adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் (7.3.2017)

. லோகநாதன், திருவள்ளூர்.

ல,குரு ரா  சூ,பு சுக்
சனி ராசி
சந்
செவ்
கேள்வி :
திரைப்படம் இயக்குவதில் ஆர்வமாக உள்ளேன். முயற்சி பலன் தருமா?
பதில்:

(ரிஷப லக்னம் மகர ராசி. 1-ல் குரு, ராகு. 2-ல் சூரி, புத, சுக். 5-ல் செவ். 10-ல் சனி. 18-6-1965, காலை 5.20, திருவள்ளூர்)

ஜாதகப்படி லக்னாதிபதி சுக்கிரன் என்பதாலும், அவரே ராசிக்கு பத்துக்குடையவன் ஆனதாலும் உங்களுக்கு சினிமாவின் மேல் கடுமையான காதல் இருக்கும். அதே நேரத்தில் பத்தாமிடத்தில் சனிபகவான் சுபத்துவமின்றி இருப்பதால் இதுவரை நீங்கள் எந்தத் தொழிலையும் நிரந்தரமாகவும், சரியாகவும் செய்திருக்க வாய்ப்பு இல்லை.

தற்போதைய தசாநாதன் சனிபகவான் குருவின் சாரத்தில் இருப்பதால் சினிமாத் துறை உங்களுக்கு கை கொடுக்காது. ஆயினும் நான் என்ன சொன்னாலும் கேட்காமல் 2018-ம் ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் சனிதசை சுக்கிர புக்தியில் ஒரு சினிமா முயற்சியை செய்வீர்கள். சினிமா உங்களை விடாது.

. என். செல்வராஜ், பெருந்துறை.

கேள்வி :
குரு சனி ரா
ராசி
சந்  சூ செவ்
சுக்

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத இருக்கும் என் மகன் டாக்டருக்குப் படிக்க விரும்புகிறான். அவன் ஜாதகப்படி டாக்டர் சீட்டு கிடைக்குமா? அல்லது எந்தத் துறை படித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்?

பதில்:

(விருச்சிக லக்னம், மகர ராசி. 7-ல் குரு, சனி. 8-ல் ராகு. 10-ல் சூரி, செவ். 11-ல் சுக். 11.9.2000, மதியம் 12.32, புதுக்கோட்டை)

இதுபோன்ற ஜாதக அமைப்புள்ள குழந்தைகளுக்கு என்ன படித்தாலும் எதிர்காலம் சிறப்பாகத்தான் இருக்கும். லக்னாதிபதி லக்னத்தைப் பார்த்து, குருவும் லக்னத்தைப் பார்க்கும் குழந்தைகளுக்கு படிப்பு விஷயத்தில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை.

மகனுக்கு விருச்சிக லக்னமாகி பத்தாமிடத்தில் சூரியனும், செவ்வாயும் இணைந்துள்ளது எதிர்காலத்தில் மருத்துவம் மற்றும் அதிகாரம் சம்பந்தப்பட்ட   துறைகளில் பணிபுரியும் அமைப்பு. அதேநேரத்தில் இன்னொரு மருத்துவ கிரகமான குருபகவான் ராசிக்கோ, லக்னத்திற்கோ பத்தாமிடத்தோடு தொடர்பு கொள்ளவில்லை.

வீட்டில் யாருக்காவது ஏழரைச்சனி, அஷ்டமச்சனி அமைப்புகள் நடந்து கொண்டிருந்தால் மருத்துவம் கிடைப்பது தாமதமாகும். அவனது மகர ராசிக்கும் ஏழரைச்சனி ஆரம்பிக்க இருப்பது ஒரு தடைதான். செவ்வாய்க்கான முறையான வழிபாடுகளைச் செய்யுங்கள். மகன் விரும்புவது நடக்கும்.

எம். சிவக்குமார், மதுரை - 1

கேள்வி :
ல,கே குரு  சூ,பு சுக்
ராசி சனி
 சந் செவ்

மானசீக குருநாதருக்கு வணக்கம். வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். பலசரக்கு கடை முன்னேற்றம் இல்லை. பணப் பிரச்சினை அதிகம். எவ்வளவு சம்பாதித்தாலும் வீட்டில் 10 ரூபாய்வைக்க முடியவில்லை. என் தாயும் எனக்கு சாதகமாக இல்லை. என்னதொழில் செய்தால் நன்றாக இருக்கும்? வரும் குருதசை எனக்கு நன்றாக இருக்குமா?

பதில்:

(மேஷ லக்னம், சிம்ம ராசி. 1-ல் குரு, கேது. 3-ல் சூரி, புத, சுக். 4-ல் சனி. 5-ல் செவ். 3.7.1976, அதிகாலை 1.07, மதுரை)

நடக்கும் தசாநாதன் ராகு ஏழாம் வீட்டில் சுயச்சாரத்திலேயே இருப்பதால் சுக்கிர புக்தி வரை யோகத்தைச் செய்ய மாட்டார். சூரிய புக்திக்குப் பிறகு தொழிலில் முன்னேற்றங்கள் இருக்கும். பலசரக்குக் கடை தொழிலே பொருத்தமானது. அதனையே தொடர்ந்து செய்யவும்.

லக்னத்தில் குருபகவான் திக்பலமாக அமர்ந்து, கேதுவுடன் இணைந்து கேள யோகம் எனப்படும் கோடீஸ்வர யோகத்தில் இருப்பதாலும், நவாம்சத்தில் ஆட்சி பெற்றிருப்பதாலும் அடுத்து வரும் குருதசை நல்ல யோகத்தைச் செய்யும். நான்காம் வீட்டில் சனி அமர்ந்து, மாதாகாரகன் சந்திரன் செவ்வாயுடன் இணைந்து பலவீனமாகி இருப்பதால் தாயார் உங்களுக்கு எப்போதுமே சாதகமாக இருக்கமாட்டார்.

வி. முத்துகாமாட்சி, சில்வார்பட்டி.

கேள்வி :
ராசி
 செவ் குரு ரா
 சூ சந்  பு சனி

மகளுக்கு திருமணமாகி 16 வருடங்களாகிறது. 14 வயதில் மகன் இருக்கிறான். கணவன்-மனைவிக்குள் கருத்து வேற்றுமையால் அவருடைய செயல்பாடுகள் தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி டைவர்ஸ் வேண்டும் என்று ஒற்றை வரியில் கூறுகிறது. நாங்கள் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் மூளைச்சலவை செய்யப்பட்ட தீவிரவாதி தன் உயிரை விடுவது போலப் பேசுகிறது. பேரனின் ஜாதகமும் அனுப்பி இருக்கிறேன். மகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல விரும்புகிறேன்.

பதில்:

( மிதுன லக்னம் விருச்சிக ராசி 3ல் செவ், குரு, ராகு. 4ல் சனி, 5ல் புத, 7ல் சூரி, திருக்கணிதப்படி 8ல் சுக் 17-12-1979 மாலை 7-45 தேனி )

கடந்த மூன்று வருடங்களாக எட்டில் இருக்கும் சுக்கிரனின் தசையோடு, கடுமையான ஏழரைச் சனியும் நடந்து கொண்டிருப்பதால் உங்கள் மகள் கணவன் விஷயத்தில் மன அழுத்தமும், தூக்கம் இல்லாத நிலைமையிலும் இருப்பார். விருச்சிக ராசிக்காரர்கள் அனைவரும் அவரவர் கர்ம வினைகளின்படி கடந்த நான்கு வருடங்களாக ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜாதக அமைப்பின்படி உங்கள் மகள் தற்போது சொந்தமாக சிந்திக்கும் திறனில் இல்லை. இப்போது அவர் எடுக்கும் எந்த முடிவும் சரி வராது. அதேநேரத்தில் உங்கள் மருமகன் யோக்கியன் இல்லை. மகளுக்கு சுக்கிரதசை ஆரம்பித்ததில் இருந்தே கணவன் விஷயத்தில் ஏறுக்குமாறான விஷயங்கள் இருக்கும். உங்கள் மகளின் இந்த முடிவுக்கு இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன.

மகளை சற்றுப் பொறுமையாக இருக்கச் சொல்லுங்கள். இந்த வருடம் போகட்டும். எதுவாக இருந்தாலும் வரும் தீபாவளிக்குப் பிறகு யோசிக்கலாம் என்று சொல்லுங்கள். இங்கே எந்தக் கணவன் மனைவியும் எந்த நேரமும் கட்டிப் பிடித்துக் கொஞ்சிக் கொண்டிருப்பவர்கள் இல்லை என்பதையும், நூற்றுக்குத் தொண்ணூறு பேர் அடுத்தவர் செய்யும் தவறுகளை சகித்துக் கொண்டு, குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் என்பதையும் புரிய வையுங்கள்.

மகளின் ஜாதகப்படி ஏழுக்குடையவன் பரிவர்த்தனையாகி, ஏழாமிடத்தை குரு பார்ப்பதால் இரண்டு திருமண அமைப்பு இல்லை. ஆனால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு நடக்க இருக்கும் சூரிய, சந்திர புக்திகள் நன்மைகளைச் செய்யாது. சூரியன் ஏழில் இருப்பதும், சந்திரன் குடும்பாதிபதியாகி நீசமாகி இருப்பதும் நல்லவைகள் நடக்கும் அமைப்பு இல்லை.

எப்போதுமே நடக்கும் தசாநாதனுக்கு ஆகாத பகைவர்களின் புக்திகளில் ஒருவருக்கு குழப்படிகள் நடக்கும். சுக்கிரனுக்கு சூரியனும், சந்திரனும் பகைவர்கள் என்பதால் மகளின் பிரச்னை தீர சிறிது காலம் பிடிக்கும். பேரனின் ஜாதகப்படி சிம்ம லக்னமாகி லக்னத்திலேயே சூரியன் ஆட்சி பெற்றிருப்பதாலும், ஒன்பதுக்குடைய செவ்வாய் உச்ச குருவுடன் இணைந்து நீசபங்கம் அடைந்திருப்பதாலும், ஒன்பதாமிடத்திற்கு பாபத் தொடர்புகள் எதுவும் இல்லாததாலும் அவர் தகப்பனைப் பிரிய வாய்ப்பில்லை.

வி. ஆனந்தன், கிழக்கு தாம்பரம்.

கேள்வி :
ராசி  செவ்
 குரு சனி ரா
 சந்,சூ சுக்,பு

ஜோதிடக்கலை அரசனுக்கு இந்த பக்தனின் பணிவான வணக்கங்கள். என் தாத்தா வீடு கட்டவில்லை, என் அப்பா வீடு கட்டவில்லை. நானாவது இடம் வாங்கி கட்டுவேனா? அல்லது இந்தப் பிறவியில் வீடு கட்டமுடியாதா என்பதை விளக்கும்படி பணிவுடன் கேட்கிறேன். வயது 38 ஆகிறது. இதுவரை பிரச்சினைகளை மட்டும்தான் சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வீடு பாக்கியத்தை இறைவன் எனக்கு அருளுவாரா மாட்டாரா என்பதை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது ஜாதகம் சரியாக கணிக்கப் பட்டிருக்கிறதா?

பதில்:

( கன்னி லக்னம் துலாம் ராசி 2ல் சூரி,சுக்,புத, 11ல் செவ், 12 குரு,சனி,ராகு 23-10-1979 அதிகாலை 4-45 திருவண்ணாமலை)

ஒருவருக்கு சொந்த வீட்டைக் கொடுக்கும் காரகனான சுக்கிரன் ஆட்சியாகவும், நான்காம் வீட்டின் அதிபதியான குருபகவான் அந்த வீட்டைப் பார்க்கும் நிலையிலும் இருப்பதால் உங்கள் தாத்தாவிற்கும், அப்பாவிற்கும் கிடைக்காத வீடு பாக்கியம் உங்களுக்கு நிச்சயம் உண்டு.

ஆனால் சுக்கிரன் நீச கிரகத்துடன் இணைந்தும், குருபகவான் பனிரெண்டில் மறைந்து சனி, ராகுவுடன் இணைந்திருப்பதால் ஏகப்பட்ட தடைகளுக்குப் பிறகுதான் அமையும். இந்த வருடத்துடன் உங்கள் ராசிக்கு நடக்கும் ஏழரைச்சனி முடிய இருப்பதால் இனிமேல் தடை எதுவும் இல்லை.

தற்போது நடக்கும் புதன்தசையிலேயே அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்கு மேல் சொந்த வீடு உண்டு. ஆனால் குரு ஆறாமிடத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால் வீட்டிற்காக கடன்படுவீர்கள். ஜாதகம் வாக்கியப்படி கணிக்கப்பட்டிருப்பதால் தவறாக இருக்கிறது. திருக்கணிதப்படி மறுபடியும் எழுதி வாங்கிக் கொள்ளுங்கள்.

சி. சீனிவாசன், ஒட்டன்சத்திரம்.

கேள்வி :
சந் ரா
ராசி
செவ்  குரு சூ,பு சுக் சனி

எனக்கு 14.11.2013- ம் அன்று திருமணம் நடந்து 3 மாதத்தில் பிரிந்து விவகாரத்து ஆகிவிட்டது. 2-வது திருமணம் எப்போது நடக்கும்? அடுத்துவரும் சுக்கிர தசை பொருளாதார உயர்வை கொடுக்குமா?

பதில்:

(தனுசு லக்னம், மீன ராசி. 7-ல் ராகு. 10-ல் சூரி, புத, சுக், சனி. 11-ல் குரு. 12-ல் செவ். 2.10.1982, மதியம் 1.31, பழனி)

லக்னத்திற்கு ஏழில் ராகு, ராசிக்கு ஏழில் சனி என்ற அமைப்புடன் சுக்கிரன் நீச பங்கமாகி வலுப் பெற்ற அமைப்புள்ள ஜாதகத்திற்கு அஷ்டமச்சனி நடக்கும் போது திருமணம் செய்தது தவறு. அடுத்து நடக்க இருக்கும் கேது தசை குரு புக்தியில் ஜூன் 2018-க்கு பிறகு 2-வது திருமணம் நடக்கும். சுக்கிரதசை முதல் பாதி சாதகமற்ற பலன்களைச் செய்து பிற்பகுதியில் உயர்வை தரும்.

ராகுகாலம் எல்லோருக்கும் தீமைதான் தருமா?

எஸ். கோமதிநாயகம், கல்லிடைக்குறிச்சி.

கேள்வி:

விளக்கு வைத்தபிறகு ஆறு மணிக்கு மேல் ஜோதிடம் பார்க்கக் கூடாது என்று சொல்வது ஏன்? இதற்கு எதாவது ஜோதிடக் காரணங்கள் இருக்கின்றனவா? ராகுகாலம் என்பது எல்லோருக்கும் தீமையைத் தான் தருமா? தெய்வத்திற்கும் மேலான என் குருநாதரின் திருப்பாதங்களை வணங்கி விளக்கம் கேட்கிறேன்.

பதில்:

ஒரு மனிதனின் எதிர்காலத்தை தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் இந்த அற்புத சாஸ்திரத்தில் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் பொத்தாம் பொதுவாகவோ, மூடநம்பிக்கையை வலியுறுத்தும் விதமாகவோ எதையுமே சொல்லவில்லை. புரிந்து கொள்வதில் ஏதேனும் தவறு இருக்குமாயின் அது நமது அறிவுக்குறைவைத்தான் காட்டுமே தவிர இந்த அற்புதக் கலையின் நிறையைக் குறைக்காது.

இன்றைப் போல விஞ்ஞான வளர்ச்சியில்லாத அந்தக் காலத்தில் இருட்டிய பிறகு சரியான வெளிச்சமில்லாத சூழ்நிலையில் ஜாதகத்தில் சுருக்கமாக எழுதப்பட்டுள்ள சூரியனைக் குறிக்கும் சூ என்ற எழுத்தும், சுக்கிரனைக் குறிக்கும் சு என்ற எழுத்தும் வயதான ஜோதிடருக்கு மாறுபாடாகத் தெரிந்து பலன்களை தவறாகச் சொல்லிவிடப் போகிறார் என்ற அர்த்தத்தில் விளக்கு வைத்த பிறகு வெளிச்சம் போதாத ஒரு சூழலில் ஜோதிடம் பார்க்க வேண்டாம் என்று நமக்கு அறிவுறுத்தப் பட்டது. இரவும், பகலாக இருக்கும் வெளிச்சமுள்ள இன்றைய காலகட்டத்திற்கு இது பொருந்தாது.

ஜாதகத்தில் ராகு நன்மையைச் செய்யும் அமைப்பில் இருக்கும் ஒருவருக்கு தினசரி வரும் ராகுகாலத்தில் நன்மைகள் நடக்கும். கண்டிப்பாக தீமைகள் இருக்காது. இதை ஒருவர் அனுபவப் பூர்வமாகவே உணர முடியும்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் (7.3.2017)

  1. வணக்கம், ராகு காலம் பற்றிய தகவல் சிறப்புடையது. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *