adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் ( 4.10.16)

. விஜியராமன், பண்ருட்டி.

கேள்வி :
இரண்டாவது பெண் குழந்தையின் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, இரண்டில் சனி, லக்னாதிபதிக்கு சனி பார்வை. லக்னத்திற்கு அஷ்டமாதிபதி செவ்வாய் பார்வை இருக்கிறது. தங்களின் பாவக்கிரக சூட்சுமவலு தியரிப்படி இந்த பாவக்கிரகங்கள் சுபத்துவம் அடைந்திருக்கிறார்களா? என் இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி? ஒரு தந்தையாக குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? கடைசிவரை கூலிவேலை செய்துதான் குழந்தைகளை கரையேற்ற வேண்டுமா? விளக்கிக் கூற குருஜிஅய்யா அவர்களின் பாதங்களை தொட்டு வேண்டிக் கொள்கிறேன்.
பதில்:
பெரியவளுக்கு மகரலக்னம், கடகராசியாகி, லக்னாதிபதி சனி பத்தாமிடத்தில் உச்சம் பெற்று எனது பாவக்கிரகங்களின் சூட்சுமவலு தியரிப்படி ராகுவுடன் 15 டிகிரிக்குள் இணைந்து, புதனுடன் பரிவர்த்தனையான குருவின் பார்வை பெற்ற யோகஜாதகம். ராசியை தனிச்சுக்கிரன் பார்ப்பதும் மிகச்சிறப்பு. பிறந்தது முதல் யோகதசைகள் நடப்பில் உள்ளதாலும், சூரியனும், குருவும் நேருக்குநேர் பார்க்கும் சிவராஜயோகம் உள்ளதாலும் எதிர்காலத்தில் சிறப்பான நிலையில் இருப்பாள்.
இளையவளுக்கு கன்னிலக்னம், கன்னிராசியாகி லக்னாதிபதி புதன் சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்று லக்னத்திலேயே உச்சம் பெற்ற அமைப்புள்ள ஜாதகம். திருக்கணிதப்படி சனி மூன்றாமிடத்தில்தான் இருக்கிறார். செவ்வாய் பத்தில் திக்பலம் பெற்றுள்ளது சுபத்துவம் என்பதால் செவ்வாயின் பார்வை நன்மையைத் தரும். இரண்டு குழந்தைகளுக்கும் லக்னாதிபதி வலுவாக இருப்பதால் எவர் தயவும் தேவையின்றி சுயமாகவே படித்து முன்னேறி நல்ல நிலையில் இருப்பார்கள். குழந்தைகளின் ஜாதகப்படி இவர்கள் வளர வளர நீங்கள் படிப்படியாக முன்னேறுவீர்கள். பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை.
எஸ். காதர்மைதீன், பெரும்பாக்கம்.
கே
ராசி  குரு
செவ் ரா சந் பு,சுக் சனி,ல சூ
கேள்வி :
1995-ம் ஆண்டு சினிமாவில் நடிக்க சென்னை வந்து சிறுவேடங்களில் 38 படங்களில் நடித்தேன். கடந்த 3 வருடகாலமாக நடிக்க வாய்ப்பு இல்லாமல் மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறேன். வேறு தொழில் செய்யலாம் என்றாலும் பணவசதி இல்லை. இனிமேல் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வருமா? முயற்சிகள் செய்யலாமா? அல்லது வேறு வேலை ஏதாவது செய்யலாமா?
பதில்:
கேட்டை நட்சத்திரம், விருச்சிகராசியாகி ஜென்மச்சனி நடப்பதால் சினிமா வாய்ப்புகள் தடைப்பட்டு விட்டன. இன்னும் ஒரு வருடத்திற்கு சினிமா வாய்ப்புகள் வராது என்பதால் அதுவரை பிழைப்பிற்காக கிடைக்கும் வேலைக்கு போகவும். 2017 செப்டம்பர் முதல் சினிமாவில் மீண்டும் வாய்ப்பு தேடி முயற்சி செய்து 2018 முதல் மறுபடியும் நடிக்க ஆரம்பிப்பீர்கள்.
எஸ். கோவிந்தராஜன், ராசிபுரம்.
குரு சந் சனி
 கே ராசி  சூ,பு சுக் செ
கேள்வி :
பி.இ.சிவில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் எனது பெரிய மகனின் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் அமிர்தகலசத்தில் ஒரு துளி விஷம் கலந்தது போல யோகங்கள் பங்கமாகிவிட்டதாக கூறினார். எனது மகன் நன்கு படித்து நல்லவேலைக்குச் செல்ல வாய்ப்புள்ளதா? அவ்வாறு யோகம் பங்கமாகியிருந்தால் அதற்குப் பரிகாரங்கள் ஏதாவது உண்டா?
பதில்:
(தனுசுலக்னம், மேஷராசி. 3-ல் கேது. 4-ல் குரு. 5-ல் சனி. 8-ல் சூரி, செவ், சுக், புத. 13.8.1998, 4.20 பகல், ராசிபுரம்.)
மகன் ஜாதகத்தில் ஐந்துக்குடைய செவ்வாய் நீசமாகி எட்டில் மறைந்து, நான்குகிரகங்கள் எட்டில் இருப்பதால் ஜோதிடர் அவ்வாறு சொல்லி இருக்கலாம். ஆனால் வலுப்பெற்ற லக்னாதிபதி குருபகவான் எட்டில் இருக்கும் கிரகங்களைப் பார்ப்பதாலும், ஐந்து, எட்டிற்குடைய சந்திரனும் செவ்வாயும் பரிவர்த்தனையாகி இருப்பதாலும் எந்த யோகமும் பங்கமாகவில்லை. குறிப்பாக சொல்லப் போனால் மேற்கண்ட அமைப்பால்தான் அயல்நாட்டுயோகம் உங்கள் மகனுக்கு உண்டாகி இருக்கிறது.
ஒரு ஜாதகத்தில் எட்டு, பனிரெண்டுக்குடையவர்களும், எட்டு, பனிரெண்டாம் இடங்களும் வலுத்து, கடகம் சுபத்துவம் பெற்றால் அவர் வெளிநாட்டில் பிழைப்பார் என்பது விதி. மகன் ஜாதகத்தில் எட்டு, பனிரெண்டாமிடங்களை குரு பார்த்து எட்டு, பனிரெண்டுக்குடையவர்கள் பரிவர்த்தனையாகி, வெளிநாட்டைக் குறிக்கும் சர ராசியில் சூரியன் அமர்ந்து அடுத்து தசை நடத்தப் போவதாலும், அதனையடுத்து சந்திர, செவ்வாய்தசைகளும் சர ராசியில் இருந்து நடைபெறப் போவதாலும் உங்கள் மகன் நல்லபடியாகப் படித்து முடித்து, நீண்டநாட்கள் வெளிநாட்டில் வேலை செய்வார்.
டி. சீனிவாசன், புதுசேரி - 3.
சனி ரா
 சந்
 செவ் குரு
பு,ல சுக் சூ கே
கேள்வி :
48 வயதாகியும் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பரிகாரம் தேவையா?
பதில்:
துலாம்லக்னம், கும்பராசியாகி. ராசிக்கு இரண்டில் சனி, ராகு அமர்ந்து ராசிக்கு ஏழில் செவ்வாய் அமர்ந்ததால் கடுமையான களத்திரதோஷமும், கூடவே புத்திர தோஷமும் இருக்கிறது. லக்னத்தில் இருக்கும் சுக்கிரனும் புதனும் ராகுவின் நட்சத்திரத்தில் இருப்பதும் குற்றம். ராகுவிற்கான முறையான பரிகாரங்களை ஜென்மநட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு தங்கி ஶ்ரீகாளகஸ்தியில் செய்யுங்கள். திருமணம் நடக்கும்.
எஸ். முருகன், திருநெல்வேலி.
சனி  சூ பு
 ரா செவ்
சந்,கே சுக்
குரு
கேள்வி :
46 வயதாகும் மூத்தமகனுக்கு இதுவரையிலும் திருமணம் நடைபெறவில்லை. பல பரிகாரங்களை செய்து விட்டோம். எப்போது, எப்படி திருமணம் நடக்கும் என்று குருஜி அவர்கள் காட்டும் நல்வழிக்காக காத்திருக்கிறேன்.
பதில்:
(தனுசுலக்னம், சிம்மராசி. 5-ல் சனி, 7-ல் சூரி, புத. 8-ல் செவ். 9-ல் சுக், கேது. 11-ல் குரு. 9.7.1970, 5.09 மாலை, நெல்லை)
லக்னாதிபதி வலுவிழந்தால் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைச் சுகங்கள் கிடைக்காது. மகன் ஜாதகத்தில் லக்னாதிபதி குரு பகை பெற்று நீசசெவ்வாய், சனியின் பார்வை பெற்று பலவீனமாகி இருக்கிறார். லக்னத்திற்கு எட்டில் நீசச் செவ்வாய் அமர்ந்து, இரண்டாம் வீட்டை நீசச்சனி, செவ்வாய் இருவரும் பார்க்கிறார்கள்.
ஏழாமிடத்திற்கும் நீசச்சனியின் பார்வை இருக்க, ராசிக்கு ஏழில் ராகு இருப்பதும் கடுமையான களத்திரதோஷம். ஐந்தில் சனி அமர்ந்து ஐந்துக்குடையவன் எட்டில் மறைந்ததும் புத்திரதோஷம். லக்னாதிபதி குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்கள் செய்தால் மட்டுமே திருமணம், புத்திர பாக்கியங்கள் கிடைக்கும். குருவிற்கான முறையான பரிகாரங்களை ஏற்கனவே மாலைமலரில் விரிவாக எழுதியிருக்கிறேன்.
எம். மீனாட்சி, கொளத்தூர்.
ரா
சந்
கே செவ் குரு சூ,பு சுக் சனி
கேள்வி :
ஏழு வருடங்களாக கணவர் மிகவும் கடினமாகப் படித்து அரசுவேலைக்கு முயற்சி செய்து வருகிறார். இதுவரை பலன் இல்லை. ஜாதகப்படி அரசுவேலை அமைய வாய்ப்புள்ளதா? எப்போது அமையும்? பரிகாரங்கள் செய்ய வேண்டுமா?
பதில்:
(சிம்மலக்னம் மகரராசி 2-ல் சூரி,புத,சுக்,சனி. 3-ல் குரு, 4-ல் செவ், 5-ல் கேது.)
கணவனுக்கு சிம்மலக்னமாகி லக்னாதிபதி சூரியன் நவாம்சத்தில் உச்சம் பெற்றுள்ளதாலும், பத்தாமிடத்தை யோகாதிபதி செவ்வாய் பார்ப்பதாலும் பரிகாரங்களுக்குப் பிறகு அரசுவேலை கிடைக்கும். கடினமாக முயற்சி செய்வதற்கு சூரியன் நீசமான சுக்கிரனுடன் இணைந்திருப்பதே காரணம். தற்போது குருதசையில் நீச சுக்கிரபுக்தி நடந்து கொண்டிருப்பதும் தடைதான்.
2018 ல் ஆரம்பிக்கும் சூரியபுக்தியில் அரசுவேலையில் இருக்க வேண்டும். சூரியன் நீசனுடன் இணைந்திருப்பதால் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். முன்னதாகவே வேலை கிடைக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடந்து கொண்டிருந்தாலும் குடும்பத்தலைவனின் முயற்சிகள் கைகூடாது.
ஒரு ஜென்ம நட்சத்திரநாளில் கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோவிலில் வழிபட்டு ஒரு ஜாமநேரம் என்று சொல்லப்படும் இரண்டரை மணிநேரம் அந்தக் கோவிலுக்குள் இருக்கவும். ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்னை செங்குன்றம் அருகே உள்ள ஞாயிறு எனும் கிராமத்தில் அமைந்திருக்கும் பழமையான சூரியன்கோவிலில் வழிபட்டு ஒரு முகூர்த்தநேரம் எனப்படும் நாற்பத்திஎட்டு நிமிடம் அந்தக் கோவிலுக்குள் இருக்கவும்.
சேக்கிழார் பெருமானால் ஆயிரம் வருடங்களுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட சென்னை போரூர் அருகில் உள்ள கொளப்பாக்கத்தில் அமைந்துள்ள சூரியன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் சென்று வழிபட்டு ஒரு நாழிகை என்று சொல்லப்படக்கூடிய இருபத்திநான்கு நிமிடங்கள் கோவிலின் உள்ளே இருக்கவும். அரசுவேலை கிடைக்கும் வரை வாரவாரம் இந்தக் கோவிலுக்குப் போகவும். இந்த பரிகாரங்களை பகலில் மட்டுமே செய்ய வேண்டும். சூரியன் சம்பந்தப்பட்ட பரிகாரங்களை இரவில் செய்யக்கூடாது.
வேறு ஜாதிப் பெண்ணுடன்தான் கடைசிவரை வாழ்வேனா?
சந்
செவ் ரா
கே
சுக் சூ.குரு பு,சனி
ரெ. செந்தில்குமார், திருவாரூர்.
கேள்வி: ஏழாவது மட்டும் படித்து லாரி டிரைவராக இருக்கிறேன். ஒரே அக்காவிற்கு திருமணமாகி விட்ட நிலையில் எட்டு வருடங்களாக கடும் முயற்சி செய்தும் எனக்குத் திருமணமாகவில்லை. நான் வெறுத்துப் போய், தந்தைமேல் இருந்த கோபத்தில் ஏப்ரல் மாதத்தில் அப்பாவிற்குத் தெரியாமல் வேறுஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன். இதை என் அப்பா அம்மா ஏற்றுக் கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். இப்போது என்னைப் பெற்றவர்களை இழந்து நிற்கிறேன். கூலிவேலை செய்யும் என் அப்பா இப்போது என் உதவியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். என் தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் அனைவருமே கொஞ்சம்கொஞ்சமாக என் பெற்றோரை ஓரம் கட்ட ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது? என் ஜாதகத்தையும் மீறி இது நடந்து விட்டதா அல்லது என் ஜாதகமே வேற்று ஜாதிப்பெண்ணுடன்தானா என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
பதில்:
(சிம்ம லக்னம், மேஷராசி 2-ல் சூரி,புத,குரு,சனி. 3-ல் சுக், 12-ல் செவ், ராகு 18-9-1981 4.54 அதிகாலை திருவாரூர்)
திருமணவயதில் இருக்கும்போது பாபத்துவம் பெற்ற ராகுதசை நடைபெற்றாலோ, பாவர்கள் ஏழாமிடம், ஏழுக்குடையவனுடன் தொடர்பு கொண்டாலோ தன்னுடைய இனத்திற்கு வெளியில் வேற்றுஜாதி, வேறுமதம் அல்லது வேறுமொழி பேசக்கூடியவருடன் திருமணம் அமையும். உங்களுக்கு நீசசெவ்வாயுடன் இணைந்த ராகுதசையும் அஷ்டமச் சனியும் நடப்பதால் இதுபோன்ற உணர்ச்சிவசப் பட்ட கல்யாணத்திற்கு ஆளாகிவிட்டீர்கள். சிம்மலக்னமாகி ஏழுக்குடைய சனியின் புக்தி நடப்பதால் திருமணம் ஆகித்தான் தீரவேண்டிய சமயத்தில் அஷ்டமச் சனி குறுக்கிட்டதால் வருத்தப்படக் கூடிய கல்யாணமாக ஆகிவிட்டது.
மனைவியைக் குறிக்கும் சனி உங்கள் ஜாதகத்தில் குருவுடன் சேர்ந்திருப்பதால் வேறுஜாதிப் பெண்ணாக இருந்தாலும் அந்தப்பெண் நல்ல குணவதியாக, குடும்பத்திற்கு ஏற்ற நல்ல பெண்ணாகத்தான் இருப்பார்.
ஜோதிடனின் விருப்பமும், ஜாதகத்தின் பலனும் ஒன்றாக இருக்கும்போது, அந்த ஜோதிடனால் அகமும் முகமும் மலர்ந்து சந்தோஷமாக கேட்பவர்க்கு பலன் சொல்ல முடியும். ஜோதிடனின் மனம் விரும்பாத அல்லது யாராவது பாதிக்கப்படக் கூடிய அமைப்பு அந்த ஜாதகத்தில் தெரியுமாயின் பலனுரைப்பது தர்மசங்கடம்தான். எனக்கு இப்போது அந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

உங்கள் ஜாதகப்படி முதல் மனைவியைக் குறிக்கும் ஏழுக்குடைய சனி சூரியனுடன் இணைந்து வலுவிழந்த நிலையில் இரண்டாவது திருமணத்தைக் குறிக்கும் புதன் உச்சவலுப் பெற்றிருக்கிறார். 2017 பிற்பகுதியிலிருந்து புதன்புக்தியும் ஆரம்பிக்க இருக்கிறது. தற்போதைய அஷ்டமச்சனியில் உங்களுக்கு இன்னும் நெருக்கடிகள் அதிகரிக்கும். அனைத்தும் பரம்பொருளின் விருப்பப்படியே நடக்கிறது. நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *