adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 77 (1.3.2016)

வி.என்.சிவராமன், வேலூர்.

கேள்வி :

ஐம்பது வயதாகியும் வாழ்க்கையில் எவ்வித வளர்ச்சியும், முன்னேற்றமும் இல்லை. தற்காலிகமாக கோவில் அர்ச்சகர் வேலை பார்த்து வருகிறேன். திருமணம் ஆகவில்லை. நிரந்தர தொழிலும் இல்லை. ஏழ்மையான வாழ்க்கை நிலைதான் உள்ளது. திருமணம் நடக்குமா? நடக்காதா? நடக்கும் என்றால் எப்போது? நிரந்தர வேலை எப்போது?

 சந் சனி ராசி லக்
 செவ்
 சூரி சுக் புத கேது
பதில் :
(கடகலக்னம், கும்பராசி. லக்னத்தில் குரு. இரண்டில் செவ். நான்கில் புத, கேது. ஐந்தில் சூரி, சுக். எட்டில் சனி.) லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய். எட்டில் சனி என்கிற அமைப்புடன் ராசிக்கு ஏழில் செவ்வாய் அமர்ந்து செவ்வாயும் சனியும் ஒருவரை ஒருவரை சமசப்தமமாக பார்த்துக் கொண்டதோடு தாம்பத்திய சுகத்திற்கு காரணமான சுக்கிரன் சூரியனுடன் இரண்டு டிகிரிக்குள் அஸ்தமனமாகி நவாம்சத்தில் நீசமும் பெற்ற கடுமையான தாரதோஷ அமைப்புள்ள ஜாதகம். லக்னாதிபதி வலுவிழந்தாலே வாழ்க்கையின் முக்கியமான பாக்கியங்கள் கிடைக்காது என்பது அடிக்கடி எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். இங்கே உங்கள் லக்னாதிபதி சந்திரன் ஆட்சி பெற்ற எட்டுக்குடைய சனியுடன் மிக நெருங்கி இணைந்து செவ்வாயின் பார்வையையும் பெற்று எட்டில் மறைந்ததால் வாழ்க்கையின் முக்கிய அமைப்புகளான வேலை, திருமணம் இரண்டுமே ஐம்பது வயதாகியும் கிடைக்கவில்லை. ஆயினும் ஏழாமிடத்திற்கு உச்சகுருவின் பார்வை இருப்பதாலும் நவாம்சத்தில் குடும்பாதிபதி சூரியன் ஆட்சி பெற்றதாலும் பரிகாரங்களுக்கு பிறகு உங்களுக்கு திருமண பாக்கியம் கிடைத்தே ஆக வேண்டும். தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி நடப்பதும் இதனை உறுதி செய்கிறது. சந்திரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். இந்த புக்தியிலேயே திருமணம் நிச்சயம் நடக்கும். திருமணத்திற்கு பிறகு நிரந்தர வேலை அமைப்புடன் நிம்மதியான வறுமையற்ற வாழ்க்கை உண்டாகும். பழனிச்சாமி, கவுந்தப்பாடி.
கேள்வி :
எல்லோரும் வாழ்க்கையில் நொந்துவிட்டேன் என்பார்கள். ஆனால் நானோ வாழ்க்கையில் வெந்துவிட்டேன். எல்லா தொழிலும் செய்தேன். எதுவும் ஒத்து வரவில்லை. சொந்த வீட்டை விட்டு விட்டு மாமனார் வீட்டில் இருந்து கொண்டு சாப்பிடுகிறேன். அவமானமாக உள்ளது. இதுவும் ஒரு வாழ்வா என தற்கொலை செய்து கொள்ள மனம் தூண்டுகிறது. இப்படியேதான் என் வாழ்வு இருக்குமா? இல்லை விடிவுகாலம் கிடைக்குமா? நன்றாக என் ஜாதகத்தை கணித்து என்ன தொழில் எந்தத்திசையில் செய்யலாம். இங்கேயே இருக்கலாமா? வேறு எங்காவது செல்லலாமா? சொந்த ஊருக்கே போகலாமா? சொந்தமாக தொழில் செய்யலாமா? அல்லது கூலிக்கு போகலாமா? என்று உங்கள் தம்பியாக நினைத்து ஜாதகத்தை ஒருமுறைக்கு பலமுறை நன்றாக கணித்து நல்ல வழி சொல்லுங்கள் அண்ணா.
பதில் :
இது போன்ற கடிதங்களுக்கு பதில் தருவதற்கு ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் பிறந்தநேரம் குறிப்பிடாத ஜாதகத்தை நான் எப்படி ஒருமுறைக்கு பலமுறை கணிப்பது?. இது போன்ற அரைகுறை ஜாதகங்களால்தான் என்னால் பதில் தர இயலாமல் போகிறது. டி.லட்சுமி, பெருந்துறை.
கேள்வி :
குடும்பத்தில் உள்ள அனைவருமே மாலைமலரை தவறாமல் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். மகனுக்கு 35 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. திருமணம் எப்போது நடக்கும்? பரிகாரம் தேவையா?
ராசி சுக் ராகு
 லக்,சூ குரு
செவ் சந்,புத சனி
பதில் :
(சிம்ம லக்னம், கன்னிராசி. லக்னத்தில் சூரி, குரு. இரண்டில் புத, சனி. மூன்றில் செவ். பனிரெண்டில் சுக், ராகு.) லக்னத்திற்கு இரண்டில் சனி. ராசிக்கு இரண்டில் செவ்வாய் என்ற அமைப்பாகி சுக்கிரனுடன் ராகு இணைந்து நவாம்சத்தில் சுக்கிரன் நீசமானதால் மகனுக்கு 35 வயதாகியும் திருமணமாகவில்லை. லக்னத்தில் இருக்கும் குருவும் சூரியனுடன் இரண்டு டிகிரிக்குள் இணைந்து அஸ்தமனமானதும் பலவீனம். ஆயினும் தற்போது ராகுதசையில் சுக்கிரபுக்தி  நடப்பதால் நிச்சயமாக இந்த வருட இறுதிக்குள் திருமணமாகும். ஶ்ரீகாளகஸ்தி சென்று சர்ப்பசாந்திபூஜைகளை செய்து கொள்ளவும். எம்.சண்முகவேல், சென்னை.
கேள்வி :
மகனுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் பார்த்தும் வரன் அமையவில்லை. அவனுக்கு எப்போது திருமணம் அமையும்? ஜாதகத்தில் தோஷம் எதுவும் உள்ளதா? பரிகாரம் செய்ய வேண்டுமா? அரசு வேலை கிடைக்குமா?
சூ,புத செவ் லக், சுக்  ராகு
ராசி  சந்
குரு சனி
பதில் :
(ரிஷபலக்னம், கடகராசி. லக்னத்தில் சுக். இரண்டில் ராகு. ஆறில் சனி. ஏழில் குரு. பனிரெண்டில் சூரி, புத, செவ்.) குருவும், சுக்கிரனும் நேருக்குநேர் பார்த்துக் கொண்டால் திருமணம் தாமதமாகும் என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். அதேபோல சனியும், செவ்வாயும் சமசப்தமமாக பார்த்து கொள்ளுவதும் தோஷம்தான். இந்த இரண்டும் உங்கள் மகன் ஜாதகத்தில் இருக்கிறது. குடும்பவீட்டில் ராகு இருப்பதால் சர்ப்பசாந்தி பூஜைகளை செய்து கொள்ளுவது நல்லது. நடக்கும் புதன்தசையில் சனி புக்தியில் 35 வயதில் உங்கள் மகனுக்கு திருமணமாகும். அதேபுக்தியில் அரசு வேலையும் கிடைக்கும். டி. சீனுவாசன் பாண்டிச்சேரி 
கேள்வி :
நாற்பத்தியெட்டு வயதாகும் எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? பரிகாரங்கள் செய்திருக்கிறேன். திருமணத்திற்கு முயற்சித்துக் கொண்டும் இருக்கிறேன். குடும்பத்தில் மனக்கஷ்டங்கள் இருக்கிறது. உறவினர்கள் பிரிவினை இருக்கிறது. சேர என்ன வழி?
சனி ராகு
சந் ராசி
 செவ் குரு
லக் ,பு சுக்  சூரி
பதில் :
(துலாம் லக்னம் கும்பராசி லக்னத்தில் புதன் சுக்கிரன் ஆறில் சனி ராகு பதினொன்றில் செவ் குரு பனிரெண்டில் சூரி) லக்னாதிபதி சுக்கிரன் ராசி நடப்பு தசாநாதன் புதன் மூவருமே  ராகுவின் சாரத்தில் இருக்கிறார்கள். சாரம் கொடுத்த ராகு ஆறாம் வீட்டில் சனியுடன் இணைந்து செவ்வாய் மற்றும் பாதகாதிபதி சூரியனின் பார்வையையும் வாங்கி சுபத்துவமே பெறாமல் பரிபூரண பாபநிலையில் இருக்கிறார். போதும் போதாதென்று ராசிக்கு இரண்டில் சனி ராகு, ராசிக்கு ஏழில் சனி என்ற அமைப்பும் உருவாகி தற்போது வக்ர புதன் தசையில் ராகுபுக்தியும் நடக்கிறது. லக்னத்திற்கு இரண்டையும் ராசிக்கு இரண்டையும் செவ்வாய் பார்க்கிறார். உங்கள் ஜாதகப்படி நீங்கள் முறையான பரிகாரங்களைச் செய்திருக்க வாய்ப்பில்லை. தற்போதைய தசாபுக்தி நாதர்கள் புதனும் ராகுவும் ஆறுக்கு எட்டாக இருக்கிறார்கள். அடுத்து செவ்வாயுடன் இணைந்த ஆறுக்குடைய குருவின் புக்தி நடக்க இருக்கிறது. அதனையடுத்து ஆறில் அமர்ந்து ராகுவுடன் இணைந்த சனிபுக்தி நடக்கும். இப்படி அனைத்துமே ஆறு எட்டு என்று இருப்பதால் இப்போதைக்கு உங்களுக்கு திருமண வாய்ப்பு இல்லை. ராகுவிற்கான முறையான பரிகாரங்களைச் செய்யவும். எஸ். கோபிநாதன் சென்னை - 21.
கேள்வி :
குருஜி அவர்களுக்கு வணக்கம். எனக்கு இப்போது ராகுதசை நடக்கிறது. மேஷராகு நன்மை செய்யும் என்று கூறி உள்ளீர்கள். ஆனால் வீடு கொடுத்த செவ்வாய் பார்வை உள்ளதால் ராகுதசை மேன்மை தருமா என்று தயவு கூர்ந்து பதில் கூறவும்.
சனி ராகு
 லக்,புத சுக் ராசி குரு
சூரி
சந் செவ்
பதில் :
(கும்பலக்னம் தனுசு ராசி லக்னத்தில் சுக்கிரன் புதன் இரண்டில் சனி மூன்றில் ராகு ஆறில் குரு ஒன்பதில் செவ் பனிரெண்டில் சூரி) மேஷராகு பிறர் தயவின்றி சுயமாக இயங்கும் அதிகாரம் கொண்டவர். அவர் மேன்மைகளைச் செய்ய வேண்டுமானால் அவருக்கு சுபரின் இணைவோ பார்வையோ கண்டிப்பாக வேண்டும். மேலும் அவருக்கு வீடு கொடுத்தவர் சுபவலுவுடன் இருக்க வேண்டும். செவ்வாய் பார்வை பெற்ற ராகு நன்மைகளைச் செய்ய மாட்டார். தவிர கும்பலக்னத்தின் அவயோகிகளான சூரியன் செவ்வாய் குரு மூவரும் ராகுவிற்கு கேந்திரங்களில் இருப்பதும் தசைக்கு நன்மைகளைச் செய்யாது. கடந்த ஏழு வருடங்களாக நடக்கும் ராகுதசை உங்களுக்கு பெரிய அளவில் நன்மைகளைச் செய்திருக்காது. ஆனால் ராகு சுக்கிரனின் சாரம் பெற்றிருப்பதால் கெடுதல்கள் எதுவும் இல்லாமல் வண்டி ஓடிக்கொண்டிருக்கும். சுக்கிரபுக்தியில் ராகு நன்மைகளைச் செய்வார்.
ஒரே மாதத்தில் பிரிந்த மனைவியுடன் சேர முடியுமா?
ஒரு வாசகர், குடியாத்தம்.
கேள்வி :
திருமணமாகி ஒரு மாதத்திலேயே பிரிந்து வாழ்கிறோம். நான் வாழ விரும்புகிறேன். என் மனைவி சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று சொல்கிறாள். இருவரின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். சேர்ந்து வாழ்வோமா? பரிகாரம் எதாவது செய்ய வேண்டுமா?
செவ் குரு லக்,சூ புத,கேது சனி
சந் ராசி சுக்
சுக் லக்,கேது குரு
சூரி ராசி  சனி
புத செவ்
 சந்
பதில் :

(கணவனுக்கு ரிஷபலக்னம், கும்பராசி. லக்னத்தில் சூரி, புத, கேது. இரண்டில் சனி. மூன்றில் சுக். பதினொன்றில் செவ், குரு. மனைவிக்கு மேஷ லக்னம், தனுசுராசி. லக்னத்தில் குரு, கேது. நான்கில் சனி. பத்தில் புத, செவ். பதினொன்றில் சூரி. பனிரெண்டில் சுக்)

லக்னத்திற்கு இரண்டில் சனி, ராசிக்கு இரண்டில் செவ்வாய், ஏழாமிடத்தில் ராகு என கடுமையான களத்திர தோஷ அமைப்புடன் சுபத்துவம் பெறாமல் இரண்டில் இருக்கும் சனிதசையும் உங்களுக்கு நடப்பதால் கைக்கெட்டியும் வாய்க்கெட்டவில்லை என்பதைப் போல தாமதமாக திருமணம் ஆகியும் மனைவியுடன் இருக்கமுடியவில்லை.

மனைவிக்கும் இதேபோல ஏழில் ராகு, ராசிக்கு இரண்டில் உச்ச செவ்வாய், எட்டில் சனி என்ற அமைப்பு இருப்பதால் இருவரும் இணைந்திருக்க முடியவில்லை. ஆயினும் உங்களுக்கு சனிதசையில் சுக்கிரபுக்தி இந்த வருட இறுதியில் ஆரம்பிக்க உள்ளதால் நீங்கள் இருவரும் பிரிவதற்கு வாய்ப்பு இல்லை. 2017-ம் ஆண்டு ஒன்று சேர்வீர்கள். இருவருக்குமே ஏழில் ராகு அமைப்பு இருப்பதால் உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு ஶ்ரீகாளகஸ்தியில் தங்கி அதிகாலை ருத்திராபிஷேக பூஜையில் கலந்து கொள்ளவும். இன்னொரு ஜென்மநட்சத்திரமன்று கும்பகோணம் கஞ்சனூர் சென்று வழிபட்டு இரண்டரை மணிநேரம் கோவிலுக்குள் இருக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *