adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 41 (9.6.15)

வி. கல்பனா, சென்னை - 6.

கேள்வி :
கே குரு
 சந் ராசி  சனி
 சுக் சூ,பு,ல செவ்  ரா
தங்கைக்குக் திருமணமாகி பத்தாண்டு ஆகியும் குழந்தை இல்லை. இரண்டு முறை டெஸ்ட்டியூப் குழந்தைக்கு முயற்சி செய்தும் ஏமாற்றம். உடல் நிலையும் சரியில்லை. அவளுக்கு இயற்கை முறையில் குழந்தை பிறக்குமா? அல்லது செயற்கை முறையா? அவள் கணவருக்கு இங்கு வேலை சரியில்லை என்பதால் வெளிநாட்டிற்கு போக முயற்சி செய்கிறார்அனைத்து முயற்சியும் தோல்விதான். அவர் வெளிநாட்டிற்கு போவாரா? இவர்களுக்கு ஒரு விடிவுகாலம் சொல்லுங்கள் அய்யா. 
பதில்:
மனைவிக்கு விருச்சிகலக்னம், கும்பராசியாகி ஐந்திற்குடைய புத்திர ஸ்தானாதிபதி குருபகவான் ஏழாமிடமான சுக்கிரனின் பகை வீட்டில் திக்பலம் இழந்து அம்சத்தில் நீசமும் அடைந்ததால் குருதசையில் புத்திரபாக்கியம் கிடைக்கவில்லை.
கணவனுக்கு கன்னிலக்னம், மிதுனராசியாகி புத்திரகாரகன் குரு ஆறில் மறைந்து பலவீனமானது குற்றம். இருவருக்கும் குருபகவானை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்தால் மட்டுமே செயற்கைமுறையில் குழந்தைபாக்கியம் 2018-ல் கணவனின் சனிதசை ராகுபுக்தியில் கிடைக்கும். பரிகாரங்களை எழுத மாலைமலரில் இடம் போதாது. கணவர் வெளிநாட்டு வேலைக்கு 2016 பிற்பகுதியில் செல்வார்.
சோபா சரத், கோவை.
கேள்வி :
குரு  சந் கே
ராசி
சூ,ரா செவ்,பு சுக் சனி
காதல் திருமணம் செய்த எங்களுக்குள் தற்போது நிறைய பிரச்னைகள்வருகின்றன. நான் பைனான்ஸ் கம்பெனியில் பணிபுரிகிறேன். என்சகோதரி கணவர் மூலமாக என் கணவருக்கு தனியார் வங்கியில் லோன்சம்பந்தப்பட்ட கமிஷன் வேலை. கணவருக்கு இதுவரை தொழிலும் வெற்றி இல்லை. வருமானமும் இல்லை. திருமணத்திற்கு முன்பு விவசாயப் பணியில் கணவர் இருந்ததால் மறுபடி தென்னை நடவுவேலை வருகிறது. இதை தைரியமாக செய்யலாமாமகளுக்கு பதில் சொல்ல வேண்டுகிறேன்.
பதில்:
ஏற்கனவே உனக்கு ராகுதசை நடந்து கொண்டிருக்கும் நிலையில் 2010-ல் பிறந்த மகனுக்கும் திருவாதிரை நட்சத்திரமாகி ராகுதசை சந்திப்பு ஏற்பட்டது முதல் குடும்பத்தில் வருமானக்குறைவு அதிகமாகி விட்டது. கணவருக்கு விவசாயத் தொழிலும் ஏற்றதுதான். இரண்டையும் செய்யலாம். முன்னதாக சம ராகுதசைக்கு பரிகாரமாக அருகில் உள்ள சிவன் கோவில்களில் நடக்கும் சூலினி துர்க்கா ஹோமத்தில் குடும்பத்துடன் கலந்து கொள்ளவும். வருடம் ஒருமுறை கணவனின் ஜென்மநட்சத்திரம் அன்று முதல் நாள் இரவு ஶ்ரீகாளகஸ்தியில் தங்கி அதிகாலை ருத்ராபிஷேகம் செய்யவும்.
பி. கோவிந்தராஜுலு, சென்னை - 1.
கேள்வி :
ல செவ் சந் குரு
ரா ராசி
கே
சனி சூ பு சுக்
மகன் ஜாதகத்தில் களத்திர தோஷம்செவ்வாய்தோஷம் உள்ளது எனசிலர் நிராகரிக்கின்றனர். தோஷம் ஏதாவது உள்ளதா? ஏற்கனவே காளகஸ்தியில் ராகுகேது பூஜை செய்தாகிவிட்டது. எப்போது திருமணம் கைகூடும்?
பதில்:
மகனுக்கு மீனலக்னம், மேஷராசியாகி. லக்னத்தில் செவ்வாய் ஆறு, பனிரெண்டில் ராகு-கேது என்பதால் செவ்வாய் தோஷமோ, நாகதோஷமோ இல்லை. ஆனால் ராசிக்கு ஏழில் சுக்கிரன் ஆட்சிபெற்றது களத்திர தோஷம். அவரது மேஷராசிக்கு அஷ்டமச்சனி நடப்பதால் திருமணம் தாமதமாகும். 30 வயது முடிந்த பிறகுதான் திருமணம் கூடும்.
பித்ருதோஷம் அல்லது பித்ருசாபம் இருக்கிறதா ?
எம். எம். சாமி, நெல்லை.
கேள்வி :
சந் செவ்
 கே ராசி
 ரா
 குரு சனி  பு செக் சூ ல
பு சூ.சுக் ரா  ல
 சந் ராசி
 குரு கே செவ் சனி
              மூத்த மகனின் பின்னால் இரண்டு பெண்கள் என மூவருக்கும் திருமணம் ஆகவில்லை. மனைவி பத்தாண்டுகளுக்கு மேலாக ஆஸ்துமாவில் அவதிப்பட்டு வீட்டிலேயே அடைந்து கிடக்கிறாள். நெருங்கிய உறவினர் சுபஅசுப நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதில்லை. வீட்டிலும் சுபகாரியங்கள் நடக்கவிடாமல் ஆரம்ப நிலையிலேயே தடுக்கிறாள். மனநிலை பாதித்தவள் போல் நடந்து கொள்கிறாள். மகனோ இதைவிடமோசம். இதே பத்தாண்டுகளாக மனநோய் மருத்துவரிடம் மகனுக்கு வைத்தியம் பார்த்து வருகிறேன். யார் சொன்னாலும் கேட்கமாட்டான். மாத்திரையும் தொடர்ந்து சாப்பிடமாட்டான். நோய் தீவிரமடைந்தால் தூங்கமாட்டான்தானே சிரித்துக் கொள்வான். சிலதினங்களில் ஆடைகளை அவிழ்த்தெறிந்து விடுவான். பத்து ஆண்டுகளாக ராஜயோக தியானப்பயிற்சி அளிக்கும் ஒரு இயக்கத்திற்கு தொடர்ந்து போய் பயிற்சி செய்கிறான். மனநோய் மருத்துவர் தியானப்பயிற்சியை நிறுத்தாதவரை இவனுக்கு நோய் குணமாகாது என்று சொல்லிவிட்டார். ஆனாலும் அவன்      கேட்பதில்லை. எனது இரண்டு பெண்களின் திருமணத்திற்கும் இதனால் மறைமுகமான தடங்கல் ஏற்பட்டு நான் மெதுவாக மனநோயாளியாக ஆகிக் கொண்டிருக்கிறேன். இவர்கள் ஜாதகத்தில் பித்ருதோஷம் அல்லதுசாபம் இருக்கிறதா? இவர்கள் நோய் எப்போது குணமாகும்? மாற்றம் ஏற்படுமா?
பதில்:
மனைவிக்கு கன்னி லக்னம் (நீங்கள் அனுப்பிய துலாம்லக்னம் என்பது தவறு). மீனராசி. லக்னத்தில் சூரி, இரண்டில் புதன், சுக். நான்கில் குரு, சனி. ஆறில் கேது. பத்தில் செவ்.
மகனுக்கு மிதுனலக்னம், கும்பராசி. ஐந்தில் செவ், சனி. ஏழில் குரு. பதினொன்றில் புதன். பனிரெண்டில் சூரி, சுக், ராகு.
மனைவிக்கு லக்னத்தில் சூரியன் அமர்ந்து சனி, செவ்வாய் லக்னத்தைப் பார்த்து லக்னாதிபதி ராகுவின் சாரத்தில் அமர்ந்து சனி தன் ஆறாம் வீட்டைத் தானே பார்த்து வலுப்படுத்தியதால் சூரியதசையில் சனிபுக்தியில் பதினொரு வருடத்திற்கு முன் நோய் ஆரம்பம். 2017-க்குப் பிறகு ஆரம்பிக்க இருக்கும் செவ்வாய் தசையில் நோய் இன்னும் தீவிரமாகலாம்.
மகனுக்கு லக்னாதிபதி புதனை சனி, செவ்வாய் இணைந்து பார்த்து ராகுவின் சாரத்தில் இருக்கும் சனிதசையில் மனநோய் பாதிப்பு. லக்னத்தைக் குருவும் லக்னாதிபதியை உச்சசனியும் பார்ப்பதால் ஆன்மிக ஈடுபாடு. இருவரின் ஜாதகத்திலும் பித்ருதோஷ சாப அமைப்புக்கள் இல்லை.
பித்ரு தோஷம் என்பது மிகவும் சூட்சுமமானது. இதைப் பற்றிய விளக்கங்களை மாலைமலரில் தற்போது வியாழன்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் ஜோதிடம் எனும் தேவரகசியம் தொடரில் விளக்கமாக எழுத இருக்கிறேன். மனைவி, மகன் நோய் தீர எல்லாம் வல்ல இறைவன், எம்பெருமான், நெல்லை நகரைக் காத்தருளும் அய்யன், நெல்லையப்பரையும், எல்லாம் வல்ல இறைவி அன்னை காந்திமதித்தாயாரையும் புதன்கிழமைதோறும் வழிபடுங்கள். நோய் கட்டுப்படும். இதுவே சிறந்த பரிகாரம்.
ஆண்மை இழந்தது போலத் தெரிகிறது. இனி இப்படித்தானா?
ஜி. தினேஷ், சேலம்.
கேள்வி :
அய்யா... நான் கும்பராசி, அவிட்ட நட்சத்திரம். ரிஷப லக்னம். என்னுடைய ஆண்மை முழுவதும் இழந்தது போல் தெரிகிறது. என்னால் எதையும்செய்ய முடியவில்லை. இனி இப்படிதான் இருப்பேனா? என்னுடைய நோய்க்கு நிரந்தர தீர்வு கிடைக்காதா? நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
பதில்:
ரிஷபலக்னத்தில் பிறந்த உனக்கு ஆண்மைக்குறைவோ, ஆண்மை இழப்போ வருவதற்கு துளிக்கூட வாய்ப்பு இல்லை.
ஆண்களின் காம உணர்வு என்பது உறவில் ஈடுபடும்போது அவர்களின் மனநிலை இடம் சூழ்நிலை சம்பந்தப்பட்டது. ஒரு பெண் எப்படி திருமணம் வரை தன்னைப் பாதுகாத்து வரப்போகும் கணவனிடம் ஒப்படைக்கிறாளோ அதுபோல ஒரு ஆணும் தன் பவித்ரத்தைக் தற்காத்து தன்னை நம்பி வரப் போகிறவளிடம் ஒப்படைக்க வேண்டியது அவனது கடமை. திருமணத்திற்கு முன் நண்பர்களின் பேச்சைக் கேட்டு சோதனை முயற்சிகளில் ஈடுபடாதே. திருமணத்திற்குப் பிறகு உன் மனைவியிடம் உன் ஆண்மையை நிரூபித்தால் போதும். அதற்கு முன் எங்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
உன் கும்பராசிக்கு கடந்த ஒரு வருடகாலமாக கிரகஅமைப்புகள் சரியில்லாததால் இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து கொண்டிருக்கிறாய். வரும் ஜூலை முதல் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியில் உன்னுடைய அனைத்துப் பிரச்னைகளும் நீங்கி சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் அடைவாய்.
அருகில் இருக்கும் எந்த ஒரு அரசு மருத்துவமனையில் இருக்கும் டாக்டரிடம் சென்று உன்னைப் பரிசோதித்தால் உனக்கு ஒரு குறையும் இல்லை என்பதை அந்த டாக்டர் கண்ணை மூடிக்கொண்டு உறுதிப்படுத்துவார். கண்டதையும் நினைத்துக் கொள்ளாமல் வேலையைப் பார்.
இப்போது திருமணம் செய்து வைத்தாலும் பத்துமாதத்தில் இரட்டைக் குழந்தை பெறுவாய். ஜூலை முதல் எழுச்சி பெற்ற வாலிபனாக இருப்பாய். ஒரு சனிக்கிழமை அன்று நாமக்கல் சென்று ராமதாசன் ஸ்ரீஆஞ்சநேயரை தரிசித்து வா. எல்லாத் துன்பமும் பறந்து போகும்.
ஜெகதீஸ்வரி, சென்னை - 16.
கேள்வி :
கே
சனி ல ராசி  சனி
சந் செவ் சூ,பு சு,ரா குரு
எங்கள் ஒரே பெண்ணின் திருமணம் அவள் விருப்பப்படி நடக்குமா? அல்லது பெரியவர்கள் விருப்பம் போல் நடக்குமா என்று குருஜி அவர்கள்நன்றாகக் கணித்துச் சொல்லக் கேட்டுக் கொள்கிறோம். அவளது திருமணம் பற்றி கவலையாக உள்ளது. அவளுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்றும் எங்களுக்கு கூறவும் .
பதில்:
கும்பலக்னம், தனுசுராசி. லக்னத்தில் சனி. ஒன்பதில் குரு. பத்தில் சூரி, புதன், சுக், ராகு. பதினொன்றில் சந், செவ்.
சுக்கிரனின் பூராடநட்சத்திர சாரம் வாங்கிய லக்னபாவி சந்திரனின் தசை இதுவரை நடந்ததாலும் தற்போது சந்திரனுடன் இணைந்த மூன்றுக்குடைய செவ்வாய்தசையோடு ஏழரைச்சனியும் ஆரம்பித்து விட்டதாலும் உங்கள் மகள் அவள் வாழ்க்கையை அவளே தீர்மானிப்பாள்.

லக்னத்தில் சனி ஆட்சிபெற்றதால் பிடிவாதக்காரியான அவள் யார் சொன்னாலும் கேட்க மாட்டாள். அதேநேரத்தில் இந்த ஏழரைச்சனி அவளுக்கு வாழ்க்கை பற்றிய படிப்பினைகளை முக்கியமானவற்றை இழக்க வைத்து கற்றுக் கொடுக்கும். ஆனாலும் லக்னத்திற்கு குருபார்வை இருப்பதால் உங்கள் மகள் சனிக்குப் பிறகு வரும் ராகுதசையில் இருந்து சுகமாக வாழ்வாள். எதிர்கால வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாமல் நிம்மதியாக இருப்பாள். கவலை வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *