adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 111 (15.11.2016)
பி. கந்தசாமி, தூத்துக்குடி – 2.
கேள்வி :
பல இடங்களில் முயற்சித்தும் மகனுக்கு திருமணம் கைகூடவில்லை. வயதும் ஏறிக் கொண்டே போகிறது. ஐ.டி.ஐ. எலெக்ட்ரிசியன் படித்துள்ளான். திருமணம் எப்போது நடக்கும்? அரசு வேலை கிடைக்குமா?
சந்,ரா
ராசி
சூ,பு குரு சு,கே செவ்,சனி
பதில்:
(மேஷ லக்னம், ரிஷப ராசி. 7-ல் செவ், சனி. 8-ல் சுக், கேது. 9-ல் சூரி, புத, குரு. 14.1.1984, 1.30 மதியம், தூத்துக்குடி).
மகனுக்கு ஏழில் செவ்வாய், சனி இணைந்திருப்பதாலும், சுக்கிரன் எட்டில் மறைந்து ராகு-கேதுக்களுடன் இணைந்து பலவீனம் அடைந்திருப்பதாலும் 33 வயதிற்கு பிறகே திருமணம் நடைபெறும்.
ஏழுக்குடையவன் பலவீனமாகி பதினொன்றுக்குடையவன் உச்சமாக இருப்பது இரண்டு திருமண அமைப்பு என்பதால் சரியான ஜாதகத்தை இணைக்க வேண்டும். தற்போது ராகு தசை, சுக்கிர புக்தி நடப்பதால் அடுத்த வருடம் ஏப்ரலுக்கு மேல் திருமணம் நடக்கும். 2018 பிற்பகுதியில் அரசு வேலையில் இருப்பார்.
பி. வீரமணி, கோவை – 1.
கேள்வி :
ஜோதிட சூரியனுக்கு பணிவான வணக்கங்கள். இதுவரை செய்த அனைத்து தொழில்களும் நஷ்டம்தான். பூர்வீகச் சொத்தை விற்றுக் கடனை அடைத்து மீதியுள்ள தொகையை வைத்து மங்களூரில் வட்டித்தொழில் செய்தேன். அதுவும் நஷ்டம். தற்போது இங்கும் இருக்க முடியாமல் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் தவிக்கிறேன். எனது எதிர்காலம் எப்படி உள்ளது. வெளிநாடு சென்றால் நன்றாக இருக்குமா? எனக்கு யோக தசை எது? என்ன தொழில் செய்தால் வெற்றி உண்டாகும்? 
சந்
ராசி  சு,ரா
ல,கே  சூ,பு வி
செவ் சனி
  பதில்:
(மகர லக்னம். மிதுன ராசி. 7-ல் சுக், ராகு. 8-ல் சூரி, புத, குரு. 9-ல் சனி. 10-ல் செவ். 4.9.1980, மாலை 4.50, திண்டுக்கல்)
14 வயது முதலே ஆட்சி பெற்ற அஷ்டமாதிபதியின் சாரத்தில் இருக்கும் சனி, புதன் தசைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதிலும் கடந்த 2013 முதல் எட்டாமிடத்தில், அஷ்டாமாதிபதியுடன் இணைந்திருக்கும் புதனின் தசை நடப்பதால் உங்களுக்கு சொந்தத் தொழில் ஒத்து வராது. மேலும் வட்டித் தொழிலுக்குரிய குருவும் எட்டில் மறைந்ததால், பணத்தை வைத்துச் செய்யும் தொழில்களில் உங்களுக்கு நஷ்டத்தை மட்டுமே தருவார்.
தற்போது வெளிநாட்டைக் குறிக்கும் ராகுவுடன் இணைந்து, கடல் தாண்ட வைக்கும் கடகத்தில் இருக்கும் சுக்கிர புக்தி ஆரம்பித்திருப்பதால் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதே சரியானது. உடனடியாக அயல்தேச வேலைக்கு முயற்சி செய்யுங்கள். அடுத்த வருடம் வெளிநாடு செல்வீர்கள். புதன்தசையின் பிற்பகுதி யோகமாகவே இருக்கும். நாற்பது வயதிற்குப் பிறகு நன்றாகவே இருப்பீர்கள். எதிர்காலம் கவலைப்படும்படி இருக்காது.
எம். சிங்காரவேலு, காடையம்பட்டி.
