adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 197 (24.07.18)
ஜா. ஜாஸ்ரீ,திருச்சி.
கேள்வி :
பலமுறை தங்களுக்குக் கடிதம் எழுதி என் கைரேகை அழிந்து விட்டது. இந்த முறையாவது பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். மகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து விட்டாள். நீச்சல் பயின்று மாநில அளவில் விருதுகள் வாங்கியிருக்கிறாள். மேற்கொண்டு முன்னேற முடியவில்லை. நீச்சல் துறையில் தற்போது முன்னேற்றம் இல்லை. இந்தத் துறையில் நீடிக்கலாமா? அரசு உத்தியோகம் கிடைக்குமா என்பதை அய்யா அவர்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
பதில் :
சந் ல ரா சனி
19.10.2002 மாலை 05.12 திருச்சி
குரு
 
கே சூ சுக் பு செ
மகளின் ஜாதகப்படி லக்னம் நீர் ராசியாக அமைந்து, லக்னாதிபதி நீர் ராசியில் உச்சமாகி, ஜலக் கிரகமான சந்திரன் லக்னாதிபதியுடன் பரிவர்த்தனையாகி லக்னத்தில் அமர்ந்துள்ளதால், நீச்சல்துறை ஏற்றது.
இந்தத் துறையிலேயே மகள் முன்னுக்கு வருவார். சூரியன் நீசபங்க அமைப்பில் அமர்ந்து, பத்தாமிடம் வலுவாகி, பௌர்ணமி யோகத்திற்கு அருகில் பிறந்திருப்பதால் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும். வாழ்த்துக்கள்.
வி. உதயகுமார்,குறிஞ்சிப்பாடி.
கேள்வி :
ஐயா, எனக்கு மறுபிறவி இருக்கிறதா? இந்தப் பிறவியில் சிவத்தொண்டு புரிந்து இறக்க ஆசைப்படுகிறேன். அது நடக்குமா? தினமும் சிவன் கோயில் சென்று வந்த பிறகுதான் சாப்பிடுவேன். ஆன்மிக செயல்களில் அதிக ஆர்வம் இருக்கிறது. திங்கள்தோறும் சிதம்பரம் சென்று நடராஜரை தரிசித்து வருகிறேன். பாடல் பெற்ற தலங்களில் 67 கோயில்களுக்கு சென்று வந்திருக்கிறேன். மீதியுள்ள அனைத்து ஸ்தலங்களையும் தரிசித்து இறுதியாக கயிலாயம் சென்று வரவும் ஆசைப்படுகிறேன். இது நடக்க வாய்ப்பு இருக்கிறதா?
பதில் :
சுக் பு
24.7.1980 இரவு 8.20 கடலூர்
சூ ரா
கே குரு சனி
சந் செ
ஒருவருடைய ஜாதகத்தில் குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களும் சுபத்துவம் பெற்று லக்னம், ராசியோடு தொடர்பு கொள்ளும் நிலையில் ஒருவருக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகமாக இருக்கும்.இந்த மூன்று கிரகங்களின் சுப, சூட்சும வலுக்களைப் பொருத்து ஒருவர் உயர்நிலை ஞானியாகவோ, கோவில் பணி செய்யும் பூசாரியாகவோ இருப்பார்.உங்கள் ஜாதகப்படி சனியின் ஆன்மீக வீடான கும்பம் லக்னமாகி, சதய நட்சத்திரத்தில் லக்னம் அமைந்து, பாவகத்தில் கேது லக்னத்தில் அமர்ந்த நிலையில், குருவும், சனியும் சுபமாகி, லக்னத்தைப் பார்ப்பதால் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் கூடுதலாக இருக்கும்.ஆறுக்குடைய நீச சந்திர தசையும், ஏழரைச் சனியும் நடந்து கொண்டிருப்பதால் இருக்கும் பிரச்சினைகளுக்கு ஒரே தேர்வு தீர்வு இறைவனைக் கும்பிடுவதுதான் என்று கோவில்களுக்கு சென்று கொண்டிருப்பீர்கள். அடுத்தடுத்து நடக்க இருக்கும் தசைகளும் ஆன்மீகத்தையே சுட்டிக் காட்டுவதால், அனைத்து பாடல் பெற்ற தலங்களுக்கும் செல்ல முடியும். கைலாயமும் சென்று திரும்புவீர்கள். 12ல் கேது சுபத்துவமாக இருக்கும் நிலையில் மறுபிறவி இல்லை என்பதால் இதுவே உங்கள் இறுதிப் பிறவியாக இருக்கும்.
  ஏ. மெய்வேல்,சேலம்.
கேள்வி :
மகனின் முதல் வாழ்க்கை பிரச்சினையின் முடிந்து இரண்டாவது வாழ்க்கையாவது நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தேன். அதிலும் குறைபாடு வந்து விட்டது. மருமகள் மிகவும் நல்லவள் மற்றும் தங்கமானவள். அதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் கடந்த 2 மாத காலமாக சிறு சிறு பிரச்சனைக்குக் கூட பெரிய அளவில் சத்தம் போட்டு தெருவே பார்க்கும்படி அவமானப்படுத்துகிறார். அடுத்த இரண்டு நாட்களில் நன்றாக நடந்து கொள்கிறார். இதற்கு என்ன காரணம்? மருமகள் ஜாதகத்தில் கணவனைக் குறிக்கும் சூரியன் ராகுவுடன் இணைந்து தசை நடத்திக் கொண்டிருப்பதால் மகன் உயிருக்கு ஆபத்து எதுவும் வருமா?
பதில் :
வீட்டில் மகன், மருமகள், பேரன் மூவருக்கும் மகர ராசியாகி ஏழரைச் சனி நடப்பதால் நிம்மதிக் குறைவுகள் இருந்துதான் தீரும். மகனின் தொழில் முயற்சிகளும் இப்போது சரி வராது. எதிலும் நிதானமாகவும், திட்டமிட்டும் நடக்க வேண்டிய காலகட்டம் இது. மகனது ஜாதகத்தில் சிம்ம லக்னமாகி 8-க்குடைய குரு 8-ஆம் இடத்தைப் பார்த்து, ஆயுள்காரகன் சனி உச்சம் என்பதால் ஆயுள் குற்றம் எதுவும் இல்லை. 80 வயது தாண்டி மகன் இருப்பார். வாழ்த்துக்கள்.
ஒரு தம்பி,வந்தவாசி.
கேள்வி :
வாழும் ஜோதிட ஞானிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அக்காவிற்கு இருமுறை திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. நடத்தையில் சந்தேகப்பட்டு பிரிவினை வந்து விட்டது. குடும்பமே குழப்பத்தில் உள்ளது. இவர் அரசுப் பணியில் உள்ளார். ஜாதகரீதியாக அடுத்து செய்ய வேண்டியது என்ன? அக்காவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? தவறான முடிவு எதுவும் எடுத்து விடுவாரோ என்ற பயம் எப்போதும் எங்களுக்கு இருக்கிறது. குழந்தையும் இல்லை. ஒரு தம்பியாக என் அக்காவின் எதிர்காலத்திற்கு செய்ய வேண்டியது என்ன? பிள்ளை விட்டார் சொல்வதை நம்புவதா இல்லையா என்று கூட தெரியவில்லை. உங்கள் பதிலில்தான் எங்கள் குடும்பத்தின் எதிர்காலம் இருக்கிறது?
பதில் :
செ ல
15.8.1981 அதிகாலை 3.15 காஞ்சிபுரம்
சூ ரா
சந் கே பு
சுக் கு சனி
அக்காவின் ஜாதகத்தில் நீச சுக்கிரனுடன் குரு, சனி இணைந்து தற்போது ஏழாம் அதிபதி குருவின் தசை நடந்து கொண்டிருக்கிறது. உண்மை சில நிலைகளில் கசப்பாகத்தான் இருக்கும். லக்னத்தில் செவ்வாய் அமர்ந்து, சனியும் லக்னத்தைப் பார்த்து வேறு சுபத்தொடர்புகள் லக்னத்திற்கோ, லக்னாதிபதிக்கோ இல்லாத நிலையில் உன் அக்கா யார் சொல்வதையும் கேட்காத நிலையில், மனம்போல் நடப்பவராக இருப்பார்.
பௌர்ணமி நிலையில் பிறந்திருந்தாலும் அன்றைக்கு கிரகண தோஷம் இருப்பதால், இவரது மனம் இவருடைய கட்டுப்பாட்டில் இருக்காது. இதைச் செய்வதனால் என்ன விளைவு நடக்கும் என்பதைக் கூட யோசிக்க இயலாத அளவுக்கு மனதை வேறுவித எண்ணங்கள் ஆக்கிரமித்திருக்கும். ராசி, லக்னம் இரண்டிற்கும் ஐந்திற்குடைய சுக்கிரன் நீசமாகி, சனியுடன் இணைந்து, செவ்வாய் பார்வையும் பெற்றிருக்கும் நிலையில் கடுமையான புத்திர தோஷமும் இருக்கிறது. அக்காவின் நடத்தைக்கும் உறுதி சொல்வதற்கில்லை.
சந்திரனுடன் கேது இணைந்த கிரகண தோஷம் நீங்குவதற்காக, ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் மாலையே ஸ்ரீகாளஹஸ்தி சென்று தங்கி, மறுநாள் அதிகாலை ருத்ராபிஷேகம் செய்வது முறையான பரிகாரம். லக்னாதிபதி புதனை வலுப்படுத்தும் பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். பரிகாரங்கள செய்து கொள்ள பரம்பொருள் அனுமதிக்கும் பட்சத்தில் தற்போது நடக்கும் குரு தசை சுக்கிர புத்தியில், மூன்றாவதாக துணை அமைந்து அது நீடித்து இருக்கும்.
ஜெ. ரேவதி,திருச்சி.
கேள்வி :
வயது 31 ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. ஜாதகத்தில் எட்டில் செவ்வாய் இருக்கிறது, இது செவ்வாய் தோஷம் கூடவே மாங்கல்ய தோஷம், தார தோஷம், மொத்தத்தில் இது ஒரு சாமியார் ஜாதகம் என்று இங்குள்ள ஜோதிடர்கள் சொல்லி விட்டார்கள். திருமணம் ஆவதே கஷ்டம்தான் என்றும் சொல்லி விட்டார்கள் விரக்தியில் இருக்கிறேன். அய்யா எனக்கு நல்லதொரு வாழ்க்கைத் துணை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறதா? எப்போது?
பதில் :
இந்த வாரம் நீச சுக்ர வாரம் போலிருக்கிறது. தேர்ந்தெடுத்த பெரும்பாலான கேள்விகள் நீச சுக்கிரன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. உன்னுடைய ஜாதகப்படி எட்டில் செவ்வாய் அமைந்துள்ளது தோஷமில்லை. சிம்ம வீட்டில், அதிநட்பு நிலையில் உள்ள செவ்வாய்க்கு குரு பார்வை இருப்பதால் செவ்வாய் தோஷம் இல்லை என்பது உறுதியாகிறது.
ஆனால் செவ்வாயும், சனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதால் தான் திருமணம் தாமதமாகிறது.உன்னுடையது சாமியார் ஜாதகம் இல்லை. நல்ல கணவனுடன் நிம்மதியாக வாழ்க்கையை அனுபவிக்கும் ஜாதகம் உன்னுடையது. ஐந்து ஆண்டு காலமாக சரியான பருவத்தில் உன்னுடைய அனுஷ நட்சத்திரத்திற்கு ஏழரைச் சனி நடந்ததால் திருமணம் நடக்கவில்லை. நடந்திருந்தால் மிகப் பெரிய சிக்கல்களை சந்தித்து இருப்பாய். யோக ஜாதகம் என்பதால் நல்லவேளையாக திருமணம் நடக்கவில்லை.

சுக்கிரன் பரிவர்த்தனை பெற்று உள்ளதால் அவருடைய நீச அமைப்பு நீங்குகிறது. வரும் நவம்பருக்கு மேல் உன்னுடைய திருமண காலகட்டம் ஆரம்பிக்கிறது. அடுத்த ஏப்ரல் முதல் உனக்கு நீடித்த தாம்பத்திய சுகம் கிடைத்தே தீர வேண்டும். வரும் சுக்கிரதசை, சந்திரபுக்தியில் உனக்கு திருமணம் நடக்கும். திருமணத்திற்கு பிறகு எல்லாவிதத்திலும் நன்றாக இருப்பாய். வாழ்த்துக்கள்.

5 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 197 (24.07.18)

  1. வணக்கம் ஐயா எனது ராசி மகரம் திருகோண நட்ச்சத்திரம் கணவர் ரிஷபம் மிருகசீரிடம் எங்க ராசி. படி எப்ப குழந்தை பிறக்கும் Date of birth 1987/08/09 name Narmatha husband date of birt 1985/06/18

  2. வணக்கம் ஜயா நான் 8.5.1983ல். பிறந்தேன். நான் 2மாதம் முன்பு டீ கடை தொழில் அமைத்து நஷ்டம் ஏற்பட்டு மூடி விட்டேன். நான் மிகுந்த மனவேதனையில் எங்கேயாவது போயிடலம் என்று உள்ளது. எனக்கு மேற் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் தான் எனக்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும் ஜயா.

  3. Respected sir,
    I’m your big fan sir,I read all your article,and see your YouTube videos..please tell me solution for my life ,I’m in big trouble
    I got married in 2013 may 29…for 5 years my marriage life was full of turbulence…lot of fights misunderstanding …I lost peace,we have one daughter,now we are separated …will we have divorce or will be united after the bad period got over or will I have remarriage..
    Please sir…I’m in confused situation,,,kindly tell me the solution.
    Husband:20.10.1983
    4:45 pm

    Wife:24.6.1990
    9:16 am

    Daughter:18.3.2014
    8:46am

  4. Hello sir I am Kavitha from Kanchipuram district. I have kalasarbadhosam my horoscope.please clear to me sir.23/02/1991.time 5:50pm Chennai place.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *