கே. பாலசுப்பிரமணியம்,
புதுச்சேரி.
கேள்வி :
நாற்பது வயதை நெருங்கியும் எனது மகன், மகள்களுக்கு திருமணம்தாமதமாவதற்கு காரணம் என்ன? எனது பூர்வ ஜென்ம கர்மவினையால்என் பிள்ளைகள் ஏன் மன அமைதி இல்லாமல் இருக்க வேண்டும்?திருமணம் நடைபெற குருஜியின் வாக்கால் எனக்குவழிகாட்ட வேண்டும்.
பதில்:
குரு | செவ் | பு கே | சூ சனி |
ராசி | சுக் | ||
ல சந் | ரா |
செவ் | கே சனி | ||
ராசி | |||
குரு | |||
ரா | சந்,பு சுக் | சூ | ல |
கே | சந் | சூ குரு | |
ராசி | ல,பு சுக் | ||
செவ் சனி | |||
ரா |
மகனுக்கு கன்னிலக்னமாகி லக்னத்திற்கு எட்டில் செவ்வாயும், ராசிக்கு எட்டில் சனியும் அமர்ந்து ஏழாம் வீட்டை சனி பார்த்து ஏழுக்குடையவன் நீசமாகி ராசிக்கு இரண்டில் ராகு அமர்ந்த கடுமையான தாரதோஷ அமைப்புள்ள ஜாதகம். தோஷம் கடுமையாக இருப்பதாலும் அவரது விருச்சிகராசிக்கு தற்போது ஜென்மச்சனி நடந்து வருவதாலும் ஶ்ரீகாளகஸ்தியில் ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு தங்கி அதிகாலையில் ருத்ராபிஷேகம் செய்வதோடு. லக்னாதிபதி புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களையும் செய்யுங்கள். கண்டிப்பாக காளத்திநாதன் வழிகாட்டுவான்.
அடுத்த மகளுக்கு தனுசுலக்னம், தனுசுராசியாகி ஏழில் சனி அமர்ந்து ஏழுக்குடையவன் ஆறில் மறைந்து சுக்கிரனும் எட்டில் அமர்ந்து செவ்வாயின் பார்வையை பெற்றதாலும், லக்னாதிபதி குருபகவான் நான்கில் அமர்ந்து வர்க்கோத்தமம் பெற்று பரிபூரண கேந்திராதிபத்திய தோஷம் பெற்றதாலும் இன்னும் திருமணமாகவில்லை. தற்போது ராகுதசையில் குடும்பாதிபதி சனியின் புக்தி நடப்பதால் வரும் ஆவணிமாதம் முதல் திருமணயோகம் ஆரம்பிக்கிறது. சுறுசுறுப்பாக வரன் பாருங்கள். தை மாதத்திற்குள் நிச்சயம் திருமணம் நடக்கும்.
இளைய மகளுக்கு கடகலக்னம், மேஷராசியாகி இரண்டில் சனி, செவ்வாய் சேர்ந்து ராசிக்கு ஏழாம் வீட்டை சனி பார்த்த ஜாதகம். இவருக்கும் இந்த ஜூலை 27-ந்தேதிக்கு மேல் திருமணயோகம் பரிபூரணமாக அமைவதால் அடுத்தடுத்து பெண்கள் இருவருக்கும் சுபகாரியங்கள் வீட்டில் நடக்கும். பிள்ளைகள் மூன்று பேருக்குமே ஏழரைச்சனியும், அஷ்டமச்சனியும் நடப்பது எல்லாவற்றையும் தடுக்கும். கடுமையான அமைப்பு என்பதோடு என் கணிப்புப்படி தாய்-தந்தையராகிய உங்களுக்கும் சனி நடந்து கொண்டிருக்கும் என்பதால் சனிக்கான ப்ரீத்திகளை உடனடியாக செய்தால் குடும்பம் இனி சுபிட்சம் பெறும்.
ப. லோகநாதன்,
கல்லாங்காட்டு வலசு.
கேள்வி:
குரு ரா | |||
ராசி | |||
சூ,சுக் சனி | செவ் பு | சந் கே,ல |
நடந்து கொண்டிருக்கும் ராகு தசையில் வாங்கக்கூடாத கெட்டபெயர் எல்லாவற்றையும் வாங்கிவிட்டேன். குருவும் ராகுவும் ஒன்றாக இருப்பதால் குருதசையும் கெடுதல் செய்யும் என்கிறார்கள். அனைத்துக் கிரகங்களும் பாவக்கிரகத்துடன் சேர்ந்துள்ளதால் எந்த யோகமும் இல்லாத ஜாதகம் என்கிறார்கள். இல்லற வாழ்க்கையிலும் பிரச்னை உள்ளது. குருதசை நன்மை செய்யுமா? சுயதொழில் செய்யலாமா?
பதில்:
(கன்னிலக்னம், கன்னிராசி இரண்டில் புதன், செவ். மூன்றில் சூரி, சுக், சனி, ஏழில் குரு, ராகு)
ராகுதசையை விட கடந்த எட்டு வருடங்களாக நடந்த ஏழரைச்சனிதான் உங்களது அனைத்துக் கெட்ட பெயர்களுக்கும் காரணம். ஏழரைச்சனியும் ராகுதசையும் சேர்ந்து வருவது கடுமையான பலன்களைத் தரும் என்பதோடு உங்கள் லக்னத்திற்கு ஆறாமிட கெட்டபலன்களையே அதிகம் தரும் சனியின் சாரத்தில் ராகு அமர்ந்ததால் யோகம் செய்யவில்லை.
அதேநேரத்தில் குருதசை உங்களுக்கு நல்லயோகம் செய்யும். கன்னி லக்னத்திற்கு குரு பாதகாதிபதி என்பதால் தனித்து ஏழில் வலுப்பெறக்கூடாது என்பதன்படி அவர் ராகுவுடன் இணைந்திருக்கிறார். அதேநேரத்தில் தன்னுடைய சுயத்தன்மையையும் பலத்தையும் இழந்துவிடாமல் 22 டிகிரி விலகி இருக்கிறார். லக்னாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திர சாரத்தில் இருக்கிறார்.
குருவை எவ்வித பாவக்கிரகங்களும் பார்வை செய்யவில்லை என்பதோடு லாபாதிபதி சந்திரனின் பார்வை வாங்கி சந்திரகேந்திரத்தில் இருப்பதால் குருதசை ஆரம்பித்தவுடன் சுயதொழில் அமைந்து வாழ்க்கையில் மிகவும் சிறப்பான நிலையை அடைவீர்கள். குருபகவானே மனைவியைக் குறிக்கும் ஏழுக்குடையவன் என்பதால் மனைவி மூலமான யோகங்களும் இன்பங்களும் உண்டு.
குருவை அடுத்து நடைப்பெறப்போகும் சனியும் மூன்றாமிடத்தில் அமர்ந்து புதனின் சாரம் வாங்கி குருவின் பார்வையைப் பெற்று பாக்கியாதிபதி சுக்கிரனுடன் இணைந்து யோகநிலை பெற்றுள்ளதாலும், வாழ்வின் இறுதிக்காலத்தில் லக்னாதிபதி புதன்தசையே வர இருப்பதாலும் குருதசை முதல் யோகம் செயல்பட ஆரம்பித்து இறுதிவரை அந்தஸ்துடன் சந்தோஷமாக இருப்பீர்கள். வரும் தீபாவளிக்கு பிறகு சொந்தத் தொழில் செய்வீர்கள்.
பி. செல்வக்குமாரன்,
சென்னை.
கேள்வி:
கே | குரு | ||
ராசி | சந் செவ் | ||
சனி ல | |||
பு | சூ சுக் | ரா |
உங்களுக்கு கடிதம் எழுதி எழுதி என் கைதான் வலிக்கிறது. 37 வயதாகியும் நிலையான வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைக்கவில்லையே என்று உங்களுக்குக் கடிதம் அனுப்பினால் அதற்குப் பதிலும் கிடைக்கவில்லை. சொந்தமாக தொழில் செய்யலாமா? வங்கிக்கடன் கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடைபெறும்? அரசியல் ஆதாயம் உள்ளதா? ஐந்தாண்டுக்கு முன் வண்டியில் இருந்து கீழே விழுந்து இன்றுவரை மாதம் ரூபாய் நாலாயிரத்துக்கு மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய மனக்குழப்பத்திற்கு விடை அளியுங்கள் அய்யா.
பதில்:
(சிம்மலக்னம், சிம்மராசி, லக்னத்தில் சனி. இரண்டில் ராகு, நான்கில் சூரி, சுக், ஐந்தில் புதன், பதினொன்றில் குரு, பனிரெண்டில் செவ்)
லக்னமும் ராசியும் ஒன்றாகி அங்கே ஆறுக்குடைய சனி அமர்ந்து சந்திரதசை நடப்பதால் வங்கிக்கடன் கிடைக்கும். ஆனால் சந்திரதசை முடியும் வரை சொந்தத் தொழில் செய்யக்கூடாது. செய்தால் கடன்தான் மிஞ்சும். சனி ராசி லக்னத்தோடு தொடர்பு கொண்டதால் கிடைக்கும் எந்தவேலையையும் குறை சொல்லும் ஆளாக நீங்கள் இருப்பீர்கள். எல்லாவற்றிலும் குற்றம் குறை கண்டுபிடிப்பதைத் தவிர்த்து உயர்வு எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஏழாம் வீட்டைச் சனியும், செவ்வாயும் பார்த்து இரண்டில் ராகு அமர்ந்ததால் இதுவரை திருமணம் ஆகவில்லை. நடக்கும் சந்திரதசை சுக்கிரபுக்தியில் அடுத்த வருடப் பிற்பகுதியில் திருமணம் நடக்கும். சூரியனும் சந்திரனும் ஒருவருக்கொருவார் கேந்திரம் பெற்று பத்தாம் வீட்டை சூரியன் பார்த்ததால் அரசியல் லாபம் உண்டு. 2018 ல் சந்திரதசை முடிந்ததும் நோய் குணமாகும்.
மகன் தீர்க்காயுள் இருப்பானா?
கயல்,
சென்னை.
கேள்வி:
ல | சந் செவ் | ||
ரா | ராசி | ||
சுக் சனி,கே | |||
குரு | சூ | பு |
தந்தையை இழந்த என் பையனை நல்லபடியாக வளர்க்க ஆசைப்படுகிறேன். ஆனால் அவனை நினைத்தால் கவலையாகவும், பயமாகவும் இருக்கிறது. இந்த எட்டுவயதில் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறான். கையில் கிடைப்பதை எடுத்து விசிறியடிக்கிறான். எது சொன்னாலும் காதில் போட்டுக் கொள்வதில்லை. மாத்தி மாத்தி உடம்புக்கு ஏதாவது வருகிறது. ஆரோக்கியம், ஆயுள்பலம் எப்படி? வாழ்க்கையில் எனக்கு நல்ல பெயரையும், பெருமையையும் கொடுப்பானா? ஜாதகத்தில் ஐந்தில் சுக், சனி, கேது, ஏழில் சூரியன், எட்டில் குரு இருப்பதால் பூர்வபுண்ணியம் சரியில்லை என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். நன்றாகப் படிப்பானா? முக்கியமாக தீர்க்காயுள் இருப்பானா? மனக்குழப்பத்தோடு எழுதுகிறேன். தெளிவுபடுத்துங்கள் அய்யா..
பதில்:
(மேஷலக்னம், மிதுனராசி, மூன்றில் செவ், ஐந்தில் சுக், சனி, கேது, ஆறில் புதன், ஏழில் சூரி, எட்டில் குரு)
தந்தைக்கு காரகனான சூரியன் நீசம் பெற்றதோடு அல்லாமல் சனி பார்வையும் பெற்று தந்தை ஸ்தானாதிபதி குருவும் எட்டில் மறைந்ததால் இளம் வயதிலேயே தந்தை மரணம். லக்னம் செவ்வாயின் வீடாகி ராசியுடன் செவ்வாய் சம்மந்தப்பட்டதால் மகன் கடைசிவரை கோபக்காரனாகத்தான் இருப்பான். ஆனால், பத்து வயதில் ராகுதசை முடிந்து குருதசை ஆரம்பித்ததும் எல்லா குணங்களும் நல்லவிதமாக மாறும்.
லக்னாதிபதியை விட ஆறுக்குடையவன் வலுப்பெற்றதால் ஆரோக்கியக் குறைவு இருக்கிறது. ஆனால் லக்னாதிபதிக்கு வீடு கொடுத்தவன் உச்சமாகி எட்டில் குரு அமர்ந்ததால் ஆயுள் குற்றமில்லை. ஐந்திற்குடையவன் நீசமாகி ஐந்தாம் பாவத்தில் பாவக்கிரகங்கள் இருப்பதால் பூர்வபுண்ணியம் குறைவு என்பது உண்மைதான். ஆனால் சூரியன் சுக்கிரனுடன் பரிவர்த்தனையாவதால் தோஷம் நிவர்த்தியாகிறது. இளம்வயதில் வரும் ராகுதசை படிப்பில் கவனக்குறைவைத் தரும் என்பதால் பத்துவயதிற்கு மேல் குருதசை ஆரம்பித்ததும் நன்றாகப் படிப்பான். உச்சவர்க்கோத்தமம் பெற்ற புதன் இதனை நிரூபிக்கிறது. போகப் போக பையனை பற்றியக் கவலைகள் இருக்காது. கண்டிப்பாகத் தீரும்படி நடந்து கொள்வான்.
வி. கல்யாணசுந்தரம்,
குன்றத்தூர்.
கேள்வி:
கே சந் சுக் | சூ | பு குரு | |
ராசி | ல | ||
சனி ரா | செவ் |
எனது ஒருவயதுப் பேரன் பிறந்து சிலநாட்கள் நலமுடன் இருந்து இப்பொழுது உடல்நலக்குறைவு உண்டாகி உடல் செயல்திறன் எதுவும் செயல்பட முடியாத நிலையில் இருக்கிறான். ஆஸ்பத்திரியில் எல்லாம் பார்த்தும் பலன் இல்லை. உடல் நலிந்து கொண்டே போகிறான். குடும்பமே அவனைப் பார்த்து மிகவும் துன்பத்தில் இருக்கிறோம். ஜாதகப்படி அவனது உடல்நலம் எப்படி? எப்பொழுது நல்ல தீர்வு கிடைக்கும்?
பதில்:
(கடகலக்னம், மேஷராசி, மூன்றில் செவ், நான்கில் சனி, ராகு, பத்தில் சுக், கேது, பதினொன்றில் சூரி, பனிரெண்டில் புதன், குரு)
லக்னாதிபதி சந்திரனை சனி, செவ்வாய் பார்த்து லக்னத்தையும் உச்சவக்கிர சனி பார்த்து லக்னாதிபதியும் ராகுகேதுக்களுடன் சம்பந்தம் பெற்ற ஜாதகம். லக்னத்திற்கோ, லக்னாதிபதிக்கோ சுபர்பார்வை இல்லாமல் நோய் ஸ்தானாதிபதி குருபகவான் நோய் ஸ்தானத்தைப் பார்க்கிறார். ஆயுள் ஸ்தானாதிபதி சனியும் வக்ரம் பெற்று ராகுவுடன் இணைந்திருக்கிறார். ஒன்றரை வயதிற்கு மேல் பாதகாதிபதி சுக்கிரனின் தசை ஆரம்பிக்கவுள்ளது. தற்பொழுது அஷ்டமச்சனியும் நடந்து கொண்டிருக்கிறது. பேரனைப் பற்றிய நல்லபதில் சொல்ல முடியாததற்கு வருந்துகிறேன்.
எம். சுப்பிரமணியன்,
மதுரை.
கேள்வி:
பு சுக் | சந் ரா | ல | |
சூ குரு | ராசி | ||
செவ் சனி | கே |
மகன் தீயநண்பர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இப்போது சிறிய மாற்றத்துடன் இருக்கிறான். பி.காம் படித்தவனுக்கு லைசன்ஸ் எடுத்துக் கொடுத்தேன். கிடைக்கிற கார்கள் ஓட்டி குடித்து விடுகிறான். அரசுத்தேர்வு எழுதி நேர்முகத்தேர்வு வரை சென்றும் வேறொருவருக்கு அந்த வேலை சென்று விடுகிறது. எங்களின் ஒரேமகனின் நிலை கண்டு தவிக்கிறோம். அரசுப்பணி அவனுக்கு எப்பொழுது அமையும்? லக்ஷ்மிகடாட்சத்துடன் நல்ல மணப்பெண் எப்பொழுது வருவாள்? அவனது வருங்காலம் எப்படி? தங்களின் பொன்னான வாக்கை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.
பதில்:
(ரிஷபலக்னம் மேஷராசி ஆறில் கேது ஏழில் செவ் சனி பத்தில் சூரியன் குரு பதினொன்றில் சுக் புத)
லக்னாதிபதி உச்சமாகி ஐந்துக்குடையவன் ஐந்தாமிடத்தைப் பார்த்து ஒன்பதுக்குடையவன் ஒன்பதையும் லக்னத்தையும் பார்த்த நல்ல யோகஜாதகம். தற்போது லக்னாதிபதியின் எதிரியான மனதைக் குறிக்கும் சந்திரனின் தசை நடந்து சந்திரன் இரண்டு டிகிரிக்குள் ராகுவுடன் இணைந்து பலவீனமானதால் உங்கள் மகன் மனக்கட்டுப்பாடு இல்லாமல் இருப்பார். மேஷராசிக்கு அஷ்டமச்சனி நடப்பதும் பலவீனம்.
ஆனால் சூரியன் பத்தில் திக்பலத்துடன் அமர்ந்து சிம்மத்தைப் பார்ப்பதால் நிச்சயம் அரசுவேலை 2017 பிற்பகுதியில் உண்டு. லக்னத்திற்கு ஏழிலும் ராசிக்கு எட்டிலும் செவ்வாய் சனி இணைவு என்பதால் 33 வயதிற்கு மேல்தான் திருமணம். மனைவியைக் குறிக்கும் செவ்வாய் ஆட்சிபெற்று யோகாதிபதி சனியுடன் இணைந்ததால் மேம்பட்ட இடத்திலிருந்து மனைவி வருவாள். திருமணத்திற்கு பின்பு செவ்வாய்தசை முதல் யோகம் செயல்பட்டு மகன் நல்லநிலைக்கு வருவார்.