adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 40 (2.6.2015)

எஸ். தனசேகரன், சென்னை.

கேள்வி :
ஆறு மாதத்திற்கு முன் எனக்குத் திருமணம் நடந்தது. என்ன காரணமோ தெரியவில்லை என் மனம் என் மனைவியின் மீது அன்பு கொள்ள முடியவில்லை. ஜாதகம் பார்த்து சொந்தத்தில்தான் திருமணம் நடந்தது. மனைவியுடன் அடிக்கடி கருத்துவேறுபாடு வருவது ஏன் என்று புரியவில்லை. எங்களுக்குள் சண்டை சச்சரவு மறைந்து எங்கள் மனம் எப்போது ஒன்றுபடும்?.
சுக்  சூ பு
ராசி  ரா
கே செவ் குரு,சனி
 ல சந்
குரு
ராசி  கே
சந் ரா,ல
 சுக் சனி  சூ,பு செவ்
பதில்:
            உங்களுக்கு ராகுதசை, சந்திரபுக்தி நடக்கிறது. உங்கள் மனைவிக்கு ராகுதசை சுக்கிரபுக்தி நடக்கிறது. கணவன், மனைவி இருவருக்கும் ராகுதசை நடக்கும் போது திருமணம் நடந்தது குற்றம். அதிலும் உங்களின் தனுசு லக்னத்திற்கு அஷ்டமாதிபதியான சந்திரனின் புக்தியில் திருமணம் நடந்ததால் திருமண நாளன்று வழக்கமாக ஒரு வாலிபனுக்கு இருக்கும் உற்சாகம்கூட இல்லாமல் தாலி கட்டும்போது கூட ஏனோதானோ என்றுதான் இருந்திருப்பீர்கள்.
ஆயினும் கணவன்-மனைவி இருவருக்கும் யோக ஜாதகம் என்பதாலும் உங்களின் கன்னி ராசிக்கு ஏழரைச்சனி முடிந்துவிட்டதாலும், அடுத்த வருடம் டிசம்பர் மாதத்துடன் உங்களுக்கு ராகுதசை முடிவதாலும் அதன்பிறகு எவ்வித சிக்கலும் இல்லாமல் இருவரும் மனமொத்த தம்பதிகளாக இருப்பீர்கள்.
எஸ். அப்ரோஸ், திருச்சி - 8.
கேள்வி :
குரு ரா சூ சுக்  பு செவ்
ராசி
சந் சனி கே
மகனுக்கு நிறையப் பெண் பார்த்துவிட்டேன். மூன்று பெண்கள் நிச்சயமாகியும் திருமணம் கை கூடவில்லை. எப்போது திருமணம் என்று கவலையாக உள்ளது. குருஜியின் நல்வாக்கை வேண்டுகிறேன்.
பதில்:
மகன் ஷாஜகானுக்கு சிம்ம லக்னம் தனுசுராசி மூலநட்சத்திரமாகி ராசிக்கு ஏழில் செவ்வாய் அமர்ந்து லக்னத்திற்கு இரண்டாம் வீட்டையும் ராசிக்கு இரண்டாம் வீட்டையும் பார்த்த ஜாதகம். சனியும் ராசிக்கு இரண்டை பார்க்கிறார். நடக்கும் சூரியதசை சனிபுக்தியில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு மேல் செப்டம்பர் மாதத்திற்குள் திருமணம் நடக்கும்.
ஆர். லோகநாதன், திருச்சி.
கேள்வி :
பு சந் சூ செவ்  ல ரா
ராசி  சுக்
 கே குரு சனி
ஐயா குருநாதா... ஜோதிடசிம்மமே. மாலைமலரில் கேள்வி-பதில் தொடங்கிய நாளில் இருந்து நான் எழுதி அனுப்பிய எண்ணற்ற கடிதங்கள் என்ன ஆனதோ தெரியவில்லை. இன்றைய தேதி வரை கஷ்டம், நஷ்டம், விரையம், அவமானம், வம்பு, வழக்கு, பிரச்னை, போராட்டம்அலைச்சல், திரிச்சல், மனக்கஷ்டம், தரித்திரம், பீடை போன்ற எல்லாவற்றையும் சந்தித்துவிட்டேன். பெற்றோர் அனுசரணை இல்லை. ஒரு நாள் போவது ஒரு வருடம் போவது போல் இருக்கிறது. கடின உழைப்பு, உண்மை, நேர்மை இருந்தும் என் வாழ்க்கை ஏன் இப்படி உள்ளது?. இதுவரை எந்த ஜோதிடர் சொன்னதும் பலிக்கவில்லை. இனிமேலாவது வேலை, தொழில், திருமணம் நடக்குமா?
பதில்:
மிதுன லக்னம், மேஷ ராசியாகி லக்னத்திற்கு சுபவலுவே கிடைக்காமல் லக்னத்தில் ராகு அமர்ந்து லக்னாதிபதியையும், ராசியையும் உச்சசனி பார்த்த ஜாதகம். பிறந்ததிலிருந்தே அம்சத்தில் நீசமான சுக்கிரதசை அடுத்து விரையத்தில் அமர்ந்த சூரியதசை.தற்போது சனி பார்வை பெற்ற சந்திரதசை என்பதால் கஷ்டம்.
கடந்த ஆறு வருடங்களாக சந்திரதசையின் ஆரம்பத்தில் இருந்தே ஆன்மிகத்தில் மட்டுமே உங்களுக்கு ஈடுபாடு இருக்கும். மற்றவைகளில் விட்டேத்தியாகத்தான் இருப்பீர்கள். 32 வயதிற்குரிய இகவாழ்வு ஈடுபாடு உங்களுக்கு இருக்காது. லக்னாதிபதியையும் ராசியையும் உச்சசனி பார்ப்பதால் எதற்கும் கடவுளைக் காரணம் காட்டுவீர்கள்.
ராசிக்கு இரண்டில் செவ்வாய், ராசிக்கு ஏழில் சனி என்பதும் கடுமையான தாமததிருமண அமைப்பு. அஷ்டமச்சனி நடப்பதால் சந்திரதசை சுக்கிரபுக்தியில் 2017 பிற்பகுதியில்தான் திருமணம், வேலை போன்ற அமைப்புக்கள் கிடைக்கும். உங்கள் ஜாதகம் பிற்கால யோகம் தரும் அமைப்பு என்பதால் 43 வயதில் ஆரம்பிக்கும் ராகுதசை முதல் வாழ்க்கையில் கஷ்டம் இல்லாமல் வாழும் நிலையைப் பெறுவீர்கள்.
எஸ். ஜெயந்தி, கொளத்தூர்.
கேள்வி :
பத்து வருடங்களாக மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். திருமணம் எப்போது நடக்கும்? நாங்கள் பார்க்கும் வரன் அமையுமா ?
பதில்:
மகளின் பிறந்த நேரம் 6.55 என்று எழுதிய நீங்கள் காலையா, மாலையா என்று குறிப்பிடாததால் பதில் சொல்ல முடியவில்லை. வரும் ஏராளமான கடிதங்களில் இதுபோன்ற சிறுசிறு தவறுகளால்தான் பதில் தர முடிவதில்லை.
. காஞ்சனா, கடலூர்.
கேள்வி :
சந் கே குரு
ராசி சனி
 சுக் ரா செவ் சூ பு
என் மகனுக்கு எப்போது திருமணம்? 40 வயதாகியும் நடக்காததற்கு காரணம் என்ன? பிற்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?
பதில்:
மகனுக்கு கும்பலக்னம், மேஷராசியாகி. ராசிக்கு ஏழில் செவ்வாயும், ராகுவும் சுக்கிரனுடன் இணைந்து வெள்ளியை பலவீனமாக்கி ஏழுக்குடைய சூரியன் எட்டில் மறைந்து லக்னாதிபதி சனியும் ஆறில் மறைந்ததால் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை சுகம் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது ராகுதசை நடப்பதால் அஷ்டமச் சனியையும் மீறி குடும்பாதிபதி குரு புக்தியில் 2016-ம் வருடம் திருமணம் நடக்கும். அஷ்டமச்சனி, ஏழரைச்சனி நடக்காத பெண்ணாக இணைக்கவும்.
ஜே. வெங்கடேஷ், புதுச்சேரி.
கேள்வி :
கே ராசி குரு
சூ செவ் சனி ரா
 பு சுக் சந்
படிப்பு வரவில்லை. எலெக்ட்ரிக்கல் கடை வைத்தேன் தொழில் சரியில்லாமல் கடனாகிவிட்டது. இப்போது தொழிலும் இல்லை. தொழில் அமையுமா? வேலைக்குச் செல்லவா?
பதில்:
மேஷலக்னம், துலாம்ராசி. நான்கில்குரு. ஐந்தில்சனி, ராகு. எட்டில்சுக். ஒன்பதில்புதன். பத்தில்சூரி, செவ்.
லக்னாதிபதி உச்சமாகி லக்னத்தைப் பார்த்து குருவின் பார்வையையும் பெற்று ஐந்திற்குடையவனுடன் இணைந்த யோக ஜாதகம். அதேநேரத்தில் ஏழரைச்சனியும் நடந்து கொண்டிருக்கிறது. பத்தில் சூரியன், செவ்வாய் இருப்பதால் எலெக்ட்ரிக்கல் தொழில் சரியானதுதான். ஆனால் ஏழரைச்சனி நடக்கும்போது தொழில் செய்தது தவறு. யோக ஜாதகமாக இருந்தாலும் யோக தசைகள் நடக்க வேண்டும் என்ற விதிப்படியும் அடுத்து ஆறுக்குடைய புதனின் தசை நடக்க இருப்பதாலும் நான்கு வருடங்களுக்கு வேலைக்கு செல்லவும். புதன் தசை சுயபுக்தி முடிந்த பிறகு இதே எலெக்ட்ரிக்கல் தொழில் செய்யலாம்.
எஸ். தேவி, கும்பகோணம்.
கேள்வி :
சுக் செவ் ரா சந்
சூ பு ராசி
குரு
சனி  கே
அரசு வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்?. கடை வைத்தால் முன்னேற்றம் உண்டா? என்ன கடை வைக்கலாம்? தங்கள் பதிலில் என் எதிர்காலம் ஆரம்பம் அய்யா.
பதில்:
மிதுனலக்னம், ரிஷபராசி. ஆறில்சனி. எட்டில்குரு. ஒன்பதில்சூரி, புதன். பத்தில்சுக், செவ். பதினொன்றில்ராகு.
ஒரு ஜாதகத்தில் சிம்மம் வலுப்பெற்றால் அரசாங்கத்தால் லாபம் கிடைக்கும் அமைப்பு உண்டாகும். உங்கள் ஜாதகப்படி சூரியன் ஒன்பதாமிடத்தில் திக்பலத்திற்கு அருகில் கும்பத்தில் அமர்ந்து தன் வீட்டைப் பார்ப்பதாலும் ராசிக்குப் பத்தில் சூரியன் இருப்பதாலும் தற்போது நடக்கும் குருதசையில் அடுத்த புதன் புக்தியில் 2017 பிற்பகுதியில் நிச்சயம் அரசு வேலை கிடைக்கும்.
ஜோதிடர்கள் உண்மையான பலன்களைச் சொல்வதில்லை.. ஏன்?
எஸ். சி. சிங்காரவேலன், சேலம் - 2.
கேள்வி :
பு சூ  சுக் கே
ராசி சந் குரு செவ்
சனி
ரா ல
ஜோதிட சாஸ்திரம் என்பது ஒரு திறன் மேம்பட்ட கணிதம் வாயிலாக கிரக நிலையை ஆராய்ந்து பலன் சொல்வதே ஆகும். ஆனால் ஒவ்வொரு ஜோதிடரும் வெவ்வேறு பலன்களைச் சொல்லி மனித மனங்களை துயரத்திலும், சந்தோஷத்திலும் ஆட்படுத்துகிறார்கள். உண்மையான பலன்களை ஏன் சொல்லுவதில்லை? எனது மகளின் ஜாதகத்திலும் இதுபோன்ற குழப்பங்கள் உள்ளன. பிரம்மாவின் நாவில் இருந்துவரும் வார்த்தைபோல தங்களின் சொல் உள்ளதால் என் மகளின் எதிர்காலம், ஆயுள், புத்திர பாக்கியம், மாங்கல்யம், நிம்மதியான வாழ்க்கை, வேலைவாய்ப்பு இவற்றை பற்றி எனக்குத் தெளிவுபடுத்தி மகளைப் பற்றிய மனக் கஷ்டங்களில் இருந்து விடுதலை அளிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.
பதில்:
தனுசுலக்னம், கடகராசி. லக்னத்தில்ராகு. இரண்டில்சனி. ஐந்தில்புதன். ஆறில்சூரி. ஏழில்சுக், கேது. எட்டில்செவ், சந், குரு.
வைத்துக் கொண்டு யாரும் வஞ்சகம் பண்ணமாட்டார்கள். உண்மையான பலன் தெரியவில்லை. அதனால் சொல்லவில்லை. ஜோதிடருக்கும் ஜாதக அமைப்பும் நடக்கும் தசாபுக்தியும் சரியாக இருந்தால்தான் உண்மையான பலன்கள் கை வரும். என்னுடைய செவ்வாய் தோஷ கட்டுரைகளைப் படித்துவிட்டு தேவையின்றி குழம்பி விட்டீர்கள். உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் தோஷ நிவர்த்திக்கான அமைப்புக்களையும் அதில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.
மகளுக்கு எட்டில் செவ்வாய், இரண்டில் சனி இருந்தாலும் செவ்வாய் சந்திரனுடனும் உச்ச குருவுடனும் இணைந்திருப்பதால் புனிதமடைந்து கெடுபலன் செய்யமாட்டார். இரண்டில் இருக்கும் சனியும் உச்ச குருவின் பார்வையில் இருப்பதால் இரண்டாமிடமான குடும்ப வீட்டைக் கெடுக்க மாட்டார். அதைவிடமேலாக ராசிக்கு இரண்டாம் வீடு எவ்விதக் கெட்ட தொடர்புமின்றி சுத்தமாக இருக்கிறது.
மேம்போக்காக லக்னத்திற்கு இரண்டிலும் ராசிக்கு ஏழிலும் சனி, லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் என கடுமையான தோஷ ஜாதகமாகத் தெரிந்தாலும் சனியும், செவ்வாயும் டிகிரி நிலைப்படியும் சூட்சும வலுப்பெற்றதால் துளிக்கூட கெடுதல் செய்யும் வலிமை இழந்து சுபத்துவம் பெற்ற எந்த தோஷமும் இல்லாத ஜாதகம்.

மகளைப் பற்றியோ, அவளின் எதிர்காலம் பற்றியோ கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தற்போது ஆறு, பதினொன்றுக்குடைய சுக்கிரன் கேதுவுடன் இணைந்து ஏழாமிடத்திலிருந்து தசை நடத்துவதால் அவரே ஆறுக்குடைய பலனாக வேலைவாய்ப்பு, களத்திரகாரகனாக திருமண அமைப்பு ஆகியவற்றை நல்லமுறையில் அமைத்துத் தருவார். ஆயுள்காரகன் சனி ஆட்சிலக்னாதிபதி உச்சம் எட்டிற்குடைய சந்திரன் ஆட்சி என்பதால் மகளுக்கு எண்பது வயது தாண்டி தீர்க்காயுள். குரு வலுத்ததால் புத்திர பாக்கியம் தீர்க்க சுமங்கலி அமைப்பு உண்டு. நிம்மதியாகத் தூங்குங்கள்.

4 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 40 (2.6.2015)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *