும் என்பது முன்பே நிச்சயிக்கப்பட்ட விதி. ஆகவே குழந்தை பிறந்ததால்தான் தந்தை இறந்தார் என்று ஒன்றும் அறியாத இந்தப் பிஞ்சுவின்  தலையில் பழியைச் சுமத்த வேண்டாம்.

மிதுன ராசிக்காரர்கள் இருக்கின்ற வீடுகளில் குடும்பத் தலைவிகள் நிம்மதியாக இல்லை என்பது உண்மை. வரும் 2022 செப்டம்பர் மாதம் இந்த குழந்தைக்கு அஷ்டமச்சனி முடிகின்ற வரையில் உன்னுடைய தூக்கமில்லாத நிலை நீடிக்கும். தந்தையின் இழப்பைத் தவிர்த்து உன் குழந்தைக்கு சனி, கேதுவுடன் இணைந்து சூட்சுமவலுப் பெற்று, புதன், சுக்கிரன் ஆகியோர் நல்ல நிலையில் அமர்ந்துள்ள யோக ஜாதகம். 19 வயதிற்கு பிறகு ஆரம்பிக்க இருக்கும் குருதசை முதல் இந்தக் குழந்தை மிகவும் நன்றாக இருக்கும்.

இந்த குழந்தையின் எதிர்காலத்தை பற்றி நீ நிச்சயமாக கவலைப்படத் தேவையில்லை. எதிர்காலத்தில் கணிதம், கம்ப்யூட்டர் போன்ற புதனின் துறைகளில் நன்கு படித்து, நல்ல வேலை அமைப்புகளில் அமர்ந்து, நல்ல வாழ்க்கையை கொண்டிருக்கக்கூடிய குழந்தைதான் இவள். குழந்தையின் மிதுனராசிக்கு அஷ்டமச்சனி முடிந்ததற்கு பிறகு உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும். வாழ்த்துக்கள் அம்மா. நன்றாக இருப்பாய்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 


தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.


குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


மாலை மலர்   நாளிதழில் குருஜி அவர்களின் பதில்களை பெற கேள்வியை அனுப்ப வேண்டிய தபால் முகவரி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008


இமெயிலில் கேள்விகளை அனுப்ப :-EMAIL ID : gurujianswers@gmail.com