adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 90 (14.6.16)

எம். செல்வமணி, விருத்தாசலம்.

சுக் சூ பு
 கே ராசி
குரு ரா
செவ் சனி லசந்
கேள்வி :
மாலைமலரில் உங்கள் ராசிபலன்கள் நன்றாக உள்ளன. கடந்த மாதம் பிறந்த என் பேத்தியின் எதிர்கால பலன்கள் எப்படி இருக்கும் என்று கூறவும்.
பதில்:
(துலாலக்னம், துலாம்ராசி. இரண்டில் செவ், சனி. ஆறில் சுக். ஏழில் சூரி, புதன். பதினொன்றில் குரு, ராகு. 23.4.2016, இரவு 7.19, விருத்தாசலம்)
லக்னாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று, லக்னத்தில் பவுர்ணமியோகம் அமைந்து,   புதனும், சந்திரனும் பார்த்துக் கொண்டதால் தர்மகர்மாதிபதியோகமும் உள்ள அதிர்ஷ்டகரமான குழந்தையாகப் பிறந்திருக்கிறாள் உங்கள் அருமைப்பேத்தி. ஆறுக்குடைய குரு அந்த வீட்டிற்கு ஆறில் மறைந்து ராகுவுடன் இணைந்ததும் சிறப்பான அம்சம்.
பத்து வயதிற்குப் பிறகு ஆயுள் முழுவதும் யோகதசைகள் நடைபெற உள்ளதாலும், சந்திரகேந்திரத்தில் சூரியன் உச்சம் பெற்று அதிகாரத்தைக் குறிக்கும் செவ்வாய் வலுப்பெற்றதாலும், நன்கு படித்து அந்தஸ்தான உயர்பதவியில் இருப்பாள். லக்ன அஷ்டமாதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்றதால் ஆயுள் தீர்க்கம்.
எஸ். கிருஷ்ணமூர்த்தி, மதனந்தபுரம்.
கே
ராசி  குரு
சனி
சுக் செவ் சந்,சூ பு,ரா
கேள்வி :
நமஸ்காரம். 38 வயதாகும் மகனுக்கு இன்னும் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒன்றும் சரியாக அமையவில்லை. தோஷம் ஏதாவது உள்ளதா? பரிகாரம் ஏதாவது செய்ய வேண்டுமா? எப்போது திருமணம் நடக்கும் என்ற விவரங்களைத் தெரியப்படுத்தினால் அதன்படி செய்கிறேன்.
பதில்:
(கும்பலக்னம், கன்னிராசி. ஆறில் குரு. ஏழில் சனி. எட்டில் சூரி, புத, ராகு. ஒன்பதில் சுக், செவ். 1.10.1978, 4.15 மாலை, நாகை)
லக்னத்திற்கு ஏழில் சனி, எட்டில் ராகு, ராசிக்கு இரண்டில் செவ்வாய், லக்னத்திற்கு இரண்டில் கேது என்பதோடு ராசிக்கு ஏழிலும் கேது என்றாகி ஏழுக்குடைய சூரியனும் எட்டில் மறைந்து கடுமையான தார தோஷத்துடன் புத்திர ஸ்தானாதிபதி புதபகவான் எட்டில் மறைந்து புத்திரக்காரகன் குருவும் ஆறில் மறைந்ததால் புத்திர தோஷமும் ஏற்பட்ட ஜாதகம்.
கடந்த மார்ச்மாதம் வரை ஐந்து, ஏழுக்குடையவர்களைப் பீடித்த எட்டில் அமர்ந்த ராகுவின் தசை நடந்தபோது உரிய பரிகாரங்களைச் செய்திருந்தால் திருமணம் நடந்திருக்கும். பரம்பொருள் அதற்கு அனுமதி தரவில்லை. தற்போது நடக்கும் குருதசையில்- குரு உச்சமானதாலும், குருவே குடும்பாதிபதி என்பதாலும் ராகுவிற்கான முறையான பரிகாரங்களை செய்ததற்கு பிறகு அடுத்த வருடம் திருமணம் நடக்கும். ஏழுக்குடையவன் எட்டில் மறைந்து பதினொன்றுக்குடையவன் உச்சமானது இரண்டு திருமண அமைப்பு என்பதால் பொருத்தம் பார்க்கும் போது அதிக கவனம் தேவை.
வி. ஆர். நடராஜன், திருமுல்லைவாயல்.
ல ரா
 சந் ராசி
சனி
செவ் குரு சூ பு சுக் கே
கேள்வி :
வாழ்வில் பலவித இன்னல்களை அனுபவித்து கடைசி கட்டத்திலும் நிம்மதி இல்லாமல், உதவ யாரும் இல்லாமல் மனைவி, அப்பா, அம்மா, சகோதரன் உயிருடன் இல்லாமல் இருக்கும் எனக்கு இனியாவது நல்ல காலம் பிறக்குமா? ஒரே சகோதரி இருந்தும் உயர்ந்தநிலையில் இருப்பதால் பாராமுகமாக இருக்கிறாள். செல்வத்தை சேர்த்து வைக்காததால் மிகவும் அவதிப்படுகிறேன் அவமானப்படுகிறேன். செல்வம் இனி சேருமா? ஆயுள் பற்றி கூறவும்.
பதில்:
(மேஷலக்னம், கும்பராசி. ஐந்தில் சனி. ஏழில் சுக், கேது. எட்டில் சூரி, புத. ஒன்பதில் செவ், குரு.)
ஜாதகம் யோகமாக இருந்தாலும் சரியான பருவத்தில் 36 வருடகாலம் மேஷ லக்னத்திற்கு அவயோக தசைகளான சனி, புதன்தசைகள் நடந்ததால் வாழ்வின் பிற்பகுதியில் கடுமையான கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கும். அதிலும் சென்ற மாதம் வரை நடந்து முடிந்த 17 வருட புதன்தசை உங்களைப் படுத்தி எடுத்திருக்கும். ஐந்தில் சனி, ஐந்துக்குடையவன் எட்டில் மறைவு, புத்திரக்காரகன் ஒரே டிகிரியில் செவ்வாயுடன் இணைவு என்பதால் கடைசிக்காலத்தில் பார்த்துக் கொள்ள ஒரு வாரிசும் இல்லாமல் போய்விட்டது.
அவயோக தசைகள் நடந்ததாலும், ராசியைச் சனி பார்த்ததாலும் தன்னம்பிக்கை இல்லாமல் அடுத்தவர் உதவியை எதிர்பார்த்தே இதுவரை காலத்தை தள்ளி விட்டீர்கள். யோகஜாதகத்தை கொண்ட உங்கள் மேல் உங்களுக்கே நம்பிக்கை இல்லை. இல்லையென்றால் 68 வயதாகும் நீங்கள் உங்கள் கடிதத்தில் இரண்டு முறை அப்பா இல்லை என்று குறிப்பிட மாட்டீர்கள். இந்த வயதிலும் தந்தை உயிருடன் இருந்து உங்களைக் காப்பாற்ற   வேண்டும் என்றால் இத்தனை வருடம் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையே வீண் என்றுதான் ஆகிறது.
தன்னம்பிக்கைக்கு முன் வயது ஒரு தடையே இல்லை. 70 வயதில் பதினெட்டு வயது பெண்ணைத் திருமணம் முடித்து வாழ்ந்து காட்டியவர்களும் இருக்கிறார்கள். உங்களால் எதுவும் செய்ய முடியும் என்று முதலில் நீங்கள் உங்களை நம்புங்கள். முழுமனதுடன் என்னால் எதுவும் முடியும் என்று எப்போது நீங்கள் உங்களை நம்ப ஆரம்பிக்கிறீர்களோ அப்போதுதான் அடுத்தவர்கள் உங்களை நம்புவார்கள். உதவிகளும் செய்வார்கள். இதுவரை உங்களை அதிர்ஷ்டமில்லாதவனாகிய ஆறாமிடத்து புதன்தசை சென்றமாதம் முடிந்து விட்டதால் தற்போது நடக்கும் கேதுதசையில் இனிமேல் அனைத்தும் நன்றாகவே நடக்கும். இந்த வயதிலும் நீங்கள் சம்பாதித்து செல்வம் சேர்க்க முடியும். அடுத்து நடக்க இருக்கும் சுக்கிரதசை வரை ஆயுள் நீடிக்கும்.
கைவிரல் ரேகை ஜாதகத்தை வைத்து பொருத்தம் பார்க்கலாமா?
ராம. லதா, அறந்தாங்கி.
கேள்வி :
அன்புள்ள அப்பா ... மாலைமலரில் உங்கள் கேள்வி-பதில் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் குடும்பத்தில் நான் மூன்றாவது பெண் என்பதால் எனது ஜாதகத்தை என் தந்தை எழுதவில்லை. பிறந்த ஆண்டு 1992 என்று மட்டும் சொன்னார். தற்போது என் கைரேகை மூலம் ஜாதகம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இப்படி எழுதும் ஜாதகத்தை வைத்து திருமணம் மற்றும் எதிர்காலத்தை துல்லியமாகக் கணிக்க முடியுமா? இதை வைத்து திருமணப் பொருத்தம் பார்க்கலாமா?
பதில்:
மகளே... பெருவிரல் ரேகையை வைத்து நாடிமுறையில் எழுதப்படும் ஜாதகத்தில் அவர்கள் லக்னத்தைக் குறிப்பதில்லை என்பதால் அது துல்லியமானது அல்ல. ஆயினும் ஒன்றுமே இல்லாததற்கு, நீ என்று பிறந்தாய் என்று அறிந்து கொள்வதற்காகவாவது அந்த நாடிஜோதிட ஜாதகம் உதவும். ஆயினும் இந்த நவநாகரீக உலகத்தில் 60 வருடத்திற்கு முன் பிறந்தவர்களுக்கே பிறந்த நாள், நேரம் விபரங்களை தேடி எடுக்க முடியும் போது 20 வருடத்திற்கு முன்பு பிறந்த உன்னுடைய பிறந்த விவரங்களை அறிவது முடியாத காரியம் அல்ல.
கிராமங்களில் அதிகாலை 4 மணிக்கு கிழக்கே போகும் ரெயில் நம் ஊரைக் கடந்த போது நீ பிறந்தாய் என்றோ, ஆடிமாதத் திருவிழா முடிந்த அடுத்த வெள்ளிக்கிழமை நீ பிறந்தாய் என்றோ, நீ பிறந்த அடுத்த நிமிடம் ஆறு மணி சங்கு ஊதியது என்றோ, ஏதேனும் ஒரு சம்பவத்தை நினைவில் வைத்து குழந்தை பிறப்பைக் குறிப்பிடுவார்கள்.
அதுபோல உன் பிறந்த விபரங்களை தந்தை குறித்து வைக்கவில்லை என்றாலும் உன் மாமா, அத்தை, சித்தி, தாத்தா, பாட்டி வீட்டில் பிரசவம் பார்த்த ஆயா, ஊரிலுள்ள பெரியவர்கள் யாரிடமாவது உன் பிறந்தநாள், நேர விவரங்களை தொடர்ந்து கேள். விடாமல் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றிக் கேட்டுக் கொண்டே இரு. யாராவது ஒருவரின் நினைவில் அது இருக்கும். நீ பிறந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை வைத்து உன் பிறந்தநாளும் நேரமும் உனக்குக் கிடைத்தே தீரும். முயற்சியைக் கைவிடாதே. வாழ்த்துக்கள் மகளே.
. மோகன்ராஜ், திண்டுக்கல்.
கேள்வி :
இரண்டு முறை கடிதம் எழுதியும் பதில் இல்லை. வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறேன். நிரந்தர வேலை இல்லை. காதலித்த பெண்ணை நிச்சயம் செய்தபின் எனக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாகச் சொல்லி திருமணத்தை நிறுத்திவிட்டனர். அவளைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. அவள் எனக்கு கிடைப்பாளா? அரசு வேலை கிடைக்குமா?
பதில்:
நான் அருள்வாக்கு சொல்பவன் அல்ல. கணிதத்தின் மூலம் பலன் சொல்லும் ஒரு எளிய ஜோதிடன். பிறந்தநேரம் இல்லாமல் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல இயலாது. இத்தனை பாயிண்ட் பாயிண்டாக கேள்வி கேட்டு ராசி நட்சத்திரம் லக்னம் தேதி இடம் எல்லாம் எழுதத் தெரிந்த உனக்கு இருவரின் பிறந்தநேரத்தையும் எழுதவேண்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.
கே. சண்முகம், கோவை - 24.
சந் குரு  ரா
ராசி  சூ சுக்
சனி ல பு
 கே செவ்
கேள்வி :
நான்கு பெண்களுடன் பிறந்த நான் நிரந்தர வேலை கிடைக்காமல் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்கிறேன். நானும் என் தாயும் சேர்ந்து கஷ்டப்பட்டு நான்கு தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்தோம். அம்மா இறந்து ஐந்து மாதம் ஆகிறது. ஒரு மகள் இருக்கிறாள். அவளை மனைவியின் சகோதரர்தான் பி.இ. வரை படிக்க வைத்தார். மகளுக்கும் வேலை இல்லை. மனைவி வேலை செய்யும் வருமானத்தில்தான் சாப்பிடுகிறோம். கஷ்டம் எப்போது தீரும்?
பதில்:

மகரலக்னத்தில் பிறந்த உங்களுக்கு 2007 முதல் எட்டுக்குடைய சூரியதசையும் கடந்த மூன்று வருடங்களாக சந்திரதசையும் நடந்து வருகிறது. மகர லக்னத்திற்கு சூரிய, சந்திரதசைகள் அவயோகம்தான் செய்யும். அடுத்தவருடம் ஜூன்மாதம் ஆரம்பிக்க இருக்கும் சனிபுக்தி முதல் இப்போதைய நிலைமைகள் மாற்றம் அடையும். கஷ்டங்கள் குறையும். செவ்வாய்தசை முதல் துன்பங்கள் எதுவுமின்றி இருப்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *