adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 138 (6.6.2017)

எஸ். விக்னேஷ், நாமக்கல்.

கேள்வி :

பி. . சிவில் பிரிவில் நான்காம் ஆண்டு படித்து முடிக்க இருக்கிறேன். வெளிநாடு வேலைவாய்ப்பு கிடைக்குமா? எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?

சனி, கேது சந் சூ,புத சுக்,செவ்
ராசி
 லக்
குரு
பதில் :

(சிம்ம லக்னம், மேஷ ராசி. 5-ல் குரு. 8-ல் சனி, கேது. 10-ல் சூரி, புத, சுக், செவ். 12-6-1996, காலை 10.33, நாமக்கல்)

ஒருவருக்கு வெளிநாடு வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில் ஜாதகத்தில் 8, 12- ம் இடங்களும், அதன் அதிபதிகளும் சுபத்துவமாக, ஒருவரோடு, ஒருவர் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அதேபோல சர ராசிகள் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய வீடுகளில் இருக்கும் கிரகங்களும் வெளிநாடு வாசத்தை தருவார்கள். எட்டிற்குடையவனும், சந்திரனும், ராகு-கேதுக்களும் கடல் தாண்டி செல்வதைக் குறிக்கும் காரக கிரகங்கள்.

உங்கள் ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் செவ்வாய் திக்பலமாக இருப்பதால் சிவில் என்ஜினீயரிங் படிக்கிறீர்கள். எட்டுக்குடைய குரு ஆட்சி பெற்று 12-க்குடைய சந்திரனை பார்ப்பதால் வெளிநாட்டில் வேலை செய்வீர்கள். அடுத்து நடக்க இருக்கும் தசாநாதன் சந்திரன் சர ராசியான மேஷத்தில் இருப்பது இதனை உறுதி செய்கிறது. லக்னாதிபதி திக்பலம் பெற்று, லக்னத்தையும், ராசியையும் வலுப்பெற்ற குரு பார்த்து, அடுத்தடுத்து யோக தசைகளான சந்திர, செவ்வாய் தசைகள் நடக்க இருப்பதால் எதிர்காலத்தில் மேன்மையான நிலையில் இருப்பீர்கள்.

சுவேதா, தையூர் - 603 103.

கேள்வி :

ஜோதிட சக்ரவர்த்திக்கு மகளின் வணக்கம். என் ஜாதகத்தில் புத்திரகாரகன் குரு ஐந்தில் இருப்பதாலும், கணவரின் ஜாதகத்தில் ஐந்துக்குடையவனும் புத்திரகாரகனுமாகிய குரு ஐந்தாம் வீட்டிற்கு 12-ல் மறைந்திருப்பதாலும், புத்திர பாக்கியம் குறைவு என கூறப்படுகிறதுஎங்களுக்கு எப்போது மழலைச் செல்வம் கிடைக்கும்?

ராகு சூ, புத சுக்
சந், குரு ராசி
 லக்
செவ் லக், சனி
குரு சூரி  புத, சுக்
செவ், ராகு ராசி
லக்,சந் சனி
பதில் :

(கணவனுக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி. 1-ல் சனி. 2-ல் செவ். 4-ல் குரு. 5-ல் ராகு. 6-ல் சூரி, புதன். 8-ல் சுக். 31.5.1986, மாலை 6.30, சென்னை. மனைவிக்கு தனுசு லக்னம், தனுசு ராசி. 1-ல் சனி, 3-ல் செவ், ராகு. 5-ல் குரு. 6-ல் சூரி. 7-ல் புதன், சுக். 1.6.1988, இரவு 8.14, சென்னை)

ஐந்தில் குரு தனித்திருப்பதும், ஐந்திற்குடையவன் அதற்கு பனிரெண்டில் மறைவதும் புத்திர தோஷமாக சொல்லப்பட்டாலும், உன்னுடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய் ராகு-கேதுக்களுடன் இணைந்து சனி பார்வை பெற்றதுதான் கடுமையான தோஷம்.

ஒரு பாவமோ அல்லது பாவாதிபதியோ முழுக்க பாபக் கிரக ஆளுமையில் இருக்கும் போது அந்த பாவ ஆதிபத்தியம் முற்றிலும் வலுவிழக்கும் அல்லது தாமதமாகும். உன் கணவருக்கு தற்போது பாக்கியங்களைத் தடுக்கும் எட்டுக்குடைய புதன் தசை நடப்பதும் குற்றம். கணவரின் புதன்தசை, சந்திர புக்தியில் 2019-ல் கையில் குழந்தை இருக்கும். குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள்.

ஆர். எஸ். முத்துராமன், சென்னை - 87.

கேள்வி :

71 வயதாகும் ஓய்வு பெற்ற ஆசிரியரான நான் மனைவி இறந்துவிட்டதால் தனிமையில் இருக்கிறேன். ஒரே மகனும் குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டான். என்னை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல மகன் ஏற்பாடுகள் செய்து வருகிறான். ஜாதகப்படி என்னால் அங்கு செல்ல முடியுமா? எனது ஆயுள் பாவம் எவ்வாறு உள்ளது?

ராகு
ராசி சந், சனி
லக்
 சுக்,செவ் குரு சூ,புத
பதில் :

(மகர லக்னம், கடக ராசி. 5-ல் ராகு. 7-ல் சனி. 9-ல் சூரி, புத. 10-ல் சுக், செவ், குரு. 20.9.1946, மதியம் 3 மணி, சேலம்)

துணையை இழந்து தனிமையில் இருக்கும் தகப்பன் எப்படிக் கிடந்தால் என்ன என்று முதியோர் விடுதியில் தள்ளும் மகன்களுக்கு மத்தியில் உங்களை தனக்கு அருகிலேயே வைத்துக் கொள்ள நினைக்கும் மகனை நினைத்து பெருமைப்படுகிறேன்.

ஒருவர் கடல் தாண்டி செல்வதைக் குறிக்கும் கடகத்தில் இருக்கும் சந்திரனின் தசை அடுத்த வருடம் ஆரம்பிக்க இருப்பதால், உறுதியாக வெளிநாடு சென்று மகனுடன் தங்குவீர்கள். உங்களுடைய இறுதிக்காலம், மகனுடைய வீட்டில், இந்தியாவை விட்டு மேற்குத் திசை நாடு ஒன்றில் அமையும். அடுத்து ஆரம்பிக்க இருக்கும் தசாநாதன் சந்திரன் ஏழுக்குடைய மாரகாதிபதி என்பதால் சந்திர தசையே உங்களுடைய இறுதி தசை.

ஒரு வாசகர், புதுச்சேரி - 3.

கேள்வி :
இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். மூன்று வருடமாக தொழில்சரியில்லை. கடன் அதிகமாக உள்ளது. வட்டியும் கட்ட முடியவில்லை. மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஊரிலும் தலைகுனிவு. ஊரில் உள்ள எல்லோருடனும் பகை. ஒருநாள் பொழுது ஒருயுகமாக உள்ளதுமன உளைச்சலால் வியாபாரத்தை சரியாகச் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டு நடக்க இருக்கும் கிரகப் பெயர்ச்சிகள் எப்படி இருக்கும். எதிர்காலம் எப்படி அமையும்?
ராகு சனி புத  சூ,சுக் செவ்
ராசி  சந்
 குரு
 லக்
பதில் :

(விருச்சிக லக்னம், கடக ராசி. 5-ல் ராகு. 6-ல் சனி. 7-ல் புத. 8-ல் சூரி, சுக், செவ். 10-ல் குரு. 29.6.1968, மாலை 4.30, பாண்டிசேரி)

2014 முதல் உங்களின் விருச்சிக லக்னத்திற்கு அஷ்டமாதிபதியான புதன் புக்தி மற்றும் சுக்கிர புக்தி நடப்பதால் தொழில் சரிவுகளும், பெற்ற பெண்ணால் அவமானங்களும் நடந்தன. உங்களின் ஜாதக அமைப்பின்படி வீட்டில் உள்ள மனைவி, குழந்தைகளில் யாருக்கேனும் ஏழரைச் சனி அல்லது அஷ்டமச் சனி தற்போது நடந்து கொண்டிருக்கும். அதனால்தான் வேதனைகள் அதிகமாக இருக்கிறது. வரும் அக்டோபர் மாதத்துடன் சுக்கிர புக்தி முடிவதால் அதன் பிறகு நிலைமைகள் சீரடைய ஆரம்பிக்கும். அடுத்த வருடம் முதல் கடனை அடைக்க முடியும்.

உங்களின் கடக ராசிக்கு ஆகஸ்டில் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியும், செப்டம்பரில் நடக்க இருக்கும் குரு பெயர்ச்சியும் நிதானமான பலன்களை தரும் என்றாலும் அக்டோபர் மாதம் நடக்கும் சனிப்பெயர்ச்சி விசேஷமான நற்பலன்களைத் தரும் என்பதால் அடுத்த வருடம் முதல் நிம்மதியான வாழ்க்கை உங்களுக்கு இருக்கும்.

எஸ். மணியன், காங்கேயநல்லூர்.

கேள்வி :

எனது மகளுக்கு நடந்த முதல் திருமணம் பிரச்னையான போது இரண்டு வருடங்களுக்கு முன்பு மாலைமலர் கேள்வி பதிலுக்கு அனுப்பிவைத்தேன்.  2015 மே மாதம் தாங்கள் தந்த பதிலில் திருமணம் செய்தது தவறு என்றும், போலீஸ், கோர்ட்டு என்று போய் விவாகரத்து ஆகும் என்று தெரிவித்தீர்கள். அதன்படி விவாகரத்து ஆகி விட்டது. இப்போது என் மகள் மற்றும் ஒரு வரன் ஜாதகம் அனுப்பி இருக்கிறேன்இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்யலாமா? பொருத்தம் உள்ளதா? என்பதை சொல்லும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பதில் :

அனுப்பியுள்ள ஜாதகத்தின்படி ஆண், பெண் இருவரின் ராசியும் ஒன்றுக்கு ஏழாக, கடகம், மகரம் என்று உள்ளதாலும், இருவருக்கும் லக்னத்தில் சனி இருந்து ஏழாமிடத்தைப் பார்ப்பதாலும், ஆணின் ஜாதகத்தில் சுக்கிர தசை, செவ்வாய் புக்தியும், பெண்ணில் ஜாதகத்தில் இரண்டாவது திருமண காலமான குருதசையில் புதன்புக்தி நடப்பதாலும் இருவரையும் இணைத்து வைக்கலாம். மகளின் ஜாதகப்படி இனிமேல் எவ்வித கெடுதல்களும் நடப்பதற்கு வாய்ப்பில்லை.

கே. எஸ். சண்முகம், திருச்சி - 2.

கேள்வி :

35 வயது மகனுக்கு கடுமையான திருமண முயற்சிகள் செய்து வருகிறேன். எல்லாம் கூடி வரும் வேளையில் ஏதோ ஒரு காரணத்தினால் விலகிவிடுகிறது. சிலர் இவனுக்கு இரு தார யோகம் என்று சொல்கிறார்கள். ஜாதகம் பொருந்தி வருகிறது என்று பெண் வீட்டிற்கு லெட்டர் அனுப்பினால் அவர்கள் பதிலே சொல்வதில்லை. அல்லது பொருத்தம் இல்லை என்று சொல்கிறார்கள். என் மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?

சூ
 சந், புத ராசி
சுக்
கேது குரு ல,சனி செவ்
பதில் :

(கன்னி லக்னம், கும்ப ராசி. 1-ல் செவ், சனி. 2-ல் குரு. 4-ல் கேது. 5-ல் சுக். 6-ல் புத, சந். 7-ல் சூரி. 24.3.1982, மாலை 6.30, திருச்சி)

மகனின் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், சனி இணைந்து, ஏழாமிடத்தைப் பார்ப்பதும், அதுவே ராசிக்கு எட்டாம் இடமானதும் கடுமையான தோஷம். இந்த அமைப்பினால்தான் திருமணம் தாமதமாகிறது. 1, 6- க்குடையவர்களின் பரிவர்த்தனையும் நல்லதல்ல. அடுத்த வருடம் ஆரம்பிக்க இருக்கும் புதன் தசை, குருபுக்தியில் தான் திருமண அமைப்பே கூடி வருகிறது.

சுக்கிரனின் வீட்டில் உள்ள குருவின் புக்தியில்தான் அவனுக்கு தாம்பத்திய சுகம் கிடைக்கும். இன்னும் ஒரு வருடம் பொறுத்திருக்கவும். தாமத திருமணம் என்றாலும் நிம்மதியான வாழ்க்கை இருக்கும். இரண்டு தார அமைப்பு இல்லை.

மகளின் ஜாதகப்படி கணவருக்கு தீமைகள் நடக்குமா?

பி. ஜெயசித்ரா, தான்தோன்றிமலை.

கேள்வி :

ஜோதிட பிரம்மாவிற்கு வணக்கம். எனது மகளின் ஜாதகப்படி குருச்சந்திர யோகம் அமைந்து, தற்போது குருவின் தசை நடப்பதால் குடும்பத்திற்கு எப்படி இருக்கும்? கும்ப லக்னத்திற்கு பாதக ஸ்தானமான ஒன்பதாமிடத்தில் சுக்கிரன், சனி, ராகு இணைந்து குருவின் தசைநடப்பதால் தந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று இங்குள்ள ஜோதிடர்கள் சொல்கிறார்கள். எனக்கு மிகவும் பயமாக உள்ளது. மகளின் ஜாதகப்படி என் கணவருக்கு தீமைகள் எதுவும் நடக்குமா என்பதை சொல்லும்படிதங்களின் பொற்பாதங்களில் வணங்கி வேண்டுகிறேன்.

குரு
லக், சந் ராசி செவ்
 சுக்,சனி ராகு சூ,புத
பதில் :

(கும்ப லக்னம் கும்பராசி. 5-ல் குரு, 6-ல் செவ். 8-ல் சூரி, புத. 9-ல் சுக், சனி, ராகு. 18.9.2013, மாலை 4.39, கரூர்)

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் ஏனம்மா முடிச்சுப் போடுகிறாய்? தந்தைக்குப் பாதிப்பு என்று உங்கள் ஊர் ஜோதிடர்கள் சொல்கிறார்களா? அல்லது உன் அரைகுறை ஜோதிடஞானத்தை வைத்துக் கொண்டு நீயாக ஏதாவது கற்பனை செய்து கொண்டு என்னிடம் கேள்வி கேட்கிறாயா?

உன் கேள்விப்படி பாதகாதிபதி வலுவாக இருந்து தந்தைக்கு கெடுதல் நடப்பதாக வைத்துக் கொண்டாலும் அது உன் மகளின் ஐம்பது வயதிற்கு மேல் வரும் சுக்கிர தசையில்தானே வரவேண்டும்? குருவின் தசையில் எப்படி பாதகம் நடக்கும்? பாதகத்திற்கும், குருவிற்கும் என்ன சம்பந்தம்?

மகளின் ஜாதகப்படி ஒன்பதாமிடத்தில் சுக்கிரனும், சனியும் ஒரே டிகிரியில் ராகுவுடன் இணைந்திருந்தாலும் அவர்கள் இருவரும் ஆட்சி, உச்சமாக இருப்பதும், அனைத்திலும் மேலாக இவர்கள் மூவரையும் குரு பார்ப்பதும் நிவர்த்தி. அதைவிட மேலாக லக்னமும், ராசியும் ஒன்றாகி, அவற்றையும், ஒன்பதாமிடத்தையும் குரு பார்ப்பது சிறப்பு.

இங்கே பாதகாதிபதி சுக்கிரன் சனியுடனும், ராகுவுடனும் மிக நெருக்கமாக இணைந்து தனது பாதகம் தரும் வலிமையை இழந்து விட்டார். பொதுவாக கும்ப லக்னத்திற்கு தனித்து இரண்டில் சுக்கிரன் உச்சம் பெற்றால் யோகம் செய்து, பாதகம் செய்வார். அதிலும் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. கண்டதையும் நினைத்து மனத்தைக் குழப்பிக் கொண்டிராதே. உன் மகள் வளர வளர உன் கணவனும், நீயும் நல்ல நிலைமையில் இருப்பீர்கள்.

2 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 138 (6.6.2017)

  1. நல்ல விளக்கம் குருஜி

    மேற்கு நாட்டில் மரணம் என்று கூறினீர்கள்–அது சந்திரன் திசையா?? சனியின் திசையா?? குருஜி

  2. ராகு காலத்தில் கடைசி அரைமணி நேரம் அமிர்த கடிகை போன்று எம கண்டத்துக்கும் அமிர்த கடிகை நேரம் உள்ளதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *