adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 225 (19.02.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

கல்பனா சிவப்பிரகாசம், திருவண்ணாமலை.

கேள்வி.

இது மூன்றாவது கடிதம். வாய் விட்டுச் செல்ல முடியாத கஷ்டங்களையும் மன உளைச்சல்களையும் ஒரு தந்தையிடம் கேட்பது போல சொல்லிக் கொள்கிறேன். புருஷன் ஒரு குடிகாரன். மாமனார் இல்லை. மாமியார் நரி வேஷம். உடலில் உள்ள நோயை தீர்க்க வசதி இல்லை. ரோட்டில் இட்லி சுட்டு விற்று இரண்டு பிள்ளைகளைப் படிக்க வைக்கிறேன். பிள்ளைகளுக்கு பீஸ் கட்டுவதா, குடிகாரனுக்கு குடிக்க காசு கொடுப்பதா, மாமியாரின் சுடுசொல் கேட்பதா என்று புரியாமல் டியும் புடையும் தாங்கிக்கொண்டு வாழ்க்கையை தள்ளிக் கொண்டு போகிறேன். பிள்ளைகளாவது என் பேச்சை கேட்பார்களா? படித்து வேலைக்கு சென்று என் மனசுக்கும் உழைப்புக்கும் மகிழ்ச்சியைத் தருவார்களா? இரண்டு பிள்ளைகளுக்கு ஒரே தசை வருகிறது. இது வரலாமா?

பதில்.

பரம்பொருள் எல்லா நிலையிலும் எப்போதும் ஒரு மனிதரை கஷ்டப்படுத்துவது இல்லை. ஒன்று சரியாக இல்லை என்றால் இன்னொன்று நன்றாகவே இருக்க வேண்டும் என்பது விதி. புருஷனால் உனக்கு நிம்மதி இல்லை என்றால் பிள்ளைகளால் உனக்கு சந்தோஷம் இருந்தே ஆகவேண்டும்.

மூத்தவனுக்கு சிம்ம லக்னமாகி லக்னத்தில் சூரியன் ஆட்சி, இளையவனுக்கு மேஷ லக்னமாகி லக்னாதிபதியையும் லக்னத்தையும் வலுப்பெற்ற குரு பார்க்கிறார். நீ நினைப்பதை விட உன் பிள்ளைகள் படித்து நன்றாக இருப்பார்கள். மூத்தவனுக்கு புதன் உச்சம் என்பதால் படிப்பில் கெட்டியாக இருப்பான்.

இளையவனும் சளைத்தவன் அல்ல. அவனுக்கும் புதன் அதிநட்பு நிலையில் ஐந்தாமிடத்தில் வளர்பிறை சந்திரன், குருவுடன்  இணைந்து சுபத்துவமாக இருப்பதால் இருவருமே படிப்பில் கெட்டிக்காரர்களாக வருவார்கள். ஒரே நேரத்தில் குடும்பத்தில் இருவருக்கு ஒரே தசை வருவது எல்லா நிலைகளிலும் கெடுதல்கள் செய்வது இல்லை. உன் குழந்தைகளுக்கு அந்த அமைப்பு இல்லை.

கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள் எல்லோரும் எப்போதும் வேதனை நிலையிலேயே இருப்பதில்லை ஒரு நாள் விடிவு வரத்தான் செய்யும். எப்போது விடியும் என்பது அவரவர் கர்மாவைப் பொருத்தது. இன்னும் சில வருடங்கள் பல்லைக் கடித்துக்கொண்டு குழந்தைகளுக்காக அத்தனையையும் பொறுத்துக் கொள்.

இரண்டு குழந்தைகளின் ஜாதகத்திலும் தந்தை ஸ்தானத்தை விட தாய் ஸ்தானம் வலுவாக இருப்பதால், குழந்தைகள் வளர்ந்து பெரியவனாகி நல்ல வேலைக்கு சென்று உன்னை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். பெற்ற குழந்தைகளின் சந்தோஷத்திற்கும், வளர்ச்சிக்கும்  முன்னால் நாம் படும் கஷ்டங்கள் அனைத்தும் தூசுக்கு சமம். கவலைப்படாதே. குழந்தைகளால் நன்றாக இருக்கும் அமைப்பு உன்னுடையது. கஷ்டம் அனைத்தும் இன்னும் சில வருடங்கள்தான். பொறுமையாக இரு. வாழ்த்துக்கள்.

. ரங்கநாதன், கீழாந்தூர் கிராமம்.

கேள்வி.

மகன் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்திருக்கிறான். போலீஸ் வேலைக்கு ஆசைப்படுகிறான்.  இரண்டு முறை தேர்வு எழுதியும் தோல்வி அடைந்து விட்டான். ஒருமுறை மட்டும் கட் ஆஃப் 2 மார்க் வித்தியாசத்தில் தோல்வி. ஜாதகப்படி அவனுக்கு போலீஸ் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா? அப்படிக் கிடைத்தால் அவன் வாழ்க்கை ஏற்றமாக அமையுமா என்று கூறவும்.

பதில்.

(கடக லக்னம், சிம்மராசி. 2ல் சந், ராகு, 6ல் புத, 7ல் சூரி, சுக், செவ், 8ல் குரு, கேது, 9ல் சனி, 15-1-1998 இரவு 7-23 அரக்கோணம்)

லக்னத்திற்கு பத்தாமிடம் செவ்வாயின் வீடாகி, செவ்வாய் சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவம் அடைந்து, உச்சமும் பெற்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் மகனுக்கு காவல்துறையில் ஆர்வம் இருக்கிறது. இதைத் தவிர வேறு சிந்தனையிலும் அவர் இருக்க மாட்டார்.

அரசுப் பணியை குறிக்கும் சூரியன்  சுக்ரனை அஸ்தமனம் செய்த நிலையில், பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரன் சிம்மத்தில் அமர்ந்து, சிம்மத்தை குருவும் பார்ப்பதால், அவரது 24 வயதிற்கு பிறகு நடக்க இருக்கும் சூரியதசையில் அவருக்கு காவல்துறையில் பணி கிடைக்கும். காவல்துறையில் அவரது வாழ்க்கை ஏற்றமாகவே அமையும். வாழ்த்துக்கள்.

எம். மோகன் குமார், ராணா நகர்.

கேள்வி.

என்னுடைய இரண்டு ஜாதகங்களை அனுப்பியிருக்கிறேன். ன்று கம்ப்யூட்டரில் கணித்தது. மற்றொன்று ஜோதிடர் எழுதியது. இதில் சரியான ஜாதகம் எது? நவாம்சம், தசை, சூரியன் மூன்றும் இந்த ஜாதகங்களில் மாறுபடுகிறது. இதில் எது சரியானது? ஏழு வருடங்களுக்கு மேலாக மருத்துவத்துறையில் வேலை செய்கிறேன். இதே துறையில் தொடர்ந்து வேலை செய்யலாமா அல்லது வேறு துறைக்கு செல்லலாமா என்பதையும் ஆசான் அவர்கள் விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பதில்.

(சிம்ம லக்னம், சிம்மராசி. 1ல் சூரி, சந், சுக், 2ல் புத, சனி. 3ல் குரு, 4ல் செவ், 5ல் கேது, 11ல் ராகு, 16-9-1982 அதிகாலை 4-27 அந்தியூர்)

கையால் எழுதப்பட்டது ஜோதிடத்தின் சாபக்கேடான வாக்கிய பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க தவறானது. கையால் எழுதப்பட்ட அந்த ஜாதகத்தை கையிலேயே வைத்திருக்க வேண்டாம். கம்ப்யூட்டரில் கணித்த  திருக்கணிதப்படியான  ஜாதகம் சரியானது. அந்த ஜாதக தசா, புக்திகளையும் கிரக நிலைகளையும் கடைப்பிடிக்கவும்.

சிம்ம லக்னத்தின் ராஜயோகாதிபதியான செவ்வாய், நான்கில் ஆட்சி பெற்று, அம்சத்தில் சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவமாகி, சிம்மத்தில் உள்ள நிலையில், தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் மருத்துவத்துறை உங்களுக்கு ஏற்றதுதான். நடக்கும் சந்திரதசை முடிந்தபின் ஆரம்பிக்க இருக்கும் செவ்வாய் தசை முதல் மருத்துவத்துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்த்துக்கள்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 225 (19.02.19)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *