adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 42 (16.6.15)

ரா. பாலஅபிராமி, திசையன்விளை.

கே
 சனி ராசி  செவ்
சந்  ல
குரு,சுக் ரா,பு சூ
கேள்வி :
எம். . எம். எட் படித்து கல்லூரி பேராசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்து வருகிறேன். ஜோதிட ரீதியாக எனக்கு அரசுப்பணி கிடைக்க வழி உள்ளதா? எதிர்கால நல்வாழ்விற்கு பரிகாரம் செய்ய வேண்டுமா? வழிகாட்டுங்கள்.
பதில்:
சிம்ம லக்னம், மகர ராசி. இரண்டில் சூரி. மூன்றில் புதன், சுக், குரு, ராகு. ஏழில் சனி. பனிரெண்டில் செவ்.
ஒருவரின் லட்சியம் நிறைவேற லக்னாதிபதி வலுவாக லட்சியத்தோடு தொடர்புள்ள நிலையில் இருக்க வேண்டும்.
இங்கே உன் லக்னாதிபதி சூரியனாகி வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து அம்சத்தில் ஆட்சிபெற்று, ராசிக்கு பத்தாம் வீட்டில் குரு அமர்ந்து, லக்னத்திற்கு பத்திற்குடையவனும் வலுப்பெற்று அடுத்து குருதசையும் நடைபெற உள்ளதால் நீ கல்லூரி பேராசிரியராக அரசுப்பணி செய்வாய். பரிகாரங்கள் தேவையில்லை.
எஸ். கோகிலா, திருச்சி.
கேள்வி :
எனது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம் இருப்பதால் திருமணம் தாமதமாகும் என்று சொல்லுகிறார்கள். ஜோதிடச் சக்கரவர்த்தியான தாங்கள் எனது ஜாதகத்தை பார்த்து எப்போது திருமணம் நடைபெறும் என்று கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
பிறந்த நேரமும், பிறந்த இடமும் இல்லாமல் வெறும் ராசி, நவாம்சக் கட்டங்களை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பெரிய ஜோதிடச் சக்கரவர்த்தியாலும் துல்லியமான பலன்களைக் கணிக்க முடியாது என்பதை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். முழுமையான பிறந்த நாள், நேரம், இடம் போன்ற விபரங்களை தந்தால்தான் என்னால் சரியான பதில் தர முடியும்.
எஸ். கீதா, கூடுவாஞ்சேரி.
கேள்வி :
கே ராசி  சந்
 செவ் ரா,குரு
பு சுக் சூ ல சனி
மகனுக்கு 35 முடிந்துவிட்டது. திருமணமாகவில்லை. அவனுடைய தந்தை இருக்கும் போது பார்த்து கொண்டிருந்தோம். அவரும் காலமாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. எனக்கும் வயதாகிவிட்டது. எப்போதும் மகனை பற்றித்தான் கவலை. ஜோசியர்கள் இந்த வருடம் ஆகும் அந்த வருடம் ஆகும் என்று சொல்லுகிறார்கள். யாரும் சரியாக பதில் கூறவில்லை. தாங்கள் என் மகனின் ஜாதகத்தை கணித்து சரியான பதில் கூறவும். எதுவாக இருந்தாலும்  கூறவும்.
பதில்:
கன்னி லக்னம், கடக ராசி. லக்னத்தில் சனி. இரண்டில் சூரி. மூன்றில் புதன், சுக். பனிரெண்டில் செவ், குரு, ராகு.
ஏழுக்குடைய குரு பனிரெண்டில் மறைந்து இரண்டு டிகிரிக்குள் ராகுவுடன் இணைந்து அஷ்டமாதிபதியுடனும் சேர்ந்து வலுவிழந்த தாரதோஷ ஜாதகம். இவர்கள் மூவரும் ராசிக்கு இரண்டில் இணைந்ததும் குற்றம். லக்னத்திற்கு இரண்டில் நீசகிரகம் என்பதும் பலவீனம். குரு கெட்டதால் புத்திரதோஷ அமைப்புடைய ஜாதகமாயினும் 35 வயது முடிந்துவிட்டதாலும் தற்போது சுக்கிரதசையில் வரும் ஜூலை முதல் குருபுக்தி ஆரம்பித்து விட்டதாலும் உங்கள் மகனுக்கு பரம்பொருளின் கருணையினால் வரும் 24.12.2015முதல் 20.5.2016-க்குள் நிச்சயம் திருமணம் நடக்கும். சுறுசுறுப்பாக பெண் பார்க்கவும்.
வி. நாராயணன், சேலம்.
கேள்வி :
சனி கே
ராசி செவ் சுக்
சூ சந்
குரு பு ரா
என் மகனின் எதிர்காலம் குறித்து பல கடிதம் எழுதியும் பதில் இல்லை. பெட்ரோலிய என்ஜினீயர் படிப்பு முதல் வருடம் படிக்கிறான். 2018 - ல் படிப்பு முடியும். அப்போது சூரியதசை ஆரம்பமாகிறது. அவனது எதிர்காலம் எப்படி இருக்கும்.
பதில்:
மிதுன லக்னம், சிம்ம ராசி. இரண்டில் சுக், செவ். மூன்றில் சூரி, சந். நான்கில் புதன், ராகு. ஏழில் குரு. பத்தில் சனி, கேது.
பத்தாம் வீட்டில் சனிபகவான் சுபத்துவம் பெற்றிருப்பதால் பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட படிப்பு சரியானதே. ராசியையும், லக்னத்தையும் ஆட்சிபெற்ற குருபார்ப்பதால் யோக ஜாதகம். சமீபத்தில் ஏழரைச்சனி அமைப்புகள் எதுவும் இல்லை. லக்னாதிபதி உச்ச வக்ரம் பெற்று ராகுவுடன் பத்து டிகிரியில் இணைந்ததால் சொந்த ஊரில் பணிபுரிய முடியாமல் வெளிமாநிலம் வெளிதேசத்தில்தான் வேலை அமையும்.
புதனுக்கு சூரியன் அதிநண்பர் என்பதால் குருவின் பார்வை பெற்ற சூரியதசை மிகுந்த நன்மைகளைச் செய்யும். லக்னாதிபதி வலுப்பெற்று ஒன்பது, பத்துக்குடையவர்களும் வலுவாக இருப்பதால் உங்கள் மகன் எதிர்காலத்தில் எவ்வித சிரமங்களும் இன்றி ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்வார்.
தங்கம் தங்க பரிகாரம் ஏதேனும் உள்ளதா?
ஆர். ராஜசெல்வி, திசையன்விளை.
கேள்வி :
சந் சூ,பு சனி சுக் செவ்
ரா ராசி
 ல கே
குரு
திக்கற்றவர்களுக்கு வழிகாட்டும் ஜோதிட ஜோதிக்கு வணக்கம். அரசியல் ஈடுபாடு இல்லை. ஆனால் கவுன்சிலர் பதவி செலவே இல்லாமல் கிடைத்தது. சொந்தப் பணத்தில் மக்கள் பணியாற்றுகிறேன். நான்கு மகள்கள் இருக்கிறார்கள்உணவு, உடை, உறைவிடம் நல்லமுறையில் உள்ளது. ஆனால் பொன், பொருள் சேர்க்க நினைத்தாலும் முடியவில்ல. தங்கம் தங்க பரிகாரம் ஏதேனும் உள்ளதா? ஆயுள்பலம், எதிர்கால நல்வாழ்விற்கு தங்களின் மேலான பதில்களை வேண்டி நிற்கின்றேன்.
பதில்:
சிம்ம லக்னம், மீன ராசி. லக்னத்தில் கேது. மூன்றில் குரு. ஒன்பதில் சூரி, புதன், சனி. பத்தில் சுக், செவ்.
அரசியலுக்குரிய சிம்ம லக்னத்தில் பிறந்து அரசியலில் பதவி வகிக்க வைக்கும் சூரியன் உச்சமாகி பத்தில் ஆட்சிபெற்ற ஜீவனாதிபதி சுக்கிரனின் தசை நடப்பதால் கவுன்சிலர் பதவி தேடி வந்தது. வலுப்பெற்ற சூரியன் சனியுடன் இணைந்தால் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரத்தில் இருக்க முடியும்.
சுக்கிரனும், செவ்வாயும் நெருக்கமாக இணைந்து தர்மகர்மாதிபதி யோகம் உண்டானதால் உணவு, உடை, உறைவிடத்திற்கு எக்காலத்திலும் குறை வராது. கடந்த மூன்று வருடங்களாக மீன ராசிக்கு அஷ்டமசனி நடந்ததால் பொருளாத மேன்மை இல்லை.
ஜாதகம் யோகமாக இருந்தாலும் ஆறு பேர் கொண்ட உங்கள் குடும்பத்தில் யாராவது இருவருக்கு ஏழரைச்சனி, அஷ்டமச்சனி போன்ற அமைப்புகள் இருந்தாலே பொன், பொருள் சேர்க்கை வீட்டில் இருக்காது.
சுக்கிர தசையின் பிற்பகுதி இதைவிட முன்னேற்றமா இருக்கும். உச்ச சூரியனை குருபகவான் பார்ப்பதால் அடுத்து வரும் சூரிய தசையில் அரசியலில் உயர்ந்த அந்தஸ்சுடனும், புகழுடனும் இருப்பீர்கள். அடுத்த வருடம் ஆரம்பிக்கும் செவ்வாய் புக்தி முதல் தங்கம் வீட்டில் தங்க ஆரம்பிக்கும். லக்னாதிபதி உச்சம்பெற்று ஆயுள்காரகன் நீசபங்கம் பெற்றதால் தீர்க்காயுள். எதிர்காலம் பெயர் சொல்லும்படி இருக்கும்.
தம்புகுமார், கோவை.
கேள்வி :
ல,ரா குரு சூ சுக் பு செவ்
ராசி
சனி சந் கே
ரா குரு சுக்  சூ,பு சந்
ராசி  செவ்
சனி கே ல
              எனக்கு அத்தை மகளை திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் முடிவு செய்து ஜாதகம் பார்த்ததில் முதலில் பார்த்த இடத்தில் பொருத்தம் நன்றாக உள்ளது என்று சொன்னார். இன்னொரு இடத்தில் தசைசந்திப்பு வருகிறது இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று கூறினார். மற்றொரு ஜோதிடர் எனக்கும் என்னுடைய மாமனாருக்கும் ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் என்பதால் கல்யாணம் செய்தால் மாமனார் இறந்துவிடுவார் என்று சொல்லிவிட்டார். மறுபடியும் இன்னொரு ஜோதிடரிடம் கேட்டதற்கு அவர் அருமையான பொருத்தம் உள்ளது தாராளமாக மணம் முடிக்கலாம் என்று சொல்லுகிறார். ஒவ்வொரு ஜோதிடரும் வேறுவேறு பலன் சொன்னதால் எங்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது. இறுதியாக குருஜி அவர்களின் வார்த்தையைக் கேட்டு நடக்கலாம் என்று பெரியவர்கள் நினைக்கிறார்கள். பரிகாரம் எதாவது உண்டா? தயவு கூர்ந்து பதில் சொல்லுங்கள்.
பதில்:
ஆணுக்கு மீன லக்னம், துலாம் ராசி. லக்னத்தில் குரு, ராகு. இரண்டில் சூரி, சுக். மூன்றில் புதன். நான்கில் செவ். ஒன்பதில் சனி. பெண்ணிற்கு கன்னி லக்னம், மிதுன ராசி. மூன்றில் சனி. ஏழில் ராகு. எட்டில் குரு. ஒன்பதில் சுக். பத்தில் சூரி, புதன், சந். பதினொன்றில் செவ்.
ஒரு ஜோதிடருக்கு இரண்டு ஜோதிடரிடம் பலன் கேட்பதை பார்த்திருக்கிறேன். இப்படி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஜோதிடர்களிடம் பலன் கேட்டால் இப்படித்தான் பதில் வரும்.
12.5.87 நள்ளிரவு 2 மணி 47 நிமிடங்களுக்கு பிறந்த உனக்கு மீன லக்னம் வரும். கும்ப லக்னம் என்று தவறாகக் கணிக்கப்பட்ட ஜாதகத்தை கொண்டு பலன் சொன்னால் எல்லாம் தவறாகத்தான் இருக்கும். ஜோதிடரிடம் ஜாதகம் எழுதினாலும் கம்ப்யூட்டரிலும் ஒரு ஜாதகம் போட்டு வைத்துக் கொள்ளப் பழகுங்கள்.
மாலைமலரில் வியாழன் தோறும் வெளிவரும் என்னுடைய “ஜோதிடம் எனும் தேவரகசியம்” தொடரின் ரசிகன் என்று எழுதியிருக்கிறாய். சில வாரங்களுக்கு முன்பு இந்தத் தொடரிலேயே அனுபவக் குறைவான ஜோதிடர்களைப் பற்றி சொல்லி இருந்தேனே. உங்கள் மாவட்டத்தில்தான் ஒருவருக்கு கல்யாணம் செய்தால் இன்னொருவர் இறந்து போவார் என்று கதையடிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. ஜோதிடத்தில் அப்படியெல்லாம் சொல்லப்படவில்லை. ஒருவருடைய ஆயுள் என்பது அவருடைய ஜாதகத்தில்தான் ஆராயப்பட வேண்டும்.
உனக்கு மீன லக்னம், அத்தை பெண்ணிற்கு கன்னி லக்னம் பொருத்தம். இருவருக்கும் லக்னத்தில் ராகு கேது பொருத்தம். உனக்கு ராசிக்கு இரண்டில் சனி. பெண்ணிற்கு ராசிக்கு இரண்டில் செவ்வாய் பொருத்தம். இருவருக்கும் உபய லக்னமாகி ஏழுக்குடையவர் மறைவு பொருத்தம். தசை சந்திப்பு என்பது ராகு போன்ற பாவக் கிரகங்களுக்குத்தான் உண்டு. புதன் போன்ற சுபர்களுக்கு இல்லை.
ஒன்பது, பத்துக்குடையவர்கள் ஆட்சிபெற்று வலுவான உன் அத்தை பெண் மிகுந்த அதிர்ஷ்டக்காரி. அந்த பெண்ணிற்கு ஆரம்பிக்கும் லக்னாதிபதி புதன் தசை அவளை சிறந்த சொகுசு வாழ்க்கை வாழ வைக்கும். உனக்கு ஏழரைச்சனி நடப்பதாலும் பெண்ணிற்கு தாம்பத்திய சுகம் கிடைக்கும் அமைப்பு ஐப்பசிக்கு மேல்தான் வருவதாலும் திருமணம் தாமதமாகிறது. இருவரும் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.

திருமணத்திற்கு முன்பு அவரவர் ஜென்ம நட்சத்திர நாளுக்கு முதல் நாள் இரவு ஶ்ரீகாளகஸ்தியில் தங்கி அதிகாலையில் ருத்ராபிஷேகம் தனித்தனியாக செய்யவும். திருமணத்திற்கு பிறகு தம்பதிகளாக இதே ருத்ராபிஷேகத்தை இணைந்து செய்யவும். இதுவே பரிகாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *