adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
பின்னால் நடப்பதை முன்பே உணருகிறேன்..

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

எஸ். லட்சுமி, உசிலம்பட்டி.

கேள்வி.

எனக்கு பின்னால் நடப்பதை முன்பே உணரும் சக்தி உள்ளது. சகுனம் மூலம் இயற்கை என்னுடன் பேசுகிறது. ரசவாதம், மூலிகை, ஜோதிடம் இதனைப் பற்றிய அறிவு உள்ளது. என் ஜாதகத்தில் இதற்கான ஜோதிட அமைப்பு என்ன? ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யவும், யூ ட்யூபில் பணம் சம்பாதிக்கவும் முயற்சி எடுத்தேன், எதுவும் நடக்கவில்லை ஏன்? என்னுடைய ஆறாம் பாவகம் எப்படி உள்ளது?

பதில்.

(கும்ப லக்னம், ரிஷப ராசி. 2ல் கேது, 4ல் சந், 5ல் சூரி, குரு. 6ல் புத, சுக், 7ல் செவ், சனி. 8ல் ராகு, 2-7-1978 இரவு 9-50 உசிலம்பட்டி)

லக்னம், ராசி இரண்டோடு குரு, சனி, கேது ஆகிய மூவரும் தொடர்பு கொள்ளும்  நிலையில் ஒருவருக்கு ஆன்மீகம், யோகா, தவம், தியானம் போன்றவற்றில் ஈடுபாடு வரும் சிலருக்கு அமானுஷ்ய விஷயங்களும் தெரிய வரும். அதேபோல மனித அறிவுக்கு எட்டாத மறைந்திருக்கும் சில விஷயங்களை குறிப்பிடும் இடமான  கும்பத்தில் சுப கிரகங்கள் இருந்தாலோ, கும்பத்தை குரு பார்த்தாலோ ஒருவருக்கு சித்து வேலைகளில்  ஈடுபாடும் இருக்கும்.

உங்கள் ஜாதகப்படி சனி, குரு இருவரும் லக்னமாகிய கும்பத்தை பார்ப்பதாலும், ராசிக்கும் சனி பார்வை இருப்பதாலும், உங்களுக்கு அதிகமான ஆன்மீக ஈடுபாடும், யோகா-தியானம், கூடு விட்டு கூடு பாய்தல், மூலிகை ஆராய்ச்சி, சித்தரைப் பற்றிய ஈடுபாடு, சித்தராக முயற்சி செய்தல் போன்றவற்றில் அதிகமான ஆர்வம் இருக்கும். நடக்கும் குரு தசையும் இதற்கு ஒரு காரணம். அடுத்து வரும் சனி தசையில் இப்போது இருப்பதை விட அதிகமான ஆன்மீக ஈடுபாடு இருக்கும்.

இயற்கை எனும் பிரபஞ்சம், சகுனம் மற்றும் நிமித்தம் மூலம் நம் அனைவருடனும் பேசிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் அதை உணருகிறோம். சிலர் மட்டுமே அதை உபயோகப் படுத்திக் கொள்கிறோம். பெரும்பாலான ஜோதிடர்கள் சரியான ஜாதகக் குறிப்புகள் இல்லாத வாடிக்கையாளர்கள் கேள்வி கேட்கும் போது அப்போது ஏற்படும் சகுனத்தை வைத்தே பலன் சொல்வார்கள். அது மிகவும் சரியாகவும் இருக்கும்.

சனி, லக்னத்தையும், ராசியையும் ஒரு சேரப் பார்த்து, லக்னத்தைக் குரு பார்ப்பதால் உங்களுக்கு அதீதமான உள்ளுணர்வு இருக்கும். இது போன்றவர்களுக்கு பின்னால் நடக்கப் போகும் கெடுதல்கள் மட்டும் முன்பே தெரியும். ஆனால் நல்லவைகளை முன்பே உணர முடியாது. சனி என்பவர் ஒரு முழுமையான பாப கிரகம் என்பதால், லக்னம் ராசியோடு அவர் தொடர்பு கொள்ளும் நிலையில் கெடுதல்களை மட்டும் முன்கூட்டியே உணர்த்துவார் .

தற்போது உங்களுக்கு அஷ்டமச் சனி நடப்பதால் தொழில் விஷயங்களில் நன்மைகள் நடைபெற வாய்ப்பு இல்லை. இன்னும் ஒரு வருட காலத்திற்கு நீங்கள் செய்யும் தொழில் முயற்சிகள் பலிக்காது. நன்றாகவும் இருக்காது. சொந்த வாழ்க்கையிலும் எவ்வித நல்ல விஷயங்களும் இன்னும் ஒரு வருடத்திற்கு இல்லை. அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து நல்லவைகள் நடக்கும். அப்போது நல்லபடியாக தொழில் செய்ய முடியும். ஆறாம் பாவகம் வலுப்பது கடன் தொல்லைகளைக் கொடுக்கும். தொழிலில் கவனமாக இருங்கள். வாழ்த்துக்கள்.

(02.04.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *