adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 87 (24.5.2016)
ஆர். பி. கீதாஞ்சலி, வடமதுரை, (கோவை).
கேள்வி :
மகனுக்கு 38 வயதாகியும் சரியான வேலையும், திருமணமும் அமையவில்லை. உடம்பும் அடிக்கடிபடுத்துகிறது. எப்போது விடிவுகாலம் பிறக்கும்?
பு சந்
 சூ,செ ராசி குரு
சுக்  ல,சனி ரா
செவ்
பதில்:
(சிம்மலக்னம், மிதுனராசி. லக்னத்தில் சனி, ராகு. ஆறில் சுக். ஏழில் சூரி, செவ். எட்டில் புதன். பனிரெண்டில் குரு 7.3.1979, 6.25 மாலை, ராசிபுரம்) ஏழாமிடத்தோடு சனி, செவ்வாய், ராகு, கேது சம்பந்தப்பட்டு ஏழுக்குடையவன் ராகுவுடன் எட்டு டிகிரிக்குள் இணைந்து குடும்பாதிபதி புதன் எட்டில் மறைந்து நீசமாகி களத்திரதோஷமும் லக்னத்திற்கு ஐந்துக்குடையவன் பனிரெண்டில் மறைந்தும், ராசிக்கு ஐந்துக்குடையவன் எட்டில் மறைந்தும் புத்திர தோஷம் உண்டான ஜாதகம். அதைவிட மேலாக குருவும், சுக்கிரனும் ஐந்து டிகிரிக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது கடுமையான தோஷம் என்பதாலும் இதுவரை திருமண, புத்திரபாக்கியங்கள் கிடைக்கவில்லை. அடுத்த வருடம் ஆரம்பிக்கும் சனிதசை ராகுபுக்தியில் திருமணம் நடக்கும். உரிய பரிகாரங்களைச் செய்யவும். ஆறுக்குடைய சனி தசை முடிந்ததும் உடல் நிலை முன்னேற்றம் அடையும். பி. சத்தீஷ்பாபு, திண்டுக்கல்.
கேள்வி :
என் மகன் . டி. கம்பெனியில் நல்ல சம்பளத்துடன் வேலை பார்க்கிறான். எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்குவதில்லை. எப்போதுசிக்கனமாக இருந்து நல்ல நிலைமைக்கு வருவான்?
பதில்:
லக்னத்தில் இருக்கும் கேதுவும், லக்னமும் விரையாதிபதி சனியின் நட்சத்திரத்தில் அமர்ந்த நிலையில், பனிரெண்டிற்குடைய சனிபகவான் ஆறில் அமர்ந்து தனது விரையவீடான பனிரெண்டைப் பார்த்து வலுப்படுத்தி தசை நடத்துவதால் உங்கள் மகன் கடுமையான செலவாளியாகத்தான் இருப்பார். சனி தசை முடிந்ததும் குணங்கள் மாறி புதன்தசையில் சிக்கனத்துடன் நன்றாக இருப்பார். ஆர். ராஜன், சேலம் – 5.
கேள்வி :
மாலைமலரில் பெரிய சூட்சுமங்களை எளிதாகப் புரியும்படி எழுதுகின்ற உங்களுடைய பாங்கும், கருத்துக்களைத் தெளிவாக ஆணித்தரமான உறுதியுடன் எழுதும் விதமும் தங்களைத் தொடர்ந்து படிக்கும்ஆர்வத்தை உண்டாக்கி இருக்கிறது. என் மகன் ஜாதகத்தில் தோஷம் ஒன்றுமில்லை என்றாலும் திருமண முயற்சி நீண்டகாலமாக வெற்றி அடையவில்லை. அவனுக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்பதை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
வாக்கியப் பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட ஜாதகத்தை பிறந்தநேரம், பிறந்த இடம் இல்லாமல் அனுப்பியதால் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. வாக்கியப்படி கணிக்கப்பட்ட ஜாதகங்கள் துல்லியமானவை அல்ல. பிறந்த நேரம், இடம் விபரங்களை மீண்டும் அனுப்பினால் பதில் சொல்கிறேன். எஸ். பழனியம்மாள், மேட்டுப்பாளையம்.
கேள்வி :
என் பேரன் பி. . படித்தும் நிரந்தர வேலை அமையவில்லை. 5 ஆயிரம் சம்பளத்திற்கு போய்க் கொண்டிருக்கிறான் . அவனுக்கு எப்போது நல்லவேலை கிடைக்கும்?
பதில்:
பேரன் ஜெயப்பிரகாசுக்கு கும்பலக்னம், மகரராசியாகி லக்னத்தையும், லக்னாதிபதியையும் குருபகவான் பார்த்த யோகஜாதகம். அதேநேரத்தில் ராசிக்கு பத்தாமிடத்தில் சுபத்துவம் பெறாத செவ்வாய் இருப்பதும் லக்னத்திற்கு பத்தாமிடத்தில் எட்டுக்குடைய புதன் அமர்ந்ததும் நல்ல வேலை கிடைப்பதற்கான தடை அமைப்புகள். அடுத்த சனிப்பெயர்ச்சியில் மகரராசிக்கு ஏழரைச்சனி ஆரம்பிக்கும் என்பதால் இன்னும் சில வருடங்களுக்கு அவருக்கு நிரந்தர வேலை என்பது கடினமான ஒன்றாக இருக்கும். சனி முடிந்ததும் வாழ்க்கையில் நல்ல விதமாக செட்டில் ஆவார். . பாலகிருஷ்ணன், கோவை – 1.
கேள்வி :
கொஞ்ச நாட்களாகவே தொழில் சரிவர நடப்பதில்லை. வீட்டிலும் நிம்மதி இல்லை. தொழில் எனக்கு ஒத்துவருமா? அல்லது வேலைக்குச் செல்லலாமா? எதுவாக இருந்தாலும் பதில் சொல்லவும். மனைவியின் ஜாதகப்படி வீடு வாங்கும் யோகம் இருக்கிறதா? அல்லது ஒத்திக்காவது போகமுடியுமா? குலதெய்வக் கோவிலுக்கு தொடர்ந்து போய்கொண்டிருக்கிறேன் . வேறு எந்த தெய்வத்திடம் போக வேண்டும்?
பதில்:
கடந்த சில வருடங்களாகவே ஆறு, பனிரெண்டாமிடங்கள் சம்பந்தப்பட்ட தசை புக்திகள் நடப்பதால்தான் உங்களுக்குத் தொழில்நிலை சரியில்லை. தற்போது நடக்கும் ஆறுக்குடைய புதன்தசை 2017-ம் ஆண்டு இறுதியில் முடிவதால் இனிமேல் தொழில் சீராக நடக்கும். அடுத்து நடக்க இருக்கும் கேதுதசை பதினொன்றாம் வீட்டில் இருப்பதால் நிச்சயமாக யோகம் செய்யும். வேலைக்கு போக வேண்டிய அவசியம் இருக்காது. மனைவியின் ஜாதகப்படி சுக்கிரபுக்தி நடப்பதால் ஒத்திக்கு வீடு மாறுவீர்கள். குலதெய்வத்தை விட மிக உயர்ந்த சக்தி வேறு எதுவுமில்லை. நீங்கள் வணங்கும் குலதெய்வம் உங்களை ஒரு போதும் கைவிடாது. சாந்தா. மு, கெருகம்பாக்கம்.
கேள்வி :
மகன் என்ஜினீயரிங் முடித்துள்ளான். சரியான வேலை அமையவில்லை. வீட்டில் எப்பொழுதும் பிரச்னையாகவும் , ஒற்றுமை இல்லாத சூழலும் இருக்கிறது. நல்லவாக்கு கூற தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
சந்
சனி ராசி செவ்
ரா,குரு பு,சு சூ
பதில்:
(மகரலக்னம், மேஷராசி. இரண்டில் சனி. ஏழில் செவ். ஒன்பதில் சூரி. பத்தில் ராகு, குரு, புத, சுக். 24.9.1994, 3.50 பகல், திருக்கோவிலூர்) மகனுக்கு நீசமான செவ்வாய் தசையும், அஷ்டமச்சனியும் நடப்பதால் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. அடுத்த வருடம் சுபரோடு இணைந்து சுபர் வீட்டில் அமர்ந்த ராகுவின் தசை நடக்க இருப்பதால் மனதிற்கு பிடித்த வேலை தூர இடங்களில் அமையும். மகனின் ராகுதசை யோகம் செய்யும் என்பதால் குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் அடுத்த வருட பிற்பகுதியில் இருந்து விலகும்.
வயோதிகத்தில் நல்ல வாழ்வு வாழ முடியுமா?
ஏ. பி. பழனிவேலு, கீழ்க்கட்டளை.
கேள்வி:
மாலைமலரில் கிரகநிலை, யோகபாவங்கள் பற்றித் தாங்கள் ஆதாரப்பூர்வமாக எழுதி வரும் விளக்கங்கள் இதுவரை யாருமே எழுதாத ஒன்றாகும். நான் வாங்கும் சம்பளம் குடும்பச்செலவுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் படிப்புச் செலவுக்குமே சரியாக உள்ளது. எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் கையில் பணம் தங்க மறுக்கிறது எனது குடும்பத்திற்கு ஒரு வீட்டை சொந்தமாகக் கட்டவோ வாங்கவோ முடியவில்லை. நடப்பு சனிதசையில் சொந்தவீடு, குழந்தைகள் படிப்பு, திருமணக் கடமைகளை முடித்து வயோதிகத்தில் கடன் இல்லாமல் மனைவியும் நானும் வாழ வழியுண்டா? வேதத்தின் அங்கமான ஜோதிடத்தில் இறையருளால் சிறந்து விளங்கும் தங்களின் திருவாக்கால் இந்த சகோதரனின் குடும்பத்திற்கு ஆசி வழங்கி வாழ்த்த வேண்டுகிறேன்...
பதில்:
பழனிவேலுவிற்கு கும்பலக்னமாகி எனது பாபக்கிரகங்களின் சூட்சுமவலுத் தியரிப்படி லக்னாதிபதி சனிபகவான் நீசமாகி சந்திரனின் பார்வை வாங்கி நவாம்சத்தில் உச்சம் பெற்ற யோகஜாதகம். அதேநேரத்தில் லக்னத்திற்கோ ராசிக்கோ சுபர் பார்வையில்லாமல் லக்னத்தில் ராகு அமர்ந்து சந்திரனைச் சனி பார்த்ததால் நீங்கள் எதிலும் அதிக சிந்தனையுள்ள, குழப்பவாதியாகவும் தன்னம்பிக்கையில்லாதவராகவும் மிகவும் நிதானமான ஆளாகவும் இருப்பீர்கள். யாராவது ஒருவர் உங்களுக்கு கீ கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். லக்னாதிபதி என்பதோடு மட்டுமின்றி ராசிக்கும் ராஜயோகாதிபதியாகி சந்திரகேந்திரத்தில் பரணி நட்சத்திரத்தில் சனி அமர்ந்திருப்பதால் சனிதசை யோகதசைதான். ஆனால் சனிதசை ஆரம்பித்த நேரத்தில் உங்களுக்கு ஏழரைச் சனியும் சேர்ந்து கொண்டதால்தான் யோகம் நடக்கவில்லை. நாற்பது வயதுகளில் வரும் ஏழரைச்சனி முதல் சுற்றாக எதையும் தடுக்கும் அமைப்பாக கடுமையான பொருளாதார நெருக்கடிகளைத்தான் தரும். எனவே சனி முடிந்தபிறகு தசை யோகம் செய்யும். அடுத்து நடைபெற இருக்கும் புதன் தசையும் புதன் பனிரெண்டில் மறைந்தாலும் திக்பலத்திற்கு அருகில், தனக்குப் பிடித்த மகர நட்புவீட்டில் தனித்து, சந்திர கேந்திரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் ஆட்சி பெற்றுள்ளதால் நிச்சயம் யோகதசைதான். எனவே நீங்கள் கேட்டுள்ள சொந்தவீடு குழந்தைகளின் படிப்பு திருமணம் போன்றவைகள் உங்களின் சொந்த உழைப்பினால் ஏழரைச் சனி முடிந்தபிறகு படிப்படியாக நிச்சயம் கிடைக்கும். குழந்தைகளின் ஜாதகங்களிலும் லக்னாதிபதி வலுப்பெற்று யோக ஜாதகங்களாக உள்ளது இதை உறுதி செய்கிறது. வாழ்க்கையில் எதையுமே பாசிடிவாக பார்க்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். வெற்றி பெற மட்டுமே நாம் இங்கே பிறந்திருக்கிறோம். அதை நாமே உணர மறுப்பதுதான் கர்மவினை என்று சொல்லப்படுகிறது. உச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் காயப்பட்டவர்கள்தான். பலவீனமாக இருந்து பின்பு சுதாரித்துக்கொண்டு பலமானவர்கள்தான். மரணம் நம்மை எந்த முனையில் எப்போது சந்திக்கும் என்று அறிய இயலாத இந்த பயணத்தின் ஒவ்வொரு மூலையிலும் அதிர்ஷ்டம் நம்மை நோக்கி கண் சிமிட்டியபடிதான் இருக்கிறது. பெரும்பாலோர் அதைக் கவனிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டோ தலை குனிந்து கொண்டோ கடந்து விடுகிறோம். மிகச் சிலர்தான் அந்தச் சிமிட்டலை சரியாக அடையாளம் கண்டு அதை அரவணைத்துக் கொள்கிறார்கள். நீங்களும் அந்த சிலரில் ஒருவராக எதிர்காலத்தில் இருப்பீர்கள். வாழ்த்துக்களும் குழந்தைகளுக்கு என்   ஆசிகளும்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 87 (24.5.2016)

  1. சார் அனைத்து கேள்விகளுக்கும் மிக நல்ல விளக்கம் அளித்தீர்கள்.

    உங்களுடைய பாவகிரகங்களின் சூட்சம தியரி எதில் படிக்க வேண்டும் சார், எந்த வெப்சைட் ல் உள்ளது சார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *