adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் (30.8.16)

எஸ். காந்திராஜன், சென்னை.

கேள்வி :
செவ் சூ பு  ல,சுக் சந்
ராசி குரு
சனி கே
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்காவில் உள்ள ஒருகுக்கிராமத்தில் 6.6.1932 - ம் வருடம் ராகுகாலத்தில் பிறந்தேன். தற்போதுசட்டக்கல்வியில் உயர்படிப்புக்காக பி. எச். டி. லா நுழைவுத்தேர்வு எழுதிதேர்ச்சி பெற்று முழு நேர கோர்ஸில் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு உயர்பதவி கிடைக்க வழி உண்டா என்பதுபற்றி குருஜி தயவு செய்து கூறவும்.
பதில்:
(மிதுனலக்னம், மிதுனராசி, லக்னத்தில் சுக், இரண்டில் குரு மூன்றில் கேது எட்டில் சனி பதினொன்றில் செவ் பனிரெண்டில் சூரி புத)
சட்டக்கல்விக்குக் காரகனான சனிபகவானை உச்சகுரு பார்த்து தற்போது சுக்கிரதசையில் சனிபுக்தி நடப்பதால் இந்த எண்பத்தி ஐந்து வயதிலும் படித்துக்   கொண்டிருக்கிறீர்கள். லக்னாதிபதியும் ராசிநாதனுமான புதபகவான் சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்று ஒன்பதுக்குடையவன் ஆட்சி, பத்துக்குடையவன் உச்சம் என இருவரும் நேருக்குநேர் பார்த்து தர்மகர்மாதிபதி யோகம் பெற்ற ஜாதகம் உங்களுடையது. எட்டில் சனி ஆட்சி பெற்றதால் நீண்ட ஆயுளும் உண்டு.
நீதித்துறைக்கு காரகனான குருபகவானும் சட்டநாயகன் சனியும் பத்தாமிடத்தைப் பார்ப்பதால் உங்களது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருப்பதே யாரும் செய்யாத ஒரு சாதனைதான். பரிவர்த்தனை யோகம் மூலம் லக்னாதிபதி வலுவாக லக்னத்தில் அமர்ந்த நிலை உண்டாகி யோகாதிபதி சுக்கிரனின் தசை நடப்பதால் நினைக்கும் காரியத்தில் சாதிப்பீர்கள்.
சந்திரா ஆறுமுகம், கோவை – 41
கேள்வி :
சந் ரா
ராசி
 சுக் செவ்
 ல குரு கே  சூ சனி பு
மகனின் ஜாதகம் சுத்த ஜாதகம் என்று இவ்விட ஜோதிடர்கள்கூறுகிறார்கள். திருமணம் தாமதமாகிறது. நல்ல தோற்றம், குணம், வேலை, வசதி இருந்தும் திருமணம் நடக்கவில்லை. எப்போது திருமணம்முடிவாகும்? மூல நட்சத்திரப் பெண் பொருந்துமா? என் மகனுக்குஇசையில் மிகுந்த ஆர்வமும் ஞானமும் உள்ளது. இப்போது மத்தியஅரசாங்க வேலையில் இருக்கிறான். அதை விட்டு விட்டுஇசைத்துறையில் அடி வைக்கலாமா?
பதில்:
(தனுசுலக்னம் மீனராசி ஒன்பதில் சுக்,செவ் பத்தில் புத, பதினொன்றில் சூரி,சனி பனிரெண்டில் குரு,கேது 19.10.1983 11.48 காலை கோவை)
ராசிக்கு எட்டில் சனி உச்சம் என்பதால் திருமணம் தாமதமாகிறது. எட்டில் ஒரு   நீசக்கிரகமும் உச்சசனியும் அமர்ந்து சுக்கிரனுடன் செவ்வாய் இணைந்த ஜாதகத்தை நீங்கள் சுத்தஜாதகம் என்று சொன்னாலும் பெண் வீட்டுக்காரர்கள் எப்படி ஒத்துக் கொள்வார்கள்? தற்போது புதன் தசையில் ராகுபுக்தி நடப்பதால் ஸ்ரீ காளஹஸ்திக்குச் சென்று வாருங்கள். ராகுபகவான் சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் வரும் மே மாதத்திற்குள் திருமணம் நடக்கும்.
மூன்றுக்குடைய சனி உச்சமாகி இசைக்குரிய கிரகங்களான சந்திரனும் சுக்கிரனும் புதனும் ஜாதகத்தில் வலுத்திருப்பதால் உங்கள் மகனுக்கு இசையார்வமும் ஞானமும் இருக்கும். ஆனால் மூன்றுக்குடையவன் தனது உச்சபலத்தை நீச சூரியனுக்குக் கொடுத்து சூரியனை நீசபங்கப்படுத்தி, சூரியன் பரிவர்த்தனை பெற்றதால்தான் உங்கள் மகன் அரசுவேலையில் இருக்கிறார். இங்கே மூன்றுக்குடைய சனி சூன்யபலத்தை அடைந்து அஸ்தங்கமுமாகி வலுவிழந்து விட்டார். எக்காரணம் கொண்டும் அரசுவேலையை விட்டுவிட்டு இசைத்துறைக்கு முயற்சி செய்ய வேண்டாம். வேலையில் இருந்துகொண்டே அதைச் செய்யவும்.
சௌ. காசிராஜன், சென்னை.
கேள்வி :
சந்
சுக் கே ராசி  சனி
சூ பு செவ் குரு ரா
குரு ல சனி
தந்தையுடன் சேர்ந்து மளிகை வியாபாரம் செய்து வருகிறேன். வியாபாரம்      சுமாராக உள்ளது. இந்த தொழிலோடு சேர்த்து வேறு தொழிலும் செய்யும்எண்ணம் உள்ளது. எது செய்தால் நன்றாக இருக்கும்? சொந்த வீடு கட்டும்யோகம் உண்டா? எப்போது?
பதில்:
(கன்னிலக்னம் மீனராசி லக்னத்தில் சனி ஐந்தில் சூரி,புத ஆறில் சுக்,கேது பனிரெண்டில் செவ், குரு, ராகு 22.1.1980 11.10 இரவு விருதுநகர் )
மீனராசிக்கு ஆகஸ்டு மாதம் முதல் கோட்சார ரீதியில் நல்ல கிரகநிலைகள் உள்ளதாலும், ஜாதகப்படி சுக்கிரன் யோகனாகி சுக்கிரதசை நடப்பதாலும் தற்போது உள்ள மளிகைக்கடை வியாபாரத்தை ஒட்டிய அரிசிக்கடை, காய்கறி, பழமுதிர்சோலை போன்ற அன்றாடம் அழியும் பொருட்கள் வியாபாரம் செய்யலாம். சுக்கிரதசை குரு புக்தியில் சொந்தவீடு கட்டுவீர்கள்.
கே. குணசேகரன், பழவந்தாங்கல்.
கேள்வி :
சந்  ரா
செவ் ராசி
சூ சுக்
பு கே குரு சனி
33 வயதாகும் மகனுக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம்தடைபடுகிறது. ஜாதகத்தில் ஏதாவது குறை உள்ளதா? பரிகாரம் செய்யவேண்டுமா? எப்பொழுது வரன் அமையும்? இந்த ஏழைக்கு அருள்வாக்குக்கூற வேண்டுகிறேன்.
பதில்:
( ரிஷபலக்னம் மேஷராசி ஆறில் சனி, ஏழில் குரு, எட்டில் புத, ஒன்பதில் சூரி சுக், பத்தில் செவ், 23 1.1983 1.23 மதியம் சென்னை)
ராசிக்கு ஏழில் உச்ச சனி அமர்ந்து, லக்னத்திற்கு ஏழில் எட்டுக்குடையவன் இருந்து, குடும்பாதிபதியும் எட்டில் மறைய, இரண்டில் ராகு இருப்பதால் உங்கள் மகனுக்கு இன்னும் குடும்பம் அமையவில்லை. லக்னாதிபதி சுக்கிரன் நவாம்சத்தில் நீசம் பெற்றதும் பலவீனம். தற்போது கோட்சாரத்தில் உங்கள் மகனது மேஷராசிக்கு அஷ்டமச்சனியும், ஜனனத்தில் ராகுதசையில் எட்டுக்குடைய குருபுக்தியும் நடப்பதால் இந்த வருடம் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை.
அடுத்து நடக்க இருக்கும் சனிபுக்தி யோகாதிபதி புக்தி என்பதாலும், தாம்பத்திய   சுகத்தைக் கொடுக்கும் சுக்கிரனின் வீட்டில் அமர்ந்திருப்பதாலும் 2017 ம் வருடம் பிற்பகுதியில் நிச்சயம் திருமணம் நடக்கும். சுக்கிரனுக்குரிய முறையான பரிகாரங்களைச் செய்யவும்.
வி. கல்யாணி வாசுதேவன் திருச்சி - 2
கேள்வி:
 ல,ரா சந்
ராசி
 கே செவ் சூ,குரு சனி,பு சுக்
சந் ல ரா
ராசி
செவ் குரு கே  சுக் சனி சூ பு
                இத்தடன் எனது மகன் மற்றும் மருமகள் ஜாதகங்களை இணைத்துள்ளேன். இத்தம்பதியருக்குக் குழந்தைபாக்கியம் எப்போது கிட்டும்? எனது மகனுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதால் புத்திரபாக்கியத் தடை ஏற்பட்டு உள்ளதா? சனிதசையில் அவனுக்கு ஏதேனும் பாதகம் ஏற்படுமா?
பதில்:
(ஆணுக்கு மிதுனலக்னம் மிதுனராசி ஐந்தில் சூரி,குரு,சனி,சுக்,புத ஏழில் செவ்,கேது 5.11.1982 இரவு 9.13 திருச்சி, பெண்ணுக்கு மேஷலக்னம் மேஷராசி ஆறில் சூரி,புத ஏழில் சுக்,சனி எட்டில் கேது, ஒன்பதில் செவ்,குரு 10.10.1984 இரவு சென்னை)
செவ்வாய்தோஷத்திற்கும் குழந்தை பாக்கியத்திற்கும் சம்பந்தம் இல்லை. செவ்வாய்தோஷம் என்பது திருமணத்திற்காக பார்க்கப்படுவது. உங்கள் மகன் ஜாதகத்தில் புத்திரஸ்தானாதிபதி சுக்கிரன், நீசசூரியனுடன் ஒரே டிகிரியில் இணைந்து ராகுசாரத்தில் அமர்ந்ததும், புத்திரகாரகன் குருபகவானும் இதே அமைப்பில் அஸ்தங்கமாகி இருப்பதும் புத்திரதோஷம். மேலும் சுக்கிரனும் குருவும் இணையவும் கூடாது.
மருமகள் ஜாதகத்திலும் இதேபோல புத்திரதோஷ அமைப்பு இருக்கிறது. மருமகளுக்கும் ஐந்திற்குடைய சூரியன் ஆறில் மறைந்து புத்திரக்காரகன் குருபகவான் செவ்வாயுடன் இணைந்து, உச்சசனியின் பார்வையில் உள்ளது குற்றம். மேலும் மருமகளுக்கு அஷ்டமச் சனியும் நடப்பதால் புத்திரபாக்கியம் தாமதமாகும்.
இருவருக்கும் கடுமையான ராகுஅமைப்பு புத்திரபாக்கிய விஷயத்தில் இருப்பதால் மகனின் ஜென்ம நட்சத்திரதினத்திற்கு முதல்நாள் மாலையே ஸ்ரீ காளஹஸ்தியில் தங்கி அதிகாலை ருத்ராபிஷேகப் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். தற்போது ஸ்ரீ காளஹஸ்தியில் கும்பாபிஷேகப் பணிகள் நடந்து கொண்டிருப்பதால் இன்னும் ஆறுமாதங்களுக்கு ருத்ராபிஷேகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருமகளுக்கு அஷ்டமச் சனியும் நடப்பில் உள்ளது. எனவே புத்திரபாக்கியம் இன்னும் கொஞ்சம் தாமதமாகும். சனிதசை பாதகம் எதுவும் செய்து.
பதினைந்து வருடங்களாகத் தூக்கம் இல்லை.. ஏன்?
ஆறுமுகம், சென்னை – 5
கேள்வி :
சந் ல செவ் பு சூ
 குரு ராசி  சுக் ரா
சனி
சிறு வயதில் இருந்தே கஷ்டப்படுகிறேன். கடந்த 15 வருடகாலமாகதூக்கத்திற்கு மருந்து எடுத்துக் கொள்கிறேன். மாதத்தில் 10 நாள் வேலைசெய்தால் மீதி 20 நாள் வீட்டில்தான் இருக்கிறேன். இது என்ன காரணம்? என் ராசி என்னவென்று எனக்குத் தெரியவில்லை. தயவு செய்து என்பிறந்த விவரங்களை வைத்து கணித்துச் சொல்லுங்கள்.
பதில்:
(மேஷலக்னம் மீனராசி லக்னத்தில் செவ் இரண்டில் புத மூன்றில் சூரி நான்கில் சுக் ராகு பத்தில் சனி பதினொன்றில் குரு 24.6.1962 2.35 அதிகாலை சென்னை)
கடந்த பதினைந்து வருடங்களாக மேஷ லக்னத்திற்கு அவயோகியும் ராசிக்கு அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் தசை நடக்கிறது. சுக்கிரன் சனியின் நட்சத்திரத்தில் அமர்ந்து ராகுவிற்கு இரண்டு டிகிரிக்குள் இணைந்து சனி செவ்வாய் இருவரின் பார்வையில் இருக்கிறார். ஒரு கிரகம் ராகு கேது சனி செவ்வாய் சம்பந்தத்தை ஒருசேரப் பெற்றால் நல்லபலன்களைச் செய்ய வாய்ப்பில்லை.
ஜாதகப்படி தொழில் ஸ்தானமான பத்தில் சனி அமர்ந்து கேதுவுடன் இணைந்திருக்கிறார். ராசிக்குப் பத்திற்குடையவனும் ராசிக்கு பனிரெண்டில் மறைந்திருக்கிறார். ஒரு கிரகமோ, ஒரு பாவமோ சுபத்துவமின்றி பாபக்கிரக ஆதிக்கத்தில் இருந்தால் நன்மைகளைத் தராது எனும் விதிப்படி இங்கே உங்கள் தொழில் ஸ்தானம் பலவீனமானதால் நீங்கள் குறிப்பிட்ட வேலை நிலைமை இருக்கிறது.
தற்போதைய சாரநாதன் சனி தன் மூன்றாம் பார்வையாக அயன சயன போகஸ்தானம் எனப்படும் தூக்கத்தைக் குறிக்கும் வீட்டைப் பார்ப்பதால் சுக்கிரதசை ஆரம்பித்ததும் பதினைந்து வருடங்களாக தூக்கம் இல்லாமல் போய் விட்டது. வரும் 2018 ம் வருடம் பிற்பகுதியில் சுக்கிரதசை முடிந்ததும் தூக்கப்பிரச்னை நல்லபடியாக முடிவுக்கு வரும்.

பிறந்ததில் இருந்து யோகதசைகள் நடைபெறாத உங்களுக்கு அடுத்து வரும் சூரிய சந்திர செவ்வாய் தசைகள் நல்லயோகம் செய்யும் என்பதாலும் சூரியன் புத்திரன் ஸ்தானாதிபதி என்பதாலும் சூரியதசையில் இருந்து பிள்ளைகள் தலையெடுத்து நிம்மதியான வாழ்வு இருக்கும். வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் எவ்வித கஷ்டமும் இல்லாமல் நன்றாக இருப்பீர்கள். உங்களுக்கு மீனராசி உத்திராட்டாதி நட்சத்திரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *