எஸ். முருகன், நாகர்கோவில்.
கேள்வி :
ஜோதிட குருநாதருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். பலமுறை கடிதம் எழுதியும் பதில் கிடைக்காத ஏமாற்றத்தில் உள்ளேன். இம்முறை நிச்சயம் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் பிறந்து 24 மணிநேரத்திற்குள் என் தாயை இழந்ததன் காரணம் என்ன? என் தந்தை என்னை வளர்க்காமல் தந்தையின் சகோதரி வளர்ப்பதற்கும் காரணம் என்ன? ஜாதகத்தில் 7 ஆம் அதிபதி சூரியன் பலவீனமாக இருக்கிறார்.
ஆனால் சூரிய தசையில்தான் எனக்கு காதல் வந்தது. அனைத்தும் கிடைக்கப்பெற்று கல்லூரியில் ஒரு ஹீரோவாக வலம் வந்தேன். சாம்பியனும் ஆனேன். நடக்கும் சந்திர தசையில் மிகவும் கஷ்டப்படுகிறேன். நிரந்தரமான வேலை இல்லை. தந்தையே எனக்கு எதிராக இருக்கிறார். காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய தந்தை தடையாக இருக்கிறார். இங்குள்ள ஜோதிடர்கள் எனக்கு இரு தார அமைப்பு உள்ளது என்று சொல்கிறார்கள். என் காதலியை நான் இழந்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. தாய் முகம் பார்க்காத நான் அவளை என் தாயாக நினைக்கிறேன். நீங்கள்தான் நல்ல பதில் தர வேண்டும்.
பதில் :
செ | கு | ||
ல சூ ரா |
21-2-1989
காலை
6-37
நாகர்கோவில்
|
||
பு சுக் | சந் கே | ||
சனி |
சென்ற வாரம்தான் “பாலாரிஷ்ட தோஷம்” என்றால் என்ன எனும் கேள்விக்கு விரிவாக விளக்கம் தந்திருந்தேன். அதற்கு உதாரணமாக காட்டக்கூடிய அத்தனை அமைப்புகளும் உள்ள ஜாதகம் உங்களுடையது.
தாய், தந்தையை குறிக்கும் சூரியனும், சந்திரனும் கடுமையான கிரகண தோஷத்தில் இருக்கும்போது நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். மாதாகாரகன் சந்திரன் இரண்டு டிகிரிக்குள் கேதுவுடன் இணைந்து கிரகணமாகியிருக்கிறார். பெற்றோர்களை குறிக்கும் 4, 9க்கு அதிபதியான சுக்கிரன், அஷ்டமாதிபதி புதனுடன் இணைந்து, அம்சத்தில் நீசமாகி, சனியுடன் இணைந்திருக்கிறார். இதன் காரணமாகவே பிறந்தவுடன் தாயை இழந்தீர்கள். நீங்கள் பிறந்த அன்று சந்திர கிரகணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராசிக்கு ஒன்பதில் செவ்வாய் அமர்ந்து, லக்னத்திற்கு 9-மிடத்தைப் பார்த்து, தந்தைக்காரகன் சூரியனுடன் ராகு இணைந்து, சனியும் இவர்களை பார்த்ததால், உங்கள் தந்தை இருந்தும் இல்லாதவராக இருக்கிறார். கடைசிவரை இப்படித்தான் இருப்பார். இந்த அமைப்பால்தான் தாய் தந்தை இல்லாத காரணத்தினால் தந்தையின் சகோதரியால் வளர்க்கப்படுகிறீர்கள்.
ஒரு கிரகம் பலவீனமான நிலைகளில் தன்னுடைய உயிர்க் காரகத்துவத்தை கெடுத்து ஜடக் காரகத்துவத்தை செய்யும் என்பது விதி.
அதன்படி சூரியன், தகப்பன் என்கின்ற தன்னுடைய உயிர்க்காரகத்துவத்தை கெடுத்து, தன்னுடைய காரகத்துவமான தலைமைப் பண்பு, ஆளுமைத்திறன் ஆகியவற்றை கொடுத்ததால் கல்லூரியில் ஹீரோவாக வலம் வந்தீர்கள். ஏழாமிடமே இளம்பெண்கள், மனைவி, நண்பர்கள், காதலி போன்ற அமைப்புகளை தரும் என்பதால் சூரிய தசையில் காதல் வந்தது.
கும்ப லக்கினத்திற்கு சந்திரதசை சாதகமற்ற பலன்களை செய்யும் என்பதால் இப்போது உங்களுக்கு ஆறாம் இடத்தின் கெடுபலன்கள் நடந்து கொண்டிருக்கிறது. செவ்வாய் தசை முதல் நிரந்தரமான வேலை கிடைத்து நன்றாக இருப்பீர்கள். காதலியின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி ஆட்சி பெற்று உச்சகுருவின் பார்வையில் இருப்பதால் தீர்க்காயுளுடன் இருப்பார்.
(02.10.2018 மாலை மலரில் வெளிவந்தது)