adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 235 (30.04.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

எஸ் ஜெயந்தி கொளத்தூர்

கேள்வி

மகனுக்கு நீங்கள் சொன்னபடி திருமணம் நடந்தது அய்யா. மகளின் வாழ்க்கைக்கு விடை தெரியாமல் பரிதவிக்கிறேன். 34 வயதாகியும் திருமணம் கைகூடி வரவில்லை. காரணம் என்ன? மகள் நன்கு படித்திருந்தும் படிப்பிற்கு சம்பந்தமில்லாமல் ஒரு பேக்கரியில் தொழில் கற்று வருகிறார். அவளுக்கு எப்போது திருமணம் நடத்தி பார்க்க முடியும்

பதில்

(மிதுன லக்னம், மகர ராசி, 1ல் சூரி, சுக், 5ல் செவ், சனி, 6ல் கேது, 7ல் குரு, 8ல் சந், 12ல் புத, ராகு. 18-7-1984 காலை 6-55 சென்னை)

மகளின் ஜாதகப்படி லக்னத்திற்கு ஐந்தில் செவ்வாய் சனி இணைந்து, ராசிக்கு ஐந்தில் ராகு அமர்ந்து கடுமையான புத்திர தோஷ அமைப்பு இருக்கிறது. 37 வது வயதில்தான்  அவள் அம்மாவாகும் அமைப்பு இருப்பதால், இந்த வருடம் கார்த்திகை மாதத்திற்கு பிறகு நடக்கும் குருதசையில், குடும்பாதிபதியாகி குடும்ப வீடான  இரண்டாமிடத்தைப் பார்க்கும் சந்திரனின் புக்தியில் வரும் செப்டம்பர் மாதம் முதல் அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் திருமணம் நடக்கும். ஒரு முறை ஸ்ரீகாளஹஸ்தி சென்று காளத்திநாதனை தரிசித்து வாருங்கள். சித்திரை மாதத்திற்குள் கணவன் அமைவார். வாழ்த்துக்கள்.

எம். விஷ்ணுராம், புதுச்சேரி.

கேள்வி.

எனது மகனின் மூலம் தங்களின் மாலைமலர் எழுத்து எனக்கு அறிமுகமானது. நான் தங்களின் எழுத்தை இங்குள்ள பல்வேறு ஜோதிட நண்பர்களுக்கு அறிமுகம் செய்தேன். தங்களின் கட்டுரையைப் படித்த பின்னர் அவர்கள் அனைவரும், தங்களின் ஜோதிட ஞானத்தில் உள்ள குறைகளையும், தொழில்ரீதியிலான தங்களின் கணிக்கும் முறைகளையும் வெகுவாக மாற்றிக்கொண்டதாக என்னிடம் சொல்கிறார்கள். மூன்று திருமணம் செய்தும் மூன்றும் நிலைக்காமல் தனியே வாழ்கிறேன். இதுவரை எந்தத் தொழிலிலும் பயனில்லை. அனைத்திலும் தோல்வி, 20 லட்சம் கடன் உள்ளது. 2000ம் ஆண்டு முதல் ஹோட்டலில் வேலை செய்து, 2006ல் சொந்தமாக ஓட்டல் ஆரம்பித்து, நட்டம் வந்து 2010ல் நடுத்தெருவிற்கு வந்தேன். மீண்டும் விடாமுயற்சி செய்து 2012இல் ஒரு பாரில் ஓட்டல் வைத்தேன். மறுபடியும் நட்டம். ஏகப்பட்ட கடன். 2017இல் வங்கியில் கடன் பெற்று லாரி வாங்கி அதுவும் நட்டமாகி லாரியை வங்கி எடுத்துக் கொண்டது. எனது வாழ்நாள் முழுவதும் பல்வேறு துன்பங்கள் மற்றும் இழப்புக்கள் மட்டும்தான். அனைத்தையும் பொறுத்துக் கொண்டு விடாமுயற்சியுடன் வாழ முயற்சி செய்கிறேன். கடனை அடைப்பதற்கு எந்த வழியும் தெரியவில்லை. நிம்மதி இல்லை. சாப்பாடும் தூக்கமும் இல்லை. வெளிநாடு செல்ல வாய்ப்பு வந்திருக்கிறது. போகலாமா? கடன் தீர வழி உள்ளதா? நோய், ஆயுள் நிலை என்ன? என்னால் எனது குழந்தைகளுக்கு பன் உள்ளதா அல்லது அவர்களை கஷ்டத்தில் விடுவேனா? சிறுவயது முதலே உலக அளவில் பெரும் சாதனை புரிய ஆர்வம் இருக்கிறது. அந்த வாய்ப்பு வருமா?

பதில்

(சிம்ம லக்னம், மகர ராசி, 2ல் சூரி, புத, 4-ல் சுக், 6-ல் சந், சனி, கேது, 7ல் குரு, 12ல் செவ், ராகு, 9-10-1962 அதிகாலை 4-20 ரங்கூன்)

சிம்ம லக்னத்திற்கு வரக்கூடாது என்று நான் சொல்லும் சனிதசை 2008 முதல் நடந்து கொண்டிருக்கிறது. பாபத்துவம் அடைந்த எந்த ஒரு கிரகமும் அதிகமான கெடுபலன்களைச் செய்துதான் தீரும். ஜாதகப்படி சனி ஆறாமிடத்தில் அமர்ந்து, ராகுவுடன் இணைந்த நீச செவ்வாயின் பார்வை பெற்று, விரையாதிபதி சந்திரனின் சாரத்தில் இருக்கிறார். இரு ஆதிபத்தியம் உள்ள கிரகங்கள் எந்த ஆதிபத்தியத்தோடு அதிகம் தொடர்பு கொள்கிறதோ அதன் பலனை தனது தசையில் அதிகம் செய்யும் என்ற விதிப்படி சனி தசையில் முதல் பகுதி முழுவதும் உங்களுக்கு கடன் தொல்லைகள் மட்டுமே இருக்கும்.

7-க்குடைய சனி ஆறில் மறைந்து, கடுமையான பாபத்துவ அமைப்பில் இருப்பதால், மூன்று திருமணங்கள் நடந்தும் எதுவும் நிலைக்கவில்லை. ஏழாமிடத்தில் அமர்ந்திருக்கும் குருவும் கடுமையான பாபத்துவத்தில் இருக்கும் ராகுவின் சாரத்தில் இருப்பது நல்லதல்ல. சனி தசை முழுவதும் கடன் தொல்லைகள் இருக்கத்தான் செய்யும். அதே நேரத்தில் சிம்ம லக்னத்திற்கு அவ யோகர்களான  புதன், சுக்கிர புக்திகள் முடிந்து விட்டதால் இனிமேல் கடனை அடைப்பதற்கு உரிய வழிகள் ஆரம்பிக்கும்.

அவயோக கிரகங்கள் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டால் நஷ்டம் தரும் தொழில்களை தரும் என்பதன்படி, சுக்கிரன் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டு உங்களுக்கு ஓட்டல் தொழிலில் நஷ்டத்தை தந்தார். சனியின் லாரித் தொழிலும் உங்களுக்கு ஏற்றதல்ல. தற்போது பன்னிரெண்டாம் அதிபதி சந்திரனின் புக்தி நடந்து கொண்டிருப்பதால் வெளிநாடு செல்வீர்கள். வெளிநாட்டில் நிம்மதி கிடைக்கும். வெளிநாட்டில் சம்பாதித்து கடனை அடைக்க முடியும்.

கடன் அதிகமாக இருப்பதால் நோய்த் தொந்தரவுகள் இருக்காது. ஆரோக்கியம் வயதுக்கேற்ற வகையில் இருக்கத்தான் செய்யும். லக்னத்தை குரு பார்ப்பதால் தீர்க்காயுள் உண்டு. ஐந்தாம் பாவகம் நன்றாகவே உள்ளதால் குழந்தைகளுக்கு தந்தைக்குரிய கடமைகளைச் செய்வீர்கள். உலக அளவில் பெரிய சாதனைகளைச் செய்வதற்கு தசா புக்திகள் கருணை காட்ட வேண்டும். 60 வயதிற்கு மேல் நிம்மதியாக இருக்கும் ஜாதகம் உங்களுடையது. வெளிநாடு சென்ற பின் ஒரு திருப்பம் உண்டாகும். நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

எம். புவனேஸ்வரி, விழுப்புரம்.

கேள்வி.

தனுசு லக்னத்திற்கு சுக்கிர தசை வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறீர்கள். அது எவ்வளவு உண்மை என்பது என் ஜாதகத்தை பார்த்தாலே தெரியும். 2011ல் தாயை இழந்தேன். 2014ல் தந்தையை இழந்தேன். 2015ல் திருமணம் நடந்து, அடுத்த வருடம் ஆரம்பித்த பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் சென்று தற்போது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது. கணவர் என்னுடன் வாழ மறுக்கிறார். ஆனால் நான் அவருடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். எனது தம்பிகள் மற்றும் உறவினர்கள் எனக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள். என்ன நடக்கும் என்று நல்ல பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பதில்.

(தனுசு லக்னம், கடக ராசி, 4ல் ராகு, 5ல் குரு, 6ல் சுக், 7ல் சூரி, புத, 8ல் சந், செவ், 10ல் கேது, 12ல் சனி, 29- 6- 1987 இரவு 7-2 சென்னை)

தனுசு லக்னத்திற்கு சுக்கிர தசை வரக்கூடாது என்று நான் பொதுவாகச் சொல்வது உண்மைதான். அதேநேரத்தில் எல்லா விதிகளுக்கும் விதிவிலக்குகள் இருக்கின்றன. சுக்கிரன் முழுமையாக பதினொன்றாமிடத்தில் தொடர்பு கொண்டு, குருவின் பார்வை அல்லது வேறுவகைகளில் சுபதத்துவமாக மட்டுமே இருக்கின்ற அமைப்பில் தனுசு லக்னத்திற்கு கெடுபலன்களை தராமல் ஓரளவிற்கு நன்மைகளைச் செய்வார். இங்கே சுபத்துவம், பாபத்துவம் என்பதை மட்டுமே புரிந்து கொண்டால் போதும்.

உன்னுடைய ஜாதகத்தின்படி சுக்கிரன், வம்பு வழக்கு, அசிங்கம், கேவலம் ஆகியவைகளைக் குறிக்கும் ஆறாமிடத்தில் அமர்ந்து ஆட்சி பெற்று, சனியின் பார்வையில் உள்ள நிலையில், எட்டில் மறைந்து நீசமான செவ்வாயின் நட்சத்திரத்தில் இருப்பது மிகுந்த துன்பங்களை தரும் ஒரு அமைப்பு. இரு ஆதிபத்தியம் உள்ள கிரகங்கள் எந்த ஆதிபத்தியத்தை அதிகம் தொடர்பு கொள்கிறதோ அதனையே அதிகமாக செய்யும் என்பதன்படி சுக்கிரதசை உனக்கு ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகாலம் துன்பங்களை மட்டுமே தரும், பிற்பகுதியில் பதினொன்றாம் இடத்திற்குரிய பலனைத் தருவார்.

சுக்கிர தசை, குரு புக்தி  கணவன் மனைவியைப் பிரிக்கும் என்பதன்படி இன்னும் ஒரு வருடத்தில் உனக்கு வழக்கில் தீர்வு கிடைக்கும். நீ நினைப்பது போல சாதகமான பலனை சொல்ல ஜாதகத்தில் வழி இல்லை. கணவரது ஜாதகத்தில் பதினொன்றாம் இடத்து அதிபதி குருவின் தசை ஆரம்பித்துள்ளதாலும், உனது ஜாதகத்தில் பதினொன்றாம் இடத்தை குரு பார்த்து  வலுப்படுத்துவதாலும் இருவருக்கும் நிரந்தர பிரிவு இருக்கும்.

அடுத்த வருடம் சுக்கிரனின் பார்வை பெற்று சுபத்துவமான, இரண்டாம் அதிபதி சனியின் புக்தியில் உனக்கு குடும்பம் அமையும். அடுத்தடுத்து நடக்க இருக்கும் சூரியன், சந்திரன், செவ்வாய் போன்ற தசைகள் உனக்கு நன்மைகளைச் செய்யும். சுக்கிர தசை. புதன் புக்தியிலிருந்து நல்ல வாழ்க்கையை அடைவாய். 35 வயதிற்கு மேல் வாழ்க்கையில் நிம்மதியாகவே இருக்கக்கூடிய ஜாதகம் உன்னுடையது. தேவையற்ற கோபப் பேச்சுக்களை குறை. இரண்டாமிடத்தை சனி, செவ்வாய் பார்ப்பதால் உன்னுடைய பேச்சால்தான் உன்னுடைய வாழ்க்கை கெட்டிருக்கும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு நிம்மதியாக இருப்பாய். வாழ்த்துக்கள் அம்மா.

(30.04.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 235 (30.04.19)

  1. All the time I am watching Mr.Adhithya Guruji & I am always satisfied by his reply but I have more doubt about Rasi kattam vs Navamsa Kattam.
    An earlier everyone only will see Rasi kattam & will share the updating but now I am seeing navamsam also is very important .which one is correct for example my Birth time on 1.24 p.m & date:24/10/1975 & as per Rasi kattam is fine but Navamsa Kattam doesn’t carry good.could you explain sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *