adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் (26.1.2016)

டி. நிவேதிதா, கோவை.

செவ் சுக் பு சூ  குரு
ராசி கே
சனி ரா
சந் ல
கேள்வி :
16 வயதில் தவிர்க்க முடியாத சந்தர்ப்ப சூழ்நிலை காரணத்தால் காதல்வயப்பட்டேன். சரியாகப் படிக்காமல் தகுந்த வேலை அமைத்துக் கொள்ளமுடியவில்லை. என் காதல் கல்யாணம் நடக்கவில்லை. தற்போது 26 வயதாகிறது. மேற்கொண்டு படிக்க வாய்ப்பிருக்கிறதா? திருமணம் எப்போதுநடக்கும்? சொந்தத் தொழிலா? வேலைக்குப் போக வேண்டுமா? போதுமான வருமானம் இல்லை. வேலை திருப்தி அளிக்கவில்லை. வாழ்க்கை வாழப்பிடிக்கவில்லை.  என்ன செய்வது?
பதில்:
(விருச்சிகலக்னம், விருச்சிக ராசி. மூன்றில் சனி, ராகு. ஐந்தில் செவ். ஆறில் புத, சுக். ஏழில் சூரி. எட்டில் குரு.)
16 வயதில் காதல் செய்வதற்கு அப்படி என்னம்மா தவிர்க்க முடியாத சந்தர்ப்ப சூழ்நிலை? அந்த வயதில் காதல் செய்வதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.
உனக்கு விருச்சிக ராசியாகி தற்போது ஏழரைச்சனி நடந்துக் கொண்டிருப்பதால் வேலை, திருமணம், வருமானம் போன்ற எல்லாவற்றிலும் நிச்சயமற்ற தன்மைகளும், வேதனையும் விரக்தியும்தான் இருக்கும். அதிலும் உனக்கு எட்டுக்குடைய புதன்தசை நடப்பதால் சிக்கல்கள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
ஆனால் சூரியனும் சந்திரனும் எதிரெதிரே நின்று வைகாசி விசாகம் அன்று பவுர்ணமியோக அமைப்பில் தர்மகர்மாதிபதி யோகமுள்ள யோகஜாதகம் உன்னுடையது. எனவே இப்போதைய கஷ்டங்கள் உன்னை ஒன்றும் செய்யாது. 2016 செப்டெம்பர் மாதத்தில் இருந்து 2017 ஏப்ரல் வரை உனக்கு திருமண காலம். மாப்பிள்ளை தந்தைவழியில் தூரத்துசொந்தமாக இருப்பார். ஏழரைச்சனி நடப்பதால் இப்போது வேலைக்கு போ. சனி முடிந்தபிறகு தொழில் செய்யலாம். எதிர்காலம் நீ நினைப்பது போல் அல்லாமல் சிறப்பாகவே இருக்கும். மேற்படிப்பு படிக்க வாய்ப்பு இல்லை.
சொ. காமாட்சி மைந்தன், மதுரை.
கேள்வி :
என் மகனுக்கு இரண்டு திருமணம் செய்தும் இரண்டும் விவாகரத்தாகிவிட்டது. மனைவிகளை நல்ல முறையில் வைத்திருந்தான். அவர்கள் மனம் கோணாமல் நடந்து சுற்றுலா ஷேத்திரங்கள் எல்லாம் கூட்டிப் போய்வந்தான். அப்படியிருந்தும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துஆகிவிட்டது. மனவேதனையோடு வாழ்கிறான். ஒரு பெண் சொந்தம். இரண்டாவது பெண் அன்னியம். இருவருமே வசதி இல்லாதவர்கள்தான். அவனுடைய ஜாதகப்படி மூன்றாவது தாரம்தான் நிலைத்திருக்கும் என்றுசொல்கிறார்கள்ஏற்கனவே திருமணமா பெண்ணைத்தான் மறுமணம்செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இது உண்மையா? கன்னிப்பெண் அமையாதா? தாம்பத்திய சுகத்தடை உள்ளதா? ஏன் திருமணமுறிவு ஏற்படுகிறது?. என்ன பரிகாரம்? ஜோதிடர்கள் சொன்னபரிகாரங்கள் எல்லாம் செய்தாகி விட்டது. இனி இவனுக்கு மூன்றாவதுதிருமணம் எப்போது நடைபெறும்?
பதில்:
மகனின் ஜாதகத்தைக் கட்டம் போட்டு வரைந்து அனுப்பியுள்ள நீங்கள் அதில் பிறந்த நேரம் குறிப்பிடவில்லை. வாக்கியப் பஞ்சாங்கப்படி கணக்கிடப்பட்டிருந்தால் கிரகநிலைகள் ஜாதகத்தில் சரியாக இருக்காது. அதன்படி பலன் சொல்லுவதும் துல்லியமாக இருக்காது. பிறந்தநாள், பிறந்தநேரம், பிறந்தஇடம் குறிப்பிட்டு மறுபடியும் அனுப்புங்கள் பதில் தருகிறேன்.
ஶ்ரீதரன், சென்னை.
ராசி ரா
சந்,பு,கே குரு,சனி
சூ,சுக் செவ்
கேள்வி :
வி.ஆர்.எஸ். வாங்கி ஓய்வு பெற்று ஒரு வருடம் ஆகிறது. பென்ஷன்வருகிறது. மீண்டும் வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன். நல்லவேலை அமையுமா? எப்போது? பணவரவு எப்படி உள்ளது? நடைபெறும்சனிதசை மீதி எவ்வாறு இருக்கும்?
பதில்:
வலுப்பெற்ற சனி வேலையைத் தடை செய்வார் என்பதன்படி தனுசு லக்னமாகி தனஸ்தானமான இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்ற சனிதசை புதன்புக்தியில் வேலையை விட்டு விட்டீர்கள். சனிதசை சுமாராகத்தான் இருக்கும். ஆயினும் பாக்கியாதிபதி சூரியனின் சாரத்தில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது. ஆகஸ்டு மாதத்திற்கு மேல் நல்லவேலை அமையும். பணவரவு ஓரளவு இருக்கும். சனிதசை சுக்கிரபுக்திக்குப் பிறகு நடக்கும் சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகள் யோகமாக இருக்கும்.
எஸ். ஜெயந்தி, கொளத்தூர்.
சந்  ரா
ராசி
 கே செவ் ல  குரு சூ,சுக் பு,சனி
கேள்வி :
இதுவரை பல கடிதங்கள் எழுதி விட்டேன். ஒவ்வொரு வாரமும்எதிர்பார்த்து ஏமாற்றம் அடைகிறேன். இந்த கடிதத்திற்காவது பதிளித்துஎன் மனக் கஷ்டத்தைப் போக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 34 வயதாகும் மகனுக்கு இன்னும் திருமணம் கைகூடவில்லை. எப்போதுநடக்கும்? குணமுள்ள மனைவி அமையுமா?
பதில்:
(விருச்சிகலக்னம், மேஷராசி. லக்னத்தில் செவ். எட்டில் ராகு. பதினொன்றில் சூரி, புதன், சுக், சனி. பனிரெண்டில் குரு.)
லக்னத்தில் செவ்வாய் அமர்ந்து லக்னத்தை சனி பார்த்த கோபக்காரனான உங்கள் மகனுக்கு தாமதமாக திருமணம் நடப்பதே நல்லது. ஜாதகப்படி ஏழாம் வீட்டை வலுத்த செவ்வாய் பார்த்து அவரே ராசிக்கு எட்டில் அமர்ந்திருக்கிறார். தாம்பத்திய சுகத்தை தரும் சுக்கிரன் நீசமும் அஸ்தமனமுமாகி சனியுடன் சேர்ந்து இருக்கிறார். இது போன்ற கோபமும் பிடிவாதமும் உள்ளவர்களுக்கு சீக்கிரம் திருமணமானால் இரண்டு திருமண அமைப்பு உண்டு.
தவிர மகன் ஜாதகத்தில் புத்திரஸ்தானாதிபதியும், காரகனுமான குரு பனிரெண்டில் மறைந்து புத்திரஸ்தானத்தை சனி பார்த்தது புத்திரதோஷம். அதோடு அஷ்டமச்சனி நடப்பதாலும் திருமணம் தாமதமாகிறது. வருகின்ற ஜூன் மாதத்திற்கு மேல் நடக்க இருக்கும் செவ்வாய்தசை, ராகுபுக்தியில் குருபகவானின் பார்வையை ராகு பெற்றிருப்பதால் இந்த வருடக்கடைசி அல்லது அடுத்தவருடம் தைமாதம் திருமணம் நடக்கும். ராகுவிற்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.
பதினொன்றாமிட சனி நல்லது செய்யுமா?
கணேன், திண்டுக்கல்.
பு சனி சூ செவ் ரா  குரு
சுக் ராசி
ல சந்
கேள்வி :
2001 முதல் இன்றுவரை படிப்படியாகக் கஷ்டம், இழப்பு, நிம்மதியின்மைஇருக்கிறது. நடப்பு சனிமகாதசை சுக்கிரபுக்தி யோக தசாபுக்தி என்று ஜோதிடர்கள் சொன்னார்கள். இப்போதுதான் அதிகஇழப்பும், கஷ்டமும்இருக்கிறது. பதினொன்றாமிட சனி நல்லது செய்யும் என்று பார்த்தால்அதுவும் வேலை செய்யாமல் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. தற்போது மனைவி உள்பட எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். மீண்டும்வாழ்க்கை திரும்பக் கிடைக்குமா?
பதில்:
(மகரலக்னம், மகராசி. இரண்டில் சுக். மூன்றில் புத, சனி. நான்கில் சூரி, செவ். ஐந்தில் ராகு. ஆறில் குரு.)
வாக்கியப் பஞ்சாங்கம் துல்லியமானது அல்ல என்பதற்கு உங்கள் ஜாதகமும் ஒரு உறுதியான ஆதாரம். வாக்கியப்படி எழுதப்பட்ட உங்கள் ஜாதகத்தில் இரண்டில் சுக்கிரனும், சனியும் குருபார்வையுடன் அமர்வதால் ஜோதிடவிதிகளின்படி உங்களுடைய சனிதசை பிரமாதமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் திருக்கணிதப்படி சனிபகவான் மூன்றாமிடத்தில் பரிவர்த்தனை பெற்ற நீச புதனுடன் அமர்ந்ததால் அனைத்தையும் இழக்கவைத்து கடன்காரனாக்கி இருப்பார்.
இதுபோன்ற காரணங்களால்தான் தென்மாவட்டங்களில் இருந்து வரும் பிறந்த நேரம் குறிக்காத வாக்கியப்படி கணிக்கப்பட்ட ஜாதகங்களுக்கு என்னால் பலன் சொல்ல முடியாமல் போகிறது. திருக்கணிதப்படி ஆறுக்குடையவனுடன் இணைந்த சுபர் பார்வையற்ற சனிபகவான் நல்லபலன்களைத் தரமாட்டார். தவிர பிறந்தஜாதகப்படி நடைபெறும் பலன்கள்தான் முதலில் நிற்கும். ஜாதகப்படி நல்ல தசாபுக்திகள் இல்லையென்றால் கோட்சாரத்தில் இருக்கும் பதினொன்றாமிட சனி நல்ல பலன்களைத் தர முடியாது.
உங்கள் ஜாதகப்படி பனிரெண்டைப் பார்த்து வலுப்படுத்தி ஆறாமிடத்தில் அமர்ந்த விரயாதிபதி குருதசையில் எட்டுக்குடைய சூரியனின் புக்தியில் இருந்து 2001-ம் வருடம் முதல் உங்களுடைய விரயம் இழப்பு சரிவு ஆரம்பமாகியது. இது மிகப்பெரிய இழப்பாக மனைவியையும் இழக்க வைத்துவிட்டபடியால் இனி ஒன்றும் பெரிய கெடுதல்களைச் செய்யாது. தற்போது நடக்கும் சனிதசை சுக்கிரபுக்தியில் தசாநாதனுக்கு பனிரெண்டில் சுக்கிரன் இருப்பதால் நல்ல பலன்களைச் சொல்வதற்கில்லை. அடுத்து நடைபெறும் சூரிய சந்திர புக்திகளும் சனிக்கு ஆகாதவர் என்பதால் சுமாராகத்தான் இருக்கும். சனிதசை ராகுபுக்தியில் இருந்து வாழ்க்கை நல்ல விதமாக மாறுதல் அடையும்.
செந்தில்குமார், சேலம்.
சனி
ராசி சந் கே
செவ் ரா
குரு ல சுக் சூ பு
கேள்வி :
ஆறுமாத காலமாக உடல்நிலையில் சிக்கல், மூச்சுத் திணறல் எனபலவிதக் கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன். உடல்நலம் பூரணகுணமடையுமா? ஆயுள் பற்றிய கவலையும் ஏற்படுகிறது. ஏற்கனவேகடிதங்கள் எழுதியும் தங்களிடம் இருந்து பதில் இல்லை. இம்முறையாவது பதில் தரவும் .
பதில்:
இரண்டாவது கேள்விக்கு சொன்ன அதேபதில்தான் உங்களுக்கும். என்னதான் கட்டங்களைத் தெளிவாக எழுதி ஜாதகத்தை நீங்கள் அனுப்பி வைத்தாலும் பிறந்த நேரம் இல்லை என்றால் பதில் தர முடியாது. நீங்கள் எழுதி அனுப்பும் ஜாதகங்களை நான் நம்ப மாட்டேன். அவற்றில் தவறுகள் இருக்கலாம். ஒரு நல்ல ஜோதிடன் பிறந்தநேரம் வைத்து தானே ஜாதகம் கணித்து சரியான ஜாதகம் என்று திருப்தி அடைந்த பின்தான் பலன் சொல்ல வேண்டும். எத்தனை கடிதங்கள் எழுதினாலும் பிறந்த நேரம் குறிப்பிடப்படாத ஜாதகங்களுக்கு நான் பதில் சொல்ல இயலாது.
எம். கங்காதரன், சென்னை - 37.
ரா
 செவ் குரு ராசி
 ல
 சூ பு சனி சுக் சந் கே
கேள்வி :
எம். எஸ். சி. படித்த எனது மகனுக்கு கடந்த மூன்று வருடமாக சரியானவேலை கிடைக்கவில்லை. எப்போது வேலை கிடைக்கும் என்றுசொல்லும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
(மீனலக்னம், கன்னிராசி. லக்னத்தில் ராகு. எட்டில் சுக். ஒன்பதில் புத, சனி. பத்தில் சூரி. பனிரெண்டில் செவ், குரு.)

லக்னாதிபதி குருபகவான் வெளிநாடு வெளிமாநிலத்தைக் குறிக்கும் பனிரெண்டில் மறைந்து செவ்வாயும், சனியும் பரிவர்த்தனையாகி லக்னாதிபதியை விட எட்டுக்குடைய சுக்கிரன் வலுப்பெற்றதால் உங்கள் மகன் தூர இடங்களில் பணிபுரிவார். தற்போது நடக்கும் குருதசையில் சுயபுக்தி முடிந்த பிறகு வரும் ஜூலை மாதத்திற்கு மேல் அவருக்கு விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். கன்னி ராசிக்கு கடந்த ஏழு வருடங்களாக ஏழரைச்சனி நடந்ததாலும் சனி முடிந்த பிறகும் ராசியில் ராகு நீடித்ததாலும் இதுவரை நிறைவான வேலை கிடைக்கவில்லை. பிப்ரவரி மாதம் முதல் அனைத்துப் பாக்கியங்களும் உங்கள் மகனுக்கு கிடைத்து வாழ்க்கையில் நல்லவிதமாக செட்டில் ஆவார்.

4 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் (26.1.2016)

 1. மாப்பிள்ளை தந்தைவழியில் தூரத்துசொந்தமாக இருப்பார் என நீங்கள் முதல் கேள்விக்கு பதில் கூறியது தந்தைக்குரிய சூரியன் எழில் இருப்பதாலா ? ஆனால்
  தூரத்துசொந்தம் எண்டு கூறியது விளங்கவில்லை ஐயா. உங்கள் கேள்வி பதில் களூடாக ஜோதிடம் கற்று கொள்ள முயலும் ஒரு சிறியவன் ஐயா.

  1. வணக்கம்

   இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.
   ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்

   தேவி
   ADMIN

 2. We are in srilanka please I will like to contect with your email please may I your mail sir thank you

  1. வணக்கம்

   இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.
   ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்

   தேவி
   ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *