adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் (2.8.16)

ஆர். முருகேசன், மதுரை.

கேள்வி :
பூமிக்கு வந்த வேலை முடிந்தநிலையில் இனி நான் யாருக்கும் தேவையில்லை. தற்கொலை செய்து கொள்ள தைரியம் இல்லை. விரைவாக எப்போது கடவுளின் திருப்பாதங்களை அடைவேன் என்று சொல்லி வழிகாட்டுங்கள்.
ராசி  சந்
செவ் பு,சூ  சனி
 குரு சுக்  கே
பதில்:
பூமிக்கு வந்த வேலை முடிந்து விட்டது என்று தீர்மானிக்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது? எதற்கு வந்தோம் என்று நமக்குத் தெரியுமா என்ன? வாழ்நாள் முழுவதும் தோல்விகளையே சந்தித்து வாழ்க்கையின் இறுதிப்பகுதியில் சாதனை புரிந்த பெரியோர்களை என்ன கணக்கில் எடுத்துக் கொள்வது? வேலை முடிந்து விட்டால் வேளை உடனே வந்துவிடும். அதுவரை நீங்கள் பொறுத்துத்தான் ஆக வேண்டும். இங்கு எதுவும் நம் கையில் இல்லை. நாம் பொம்மைகள்தான். ஆட்டுவிக்கும் கயிறு அவன் கையில் இருக்கிறது.
விருச்சிக லக்னமாகி லக்னாதிபதி உச்சம்பெற்று, ஆயுள் ஸ்தானமான எட்டாமிடத்தை குருவும் சுக்கிரனும் பார்த்ததால் தீர்க்காயுள் அமைப்புடைய உங்களுக்கு தற்போது மரணம் இல்லை. திருக்கணிதப்படி அடுத்து ஆரம்பிக்கும் இரண்டில் அமர்ந்த குருவின் தசையில் மூன்றில் அமர்ந்த அஷ்டமாதிபதி புதன் புக்தியில் நல்முடிவு அடைவீர்கள்.
ஜி. லட்சுமி மதுரை.
கேள்வி :
சனி
ரா ராசி  சூ செவ்
 பு கே
குரு சந் சுக்
பிறந்ததில் இருந்து சுகப்படாமல் அவமானம், விரக்தி, பொருளாதாரப் பிரச்சினை, உடன் பிறந்தவர்கள், பெற்றோர் பிள்ளைகளால் நன்மை பெறாமல் மன சஞ்சலத்துடன் வாழ்ந்து வருகிறேன். வாடகை வீடுதான். மகனுக்கு நல்ல வேலை இல்லை. கணவருக்கு நோய் தொல்லை என பல்வேறு பிரச்சினைகள் இருந்தும் நீதி, நேர்மையுடன் ஆன்மீக வழியில் தமிழகத்தின் முக்கிய கோவில்களுக்கு சென்று வருகிறேன். இந்த சனிதசையிலாவது நிம்மதி கிடைக்குமா? அந்திமகாலத்தில் பிள்ளைகளால் பயன் உண்டா? காசி, கயா, கங்கா ஸ்நானம் செல்வது எப்போது? சொந்தவீடு வாய்ப்பு உண்டா?
பதில்:
(விருச்சிக லக்னம், கன்னிராசி. ஆறில் சனி, ஒன்பதில் சூரி, செவ். பத்தில் புத, கேது. பதினொன்றில் சுக். பனிரெண்டில் குரு. 7.8.1970, 1.30 மதியம், மதுரை)
ஏற்கனவே நடந்து முடிந்த ராகுதசை நீசசனியின் வீட்டில் அமர்ந்து, எட்டுக்குடைய புதன் பார்வை வாங்கி சுயச்சாரம் பெற்றதால் நன்மைகளைச் செய்யவில்லை. அடுத்து நடந்த குருதசையும் நீசம் பெற்ற சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து, நீசச் செவ்வாயின் சாரம் பெற்று, நீசச்சனி செவ்வாயின் பார்வையை வாங்கி நீசத் தொடர்புகளாகப் பெற்றதால் எவ்வித நல்ல பலன்களையும் தரவில்லை.
தசாநாதனுக்கு நீசத்தொடர்புகள் வந்தாலே ஒரு தசை நன்மைகளைத் தராது. சனி, செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் நீசம் பெற்று ஒருவருக்கொருவர் தொடர்பும் கொண்ட வினோத அமைப்புள்ள ஜாதகம் உங்களுடையது. அடுத்து வர இருக்கும் சனிதசையும் நீசச்செவ்வாயின் வீட்டில் அமர்ந்திருந்தாலும், குருவின் பார்வையைப் பெற்றிருப்பதாலும், ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருக்கும் யோகாதிபதியான சூரியனின் சாரம் வாங்கி இருப்பதாலும், நடந்து முடிந்த ராகு, குருதசைகளை விட நன்மைகளைச் செய்யும்.
பாவகச்சக்கரத்தின்படி சனி ஏழில் அமர்ந்திருப்பது உங்களுக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளை உறுதி செய்கிறது. சனியே உங்கள் ஜாதகப்படி வீடு, வாகனத்தை தரும் நான்கிற்குடையவன் என்பதால் சனிதசையில் சொந்த வீடு அமையும். சனிக்கு குருபார்வை இருப்பதால் ஆன்மீக எண்ணங்கள் இந்த தசையில் அதிகமாகும். சனிதசை சுயபுக்தியிலேயே வடமாநில யாத்திரை செல்வீர்கள். கங்கா ஸ்நானம் நல்லபடியாச் செய்வீர்கள்.
பி. பழனிச்சாமி, கவுந்தம்பாடி.
சுக் சந்
 சூ,செ குரு ராசி ரா
பு,சனி கே
கேள்வி :
சொந்தவீட்டை விட்டுவிட்டு மாமனார் வீட்டில் இருந்து கொண்டு சாப்பிடுகிறேன் . இதுவும் ஒரு வாழ்வா என்று அவமானமாக உள்ளது. இப்படியேதான் இருக்குமா? இல்லை விடிவுகாலம் வருமா? சொந்தமாகத் தொழில் செய்யலாமா? அல்லது கூலிக்குப் போகலாமா? இங்கேயே இருக்கலாமா? அல்லது சொந்த ஊருக்கு போகலாமா?
பதில்:
வரும் ஆகஸ்ட்மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களின் மீன ராசிக்கு நல்லமாற்றங்கள் வரும். மனைவி, குழந்தைகள் யாருக்காவது ஏழரைச்சனி நடக்காத பட்சத்தில் சொந்தத்தொழில் செய்யலாம். அல்லது வேலைக்குப் போகவும். ஜாதகப்படி சொந்தஊருக்கு சென்று தொழில் செய்யத் தடைகள் எதுவும் இல்லை.
ஜி. சிவசுப்பிரமணியன், கும்பகோணம்.
ல செவ் சூ சுக்  கே பு
ராசி
சனி  குரு
 ரா சந்
கேள்வி :
எனக்கு அரசு வேலை கிடைக்குமா? சொந்த வீடு கட்டுவேனா? வயிறு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகமாக இருக்கிறது. இதற்குப் பரிகாரம் உண்டா?
பதில்:
(மேஷலக்னம், விருச்சிகராசி, லக்னத்தில் செவ். இரண்டில் சூரி, சுக். மூன்றில் புத, கேது. ஐந்தில் குரு. பதில் சனி. 13.6.1992, அதிகாலை 3 மணி, கும்பகோணம்)
ராசிக்கு பத்தாம் வீட்டில் குருபகவான் அமர்ந்து பரிபூரண பவுர்ணமி யோகத்தில் சூரியன், சந்திரனும் அமர்ந்து சிம்மம் வலுவாக உள்ளதால் ஜென்மச்சனி விலகியதும் அரசுவேலை கிடைக்கும். நான்காம் வீட்டை செவ்வாய் சனி பார்ப்பதால் உங்கள் பெயரில் சொந்த வீடு அமைய வாய்ப்பு இல்லை. நோயைக் குறிக்கும் ஆறாம் வீட்டு அதிபதி புதனின் தசை நடப்பதால் தோல்நோய்களும் வயிறு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் இருக்கும். சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் காலபைரவருக்கு நல்லெண்ணைய் தீபம் ஏற்றவும்.
டி.கவிதா, கருமாண்டி செல்லிபாளையம்.
 பு சுக்
 சந் ராசி  சூ ரா
கே குரு
செவ் சனி
கேள்வி :
என்னுடைய நம்பிக்கு 35 வயதாகியும் திருமணம் நடைபெறவில்லை. வேதனையாக உள்ளது. எப்போது திருமணம் நடக்கும் பரிகாரம் தேவையா?
பதில்:
(மேஷலக்னம், கும்பராசி. மூன்றில் புத, சுக். நான்கில் சூரி, ராகு. ஐந்தில் குரு. ஆறில் செவ், சனி. 30.7.1980, 11.30 இரவு, ஈரோடு)
தம்பிக்கு ராசிக்கு எட்டில் செவ்வாய், சனி அமர்ந்து மேஷலக்னத்திற்கு அவயோக தசையான புதன்தசை நடப்பதால் திருமணத்திற்குத் தடங்கல்கள் இருக்கிறது. ஐந்தில் குருபகவான் புத்திரதோஷ அமைப்புடன் அமர்ந்து ஸ்தானாதிபதி சூரியன் ராகுவுடன் இணைந்திருப்பதும் தாமத புத்திரபாக்கிய அமைப்பு. லக்னாதிபதி செவ்வாயை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்யவும். தற்போது சுக்கிரபுக்தி நடப்பதால் வரும் ஏப்ரலுக்குள் திருமணம் நடைபெறும்.
பி. சதீஷ், விளங்கனூர் கிராமம்.
சந்  ல
ராசி குரு
கே  சூ சுக் பு செவ்
கேள்வி :
ஐயா வணக்கம். எனக்கு என்ன தசை நடக்கிறது? சொந்த வீட்டில் இருப்பேனா? அரசுவேலை கிடைக்குமா? தம்பி படிப்பானா?
பதில்:
(மிதுனலக்னம், மீனராசி, இரண்டில் குரு. நான்கில் புத, செவ். ஐந்தில் சூரி, சுக். ஆறில் கேது. 18.10.2002, 11.15 இரவு, காஞ்சிபுரம்)
லக்னாதிபதி உச்சம் பெற்று ராசியை உச்சகுரு பார்த்த யோகஜாதகம் என்பதாலும் நான்காமிடம் வலுப்பெற்றுள்ளதாலும் நீ நன்கு படித்து அரசுவேலைக்குச் செல்வாய். சூரியன் நீசபங்கம் அடைந்துள்ளதும் பத்தாமதிபதி பத்தைப் பார்ப்பதும் இதை உறுதி செய்கிறது. தற்போது சனிதசையில் ராகுபுக்தி நடக்கிறது. தம்பி படிப்பானா என்பதற்கு தம்பியின் ஜாதகத்தைத்தான் பார்க்க வேண்டும்.
36 வயதிற்குப் பிறகுதான் என் மகளுக்கு நல்ல வாழ்க்கையா?
சந் குரு சனி சூ,சுக் செவ் ல பு
ராசி ரா
கே
சுப்புரதி செங்கல்பட்டு.
கேள்வி:
16 வயதாகும் என்மகள் ஜாதகத்தில் எல்லாக் கிரகங்களும் லக்னம் உள்பட ராகுகேதுக்களுக்குள் அடங்கி உள்ளது. 19 வயதில் சனிதசை முடிந்து புதன்தசை வர இருக்கிறது. என் ஊரில் உள்ள ஜோதிடர் 36 வயதிற்குப் பிறகுதான் அவள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொன்னார். இது உண்மையா? இப்போது பிளஸ்டூ போக இருக்கும் அவளை எந்தத்துறையில் படிக்க வைத்தால் வேலை கிடைக்கும்? எதிர்காலம் நல்லபடியாக இருக்குமா? நல்வாக்கை வேண்டுகிறேன்.
பதில்:
மிக அவசரமாக முடிவெடுக்க வேண்டிய படிப்பு, திருமணப் பொருத்தம் போன்ற கேள்விகளை என்னிடம் கேட்பதை தவிர்ப்பது நல்லது. என்னிடமிருந்து பதில் வருவதற்குள் திருமணம் நடந்து முடிந்திருக்கலாம். அல்லது குழந்தை பிளஸ் டூ படிப்பையே முடித்துவிடலாம். ஆயினும் ஆபரேஷன், உடல்நலக்குறைவு போன்ற சில அவசர அத்தியாவசியக் கேள்விகளுக்கு நான் உடனே பதில் தரத்தான் செய்கிறேன்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள லக்னம் உட்பட எல்லாக் கிரகங்களும் ராகுகேதுக்களுள் அடக்கம் என்பதால் 36 வயதுவரை ஒருவர் சுகப்பட மாட்டார் எனப்படும் காலசர்ப்பதோஷம் என்பது உண்மையல்ல என்பதை விளக்கி ஏற்கனவே மாலைமலரில் விரிவாக எழுதியிருக்கிறேன். இதுபோன்ற அமைப்புள்ள எத்தனையோ பேர் சிறுவயதில் இருந்தே சுகமாக வாழ்கிறார்கள். மூலநூல்களில் இது தோஷமாக கூறப்படவில்லை.
அடுத்து வாக்கியப் பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டிருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தில் அவளின் பிறந்தநேரம் குறிப்பிட இடம் இருந்தும் நேரம் குறிப்பிடப்படாமல் உள்ளது. எந்த ஒரு ஜாதகத்தில் பிறந்த நேரம் குறிப்பிடாமல் வெறும் நாழிகைக் கணக்கு மட்டும் எழுதப்பட்டிருக்கிறதோ அந்த ஜாதகத்தில் தவறு இருக்கிறது என்று அர்த்தம். தான் செய்யும் கணிதத் தவறு கண்டுபிடிக்கக் படக்கூடாது என்றுதான் இங்கே பிறந்தநேரம் மறைக்கப்படுகிறது.

நேற்று என்னிடம் வந்த 50 வயதான ஒருவரின் ஜாதகம் அவர் பிறந்த நான்கு மணிநேரம் கழித்தே தவறுதலாகக் கணிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனித்தேன். ஐம்பது வருடங்களாக இதை வைத்துத்தான் பலன் பார்த்திருக்கிறார்கள். ஜோதிடரும் ஒரு மனிதர்தான். கணிதத் தவறுகள் நடப்பது இயற்கைதான். பலன் சொல்லுமுன் ஒரு ஜோதிடர் ஜாதகம் சரிதானா என்று உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. தவறான ஜாதகத்திற்கு பலன் சொல்வது சாஸ்திர துரோகம். உங்கள் குழந்தையின் பிறந்த நேரத்தைக் குறிப்பிட்டு மீண்டும் அனுப்புங்கள். பதில் தருகிறேன்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் (2.8.16)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *