கேள்வி :
எனது குழந்தைகள் அவரது தாயார் மூலம் பிரெஞ்சு நாட்டு குடியுரிமைபெற தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. மகன்களுக்கு வெளிநாட்டுகுடியுரிமை கிடைக்குமா? வெளிநாட்டில் அவர்கள் வாழ முடியுமா? அவர்களது வாழ்க்கை நல்லபடியாக அமையுமா என்ற பதிலை எதிர்பார்க்கிறேன். தடை இருந்தால் அதற்கான பரிகாரத்தை சொல்லவிரும்புகிறேன்.
பதில்:
சுக் கே | ல பு | ||
சனி | 25-7-1993 காலை 4.30 புதுச்சேரி | சூ | |
செவ் | |||
ரா | சந் குரு |
அனிதா, நாகர்கோவில்.
கேள்வி :
ஏழ்மையான எனது குடும்பத்தில் அக்காவின் திருமணத்திற்கு பிறகு கடுமையான கடன்தொல்லைகள் இருக்கிறது. அப்பாவும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு வங்கித்தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறேனவங்கியில் வேலை கிடைக்கும் வாய்ப்பு எனக்கு இருக்கிறதா? திருமணம் எப்போதுநடைபெறும்? விருப்பப்பட்ட திருமணம் நடைபெறுமா?
பதில்:
சூ கே | |||
16.7.1991 மதியம் 12.35 நாகர்கோவில் | குரு பு | ||
சனி | சுக் செவ் | ||
ரா | ல | சந் |
தற்போது உச்ச குருவின் வீட்டில் அமர்ந்த ராகுவின் தசை நடப்பதாலும், அடுத்து குருவின் தசையே நடக்க இருப்பதாலும், 2019-ல் நிரந்தரமான சம்பளம் வரும். அரசு வங்கி வேலையில் இருப்பாய். சுக்கிரனோடு, செவ்வாய் இணைந்து ராசிக்கு ஏழாமிடத்தை செவ்வாய், சனி இருவரும் பார்ப்பதால், உனக்கு கலப்புத் திருமணம் எனப்படும் விருப்ப திருமணம் அமையும்.
கே. சத்தியசேகரன், கோயம்புத்தூர்.
கேள்வி :
பிறந்தது முதல் இன்று வரை நிம்மதியின்றி எல்லாவற்றையும் இழந்துதவிக்கிறேன். பத்துப் பேரோடு பிறந்த நான் தற்போது யாருமேஇல்லாமல், மனைவி குழந்தைகளையும் இழந்து நடுத்தெருவில்நிற்கிறேன். உடன் பிறந்தவர்களும், தாயாரும் எந்தவிதத்திலும் ஆதரவு இல்லை. எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். அனாதையாகஇருக்கும் எனக்கு சாவதற்குள் நல்லகாலம் பிறக்குமா? அல்லதுஇப்படியேதான் இருப்பேனா? பலமுறை தற்கொலை கடிதம் எழுதிவைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. கடைசியாக சந்தோஷமாக இருந்து விட்டு இவ்வுலகை விட்டு நிம்மதியாக சென்று விடுகிறேன். தயவுசெய்து பதில் தருமாறு வேண்டுகிறேன்.
பதில்:
சந் | குரு | சுக் | |
3.8.1953 காலை 7.45 தாராபுரம் | சூ,பு செ,கே | ||
ரா | ல | ||
சனி |
லக்னத்திற்கோ, ராசிக்கோ சுபர் பார்வை இல்லாமல் லக்னாதிபதி சூரியன் பனிரெண்டில் மறைந்த அமைப்பு கொண்ட நீங்கள், எதிலுமே நிறைவில்லாத ஒரு நபராக இருப்பீர்கள். அதிலும் சிம்ம லக்னத்திற்கு வரக் கூடாத சனிதசை என்று நான் எழுதும் ஆறுக்குடையவனின் தசை 2009 முதல் உங்களுக்கு நடந்து கொண்டிருப்பதால் கடந்த 7, 8 வருடங்களாக தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சனி குடும்பத்தைக் கெடுத்து, தனத்தையும் அழித்திருப்பார். அதாவது கடந்த சில வருடங்களாக உங்களிடம் குடும்பமும், பணமும் இல்லை.
2015 முதல் ஆறுக்குடையவன் தசையும், அஷ்டமச் சனியும் இணைந்ததால் உங்களுக்கு அசிங்கம், கேவலம் என விரக்தியின் விளிம்பிற்கே செல்லக் கூடிய நிகழ்ச்சிகள் நடந்திருக்கும். அடுத்த வருடம் முதல் சனி தன்னுடைய ஏழுக்குடைய பலனை செய்வார் என்பதாலும், சூரிய புக்தி ஆரம்பிக்க உள்ளதாலும் சனிதசையின் பிற்பகுதியில் நீங்கள் கேட்கும் சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கும். தற்கொலை கடிதம் எழுதுவோர் அனைவரும் செத்து விடுவது இல்லை. நீங்களும் தற்கொலை செய்வதற்கு வாய்ப்பு இல்லை.
எம். சத்யா, புதுச்சேரி - 3.
கேள்வி :
தந்தைக்கு மேலாக நான் மதிக்கும் குருஜி, எழுதப் படிக்க தெரியாத நான்உடன் வேலை செய்யும் சகோதரர் மூலமாக இக்கடிதத்தை எழுதுகிறேன். அவர் மூலமாகத்தான் உங்களையும் எனக்குத் தெரியும். வாராவாரம் அவரே உங்கள் பதில்களை எனக்கு படித்தும் காட்டுகிறார். 31 வயதாகும்நான் பிறந்தது முதலே வறுமையில் வாடுகிறேன். என் தாய் மூன்றாம்தாரமாக வாழ்க்கைப் பட்டவர். 13 வருடங்களுக்கு முன் ஒரு கூலிவேலை செய்பவரை கட்டிட மேஸ்திரி என்று பொய் சொல்லி என் தலையில் கட்டிவைத்துவிட்டார்கள். திருமணத்திற்கு பிறகாவது நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்த எனக்கு ஒரு குடிகாரன் கணவனாக வந்துவிட்டார். வேலைக்கு செல்லாமல் என்னிடமே குடிக்க காசு கேட்டுஎன்னை அடித்து துன்புறுத்துகிறார். நிம்மதியின்றி நடைபிணமாகவாழ்கிறேன். அவர் குடியை எப்போது மறப்பார்? என்னிடம் எப்போதுஅன்பான வாழ்வு நடத்துவார்? எனக்கு குழந்தை பாக்கியம் உண்டா? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? இந்த அன்பு மகள் உங்கள்பதிலுக்காக காத்துக் கிடக்கிறேன்.
பதில்:
குரு கே | சூ,பு சுக் | ||
12-6-1976 மாலை 5.35 பாண்டிசேரி | செவ் சனி | ||
சந் | ல | ரா |
எனக்கு மட்டும் ஏன், இப்படி என்று நீ கேட்டிருக்கும் கேள்விக்கும், இதைப் போன்ற வேறு சில கேள்விகளுக்கும் பதில் கிடைக்க வேண்டிய இடத்திலிருந்து கடைசிவரை விடை கிடைப்பதே இல்லை. பதில் சொல்ல வேண்டியவர் இது போன்ற சமயங்களில் ஊமையாக மாறி விடுகிறார்.
உன் கணவனுக்கு விருச்சிக லக்னமாகி, லக்னாதிபதி செவ்வாய் நீசம் பெற்று சனியுடன் இணைந்திருப்பதாலும், இன்னும் ஏழு வருடங்களுக்கு செவ்வாய் தசை நடக்க உள்ளதாலும், ஏறத்தாழ 50 வயதுவரை உன் கணவன் குடியை மறப்பதற்கு வாய்ப்பில்லை. ஒரு மனிதனின் முக்கியமான காலகட்டம் வரை அவன் திருந்த முடியாத குடிகாரனாக இருந்து, பிறகு அவன் திருந்தி என்ன பயன்?
கணவனின் ஜாதகப்படி கடைசிவரை நீதான் அவனை வைத்துக் காப்பாற்ற வேண்டி இருக்கும். போன ஜென்மத்தில் நீ அவனுக்கு கடன் பட்டிருப்பதாலேயே இந்த ஜென்மத்தில் உனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்து விட்டது. அடுத்த ஜென்மத்தில் நீ அவனுக்கு கணவனாக பிறந்து அவனை பழி வாங்கிக் கொள்வது ஒன்றுதான் இனி உன்னால் முடிந்த காரியமாக இருக்கும்.
புதன் எனக்கு நன்மைகளைச் செய்வாரா?
சுபஶ்ரீ, சென்னை - 58.
கேள்வி :
தற்போது நடைபெறும் சனிதசை, புதன்புக்தி நன்மை தருமா? புதன்அஸ்தங்கம் என்பதால் என்ன பலன்? சந்திரனுக்கு பாதகத்தில் உள்ளசனிதசை நல்லது செய்யுமா?
பதில்:
ல சனி | ரா | சூ பு | |
13-7-1967 இரவு 11.40 கோவை | குரு | ||
சுக் | |||
செவ் கே | சந் |
சனி, செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய ஐந்து கிரகங்களும் சூரியனுக்கு மிக அருகே வருகின்ற நிலை அஸ்தங்கம் எனப்படும் ஒளி இழந்த நிலையாக சொல்லப்பட்டு, மேற்கண்ட கிரகங்கள் அவற்றின் பலன்களைத் தராது எனவும் இவை தர வேண்டிய விஷயங்களை சூரியனே தனது தசையில் கொடுப்பார் எனவும் ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
அஸ்தங்கம் எனப்படுவது வலுவிழந்த ஒரு நிலை என்றாலும் மூலநூல்கள் அனைத்தும் ஒருமித்த நிலையில் புதனுக்கு மட்டும் அஸ்தங்கம் தோஷம் கிடையாது என்று குறிப்பிடுகின்றன. அதாவது அஸ்தங்கம் பெற்றாலும் புதன் வலுவிழப்பதில்லை என்பதோடு, தான் தர வேண்டிய பலன்களை ஜாதகருக்குத் தரும் என்பதே இதன் உள்ளே ஒளிந்திருக்கும் உண்மைக் கருத்து. ஏனென்றால் மேற்கொண்ட கிரகங்களில் புதன் மட்டுமே சூரியனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். எப்போதும் அவர் சூரியனோடு ஒட்டியே இருப்பார் என்பதால் சூரிய ஒளியால் அவர் பாதிக்கப்படுவதில்லை.
சூரியனோடு சந்திரன் நெருங்கும் நிலையே அமாவாசை எனப்படும் சந்திரன் முற்றிலும் பலமிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சந்திரனுக்கும் அஸ்தங்கம் கிடையாது. இதில் சொல்லப்படாத நிழல்கோள்களான ராகு-கேதுக்கள் சூரியனை நெருங்கும்போது கிரகண நிலை உண்டாகி சூரியனே வலுவிழக்கிறார் என்பதால் ராகு-கேதுக்களுக்கும் அஸ்தங்கம் கிடையாது. .
நீங்கள் கேட்டிருக்கும் இன்னொரு கேள்வி ஜோதிடத்தை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. பாதகாதிபதி என்பதும், வேறு சில தோஷ அமைப்புகளும், ஒரு ஜாதகத்தில் உயிர் என்று சொல்லக்கூடிய லக்னத்தை வைத்து மட்டுமே பார்க்கப்பட வேண்டும். ராசிப்படி பாதக ஸ்தானம் என்பதெல்லாம் கிடையாது.
நான் 24/9/1994 11.50 மிதுனம் லகனம் 2இல் செவ்வய் 4இல் சூரியன்,5இல் குரு,சுக்கிரன், ராகு,புதன், 9இல் சனி,11இல் கேது,12இல் சந்திரன்
Ayya my full of difficult….mana nimathi ellai….paducha padipukku velai ellai…yen vaalkai ippadithan erukuma..plz answer.. name- R.Balaji birth date-6-08-1990 birth time-10.50am place- dindigul
ஐயா, நான் திருமணம்மாகி வெளிநாட்டில் வசிக்கிறேன்.நான் இந்தியாவில் வேலை லார்க்கும்போது என் மேல் அதிகாரிகள் நான் பெண் என்பதால் என்னை நல்ல டெக்னாலஜியில் நான் பலமுறை கேட்டும் என்னை வேறு ப்ரொஜெக்ட்டில் போடவில்லை. எப்போது நான் வேலை செய்து நான் சம்பாதிக்கும் பணத்தில் ஏழை பென்ன்களுக்கு கல்வி உதவி பண்ண வேண்டும் என்பது சிறுவதில் தோன்றிய எண்ணம். நான் வேலைக்கு செல்ல விசா மற்றும் என் கண்ணவரும் ஓத்துழைக்க வேண்டும். இரண்டுமே நெகடிவ்வாக உள்ளது. தாங்கள் தான் நான் வேலை செய்து என் கண்ணாவு நிறைவேறுமா என்று சொல்லவேண்டும். எப்போது வேலை க்கு செல்வேன் ஐயா? அக்டோபர் 28;1988 @ 11:45pm சிவகாசி
குருஜி அவர்கள் ஜாதக ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு. மேலும் விவரங்களுக்கு,
செல் : 8681998888
Whatsapp : 8428998888
Email.id :adhithyaguruji@gmail.com-ல்
தொடர்பு கொள்ளுங்கள்.
ADMIN செல் : 8870998888