எம். பாலசுப்பிரமணியன், செவ்வந்திலிங்கபுரம்.
கேள்வி :
சாதாரணமானவனான எனக்குஇப்போது 10 லட்சம் ரூபாய் கடன்இருக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்சொந்தமாக சிறிய அளவில் செங்கல்சூளை ஆரம்பித்து முதலில் நன்றாகஇருந்து சமீபகாலமாக மிகவும்வறுமையும் கடன் தொல்லையுமாகஉள்ளது. சொத்து என்று பார்த்தால்இரண்டு வருடங்களுக்கு முன்பு 48 செண்ட் தரிசு நிலம் வாங்கி என்பெயருக்கு பத்திரம் பதிவு செய்தேன். அதன்பிறகுதான் கடனாளியாகிவிட்டேன். கடன் தொல்லையால் என்ன செய்வது என்று புரியவில்லை. குருஜி அவர்கள் ஏதாவது வழிகாட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
அனுப்பிய மூவரின் ஜாதகத்திலும் பிறந்த நேரம், இடம் இல்லாததால் என்னால் துல்லியமாக பதில் சொல்ல முடியாது. இருந்தாலும் கன்னி லக்னம், விருச்சிக ராசியான உங்களுக்கும் துலாம் ராசியான மகளுக்கும் ஏழரைச்சனி நடப்பதால் கன்னி லக்ன பாவியான செவ்வாயின் செங்கல் சூளை தொழிலில் உங்களுக்கு நஷ்டமும், கடனும் ஏற்பட்டது.
எனது கணிப்புப்படி உங்களுக்கு தற்போது செவ்வாய்தசையும் நடந்து கொண்டிருக்கலாம். மகளுக்கு ஏழரை முடிந்தபிறகு பிரச்னைகள் தீர ஆரம்பிக்கும். லக்னாதிபதி புதன் வலுவாக இருப்பதால் எந்த பிரச்னையும் எல்லை மீறாமல் இரண்டு வருடங்களுக்குப் பிறகு சம்பாதித்து கடனைத் தீர்க்க உங்களால் முடியும்.
அ. முத்தையா, மதுரை - 2.
கேள்வி :
சந் | ல | ||
ராசி | ரா | ||
கே | செவ் | ||
சுக் | பு | சூ,சனி குரு |
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். 34 வயதான மகனுக்குகடுமையான முயற்சி எடுத்தும் திருமணம் அமையவில்லை. என் மகன்ஜாதகத்தில் ராசிக்கு ஏழில் இருந்து குருபகவான் பார்த்தும் கடந்த வருடம்உச்சமான குருபகவான் மீனராசியை பார்த்தும் அஷ்டமச்சனி விலகியும்என் மகனுக்கு ஏன் திருமணம் ஆகவில்லை? செவ்வாய் இரண்டு, ஏழு, எட்டில் அமர்ந்து ஆட்சி உச்சமாக இருந்தால் கூட கெடுபலனை செய்வார்என்று மாலைமலரில் குறிப்பிட்டு இருந்தீர்கள். இந்த ஜாதகத்தில்இரண்டில் நீசம்பெற்ற செவ்வாய் வலுவிழந்த நிலையிலும்திருமணத்தை தாமதப்படுத்துவது ஏன்? என் பையனுக்கு ஜாதகப்படிதிருமணம் எப்போது?.
பதில்:
(மிதுனலக்னம், மீனராசி. திருக்கணிதப்படி இரண்டில் ராகு, மூன்றில் செவ். நான்கில் சூரி, குரு, சனி. ஐந்தில் புதன். ஆறில் சுக்.)
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதிக்கோ லக்னத்திற்கோ ராகுவின் சம்பந்தம் இருப்பது நல்லநிலை அல்ல. இங்கு லக்னம், லக்னாதிபதி புதன் இருவருமே ராகுவின் சாரத்தில் இருக்கிறார்கள். அடுத்து திருமணம் என்பதே சந்ததி விருத்திக்காகத்தான் என்பதால் கடுமையான புத்திரதோஷம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும். ஒருவருக்கு 25 வயதில் தந்தையாகும் அமைப்பு இருந்தால் 24 வயதில் திருமணம் ஆகும். 36 வயதில்தான் அப்பா ஆவார் என்றால் 35 வயதில்தான் திருமணம் நடக்கும்.
உங்கள் மகன் ஜாதகத்தில் புத்திர ஸ்தானாதிபதியான ஐந்திற்குடைய சுக்கிரனை செவ்வாய், சனி பார்த்து புத்திரகாரகன் குருபகவான் இரண்டு டிகிரிக்குள் சூரியனுடன் அஸ்தமனமாகி ராசிக்கு ஐந்தில் ராகு அமர்ந்ததும் ராசிக்கு ஐந்திற்குடையவரையும் செவ்வாய், சனி பார்ப்பதும் கடுமையான புத்திரதோஷம். மகன் ஜாதகப்படி ராசிக்கு ஏழுக்குடைய புதன்தசையில் லக்னத்திற்கு ஏழுக்குடைய குருபுக்தியில் அடுத்த வருடம் ஆவணி மாதம் திருமணமாகி 2018-ல் தந்தையாவார். நீங்கள் கேட்ட எந்த தோஷத்திற்கும் ஜாதகத்திற்கும் சம்பந்தம் இல்லை. லக்னாதிபதி புதன் வக்கிரம் பெற்றிருப்பதால் புதனுக்குரிய முறையான பரிகாரங்களை செய்யவும்.
பெற்றோரை அடிக்கும் மகன் எப்போது மாறுவார்?
ஆர். கிருஷ்ணதேவி, சென்னை - 40.
கேள்வி :
பு,ல சூ,குரு | |||
ரா | ராசி | சுக் செவ் | |
கே | |||
சனி | சந் |
குருஜிக்கு பலகோடி வணக்கங்கள். இரண்டாவது மகனுக்கு படிப்பில்நாட்டம் இல்லை. பணி செய்ய ஆர்வம் இல்லை. குடும்பத்தையேஅலைக்கழிக்கிறார். பெற்றோரை அடித்துக் கொடுமைப்படுத்தும் பாடுசொல்லி மாளாது. பெற்ற வயிறு பற்றி எரிகிறது. இதுவரை ஐ.ஏ.எஸ்படிக்கிறேன் என பலலட்சங்களை இழந்து விட்டார். வீட்டையும் விற்கவைத்துவிட்டார். மேற்படிப்பு உண்டா? ஐ.ஏ.எஸ். படிப்பாரா? வேலைஎப்போது கிடைக்கும்? வெளிநாடு யோகம் உண்டா? எப்போதுமணவாழ்க்கை அமையும்? ஏன் இப்படிச் செய்கிறார் என்பதைக் கூறிபடாத பாடுபட்டுப் பரிதவிக்கும் இந்தத் தாய்க்கு வழிகாட்ட வேண்டும்.
பதில்:
(மிதுனலக்னம், விருச்சிகராசி. லக்னத்தில் சூரி, புத, குரு. இரண்டில் சுக், செவ். மூன்றில் கேது. ஏழில் சனி.)
லக்னாதிபதி புதன் லக்னத்தில் ஆட்சி பெற்று லக்னத்தை வக்ரச்சனி வலுப்பெற்றுப் பார்த்து ஐந்திற்குடையவன் நீசனுடன் சேர்ந்து ஒன்பதாம் இடத்தில் சனிபார்வையுடன் ராகு அமர்ந்த ஜாதகம். தாய்-தந்தையர் ஸ்தானமான நான்கு, ஒன்பதாம் இடங்களை சனிபார்த்து ராசிப்படி நான்கில் ராகுவும், ஒன்பதில் நீசசெவ்வாயும் அமர்ந்ததால் பெற்றோருக்குப் பலன் தராத பிள்ளை.
விருச்சிகராசிக்கு இப்போது ஏழரைச்சனி நடப்பதால் உங்கள் பிள்ளை எதிலும் நிலையான புத்தியுடன் இருக்கமாட்டார். ஜாதகப்படி ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற வாய்ப்பில்லை. தற்போது கேதுதசை நடப்பதாலும் அடுத்து வெளிநாட்டைக் குறிக்கும் பனிரெண்டிற்குடையவனான சுக்கிரன் ஜலராசியான கடகத்தில் உள்ளதாலும் வரும் சுக்கிரதசையில் வெளிநாட்டு வேலைக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாக வேலை செய்வார்.
ஏழில் சனி அமர்ந்து அதுவே ராசிக்கு இரண்டாம் வீடாகி லக்னத்திற்கு இரண்டிலும் நீசசெவ்வாய் அமர்ந்ததால் தாமதமாக முப்பது வயதில்தான் திருமணம் நடக்கும். எனது கணிப்பின்படி வீட்டில் உங்களில் யாருக்காவது சனி நடந்து கொண்டிருக்கும். நடைபெறும் கேதுதசை சனிபுக்தி 2017 இறுதியில் இவரது நடவடிக்கையில் மாற்றம் வரும். அதுவரை இறைவழிபாடு ஒன்றே உங்களுக்குத் துணையிருக்கும்.
கோ. விஜயரங்கம், வேலூர் - 1.
கேள்வி :
சந் | ல குரு | ||
ராசி | கே | ||
சுக் ரா | |||
பு சனி | சூ செவ் |
ஜோதிடக்கலை என்பது ஒருவருக்கு கடவுள் கொடுத்த வரம். அந்தக்கலையை இறைவன் பூரணமாக உங்களுக்குக் கொடுத்துள்ளார் என்பதை மாலைமலர் வாயிலாக வாராவாரம் படித்துத் தெரிந்து வருகிறோம். ஆயினும் இதுவரை எனது எந்தக் கடிதத்திற்கும் பதில் இல்லாமல் தவம்இருக்கிறோம். எனது மகளின் ஜாதகத்தை ஜோதிடர்கள் பலவாறுசொல்லி எங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள். தங்கள்நாவில் இருந்து வரும் வார்த்தைகள் சக்தி உள்ளவையாக இருப்பதால்என் மகளின் மாங்கல்யம், எதிர்காலம், புத்திரபாக்கியம், ஆயுள்இவைகளைப் பற்றிக் கூறி எனது மனக்கஷ்டங்களுக்கு விடுதலைவழங்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன் .
பதில்:
(மிதுனலக்னம் ரிஷபராசி லக்னத்தில் குரு ஆறில் சூரி செவ் ஏழில் புத சனி எட்டில் சுக் ராகு )
லக்னத்தை சனி செவ்வாய் வலுப்பெற்றுப் பார்த்த ஒரு கோபமும் பிடிவாதமும் கொண்ட பெண்ணின் ஜாதகம். ஆனால் லக்னத்தில் குரு இருப்பதால் நல்லவள். சூரியன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் சில ஜோதிடர்கள் உங்களைக் குழப்பியிருப்பார்கள். உங்கள் பெண்ணிற்கு சூரியதசையோ செவ்வாய்தசையோ வராது என்பதால் மாங்கல்யக் குற்றம் இல்லவே இல்லை.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இல்லாத நிலையில்தான் கெடுபலன் அமைப்புக்கள் வலிமையாக கெடுதல் செய்யும். இங்கே லக்னாதிபதி பரிவர்த்தனை பெற்று யோகசாரம் வாங்கி அம்சத்தில் அதிநட்பு பெற்றதாலும் லக்னத்தில் குரு திக்பலம் பெற்றதாலும் லக்னமும் கணவன் ஸ்தானமும் வலுப்பெற்று விட்டது. சுக்கிரன் எட்டில் மறைந்து ராகுவுடன் இணைந்திருப்பது போல மேலோட்டமாகத் தெரிந்தாலும் சுக்கிரன் ராகுவிடமிருந்து இருபத்தியிரண்டு டிகிரி விலகி அம்சத்தில் உச்சமாக இருக்கிறார். தவிர ராகுதசையும் சென்ற வருடமே முடிந்து விட்டது. கெடுபலன் தரக்கூடிய செவ்வாய் அம்சத்தில் நீசமானதும் வெகுசிறப்பு.
ராசிக்கு ஏழுஎட்டில் சனிசெவ்வாய் லக்னத்திற்கு ஏழில்சனி என்பது தோஷம்தான். ஆனால் குடும்பஸ்தானாதிபதி உச்சமாகி ராசிக்கு இரண்டில் குரு அமர்ந்ததால் திருமணத்திற்குப் பிறகு நிலையான ஒரே குடும்பம். குருதசை நடப்பதால் ஆண் ஒன்று பெண் ஒன்று என குழந்தைகளுக்கும் குறைவில்லை. எட்டில் சுபர் அமர்ந்து ராசிக்கு எட்டில் சனி என்பதால் தீர்க்காயுள். கணிக்கச் சற்றுச் சிரமமான ஜாதகம் என்பதால் சிறிது குழப்பம். எந்தக்குறையும் இல்லாமல் மாங்கல்ய பலத்துடன் நல்ல குழந்தைகளுடன் உங்கள் பெண் தீர்க்காயுள் இருப்பாள். வாழ்த்துக்கள்.
கே. சுப்பிரமணியன், வேளச்சேரி.
கேள்வி :
செவ் | |||
ரா | ராசி | குரு கே | |
ல,சுக் ரா,சனி | சந் | ||
சூ | பு |
என் பேத்திக்கு இரண்டாவது திருமணம் எப்போது? நடக்கும் அஷ்டமாதிபதி சூரியதசை என்ன பலன் செய்யும்? வெளிநாடு செல்வாளா? பெரும்பாலான கிரகங்கள் அஷ்டமாதிபதி சாரத்தில் இருப்பதால் இரண்டாவது திருமணம் கூட சிறப்பாக அமையாது என்று ஜோதிடர்கள் சொல்வது உண்மையா? பேத்திக்காக எண்பத்தி இரண்டு வயதானவனுக்கு பதில் கொடுங்கள்.
பதில்:
(மகரலக்னம் சிம்மராசி லக்னத்தில் சுக்கிரன் சனி ராகு ஐந்தில் செவ் ஏழில் குரு பதினொன்றில் புத பனிரெண்டில் சூரி)
சுக்கிரனும் லக்னாதிபதி சனியும் ராகுவுடன் இரண்டு டிகிரிக்குள் இணைந்து பலவீனமான ஜாதகத்தைக் கொண்ட முதிர்ச்சியில்லாத இந்தக் குழந்தைக்கு சுக்கிரதசை நடப்பில் இருந்ததால் இருபது அல்லது இருபத்தோரு வயதில் சுக்கிரதசை புதன்புக்தியில் திருமணமாகி மாமியார் அல்லது நாத்தனாரால் திருமணமுறிவு சிலமாதங்களில் ஏற்பட்டிருக்கும்.
ஏழுக்குடைய சந்திரன் எட்டில் மறைந்து ஏழாமிடத்தில் ராகு கேதுக்கள் சம்பந்தம் ஏற்பட்டு ஏழாமிடத்தை சனி பார்த்து முதல் திருமணத்தைக் குறிப்பிடும் ஏழாம் பாவம் வலுவிழந்த நிலையில் இரண்டாம் திருமணத்தைக் குறிக்கும் பதினொன்றுக்கு அதிபதி செவ்வாய் தன் வீட்டைப் பார்த்து பலப்படுத்துவதால் முதல் திருமணத்தை இவ்வளவு சீக்கிரம் செய்ய நினைக்கும்போதே ஒரு நல்ல ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டிருப்பதுதானே?
இத்தனை விரிவாக அந்தப்பார்வை இந்தப்பார்வை என்று கேள்வி கேட்கத் தெரிந்த எண்பத்தி இரண்டு வயதான உங்களுக்கு இந்த அமைப்பு தெரியவில்லையா? அல்லது நீங்களே ஒரு ஜோதிடரா? நடக்கும் சூரியதசை அஷ்டமாதிபதி தசையாகி பனிரெண்டில் இருப்பதால் பிறந்த இடத்தை விட்டு இந்தப்பெண்ணை வடக்கே தூரமாக வேலை செய்ய வைக்கும். வடமாநிலங்களில் உங்கள் பேத்திக்கு வேலை கிடைக்கும். லக்னாதிபதி சனிபகவான் முற்றிலும் வலு இழந்திருப்பதால் அவரை சூட்சும வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள்.
இரண்டாவது திருமணம் தாமதமாக இருபத்தியெட்டு வயதிற்கு மேல் நடப்பதே நல்லது. செவ்வாய் சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் சூரியதசை இறுதியில் சுக்கிர புக்தியில் நடக்கும். பரம்பொருள் ஒருவரை எப்போதும் சோதிக்க மாட்டார். மறுமணம் உங்கள் பேத்திக்கு சிறப்பாக இருக்கும். சந்திரனும் வெளிநாட்டைக் குறிக்கும் எட்டாம் பாவத்தில் இருப்பதால் சந்திரதசையில் கடல் தண்டி நிரந்தரமாக வெளிநாடு செல்வாள்.