adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 168 (2.1.18)
வினாயகம், புதுச்சேரி.
கேள்வி :

எனது குழந்தைகள் அவரது தாயார் மூலம் பிரெஞ்சு நாட்டு குடியுரிமைபெற தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறதுமகன்களுக்கு வெளிநாட்டுகுடியுரிமை கிடைக்குமாவெளிநாட்டில் அவர்கள் வாழ முடியுமாஅவர்களது வாழ்க்கை நல்லபடியாக அமையுமா என்ற பதிலை  எதிர்பார்க்கிறேன்தடை இருந்தால் அதற்கான பரிகாரத்தை சொல்லவிரும்புகிறேன்.

பதில்:
சுக் கே  ல பு
 சனி 25-7-1993 காலை 4.30 புதுச்சேரி  சூ
 செவ்
 ரா சந் குரு
ஒருவர் நிரந்தரமாக அயல்நாட்டு குடிமகனாக வெளிநாட்டிலேயே வசிக்க வேண்டும் என்றால் அவரது ஜாதகத்தில் 8, 12-க்குடையவர்கள் வலுவடைந்து அந்த பாவங்களும் சுபத்துவமாக இருக்க வேண்டும் என்பது விதி. மூத்தவனுக்கு மிதுன லக்னமாகி, 8, 12-க்குடைய சனி, சுக்கிரன் இருவரும் ஆட்சி பெற்று அந்த பாவங்களை, வளர்பிறை சந்திரனுடன் இணைந்து வலுப்பெற்ற குருபகவான் பார்ப்பதால் இவர் 2019-ம் ஆண்டுக்கு பிறகு நிரந்தரமாக பிரெஞ்சில் குடியேற முடியும். இளையமகனுக்கும் இதே அமைப்பு இருப்பதால் இருவருமே வெளிநாட்டில்தான் இருப்பார்கள். பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை.

அனிதாநாகர்கோவில்.

கேள்வி :

ஏழ்மையான எனது குடும்பத்தில் அக்காவின் திருமணத்திற்கு பிறகு கடுமையான  கடன்தொல்லைகள் இருக்கிறதுஅப்பாவும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்கு  செல்ல முடியவில்லைமிகவும் கஷ்டப்பட்டு வங்கித்தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறேனவங்கியில் வேலை கிடைக்கும் வாய்ப்பு எனக்கு இருக்கிறதாதிருமணம் எப்போதுநடைபெறும்? விருப்பப்பட்ட திருமணம் நடைபெறுமா?

பதில்:
 சூ கே
16.7.1991 மதியம் 12.35 நாகர்கோவில்  குரு பு
சனி  சுக் செவ்
 ரா  ல சந்
லக்னத்திற்கு பத்தில் உச்ச குரு அமர்ந்து, ராசிக்கு பத்தாம் இடத்தில் சூரியன் இருப்பதாலும் ஜீவனாதிபதி சந்திரன் பரிவர்த்தனையாகி, அரசு வேலைக்குரிய சிம்ம வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருப்பதாலும் உனக்கு அரசு வங்கியில் உறுதியாக வேலை கிடைக்கும். பத்தாமிடத்தோடு குரு சம்பந்தப்பட்டாலே வங்கித்துறை அல்லது சொல்லிக் கொடுக்கும் வேலை அமையும் என்பது ஜோதிட விதி.

தற்போது உச்ச குருவின் வீட்டில் அமர்ந்த ராகுவின் தசை நடப்பதாலும், அடுத்து குருவின் தசையே நடக்க இருப்பதாலும், 2019-ல் நிரந்தரமான சம்பளம் வரும். அரசு வங்கி வேலையில் இருப்பாய். சுக்கிரனோடு, செவ்வாய் இணைந்து ராசிக்கு ஏழாமிடத்தை செவ்வாய், சனி இருவரும் பார்ப்பதால், உனக்கு கலப்புத் திருமணம் எனப்படும் விருப்ப திருமணம் அமையும்.

கே. சத்தியசேகரன்கோயம்புத்தூர்.

கேள்வி :

பிறந்தது முதல் இன்று வரை நிம்மதியின்றி எல்லாவற்றையும் இழந்துதவிக்கிறேன்பத்துப் பேரோடு பிறந்த நான் தற்போது யாருமேஇல்லாமல், மனைவி குழந்தைகளையும் இழந்து  நடுத்தெருவில்நிற்கிறேன்உடன் பிறந்தவர்களும்தாயாரும் எந்தவிதத்திலும் ஆதரவு  இல்லைஎல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்அனாதையாகஇருக்கும் எனக்கு  சாவதற்குள் நல்லகாலம் பிறக்குமாஅல்லதுஇப்படியேதான் இருப்பேனாபலமுறை  தற்கொலை கடிதம் எழுதிவைத்தேன்ஆனால் அது நடக்கவில்லைகடைசியாக  சந்தோஷமாக இருந்து விட்டு இவ்வுலகை விட்டு நிம்மதியாக சென்று விடுகிறேன்தயவுசெய்து பதில் தருமாறு வேண்டுகிறேன்.

பதில்:
சந் குரு சுக்
3.8.1953 காலை 7.45 தாராபுரம் சூ,பு செ,கே
ரா  ல
சனி
நிம்மதி, சந்தோஷம் என்பது ஆளாளுக்கு வேறுபடும். எனக்கு சந்தோஷமாக தெரிவது உங்களுக்கு கெடுதலாக இருக்கலாம். அவரவர் மனதில்தான் நம்முடைய நிம்மதி இருக்கின்றது. வெளியில் இல்லை.

லக்னத்திற்கோ, ராசிக்கோ சுபர் பார்வை இல்லாமல் லக்னாதிபதி சூரியன் பனிரெண்டில் மறைந்த அமைப்பு கொண்ட நீங்கள், எதிலுமே நிறைவில்லாத ஒரு நபராக இருப்பீர்கள். அதிலும் சிம்ம லக்னத்திற்கு வரக் கூடாத சனிதசை என்று நான் எழுதும் ஆறுக்குடையவனின் தசை 2009 முதல் உங்களுக்கு நடந்து கொண்டிருப்பதால் கடந்த 7, 8 வருடங்களாக தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சனி குடும்பத்தைக் கெடுத்து, தனத்தையும் அழித்திருப்பார். அதாவது கடந்த சில வருடங்களாக உங்களிடம் குடும்பமும், பணமும் இல்லை.

2015 முதல் ஆறுக்குடையவன் தசையும், அஷ்டமச் சனியும் இணைந்ததால் உங்களுக்கு அசிங்கம், கேவலம் என விரக்தியின் விளிம்பிற்கே செல்லக் கூடிய நிகழ்ச்சிகள் நடந்திருக்கும். அடுத்த வருடம் முதல் சனி தன்னுடைய ஏழுக்குடைய பலனை செய்வார் என்பதாலும், சூரிய புக்தி ஆரம்பிக்க உள்ளதாலும் சனிதசையின் பிற்பகுதியில் நீங்கள் கேட்கும் சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கும். தற்கொலை கடிதம் எழுதுவோர் அனைவரும் செத்து விடுவது இல்லை. நீங்களும் தற்கொலை செய்வதற்கு வாய்ப்பு இல்லை.

எம். சத்யாபுதுச்சேரி - 3.

கேள்வி :

தந்தைக்கு மேலாக நான் மதிக்கும் குருஜி, எழுதப் படிக்க தெரியாத நான்உடன் வேலை செய்யும் சகோதரர் மூலமாக இக்கடிதத்தை  எழுதுகிறேன்அவர் மூலமாகத்தான் உங்களையும் எனக்குத் தெரியும். வாராவாரம் அவரே உங்கள் பதில்களை எனக்கு படித்தும் காட்டுகிறார். 31 வயதாகும்நான் பிறந்தது முதலே வறுமையில் வாடுகிறேன்என் தாய் மூன்றாம்தாரமாக வாழ்க்கைப் பட்டவர். 13 வருடங்களுக்கு முன் ஒரு கூலிவேலை செய்பவரை கட்டிட மேஸ்திரி என்று பொய்  சொல்லி என் தலையில் கட்டிவைத்துவிட்டார்கள்திருமணத்திற்கு பிறகாவது நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்த எனக்கு ஒரு குடிகாரன் கணவனாக  வந்துவிட்டார்வேலைக்கு செல்லாமல் என்னிடமே குடிக்க காசு கேட்டுஎன்னை அடித்து  துன்புறுத்துகிறார்நிம்மதியின்றி நடைபிணமாகவாழ்கிறேன்அவர் குடியை எப்போது  மறப்பார்? என்னிடம் எப்போதுஅன்பான வாழ்வு நடத்துவார்? எனக்கு குழந்தை பாக்கியம்  உண்டாஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமாஇந்த அன்பு மகள் உங்கள்பதிலுக்காக  காத்துக் கிடக்கிறேன்.

பதில்:
குரு கே சூ,பு சுக்
12-6-1976 மாலை 5.35 பாண்டிசேரி  செவ் சனி
சந்  ரா
மகளே... மாலைமலருக்கு வருகின்ற எத்தனையோ கண்ணீர்க் கடிதங்களுக்கு நல்ல பதில் கொடுக்க முடியாது என்ற காரணத்தினாலேயே அவற்றை நான் தேர்ந்தெடுப்பதில்லை. கூடுமானவரை நல்லவற்றையே சொல்லி வழிகாட்ட விரும்பும் எனக்கு, தர்மசங்கடம் தருகின்ற விதமாகத்தான் உன்னைப் போன்ற ஏதுமறியாத குழந்தைகளின் கேள்வி அமைகிறது.

எனக்கு மட்டும் ஏன், இப்படி என்று நீ கேட்டிருக்கும் கேள்விக்கும், இதைப் போன்ற வேறு சில கேள்விகளுக்கும் பதில் கிடைக்க வேண்டிய இடத்திலிருந்து கடைசிவரை விடை கிடைப்பதே இல்லை. பதில் சொல்ல வேண்டியவர் இது போன்ற சமயங்களில் ஊமையாக மாறி விடுகிறார்.

உன் கணவனுக்கு விருச்சிக லக்னமாகி, லக்னாதிபதி செவ்வாய் நீசம் பெற்று சனியுடன் இணைந்திருப்பதாலும், இன்னும் ஏழு வருடங்களுக்கு செவ்வாய் தசை நடக்க உள்ளதாலும், ஏறத்தாழ 50 வயதுவரை உன் கணவன் குடியை மறப்பதற்கு வாய்ப்பில்லை. ஒரு மனிதனின் முக்கியமான காலகட்டம் வரை அவன் திருந்த முடியாத குடிகாரனாக இருந்து, பிறகு அவன் திருந்தி என்ன பயன்?

கணவனின் ஜாதகப்படி கடைசிவரை நீதான் அவனை வைத்துக் காப்பாற்ற வேண்டி இருக்கும். போன ஜென்மத்தில் நீ அவனுக்கு கடன் பட்டிருப்பதாலேயே இந்த ஜென்மத்தில் உனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்து விட்டது. அடுத்த ஜென்மத்தில் நீ அவனுக்கு கணவனாக பிறந்து அவனை பழி வாங்கிக் கொள்வது ஒன்றுதான் இனி உன்னால் முடிந்த காரியமாக இருக்கும்.

புதன் எனக்கு நன்மைகளைச் செய்வாரா?

சுபஶ்ரீசென்னை - 58.

கேள்வி :

தற்போது நடைபெறும் சனிதசை, புதன்புக்தி நன்மை தருமாபுதன்அஸ்தங்கம் என்பதால்  என்ன பலன்? சந்திரனுக்கு பாதகத்தில் உள்ளசனிதசை நல்லது செய்யுமா?

பதில்:
ல சனி ரா சூ பு
13-7-1967 இரவு 11.40 கோவை குரு
சுக்
செவ் கே சந்
மீன லக்னத்திற்கு லக்னாதிபதியான குருபகவான் ஐந்தாமிடத்தில் தனித்து உச்சமடைந்து தசை நடத்தினால் நன்மைகளைத் தர மாட்டார். அதைவிட “உபய லக்னங்களின் அதிபதிகள் மறைவு ஸ்தானத்தில் நட்பு வலுவுடன் இருந்தால் நன்மைகளைச் செய்வார்கள்” என்ற விதிப்படி அவர் ஆறாமிடத்தில் அதிநட்பு ஸ்தானத்தில் இருந்தால் நன்மைகள் கிடைக்கும். மீனத்திற்கு தனித்த குருவின் உச்சத்தால் பலன் இல்லை. எனவே கடந்த 16 ஆண்டுகளாக நடந்த குருவின் தசை உங்களுக்கு யோகம் செய்திருக்க வாய்ப்பு இல்லை.

சனி, செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய ஐந்து கிரகங்களும் சூரியனுக்கு மிக அருகே வருகின்ற நிலை அஸ்தங்கம் எனப்படும் ஒளி இழந்த நிலையாக சொல்லப்பட்டு, மேற்கண்ட கிரகங்கள் அவற்றின் பலன்களைத் தராது எனவும் இவை தர வேண்டிய விஷயங்களை சூரியனே தனது தசையில் கொடுப்பார் எனவும் ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.

அஸ்தங்கம் எனப்படுவது வலுவிழந்த ஒரு நிலை என்றாலும் மூலநூல்கள் அனைத்தும் ஒருமித்த நிலையில் புதனுக்கு மட்டும் அஸ்தங்கம் தோஷம் கிடையாது என்று குறிப்பிடுகின்றன. அதாவது அஸ்தங்கம் பெற்றாலும் புதன் வலுவிழப்பதில்லை என்பதோடு, தான் தர வேண்டிய பலன்களை ஜாதகருக்குத் தரும் என்பதே இதன் உள்ளே ஒளிந்திருக்கும் உண்மைக் கருத்து. ஏனென்றால் மேற்கொண்ட கிரகங்களில் புதன் மட்டுமே சூரியனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். எப்போதும் அவர் சூரியனோடு ஒட்டியே இருப்பார் என்பதால் சூரிய ஒளியால் அவர் பாதிக்கப்படுவதில்லை.

சூரியனோடு சந்திரன் நெருங்கும் நிலையே அமாவாசை எனப்படும் சந்திரன் முற்றிலும் பலமிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சந்திரனுக்கும் அஸ்தங்கம் கிடையாது. இதில் சொல்லப்படாத நிழல்கோள்களான ராகு-கேதுக்கள் சூரியனை நெருங்கும்போது கிரகண நிலை உண்டாகி சூரியனே வலுவிழக்கிறார் என்பதால் ராகு-கேதுக்களுக்கும் அஸ்தங்கம் கிடையாது. .

நீங்கள் கேட்டிருக்கும் இன்னொரு கேள்வி ஜோதிடத்தை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. பாதகாதிபதி என்பதும், வேறு சில தோஷ அமைப்புகளும், ஒரு ஜாதகத்தில் உயிர் என்று சொல்லக்கூடிய லக்னத்தை வைத்து மட்டுமே பார்க்கப்பட வேண்டும். ராசிப்படி பாதக ஸ்தானம் என்பதெல்லாம் கிடையாது.

4 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 168 (2.1.18)

 1. நான் 24/9/1994 11.50 மிதுனம் லகனம் 2இல் செவ்வய் 4இல் சூரியன்,5இல் குரு,சுக்கிரன், ராகு,புதன், 9இல் சனி,11இல் கேது,12இல் சந்திரன்

 2. Ayya my full of difficult….mana nimathi ellai….paducha padipukku velai ellai…yen vaalkai ippadithan erukuma..plz answer.. name- R.Balaji birth date-6-08-1990 birth time-10.50am place- dindigul

 3. ஐயா, நான் திருமணம்மாகி வெளிநாட்டில் வசிக்கிறேன்.நான் இந்தியாவில் வேலை லார்க்கும்போது என் மேல் அதிகாரிகள் நான் பெண் என்பதால் என்னை நல்ல டெக்னாலஜியில் நான் பலமுறை கேட்டும் என்னை வேறு ப்ரொஜெக்ட்டில் போடவில்லை. எப்போது நான் வேலை செய்து நான் சம்பாதிக்கும் பணத்தில் ஏழை பென்ன்களுக்கு கல்வி உதவி பண்ண வேண்டும் என்பது சிறுவதில் தோன்றிய எண்ணம். நான் வேலைக்கு செல்ல விசா மற்றும் என் கண்ணவரும் ஓத்துழைக்க வேண்டும். இரண்டுமே நெகடிவ்வாக உள்ளது. தாங்கள் தான் நான் வேலை செய்து என் கண்ணாவு நிறைவேறுமா என்று சொல்லவேண்டும். எப்போது வேலை க்கு செல்வேன் ஐயா? அக்டோபர் 28;1988 @ 11:45pm சிவகாசி

  1. குருஜி அவர்கள் ஜாதக ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு. மேலும் விவரங்களுக்கு,

   செல் : 8681998888

   Whatsapp : 8428998888

   Email.id :adhithyaguruji@gmail.com-ல்

   தொடர்பு கொள்ளுங்கள்.

   ADMIN செல் : 8870998888

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *