adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மகன் குண்டாக இருக்கிறான்.. சரியாகுமா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

பிரியா மூர்த்தி, திருவனந்தபுரம்.

கேள்வி:

தற்போது 12ஆம் வகுப்பு செல்லவிருக்கிறான். அவனது எதிர்காலம் எவ்வாறு உள்ளது? அவனது ஜாதகத்தில் புதனின் நிலை என்ன? ஒபிசிட்டி பிராப்ளம் அவனுக்கு உள்ளது. குண்டாக இருக்கிறான். இது புதன் தசையோடு சரியாகிவிடுமா? நன்றாகவே படிக்கிறான். ஆனாலும் எதிர்பார்க்கும் மதிப்பெண் கிடைப்பதில்லை. ஜனவரி 2021 முதல் ஜூன் 2021 வரையிலான காலகட்டம் எவ்வாறு இருக்கும்? எதிர்பார்க்கும் கல்லூரியில் இடம் கிடைக்குமா? சனி சுக்கிரனோடு சேர்ந்து இருப்பதால் சுக்கிரதசை ஆதிபத்திய காரகத்துவ விஷயங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்துமா? தங்களின் மேலான பதிலை எதிர்பார்க்கிறேன்.

பதில்:

(மேஷ லக்னம், மீன ராசி. 2ல் ராகு, 3ல் சுக், சனி, 4ல் சூரி, புத, குரு, 8ல் கேது, 11ல் செவ், 12ல் சந், 20-7- 2003 அதிகாலை 12-10 கோவை)

மகனது ஜாதகத்தில் புதன் கிரகம் தான் அதிகமான சுபத்துவ நிலையில் இருக்கிறது. உச்ச குருவுடன் 10 டிகிரிக்குள் இணைந்து நான்காம் வீட்டில் இருப்பதால் புதனின் காரகத்துவங்கள் மகனுக்கு சிறப்பைத் தரும். படிப்பில் நல்ல நிலையில் முதல் மாணவனாகவே இருப்பார். குழந்தைகளை இயல்பாக படிக்க விடுங்கள். அதைப் போட்டு படி, படி, படி என்று படிப்பின் மேல் ஒரு பயத்தை ஏற்படுத்தாதீர்கள்.

லக்னாதிபதி செவ்வாய் வர்கோத்தமம் பெற்று, அம்சத்தில் அனைத்து கிரகங்களும் ஆட்சி, நட்பு போன்ற மிக நல்ல நிலையில் இருக்கின்ற யோக ஜாதகம் உங்கள் மகனுடையது. பொதுவாக மேஷ லக்னத்திற்கு புதன் தசை நல்ல பலன்களை செய்யாது என்று கூறினாலும் புதன் சுபத்துவமாக இருக்கின்ற நிலைமைகளில் நல்ல பலன்களையே தருவார். அதன்படி இந்த இளம் பருவத்தில் வித்தைக்கு அதிபதியான புதன் நல்ல கல்வியை மகனுக்கு தந்தே தீருவார்.

இயற்கைச் சுபரான குரு ஜாதகத்தில் ஆதிபத்திய விசேஷம் இல்லாமல் வலுத்திருக்கும் நிலைகளில் ஒருவருக்கு ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் நோய் வரும். மகனது ஜாதகத்தில் 9-12-க்குடைய இரு ஆதிபத்திய நிலையில் இருக்கும் குரு, ஒன்பதாம் இடத்தோடு தொடர்பு கொள்ளாமல் 12-ம் இடமான அசுப ஆதிபத்தியத்தோடு தொடர்பு கொள்கிறார்.

அதாவது 9 க்கு எட்டில் மறைந்து, 12-ஆம் இடத்திற்கு ஐந்தில் அமர்ந்து பன்னிரெண்டாம் இடத்தை பார்க்கிறார். அதோடு நான்கு, பன்னிரண்டாம் அதிபதிகளின் பரிவர்த்தனையும் இருக்கிறது. இத்தகைய நிலையில் ஒருவருக்கு ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் நோய் ஏற்படும். இது இன்னும் சிறிது காலத்திற்கு மகனுக்கு நீடிக்கும்.

அடுத்து தசை நடத்த இருக்கும் கேது, எட்டாமிடத்தில் மறைந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்த விருச்சிக வீட்டில் இருப்பதாலும், உச்ச குரு பார்வை பெறுவதாலும், மகன் இம்முறை நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல மதிப்பெண்களை எடுத்து மெரிட்டில் நல்ல கல்லூரியில் சேருவார். எட்டில் சுபமான கேது என்பதால் உங்களை விட்டு விலகி படிப்பார்.

சுக்கிரன், சனி இணைவதால் சுக்கிர தசையில் சில பாதிப்புகள் ஏற்படத்தான் செய்யும். அதே நேரத்தில் இங்கே மகனுடைய விஷயத்தில் சுக்கிரன், சனியும் தனது நண்பரான புதனின் வீட்டில் உபஜெய ஸ்தானம் என்று சொல்லப்படும் மூன்றாம் இடத்தில், நட்பு நிலையில் இணைந்திருப்பதாலும், இருவருக்கும் 13 டிகிரி இடைவெளி அமைந்து சுக்கிரன் அம்சத்தில் ஆட்சி பெற்றிருப்பதாலும், உச்ச குருவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதாலும் அடுத்து வரும் சுக்கிரதசை மகனுக்கு கெடுபலன்களை செய்யாது. அனைத்து கிரகங்களும் நல்ல நிலையில் சுபத்துவமாக இருப்பதால் மகனின் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். வாழ்த்துக்கள்.

(31.03.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.