கேள்வி :
ஜோதிடப் பேரரசனின் நெடுநாளைய வாசகர்களில் நானும் ஒருவன். பலமுறை கேட்டும் பதிலில்லை. இந்தமுறையாவது பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் கெட்டுப் போனதால் வரும் காலங்களில் கூட எனக்கு முன்னேற்றம் எதுவும் இல்லை என்பதை எனது ஜாதகத்தைப் பார்த்தவுடன் உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் என் மகனின் ஜாதகத்திலும் இதுபோல நான்கு கிரகங்கள் கெட்டிருப்பதால், அவனது பனிரெண்டு வயதிற்கு மேல் வரும் சனி தசையில்- சனி பகையானதால், 19 வருடங்களுக்கு நீங்கள் படப்போகும் துன்பம் ஏராளமென்றும், அவனுக்கு படிப்பே வராது என்றும், இவனால் எங்களுக்கு நோய், நொடி, சண்டை, சச்சரவு, வருவதோடு இவனது ஜாதகத்தில் முன்னோர்கள் சாபம் உள்ளதாகவும் ஒரு ஜோதிடர் சொல்லி எங்களை அதிர்ச்சியாக்கியுள்ளார்.
இது உண்மைதானா? எங்களது வாழ்வு இப்படியேதான் இருக்குமா? இப்போது இருப்பது போல வரும் காலங்களிலும் நானும், என் மனைவியும் ஒற்றுமையாக இருப்போமா? தற்போது செய்து வரும் காப்பீட்டு தொகை முகவர் பணிதான் நிரந்தரமா? அல்லது அரசுவேலை உண்டா? குழந்தைகளின் வாழ்வு ஏற்றமாக இருக்குமா?
செவ் சூ,பு சந்,சு
ரா ராசி  சனி
 கே
வி
பதில்:
எல்லாத் துறையிலும் அனுபவம் உள்ளவர்கள், அனுபவம் குறைந்தவர்கள் என்று இருப்பதைப் போல ஜோதிடத்துறையிலும் உண்டு. இது போன்ற ஜோதிடர்களாவது அனுபவம் ஏற ஏற தங்களை மாற்றிக் கொள்வார்கள். ஆனால் பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளில் சொல்லப்படும் பொதுவான விதிகளோடு தன்னுடைய ஜாதகத்தை ஒப்பிட்டு ஜோதிடத்தை தலைகீழாக புரிந்து கொள்ளும் உங்களைப் போன்றவர்களால் தான் இந்தக் கலைக்கே பெரும் சிக்கல்.
இது போன்றவர்களிடம் சிக்கிக் கொண்டுதான் காலவியல் விஞ்ஞானம் என்று நான் பெருமையுடன் குறிப்பிடும், எதிர்காலம் சொல்லும் இந்த மாபெரும் இயல் தன் மகத்துவத்தை இழந்து விமர்சனத்திற்கு உள்ளாகிறது.
ஒரு ஜாதகத்தை கணிப்பதற்கு ஆயிரமாயிரம் விதிகள் உள்ள இந்த சமுத்திரத்தில் சனிகிரகம் பகைவீட்டில் இருந்து விட்டாலே கொடிய பலன்களைத்தான் தரும் என்று சொல்வதைப் போன்ற அபத்தம் எதுவுமில்லை. ஒரு கிரகம் என்ன செய்யும் என்பதைக் கணிக்க அதன் ஆறுவித பலங்களான ஸ்தானபலம், திருக்பலம், திக்பலம் என்பதோடு கால, அயன, சேஷ்ட பலங்களாகிய ஆறுவித வலுக்களை கணிக்கவேண்டும். இது தவிர்த்து அஷ்டவர்க்க பலங்கள் போல இன்னும் சில விதிகளும் உள்ளன.
உங்கள் மகனுக்கு (20.5.2007, 2.33 பகல், பவானி) கன்னி லக்னம், மிதுன ராசியாகி   லக்னாதிபதியும் சுக்கிரனும் ஒன்பது, பத்தாமிடங்களில் பரிவர்த்தனையாகி தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்ட அருமையான யோக ஜாதகம். பரிவர்த்தனையின் மூலம் புதனும், சுக்கிரனும் ஆட்சி நிலை அடைகிறார்கள். எனவே இவன் நன்கு படிப்பவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான்.
முக்கியமாக, ஐந்துக்குடைய சனி பகை வீட்டில் இருந்தாலும் ஐந்தாமிடத்தைப் பார்க்கிறார். தனது இன்னொரு வீடான ஆறாமிடத்திற்கு ஆறில் மறைந்த நல்ல அமைப்பில் இருக்கிறார். எல்லாவற்றையும் விட மேலாக வலுப்பெற்ற குருபகவான் தனது சுபப் பார்வையால் சனியைப் புனிதப்படுத்துகிறார். சனியைக் குரு பார்த்து விட்டாலே கெடுபலன்கள் இருக்காது.
பனிரெண்டு வயது முதல் வாழ்நாள் முழுவதும் யோகாதிபதிகளான சனி, புதன், சுக்கிரன் திசைகள் உங்கள் மகனுக்கு வர இருக்கிறது . அடுத்து நடக்க இருக்கும் தசா நாதர்களான சனி, புதன் இருவரையுமே குரு பார்க்கிறார். மேலும் ராசிக்கு பத்தாமிடத்தில் செவ்வாய் அமர்ந்து குரு பார்வை பெறுவதும், லக்னத்திற்கு பத்தாமிடத்திற்கு அருகில் சூரியன் திக்பலத்தோடு இருப்பதும், சிவராஜ யோகம் அமைந்துள்ளதும் உங்கள் மகன் ஜாதகத்தில் சிறப்பான அம்சங்கள்.
லக்னாதிபதி புதன் பரிவர்த்தனை யோகத்துடன், குரு பார்வையில், தன் நண்பருடன் இணைந்து புத ஆதித்ய யோகத்துடன் இருப்பதால் உங்கள் மகன் நன்கு படிப்பான். 31 வயதிற்குப் பிறகு லக்னாதிபதி தசை நடக்க இருப்பதால் எதிர்காலத்தில் பிரபலமாக, நல்ல அந்தஸ்து புகழுடன் இருப்பான். என்ன துறையில் இருப்பான் என்பதை அவனது 15 வயதிற்கு பிறகு என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய ஜாதகமும் ஓரளவிற்கு வலுவான ஜாதகம்தான். நீசம் பெற்ற சந்திரனை உச்ச குரு பார்ப்பது யோகம். லக்னம் வலுவிழந்ததால் ராசி பலன் தரும் ஜாதகம் உங்களுடையது. அடுத்து நடக்க இருக்கும் சூரிய, சந்திர, செவ்வாய் தசைகள் உங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தரும்.
உங்களுக்கு விருச்சிக ராசியாகி கடந்த சில வருடங்களாக நடக்கும் எதிர்மறை   பலன்களால் தன்னம்பிக்கையின்றி குழம்பி போய் இருக்கிறீர்கள். அடுத்த வருடம் அக்டோபர் முதல் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தைக் காண்பீர்கள். உங்கள் மனைவி ஜாதகப்படியும் நீங்கள் இருவரும் இன்று போலவே புரிந்துணர்வுடன் கருத்து வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாகவே இருப்பீர்கள். விருச்சிக ராசி என்பதால் காப்பீட்டுத்துறை ஏற்றதுதான். தயவுசெய்து அரைகுறை அனுபவத்துடன் ஜோதிடத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்காதீர்கள்.
பெ. அருண் பாலாஜி, சென்னை.
கேள்வி :
சகோதரனுக்கு திருமண முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஏதாவது காரணம் சொல்லி தவிர்த்து வந்தார். தற்போது ஆண்மைக் குறைவு உள்ளது என்கிறான். உண்மையா? மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாமா? அவன் போக்கிலேயே விட்டு திருமணத்தை தவிர்த்திடலாமா? வேலைக்கும் சரியாக செல்வது இல்லை. ஏற்றுமதி தொழிலில் ஈடுபட போவதாக சொல்கிறான். இது சரி வருமா? எங்களது குழப்பங்களுக்கு விடையளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
 பு ராசி ரா
சூ,செ கே
சு சந் வி,சனி
பதில்:
(விருச்சிக லக்னம். துலாம் ராசி. 2-ல் சுக், 3-ல் சூரி, செவ், கேது. 4-ல் புத. 11-ல் குரு, சனி. 28.1.1981, அதிகாலை 3.29, வந்தவாசி)
தம்பியின் ஜாதகத்தில் மூன்றாமிடமான வீரிய ஸ்தானத்தில் லக்னாதிபதியும், வீரியத்திற்கும் அதிபதியான செவ்வாய், சூரியனுடன் இணைந்து அஸ்தமனமாகி ராகு-கேதுக்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதால் அவருக்கு உறவு விஷயத்தில் பயமும், தன்னம்பிக்கை இல்லாத நிலையும் உருவாகி உறுப்பு எழுச்சியின்மை பிரச்னை இருக்கும். ஜாதக அமைப்புபடி அவருக்கு ஆண்மைக் குறைவு இல்லை.
முறையான மருத்துவ சிகிச்சையும், மனநல கவுன்சிலிங்கும் மேற்கொள்ளவும். அவரது துலாம் ராசிக்கு ஏழரைச்சனி முடியும் தருவாயில் இருப்பதால் தற்போது நடக்கும் சனி தசை சுக்கிர புக்தியில் 2017 பிற்பகுதியில் சிகிச்சைக்கு பின்னர் திருமணத்திற்கு சம்மதிப்பார். 2018 முதல் அவரது வாழ்க்கை சீராக செல்லும். ஏற்றுமதி தொழில் அவருக்கு ஏற்றதுதான்.
என் மகன் உயிரோடு இருக்கிறானா? இல்லையா?
கே .மகாலட்சுமி, திண்டுக்கல்
கேள்வி :
ஜோதிடச் சக்கரவர்த்திக்கு ஒரு தங்கையின் கண்ணீர் கடிதம். பிளஸ் டூவில் 1050 மார்க் எடுத்த ஒரே மகனை என்ஜினீயரிங் காலேஜ் சேர்ப்பதற்கு சென்னை சென்றோம். கோவை சக்தி காலேஜில் சீட்டு கிடைத்தது. பின்னர் அனைவரும் மெரினா பீச்சுக்கு சென்றோம். கரையில் நின்று விளையாடிக் கொண்டிருந்த என் மகனின் முகத்தில் தண்ணீர் அடித்ததில் மயங்கி அலை அவனை இழுத்துச் சென்றது. மூன்றுநாட்கள் பீச் முழுக்க பாண்டிசேரி முதல் எண்ணூர் வரை சகலவசதிகளுடன் அவனுடைய உடலைத் தேடியும் இதுவரை கிடைக்கவில்லை. 15 மாதகாலமாக தெரிந்த ஜோதிடர்களிடம் ஜாதகத்தை காட்டியதில் அனைவரும் அவன் உயிரோடுதான் இருக்கிறான். ஆயுளுக்கு பாதிப்பு இல்லை என்று சொல்கின்றனர். ஒரேமகனின் கதியை எண்ணி குடும்பம் கண்ணீரில் உள்ளது. உங்களின் பதிவுகளை விடாமல் படித்து வரும் வாசகியின் கருணைமனுவாக இதை ஏற்று என்மகன் உயிரோடு இருக்கிறானா? எப்போது எங்களை வந்து சேர்வான்? எந்த நிலைமையில் இருக்கிறான் என்பதை தயவுசெய்து கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பதில்:

மகனின் ஜாதகத்தின் முதல்பக்கத்தை மட்டும் அனுப்பி இருக்கிறீர்கள். அதில் பிறந்தநேரம், இடம் பற்றிய குறிப்புகள் இல்லை. மகனின் பிறந்தநாள், நேரம், இடம் இவற்றோடு மெரினாபீச்சுக்கு நீங்கள் சென்ற தேதியையும் குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அனுப்புங்கள். உடனடியாக பதில் தருகிறேன்.

2 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 111 (15.11.2016)

  1. Sir unga video u tube la unga video regular ra parpen,sir 2017 na engineering complete pannen but arrier iruku sariyana job kedaikala life kastama iruku sir eppo nalla job kedaikum govt job iruka velinadu vaipu iruka,clg love prblm athanala arrier vachiten athula irundu veliya vara mudiyala kastama iruku love marriage illa arriange marriage nadakuma sir plss kastama iruku sollungaaa sirr and my (dob)15/10/1994 Time 5:10Am kanni lagnam kumba rasi avittam natchathiram eppo nalla job kedaikum sirr

  2. Diwan ali
    01/10/1980
    09:15am
    Tenkasi.
    எந்த மாதிரியான தொழில் செய்யலாம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *