adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 83 (26.4.2016)
பி. கிரீஷ், தண்டையார்போட்டை.
கேள்வி :
பிபடித்து  பட்டம் வாங்கிவிட்டேன்.  ஆறு மாதகாலமாக எந்த வேலையும் கிடைக்கவில்லை. எப்போது வேலை கிடைக்கும்?
 பதில்:
வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 11-ம் தேதிக்குள் வேலை கிடைக்கும்.   வீ . லட்சுமணன், சென்னை - 42.
கேள்வி :
ஜோதிடமகான் குருஜி அவர்களுக்கு வணக்கம். தங்கை திருமணத்திற்காக பூமி விற்ற வகையில் சிறு வில்லங்கத்தைக் காண்பித்து வர வேண்டிய பணம் 40 லட்சத்தை தர மறுக்கிறார்கள். வில்லங்கத்தை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன். ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் என்னால் முடியும். ஜாதகரீதியாக பணம் கிடைக்க வாய்ப்புள்ளதா? கிடைக்குமெனில் எப்போது கிடைக்கும்? பரிகாரம் என்ன? அடுத்த குருதசையிலாவது தங்கையின் மணவாழ்வு கண்டு மகிழ்ச்சிஅடைவேனா?
ராசி  குரு
 சந்,சூ செ
ல,ரா  சனி பு,சு
பதில்:
(விருச்சிகலக்னம், சிம்மராசி. லக்னத்தில் ராகு. ஒன்பதில் குரு. பத்தில் சூரி, செவ். பதினொன்றில் புத, சுக். பனிரெண்டில் சனி.) எட்டுக்குடைய அஷ்டமாதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கும் நடக்கும் ராகுவின் தசை உங்களுக்கு நன்மைகளைச் செய்திருக்க வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் ராகுவிற்கு உச்சகுருவின் பார்வை இருப்பதால் கெடுதல்களை சமாளிக்கும் தைரியம் கிடைத்திருக்கும். அடுத்து வரும் சுக்கிர புக்தியும் சுக்கிரன் நீசபங்கநிலையில் இருப்பதால் பணம் கிடைப்பதற்கு தாமதமாகும் என்பதோடு பெண்களின் மூலமான சந்தோஷத்திற்கும் தடை இருக்கும். தங்கையின் மணவாழ்வு மகிழ்ச்சியாக இருக்குமா என்பதற்கு தங்கையின் ஜாதகம் தான் பார்க்கப்பட வேண்டும். ஜாதகரீதியாக பணம் கிடைக்க சூரியபுக்தி வர வேண்டும். அதுமுதல் வாழ்க்கை நிம்மதியாகவும் பணப் பிரச்சினை இல்லாமலும் இருக்கும். ராகுதசையை விட குருதசை நன்மை செய்யும். ராகுவின் மீதமுள்ள வருடங்களுக்கு வருடம் ஒருமுறை ஶ்ரீகாளகஸ்தியில் இரவு தங்கி உங்கள் ஜென்ம நட்சத்திரமன்று ருத்திராபிஷேகம் செய்யவும்.
குழந்தை சிரிப்பது எப்போது நிற்கும்?
கே. சீனிவாசன், சேலம்.
கேள்வி :
எனது மகளுக்கு பிறந்தநாள் முதல் இன்றுவரை திடீர் திடீர் என்று தன்னை அறியாமலேயே சிரிப்பு வருகிறதுஅடக்க முடியாமல் வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இதனால் ஜன்னியே வந்துவிட்டது. மருத்துவ ஆலோசனைபடி மாத்திரை சாப்பிட்டு வருகிறாள். இப்போது பரவாயில்லை. ஆனால் சிரிப்பு நிற்கவே இல்லை. மாத்திரை, மருந்துக்கு கேட்கவே இல்லை. எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் இதற்குக் காரணம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. மகளை நினைத்து மிகவும் வேதனை அடைகிறேன். இதற்கு காரணம் என்ன? இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும்?
சு,செ சந்,பு  சூ
 குரு ராசி
ரா சனி
பதில்:
(துலாம்லக்னம், ரிஷபராசி. நான்கில் ராகு. ஐந்தில் குரு. ஏழில் சுக், செவ். எட்டில் சந், புத. ஒன்பதில் சூரி. பதினொன்றில் சனி.) மகளின் ஜாதகத்தில் ஆறுக்குடைய குரு மற்றும் செவ்வாய், சனி மூவரும் லக்னத்தைப் பார்ப்பதும் லக்னாதிபதி சுக்கிரன் ஒரேடிகிரி, ஒரேகலையில் செவ்வாயுடன் இணைந்து ஐக்கியமாகி இருப்பதும் இந்த இனம்புரியாத நோய்க்குக் காரணங்கள். மேலும் பாவகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் எட்டில் இருப்பதும் பலவீனம். அதேநேரத்தில் பனிரெண்டு வயதுவரை நடக்க இருக்கும் செவ்வாய்தசை வரைதான் இந்த நோய் நீடிக்கும். அடுத்து வர இருக்கும் மகரராகு தசையில் இந்த விசித்திர வியாதி தானாகவே மறையும். மகளின் முன்னேற்றத்தை ஒன்பது வயது முதல் நீங்கள் காண முடியும். எஸ். எம். ரவி, சத்தியமங்கலம்.
கேள்வி :
செவ்வாய்தோறும் தவறாமல் மாலைமலர் படிக்கிறேன். எத்தனையோ ராகு - கேது, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பார்த்து விட்டேன். எனக்குசிறு மாற்றம் கூட வரவில்லை. தினசரி கூலி வேலை செய்து வயதானதாய், தகப்பனை பார்த்துக் கொள்கிறேன். 47 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. திருமணம் எப்போது? சொந்தத்தொழில் செய்யலாமாதற்போது எனக்கு என்ன தசை புக்தி நடக்கிறது? தெய்வ பரிகாரங்கள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் அய்யா... உடனே செய்கிறேன். 
சந்,சுக் ரா சூ சனி பு
ராசி
செவ் குரு
பதில்:
(மகரலக்னம் மீனராசி மூன்றில் சுக் ராகு நான்கில் சூரி சனி ஐந்தில் புத ஒன்பதில் குரு பதினொன்றில் செவ்) லக்னாதிபதியாகவே இருந்தாலும் சனிபகவான் அதிக வலு அடையக்கூடாது. அவர் சூட்சுமவலுதான் அடையவேண்டும் என்ற எனது பாபக்கிரகங்களின் சூட்சும வலுத் தியரிக்கு உங்கள் ஜாதகமும் நல்ல உதாரணம். சனி லக்னாதிபதியாகி நீசம் பெற்று உச்சசூரியனால் நீசபங்கமாகி உச்சநிலையை அடைந்து லக்னத்தைப் பார்த்ததால் உடல்உழைப்பான கூலிவேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். சுக்கிரனும் குருவும் நேருக்குநேர் பார்த்துக் கொண்டால் சுக்கிரன் தரும் தாம்பத்திய சுகத்தைக் குரு தரவிட மாட்டார், குரு தரும் புத்திர சுகத்தை சுக்கிரன் தர விட மாட்டார் என்பதையும் அடிக்கடி எழுதுகிறேன். இந்த அமைப்பும் உங்கள் ஜாதகத்தில் இருக்கிறது. சுக்கிரன் உச்சமானாலும் ராகுவுடன் இணைந்தது பலவீனம். மேலும் ஏழுக்குடைய சந்திரனும் அங்கே ராகுவுடன் சேர்ந்திருக்கிறார். அதேபோல புத்திரபாவத்தில் ஆறுக்குடைய புதன் இருப்பதும் வலுப்பெற்ற பாதகாதிபதி செவ்வாய் ஐந்தாமிடத்தைப் பார்த்து குருபகவான் பாம்புகளுடன் சம்பந்தம் அடைந்ததும் புத்திரதோஷம். ஆக ஏழுக்குடையவனும் சுக்கிரனும் ராகுவுடன் கூடி களத்திரதோஷமும் சுக்கிரனே ஐந்துக்குடையவனுமாகி ஐந்தாம் பாவமும் குருவும் கெட்டதால் புத்திரதோஷமும் உள்ளதால் இதுவரை திருமணம் ஆகவில்லை. தற்போது உங்களுக்கு எட்டுக்குடைய சூரியதசையில் சனி புக்தி நடக்கிறது. அஷ்டமாதிபதி தசை நடப்பதால் நல்ல விஷயங்கள் நடப்பதற்கும் வாய்ப்பில்லை. நடப்பவை அனைத்தும் உங்கள் பூர்வ ஜென்ம கர்மா என்பதால் பரம்பொருளை மனமுருக வணங்கி வேண்டுவதைத் தவிர வேறு பரிகாரம் இல்லை. சூரியதசை முடியும்வரை சொந்ததொழிலைப் பற்றி நினைக்க வேண்டாம். நடக்கும் சனி புக்தியில் தாய் தந்தை உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். வ. அர்ச்சுனன், பனப்பாக்கம்.
கேள்வி:
குருஜி ஐயாவிற்கு கோடி நமஸ்காரம். உங்கள் மாலைமலரை குடும்பத்தில் உள்ள அனைவரும் தவறாமல் படித்து வருகிறோம். கல்யாண வயதில் உள்ள மகனுக்கு இதுவரை எந்தப்பெண்ணும் முடியவில்லை. ஒரு ஒரு ஜோதிடர்கள் ஒரு ஒரு விதமாகச் சொல்கிறார்கள். என் மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? சொந்தமா அசலா? குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாக இருப்பாளா? எந்த திசையில் முடியும்? இரண்டுமுறை கடிதம் எழுதியும் பதில் இல்லை. ஒரு நல்ல பதிலைக் கணித்துக் கூறும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 
சூ,பு குரு சுக்
ராசி
செவ்  கே
 சனி செவ் சந்
பதில்:
(மீனலக்னம் கன்னிராசி திருக்கணிதப்படி இரண்டில் சூரி புத குரு மூன்றில் சுக்   ஆறில் கேது பத்தில் சனி பதினொன்றில் செவ்) மேலோட்டமாகப் பார்க்கும்போது ஜாதகத்தில் குறையேதும் இல்லை என்று தோன்றினாலும் குடும்ப பாவத்தை வலுப்பெற்ற செவ்வாய் பார்த்து அங்கே உச்சம் பெற்ற ஆறுக்குடையவன் இருப்பதும் லக்னாதிபதி குருபகவான் இரண்டு டிகிரிக்குள் அஸ்தமனம் அடைந்ததும் தோஷம். மேலும் ராசிக்கு ஐந்தில் உச்ச செவ்வாய் அமர்ந்து லக்னத்திற்கு ஐந்தாமிடத்தைப் பார்த்து புத்திரதோஷத்தை உண்டாக்குவதும் மனைவி ஸ்தானத்தையும் அங்குள்ள புத்திர ஸ்தானாதிபதியையும் சனி பார்ப்பதும் தாமத திருமணத்திற்கான காரணங்கள். லக்னாதிபதியும் புத்திர காரகனுமாகிய குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்யும் பட்சத்தில் வரும் ஆகஸ்டு மாதத்திற்கு மேல் திருமணம் நடக்கும். இல்லையெனில் குருதசை புதன் புக்தியில் தாமதமாகவே திருமணம் நடைபெறும். நெருங்கிய சொந்தத்தில் திருமணம் அமைய வாய்ப்பில்லை. ஏழரைச் சனி முடிந்து விட்டதால் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை நல்லவிதமாகவும் யோகமாகவும் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *