adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 37 (12.5.15)

சண்முகம், பெரியமேடு.

கேள்வி :
சூ, சுக்
ராசி  ரா
ல சுக்
சூ,பு   சந் குரு செவ் சனி
குருஜி அவர்களுக்கு வணக்கம். முப்பத்தி நான்கு வயதாகும்  என் இளைய குமாரனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?
பதில்:
மகர லக்னம், துலாம் ராசி. திருக்கணிதப்படி  ஏழில்  ராகு, ஒன்பதில் செவ், சனி, பத்தில் குரு, பனிரெண்டில் சூரி, புதன். லக்னத்தில் சுக்.
ஏழாமிடத்தில் ராகு அமர்ந்து ஏழுக்குடையவன் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் அமர்ந்து ராசிக்கு இரண்டாமிடத்தை சனியும் ராசிக்கு ஏழாமிடத்தை செவ்வாயும் பார்த்து புத்திரக்காரகன் குரு ராகுவின் சாரத்தில் அமர்ந்து கடுமையான களத்திர தோஷமும், புத்திர தோஷமும் ஏற்பட்ட ஜாதகம். இதோடு செவ்வாய் சனி இணைந்ததும் குற்றம்.
சுவாதி நட்சத்திரத்திற்கு முதல் நாள் இரவு ஶ்ரீகாளகஸ்தியில் தங்கி மறுநாள் அதிகாலை ருத்ராபிஷேகம் செய்யவும். உடனடியாகத் திருமணம் நடக்கும்.
டி. பாத்திமாபேகம், வேலூர் - 9.
கேள்வி :
ரா
ராசி  சந்
குரு
பு சனி சூ,கே சுக் செவ்
என் மகன் வெளிநாடு செல்ல விரும்புகிறான். அவன் ஆசை நிறைவேறுமா? வெளிநாட்டு யோகம் இருக்கிறதா? அவன் எதிர்காலத்தைப் பற்றிக்  கவலையாக இருக்கிறது அய்யா
பதில்:
மீன லக்னம், கடக ராசி. இரண்டில்  ராகு. ஐந்தில்  சந். ஏழில் சுக், செவ். எட்டில் சூரி. ஒன்பதில் புதன், சனி. பதினொன்றில் குரு.
வெளிநாட்டைக் குறிக்கும் சரராசிகளில் மூன்று கிரகங்கள் அமர்ந்து லக்னாதிபதியும் சரராசியில் நீசபங்கம் பெற்று, கடகமும், சந்திரனும் வலுப் பெற்றதால் உங்கள் மகன் வெளிநாட்டு யோகமுடையவர்தான் நடைபெறும் புதன் தசை ராகு புக்தியில் இந்த வருட இறுதியில் வெளிநாடு செல்வார். அவரது எதிர்காலம்   சிறப்பாகவே இருக்கும். கவலை  வேண்டாம்.
மு. தனலட்சுமி, திருச்சி - 4.
கேள்வி :
47 வயதாகிறது. அனுபவிக்காத துன்பங்கள் இல்லை. மனதில் அடிக்கடி தேவையற்ற பயம் ஏற்படுகிறது. ஏதாவது குழப்பமும் உருவாகிறதுஎதிர்காலத்தை நினைத்தால் பயமாகவும் இருக்கிறது. நல்ல வழிகாட்டுங்கள்.
பதில்:
உங்கள் விருச்சிக ராசிக்கு தற்போது ஏழரைச்சனி நடந்து வருகிறது. இது உங்களுக்கு முதல் சுற்று சனியாகவே செயல்படும். நாற்பது வயதுகளில் இருக்கும் உலகிலுள்ள எல்லா விருச்சிக ராசிக்காரர்களுக்கும் அவரவர்களின் தகுதிகேற்ப ஏதாவது ஒரு பிரச்னையும், மனக் கலக்கமும் இருக்கத்தான் செய்யும்.
குடும்பத்தில் வேறு யாருக்காவது ஏழரைச் சனியோ, அஷ்டமச் சனியோ நடந்தால் குழப்பங்கள் சற்றுக் கூடுதலாக இருக்கும். கவலை வேண்டாம். சனியின் முக்கால் பங்கு கஷ்டங்களைக் கடந்து விட்டீர்கள். இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டும்தான் இந்த வேதனை. இனிமேல்  நிம்மதி கிடைக்கும். சனி முடிந்த பிறகு வாழ்க்கையில் ஒரு குறையும் இல்லாமல் இருப்பீர்கள்.
டி. கணேசன், மதுரை.
கேள்வி :
குரு
 ரா ல ராசி
 கே
சனி சுக் சூ,சந் பு,செவ்
பக்தி, பணிவுடன் தினமும் கோவிலுக்கு செல்லும் வழக்கமுள்ள என் மகனுக்கு ஐந்து வருடங்களாக நல்ல வேலை இல்லை. இடையில் பணம் கொடுத்து ஒரு கம்பெனியில் சேர்ந்து அந்தக் கம்பெனியை இரண்டு மாதத்தில் மூடி விட்டார்கள். ஜோசியர்களைக் கேட்டால் ஏழரைச்சனி அப்படித்தான் இருக்கும் என்கிறார்கள். சக நண்பர்களைப் போல வேலை வீடு திருமணம் என செட்டிலாகாமல் உள்ளோமே   என விரக்தியில்  என் மகன் சென்னையில் ஒவ்வொரு இன்டர்வியூவாகச் சென்றுவருகிறான்.பெற்றோர்கள் நாங்கள் கோவிலில் விளக்கேற்றியும் பூஜை செய்தும் நல்ல காலம் வரவில்லை. அவனுக்கு எப்போது நல்ல காலம் வரும்?தங்களது பக்தனும் செவ்வாய்க் கிழமை வாசகனுமான எனக்கு நல்ல பதில் தரவேண்டுகிறேன் .
பதில்:
இவ்வளவு நீளமான கேள்வியை அனுப்பிவிட்டு பிறந்த நேரம் இல்லாத ஜாதகத்தை அனுப்பி வைத்திருக்கிறீர்கள். எதையும் மேம்போக்காகக் கணிக்காமல் துல்லியமாகச் சொல்ல விரும்பும் எனக்கு உங்கள் மகனின் பிறந்த நேரம் அவசியம் தேவை. பிறந்த நேரத்தோடு ஜாதகத்தை அனுப்பினால்தான் என்னால் சரியான பதில் தர முடியும்.
. . சேகர், நாமக்கல்.
கேள்வி :
செவ் சந் பு
 ல கே ராசி சூ சுக்
 ரா
சனி குரு
கடன் தொல்லையால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்கிறேன். சேர்ந்து வாழ வழி உள்ளதா? வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாமா ஜோதிடம் கற்க முடியுமா என்பதைப் பற்றிய அறிவுரையை வழங்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
கும்ப லக்னம், மிதுன ராசி. மூன்றில் செவ். ஐந்தில் புதன். ஆறில் சூரி, சுக். ஏழில் ராகு. பதினொன்றில் சனி, குரு.
கும்ப லக்னத்திற்கு ஐந்திற்குடைய சுபரான புதன் ஆட்சிபெற்று தசை நடத்தினாலும் அவர் வக்ரமாக இருக்கிறார். கேது புக்திக்கு பிறகு வந்த சுக்கிரன், சூரிய புக்தியின் நாதர்கள் இருவரும் ஆறில் இருந்து அடுத்து வந்த சந்திர புக்தியும் ஆறுக்குடையவன் புக்தி என்பதால் கடுமையான கடன் தொல்லையில் உங்களை சிக்க வைத்து குடும்பத்தை விட்டுப் பிரிய வைத்தது.
தற்போது ஏழில் இருக்கும் ராகுவின் புக்தி ஆரம்பித்துள்ளது. ராகுவை குடும்ப வீடான இரண்டிற்கும், பதினொன்றுக்கும் அதிபதியான குரு பார்க்கிறார். ராகு தன்னை பார்க்கும் கிரகத்தின் பலனைச் செய்பவர் என்பதால் குடும்பாதிபதி குருவின் பார்வை பெற்ற ராகு குடும்பத்தோடு சேர வைப்பார். குருவே கடனைத் தீர்க்கும் பதினொன்றுக்கும் அதிபதியாவதால் இந்த புக்தியிலேயே கடன் பிரச்சினையும் தீர வழி பிறக்கும். பூமிக்காரகனான செவ்வாய் தொழில் ஸ்தானதிபதியாகி ஆட்சிபெற்று தொழில் வீட்டைப் பார்ப்பதால் ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம். ராகு புக்தியில் ஜோதிடமும் கற்றுக் கொள்வீர்கள்.
அ. கிருஷ்ணமூர்த்தி, திண்டுக்கல் – 3.
கேள்வி:
கே குரு
ராசி  ல,சூ பு
சந் செவ் சனி சுக்
ரா
37 வயதாகும் என் சகோதரி மகனுக்கு பெரிய படிப்புகள் இருந்தும் சரியான வேலை, திருமணம் இல்லை. அரசு வேலை கிடைக்குமா? எப்பொழுது திருமணம்? சொந்தமா? அன்னியமா? பரிகாரம் செய்ய வேண்டுமா? தங்களது உயர்ந்த ஜோதிட ஞானத்தின் பதில்களை எதிர்பார்க்கிறேன்.
பதில்:
கடக லக்னம், மகர ராசி, திருக்கணிதப்படி லக்னத்தில் சூரி, இரண்டில் செவ், சனி, சுக், புதன், மூன்றில் ராகு, பனிரெண்டில் குரு.
ஜாதகப்படி லக்னத்திற்கு இரண்டில் செவ், சனி சேர்க்கை. அதுவே ராசிக்கும் எட்டு என்றாகி கடுமையான தாரதோஷம் உண்டானதோடு புத்திர ஸ்தானமான லக்னத்திற்கு ஐந்தாமிடத்தை செவ்வாய் பார்த்து, ராசிக்கு ஐந்தாம் இடத்தை சனி பார்த்து புத்திரக்காரகன் குருவும் பனிரெண்டில் மறைந்து பகை பெற்றதால் கடுமையான புத்திர தோஷத்தாலும் திருமணம் தாமதமாகும் அமைப்பு.
தற்பொழுது ராகு தசை நடந்து வருவதால் ஸ்ரீகாளஹஸ்தியில் ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு தங்கி அதிகாலை ருத்ராபிஷேகம் செய்யவேண்டும். 2017ல் ஆரம்பிக்கும் குரு தசையில் தான் தந்தையாகும் அமைப்பு இருப்பதால் 2016ல் திருமணம் நடக்கும். ராசிக்கு பத்தாம் வீட்டை குரு பார்த்து அம்சத்தில் சூரியன் ஆட்சியாக இருப்பதால் சொல்லி கொடுக்கும் அரசு வேலை கிடைக்கும். திருமணம் அன்னியத்தில் தான்.
ச.தேவா, பெருமுக்கல் கிராமம்.
கேள்வி:
ரா  சூ பு
 குரு ராசி
செவ்  சுக்
சனி  கே சந்
பணிந்து கேட்கப்படுகிறது. திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருவது ஏன்? வியாபாரத்தில் அடிக்கடி நஷ்டம் அது ஏன்? கல் வீடு கட்டமுடியவில்லை ஏன்? தகுந்த மணமகள் கிடைப்பாளா? எந்த திசை? எப்பொழுது திருமணம்?
பதில்:
ரிஷப லக்னம், கன்னி ராசி, இரண்டில் சூரி, மூன்றில் புதன், நான்கில் சுக், ஏழில் சனி, எட்டில் செவ்,பத்தில் குரு, பனிரெண்டில் ராகு.
கடந்த ஏழு வருடங்களாக விரயத்தில் இருக்கும் ராகு தசையும் ஏழரைச் சனியும் நடந்ததால் வியாபாரத்தில் நஷ்டம். சனி நடக்கும் பொழுது உங்களை யார் சொந்தத் தொழில் செய்யச் சொன்னது? ஏழில் சனி, எட்டில் செவ்வாய் என்ற அமைப்புடன் குருவும், சுக்கிரனும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதால் திருமணம் தடைப்படுகிறது. 2017ம் ஆண்டு தை மாதத்தில் திருமணம் நடக்கும். படித்த, வசதியான மனைவி அமைவாள். உங்கள் ஊரிலிருந்து தென் கிழக்குத் திசையில் இருக்கிறாள்.
துளசி மாடம் வைத்து பூச்செடி வளர்த்து பூஜை செய்வேனா?
எம். பாலசுப்ரமணியன், கோவைபுதூர்.
கேள்வி:
சனி ல
 செவ் ரா ராசி
பு கே
 சந் சூ,சுக் குரு
அய்யன் பரம்பொருள் சிவனை நித்தம் தியானிக்கும் ஒரு சாதாரண பக்தன் நான். நிறையப் பேருக்கு கொடுக்க வேண்டும் நிறையக் கோவில்களுக்குச் செய்ய வேண்டும் என்ற ஆசை. ஆனால் ஒரு பிச்சைக்காரனாக மற்றவரின் தயவில் வாழவேண்டிய நிலை. தாய்க்கு நான் கொடுக்க வேண்டியது மாறி இப்பொழுது தாயின் முதியோர் உதவித் தொகையை வாங்கிச் செலவு செய்யும் நிலை. தினமும் நானும் என் குடும்பமும் எழுதும் பஞ்சாட்சர மந்திரத்தைக்கூட (ஓம் நமச்சிவாய) இப்போது எழுத முடியவில்லை. இருந்தும் குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவில்லை. அன்பான மனைவி, அன்பான குழந்தைகள். வாழ்க்கை மாறுமா? சுற்றி உள்ளவர்களுக்கு நன்மை செய்யமுடியுமா? சொந்த வீடு கட்டி துளசிமாடமும் அழகான பூச்செடிகளும் வளர்த்து பூஜைக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்ற ஆசை நிறைவேறுமா?
பதில்:
மேஷ லக்னம், தனுசு ராசி, லக்னத்தில் சனி, ஐந்தில் கேது, ஏழில் குரு, ஒன்பதில் சூரி, சுக், பதினொன்றில் செவ், ராகு.
லக்னத்தில் உள்ள நீசச்சனி, ஐந்தில் உள்ள கேதுவின் சாரமும், குருவின் பார்வையையும் பெற்று சூட்சுமவலு அடைந்ததால் அபரிதமான ஆன்மிக ஈடுபாடு. ஞானிகளுக்கே உரிய மூல ஜென்ம நட்சத்திரம். லக்னாதிபதி செவ்வாய் குருவின் சாரத்தில் அமர்ந்து செவ்வாயும், ராகுவும் குருவின் பார்வையில் இருப்பதும், குருபகவான் அம்சத்தில் ஆட்சி பெற்றதும் ஞான மேன்மை.
பிறக்கும்போதே கேதுதசை. அடுத்து 36 வருடங்களாக குருவின் வீட்டில் அமர்ந்த சுக்கிர, சூரிய, சந்திர தசைகள். தற்பொழுது குருவின் பார்வை மற்றும் சாரத்தில் இருக்கும் செவ்வாய் தசை நடப்பு. அடுத்தும் குருவின் பார்வையிலும், குருவின் நட்சத்திரத்திலும் இருக்கும் ராகுவின் தசை வரப்போகிறது. ராகு தசையில் ஒரு ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தி 67 வயதில் சனியின் பார்வை பெற்ற குருவின் தசையில் ஞான உச்ச நிலைக்கு சென்று தன் வாழ்நாளை ஆன்மிகத்திற்கே அர்ப்பணிக்கப் போகும் ஒரு தூய ஆத்மாவின் புண்ணிய ஜாதகம்.

இது போன்ற ஜாதகத்திற்கு இந்த எளிய ஜோதிடன் என்ன பதில் சொல்வது? கடிதத்தில் நீங்கள் கேட்டிருப்பதும் நடக்கும். இன்னும் கேட்காததும் நடக்கும். நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க...

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 37 (12.5.15)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *