adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 45 (7.7.15)

யு. கே. திருமூர்த்தி, என்உடையார்பாளையம்.

கேள்வி :
கே பு சூ  சுக் குரு
ராசி  செவ்
 சனி
 சந் ரா
சுக் சூ,பு சந்  கே
குரு ராசி  செவ்
 ல ரா சனி
              2006-ல் திருமணமாகி மூன்றரை வருடம் கழித்து ஒரு பெண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பதிமூன்று மாதம் இருக்கும்போது என் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அது ஏன்? இரண்டாவது திருமணம் எப்போது? வருபவள் என்னையும், என் குழந்தையையும் நன்றாகக் கவனிப்பாளா? குழந்தையின் எதிர்காலம் எப்படிதொழில் முன்னேற்றம் எப்போது?
பதில்:
(கும்பலக்னம், துலாம்ராசி, மூன்றில் புதன். நான்கில் சூரி. ஐந்தில் சுக், குரு. ஆறில் செவ். ஏழில் சனி. எட்டில் ராகு.)
ஏழில் சனி, எட்டில் ராகு. ஏழுக்குடையவனுக்கு சனிபார்வை. குரு, சுக்கிரன் நெருங்கி இணைவு போன்ற அமைப்புள்ள உங்கள் ஜாதகத்திற்கு 33 வயதிற்கு மேல் திருமணம் செய்திருந்தால் ஒரே திருமணமாக அமைந்திருக்கும். முன்னதாக செய்ததால் இரண்டு அமைப்பு.
லக்னத்தை சனியும் நீசசெவ்வாயும் பார்ப்பதால் உங்களுடைய குணத்தால்தான் உங்கள் மனைவி தற்கொலை செய்து கொண்டிருப்பார். மகளின் ஜாதகத்தில் தனுசுலக்னமாகி தாயாரைக் குறிக்கும் குருபகவான் அம்மா ஸ்தானத்திற்கு விரயத்தில் மறைந்து மூன்றில் அமர்ந்ததாலும், நான்காமிடத்தை பத்தில் அமர்ந்த சனி வலுப்பெற்று பார்ப்பதாலும் உச்சம்பெற்ற அஷ்டமாதிபதி சந்திரனின் தசை குருபுக்தியில் மகளின் தாயார் மரணம்.
உங்களுடைய புதன்தசை குருபுக்தியில் 2018-ல் இரண்டாவது திருமணம் நடக்கும். ஏழரைச்சனி முடிந்ததும் தொழில் முன்னேற்றம் அடையும். குழந்தையின் ஜாதகம் சிறப்பாக இருப்பதால் அவளது எதிர்காலம் குறையின்றி இருக்கும்.
துளசிராமன், அரும்பாக்கம்.
கேள்வி :
சந் ரா
 குரு ராசி
செவ்
சனி பு சுக் சூ கே
சித்தவைத்தியராக இருக்கிறேன்அரசுப்பணி கிடைக்குமா? திருமணம் எப்போது? ஆறு மாதங்களாக உடல்நிலை சரியில்லை. எப்போது சரியாகும்?.
பதில்:
(கடகலக்னம் மீனராசி மூன்றில் சூரி,கேது. நான்கில் புத,சுக். ஐந்தில் சனி. ஏழில் செவ். எட்டில் குரு)
ராசிக்கு பத்தாம்பாவம் குருவின் வீடாகி லக்னத்திற்கு பத்துக்குடைய செவ்வாய் உச்சம் பெற்று தன் வீட்டையே பார்த்ததால் சித்தமருத்துவர். குருபகவானும் பத்தாம் வீட்டோடு தொடர்பு கொண்டிருந்தால் அலோபதி மருத்துவர் ஆகியிருப்பீர்கள். சூரியசந்திரர்களுடன் ராகுகேதுக்கள் மிகநெருங்கி இணைந்து சந்திரகிரகணத்திற்கு முதல்நாள் பிறந்ததால் லக்னாதிபதி வலுவிழந்தார். லக்னத்திற்கோ ராசிக்கோ சுபர்பார்வை இல்லை. அரசு வேலைவாய்ப்பு கிடைக்க சந்திரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்யவும்.
ஏழில் செவ்வாய் உச்சம் பெற்று அவரைச் சனி பார்த்து ராசியில் ராகுகேது சம்பந்தப்பட்டதால் தாரதோஷமும், எட்டில் குரு மறைந்து ஐந்தில் சனி அமர்ந்ததால் புத்திரதோஷமும் ஏற்பட்டதால், முப்பத்திமூன்று வயதில் புதன்தசை சனிபுக்தியில் திருமணம் நடக்கும். இன்னும் ஆறுமாதங்களில் ராகுபுக்தி முடிந்ததும் உடல்நலம் சீரடையும்.
மணமாகி பதினேழு நாளில் பிரிந்த மகள் கணவருடன் சேருவாளா?
டி. மணியன், காங்கேயநெல்லூர்.
கேள்வி:
செவ் சந் குரு
 ரா ராசி  கே
ல'
சனி சூ பு சுக்
சூ சுக்  பு குரு செவ்
 ரா ராசி
சந் கே
சனி ல
              சென்றவருடம் மகளுக்கு பொருத்தம் பார்த்து நன்றாக உள்ளது என்று சொன்னதால் சிறப்பாக திருமணம் செய்தோம். ஆனால் பதினேழே நாட்களில் பிரிந்து விட்டார்கள். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் சேர்த்து வைக்க முடியவில்லை. சேர்ந்து வாழ மகள் ஒப்புக்கொள்ளவில்லை. வாழ்க்கையே வேண்டாம் என்கிறாள். என்ன செய்வது என்று புரியவில்லை. மகளின் நிலை என்ன ஆகும் என்றும் தெரியவில்லை. மாப்பிள்ளை வீட்டார் பல பொய்களைச் சொல்லி திருமணம் செய்தார்கள். நாங்கள் நம்பிக்கையாக ஏற்றோம். மகளின் மனம் மாறி மாப்பிள்ளையோடு சேர்ந்து வாழ நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்...
பதில்:
(கணவனுக்கு மகரலக்னம், ரிஷபராசி. இரண்டில் ராகு. மூன்றில் செவ். ஐந்தில் குரு. பத்தில் சுக். பதினொன்றில் சூரி, புதன். பனிரெண்டில் சனி. மனைவிக்கு தனுசுலக்னம், மகரராசி. லக்னத்தில் சனி. மூன்றில் ராகு. ஐந்தில் சூரி, சுக். ஆறில் புதன், குரு. ஏழில் செவ்)
திருமணம் செய்வதற்கு பத்துப்பொருத்தம் மட்டும் பார்ப்பது போதாது என்று அடிக்கடி எழுதுகிறேன். இந்த பொருத்தங்களையும் தாண்டி ஜாதக அனுகூலப் பொருத்தம் எனப்படும் இருவருக்கும் சமதோஷம் உள்ளதா, இருவரின் குணங்களும் ஒத்துப்போகுமா, குழந்தைபாக்கியம் உண்டா, ஒரு நாற்பது வருடங்களாவது இணக்கமாக இணைந்து ஆயுளுடன் வாழ்வார்களா, இருவருக்கும் தொடர்ந்து நல்லதசைகள் வருகிறதா, என்பதை அனுபவமுள்ள ஜோதிடரிடம் பார்த்தபிறகே இருவரையும் இணைக்க வேண்டும்.
பத்துப்பொருத்தம் மட்டும் பார்ப்பதற்கு எதற்கு ஜோதிடரிடம் போகவேண்டும்? நீங்களே பொருத்தம் பார்ப்பது பற்றி பத்து ரூபாய்க்கு விற்கும் புத்தகத்தில் பார்த்துக் கொள்ளலாமே?
லக்னத்தில் சனி இருந்து ஏழில் தோஷத்துடன் அமர்ந்த செவ்வாயை நேருக்குநேர் பார்த்த ஜாதகத்தைக் கொண்ட கோபமும் மகாபிடிவாத குணமும் உள்ள உங்கள் பெண்ணிற்கு 23 வயதில் சரியான பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து வைத்தது கர்மவினை.
ஏழுக்குடையவன் ஆறில் மறைவு குடும்பஸ்தானத்தில் அஷ்டமாதிபதி அமர்வு ராசிக்கு இரண்டில் ராகு என கடுமையான தோஷ அமைப்பு உங்கள் பெண்ணிற்கு இருக்கிறது. மாப்பிள்ளைக்கு இதில் எதுவுமே இல்லை. மூன்றில் செவ்வாய் ஏழுக்குடையவன் உச்சம் என தலைகீழ் அமைப்புடன் கூடிய ஜாதகம் அவருடையது.
மகள் ஜாதகத்தில் வம்பு, வழக்கைக் குறிக்கும் சுக்கிரனின் வீடான ஆறாம் வீட்டில் லக்னாதிபதி குரு அமர்ந்து ஆறுக்கதிபதி சுக்கிரன் செவ்வாயின் மேஷவீட்டில் இருக்கும் நிலையில் குருதசை சுயபுக்தியில் திருமணம் நடந்ததால் செவ்வாயின் பார்வை பெற்ற சனிபுக்தியில் சிகப்புநிற கட்டிடங்களுக்குள் நுழையும் நிலை வரும். மாப்பிள்ளைக்கு 2017-ல் ஆரம்பிக்க இருக்கும் ஆறுக்குடைய புதனுடன் இணைந்த விருச்சிக சூரிய புக்தியும் இதைத் தெளிவுபடுத்துகிறது. மகளுக்கு 28 வயதிற்கு மேல் வாழ்க்கை மாற்றங்கள் இருக்கும். கணவனின் ஜாதகமும் அதை உறுதிப்படுத்துகிறது.
ஆர். ஜனார்த்தனன், எண்ணூர்.
கேள்வி:
 சந்
ராசி  ரா
கே  செவ்
சுக் பு,சூ குரு ல சனி
மகன் சவுதி அரேபியாவில் வேலை செய்து கொண்டு இருக்கிறான். திருமணம் செய்யலாம் என்றால் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மகனுக்காக பரிகாரம் செய்யவேண்டும் என்றாலும் நானும், என் மனைவியும்தான் செய்ய முடியும். அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று தயவுசெய்து கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பதில்:
(கன்னிலக்னம், மிதுனராசி. லக்னத்தில் சனி. இரண்டில் குரு, சூரி, புதன். நான்கில் சுக். பதினொன்றில் ராகு. பனிரெண்டில் செவ்.)
சவுதி அரேபியாவில் இருக்கும் மகனுக்கு வயிற்றுவலி வந்தால் நீங்கள் இருவரும் மாத்திரை சாப்பிட முடியுமா? ராசிக்கு இரண்டு எட்டில் ராகு-கேதுக்கள் அமர்ந்து ஏழாமிடத்தை சனி, செவ்வாய் இருவரும் பார்த்ததால் தாரதோஷம் இருக்கிறது. திருமணம் தாமதிக்கும் என்பதால்தான் சவுதி அரேபியாவில் மகன் இருக்கிறார். 2017 பிற்பகுதியில் திருமணம் நடக்கும்.
கே. விஜயகுமார், நாமக்கல்.
கேள்வி:
செவ் சூ,பு சந்
 சுக் கே ராசி  குரு
 சனி ரா,ல
36 வயதாகியும் திருமணம் நடைபெறவில்லை. பெற்றோர் உடல்நிலை சரியில்லை. தொழிலும் சிறப்பாக இல்லை. பல பரிகாரம் செய்தும் பலன் இல்லை. என்ன செய்வது என்று தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
பதில்:
(சிம்மலக்னம். ரிஷபராசி. லக்னத்தில் சனி, ராகு. ஏழில் சுக். எட்டில் சூரி, புதன், செவ். பனிரெண்டில் குரு.)
களத்திரகாரகன் சுக்கிரனும், களத்திரஸ்தானாதிபதி சனியும் ராகு கேதுக்களுடன் நெருங்கி இணைந்து தாரதோஷம் உண்டானதை விட புத்திர ஸ்தானதிபதியும் புத்திரகாரகனுமான குருபகவான் பனிரெண்டில் மறைந்து ராசிக்கு ஐந்துக்குடைய புதன் எட்டில் மறைந்து நீசமானது புத்திரதோஷம் என்பதால் இதுவரை திருமணம் ஆகவில்லை.
ராகுதசை நடப்பதால் ஜென்மநட்சத்திரமன்று முதல்நாள் இரவு ஶ்ரீகாளகஸ்தியில் தங்கி அதிகாலையில் ருத்ராபிஷேகம் செய்வது மட்டுமே முறையான பரிகாரம். செய்யும் பட்சத்தில் அடுத்த வருடம் தையிலிருந்து சித்திரைக்குள் சுக்ரனின் வீட்டில் உச்சமான போகஸ்தானாதிபதி சந்திரனின் புக்தியில் திருமணம் நடைபெறும்.
தி. வை. சந்திரமோகன், பாண்டிச்சேரி.
கேள்வி : 
பு சுக் சூ
 செவ் கே ராசி
ரா
 சனி குரு சந்
55 வயது முடிந்து 56 தொடங்கியுள்ளது. இதுவரை நிரந்தரவேலை இல்லை. தொடர்ந்து நான்குமுறை வேலையிழந்து மிகவும் கஷ்டப்படுகிறேன். குறைவான வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருவதால் குடும்பத்தில் சண்டை, கணவன் மனைவி தகராறு, கடன் தொல்லைகள். எப்போது நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்? ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா? வாரம் தவறாமல் உங்களைப் படிக்கும் இந்த வாசகனுக்கு தங்களின் மேலான ஆலோசனை வேண்டும்.
பதில் :
(ரிஷபலக்னம் விருச்சிகராசி நான்கில் ராகு எட்டில் சனி குரு, பத்தில் செவ் பதினொன்றில் சுக் புத பனிரெண்டில் சூரி)
லக்னாதிபதி உச்சம் என்றாலும் நீசனுடன் நெருங்கி இணைவு ஜீவனாதிபதி எட்டில் மறைந்து அஷ்டமாதிபதியுடன் சேர்க்கை, பத்தாமிடத்தில் செவ்வாய் அமர்ந்து அவருக்கு சனி பார்வை. பத்தோடு ராகு கேது சம்பந்தம் இவை போதாது என ராசிக்குப் பத்தில் ராகு அமர அந்த வீட்டிற்குடையவனும் ராசிக்கு ஆறில் மறைவு.
ஒருவர் நிரந்தரமாக தொழில் வேலையில் இருக்க வேண்டுமானால் சிம்மம் கெடக் கூடாது. சனியும் வலுவிழக்கக் கூடாது. சரியான பருவத்தில் பனிரெண்டில் மறைந்து உச்சம் பெற்ற சூரியதசை அடுத்து நீசம் பெற்ற சந்திரதசை அடுத்து கேதுவுடன் இணைந்த செவ்வாய்தசை என இருபத்திமூன்று வருடங்கள் தொடர்ந்து பாவிகளின் தசை நடந்ததால் உங்களால் எதிலும் நிலைக்க முடியவில்லை.
தற்போது நான்காம் வீட்டில் அமர்ந்த ராகுவின் தசை நடப்பதாலும் ராகுவிற்கு வீடு கொடுத்த சூரியன் உச்சம் பெற்றிருப்பதாலும் மறைமுகமான வழிகளிலும் சாதுர்யமாக ஏமாற்றும் துறைகளிலும் உங்களை ஈடுபடுத்தி உங்களுக்கு நிரந்தர வருமானத்தை ராகுபகவான் படிப்படியாகத் தருவார். இதுவரை இருந்துவரும் வறுமை இனிமேல் நிச்சயமாக இருக்காது. எப்படி சம்பாதித்தோம் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாத வழிகளில் ராகு லாபம் தருவார்.

ராகுதசை முடியும்வரை வருடம் ஒருமுறை ஸ்ரீகாளஹஸ்தி சென்று இரவு குடும்பத்துடன் தங்கி எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் காளத்தியப்பனையும் அன்னை ஞானப் பிரசூன்னாம்பிகையையும் மனம் குளிர தரிசித்து வேண்டி வாருங்கள். அனைத்தும் அவன் அருளுவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *