adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 27 (3.3.2015)

எஸ். பத்மினிகூடுவாஞ்சேரி.

கேள்வி:
ல சனி  குரு ரா
ராசி  சுக்
 சூ பு
செவ் கே சந்
என்னுடைய கணவரின் தாத்தா ஊரில் பெரிய மனிதர். ஊர் தலைவராக இருந்து ஊரையே கட்டி ஆண்டவர். அவர் சொல்லுக்கு ஊரே கட்டுப்பட்டது. அவர் வாரிசுகள் இப்பொழுது அந்த ஊரில் வாழவில்லை. எப்பொழுதாவது அந்த ஊருக்கு செல்லும் பொழுது இன்றும் எங்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது.
பிரச்னை என்னவென்றால் என்னுடைய மகனுக்கு சிறு வயதில் இருந்தே இந்த கதைகளை என் மாமியார் சொல்லிச் சொல்லி அவன் மனதில் ஆழப்பதிந்து அளவுக்கு மீறி ஆசைப்படுகிறான். பதினான்கு வயதிலேயே வெள்ளைச் சட்டை வேட்டிதான் கட்டுவேன் என்று அடம்பிடிக்கிறான். இரண்டு இட்லிக்கு கூட நான்கு வகை பதார்த்தம் வேண்டும் என்கிறான். அவன் பிறந்த தேதி கூட்டு எண் எட்டு என்று வருவதால் கவலையாக இருக்கிறது. மகனின் எதிர்காலம் குறித்த பயத்தை குருஜிதான் போக்க வேண்டும்.
பதில்:
ரிஷபலக்னம், விருச்சிகராசி. லக்னத்தில் சனி. இரண்டில் குரு, ராகு. மூன்றில் சுக்கிரன். நான்கில் சூரியன், புதன். எட்டில் செவ்வாய். (26.8.2001, 11.55 இரவு. கூடுவாஞ்சேரி)
சில வாரங்களுக்கு முன் மாலைமலரில் வியாழன்தோறும் வெளிவரும் ஜோதிடம் எனும் தேவரகசியம் தொடரில் இதைப் பற்றித்தான் எழுதி இருந்தேன். சிம்மம் வலுவானாலே ஒருவருக்கு அரசாளும் தகுதி வரும். அவரின் லக்னாதிபதி வலுவைப் பெறுத்து அது கவுன்சிலர், எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி என்று வெளிப்படும்.
உங்கள் மகனுக்கு ராஜயோகாதிபதியும் ஊராட்சிகளுக்கு தலைவர் ஆக்குபவருமான சனிபகவான் லக்னாதிபதியையும், ராசியையும் பார்த்த ஜாதகம். அதோடு அரசியல்காரகனான சூரியன் ஆட்சிபலத்தில் சிம்மத்தில் புதனுடன் இணைந்து பத்தாம் வீட்டைப் பார்ப்பதாலும் சந்திரனுக்கு பத்தில் இருப்பதாலும் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிப்படி அவன் பிற்காலத்தில் என்னவாக வேண்டும் என்ற விதை அவன் பாட்டி மூலம் விதைக்கப்பட்டு விட்டது. எட்டாம் எண்ணிற்குரிய சனிதான் மாவட்டத் தலைவர்களை உருவாக்குபவர் என்பதாலும் அவரே ரிஷப லக்ன யோகாதிபதியாகி சுக்கிரனுக்கு சாரம் கொடுத்து லக்னத்தில் இருப்பதாலும் நன்மைதான்.
வாரிசு தயாராகிவிட்டது. முப்பாட்டன் பெயரைக் காப்பாற்றுவான். கவலை வேண்டாம்.
 ஆ.ப.சு.மணியன், திருநெல்வேலி.
கேள்வி:
சனி ரா சந்
ராசி
செவ் குரு
ல,சூ பு சுக் கே
47 வயதாகியும் திருமணமாகவில்லை. வறுமைக்கு மேல் வறுமை. கல்வி இல்லை. பணியாற்றும் இடங்களில் எதிர்ப்பு, விரோதம் இருந்ததால் எங்கும் நிரந்தரமில்லை. 1990 முதல் நரம்புதளர்ச்சி, குடல்புண் என கடுமையான நோய்கள். 2006 முதல் டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியாத அதிக இன்சுலின் சுரக்கும் வித்தியாசமான நோய் லோ சுகர். 
உச்சக்கட்டமாக சென்ற வருடம் கீழே விழுந்து தண்டுவடப்பாதிப்பு. உச்சி முதல் உள்ளங்கால் வரை வியாதிதான் பூர்வீக சொத்து இருந்தும் பங்காளிகள் ஒத்துழைப்பு இல்லாமல் அன்னியர் ஆக்கிரமிப்பால் அலைகடல் துரும்பாய் தத்தளிக்கிறேன். நோய் குணமாகுமா ? பரிகாரம் என்ன ?. ஞான மார்க்கத்தில் ஈடுபட முடியுமா ?
பதில்:
விருச்சிகலக்னம், மேஷராசி. லக்னத்தில் சூரியன், புதன். மூன்றில் செவ்வாய். ஐந்தில் சனி. ஆறில் ராகு. பத்தில் குரு. பனிரெண்டில் சுக்கிரன். (14.12.67, 4.45 காலை. நெல்லை)
பாபக்கிரகங்கள் லக்னாதிபதியாகவே ஆனாலும் உச்சமடையக் கூடாது என்ற எனது பாபக்கிரகங்களின் சூட்சுமவலுத் தியரிக்கு மற்றுமொரு உதாரணம். லக்னாதிபதியே ஆறுக்குடையவனாகி ஆறில் இருக்கும் சந்திரனின் சாரம் வாங்கி இருபெரும் சுபர்களான குருவும் சுக்கிரனும் ஆறாம் இடத்தை பார்த்து வலுப்படுத்தி வளர்பிறை சந்திரனும் அங்கு அமர்ந்து ஆறுக்குடையவனும் வலுப்பெற்று ஆறாமிடத்தைப் பார்த்த ஜாதகம்.
பிறந்தது முதல் தர்மகர்மாதிபதிகள் தசை நடந்ததால் வெளியே தெரியாத நோய் செவ்வாய் தசை பிற்பகுதியில் வெளிப்பட்டு இன்று வரை தொல்லை. தசாநாதன் குருபகவான் ஆறாமிடத்துக்கு திரிகோணத்திலும் பதினொன்றுக்கு விரையத்திலும் இருந்து ஆறைப் பார்ப்பதால் நோய் முழுவதும் குணமாக எந்த மருத்துவத்திலும் வழி இல்லை.
குருதசை புதன்புக்தியில் நோய் தீவிரமாகலாம். உடல் உபாதையால் ஞான மார்க்கமும் கைகூடாது. பனிரெண்டாமிடத்தில் கேது இருந்து சுபத்துவம் பெறுவதால் இதுவே உங்கள் இறுதிப் பிறவி. எனவே கர்ம வினைகளை நீங்கள் அனுபவித்துதான் ஆகவேண்டும். இந்த பிறவியோடு பரம்பொருளுடன் ஐக்கியமாகும் பாக்கியம் பெறுவீர்கள். பரிகாரம் எதுவும் இல்லை.
ஓடிப்போன மகன் எங்கே இருக்கிறான் ? திரும்பி வருவானா ?
மாரியம்மாள், காரைக்குடி.
கேள்வி:
குரு ரா சந்
ராசி
 ல சுக் சனி  சூ பு செவ் கே
என் மகனை மூன்று வருடங்களாகக் காணவில்லை. அவன் எப்படி இருக்கிறான்? எங்கு இருக்கிறான்? அவன் ஜாதகம் எப்படி இருக்கிறதுஎன்று பதில் சொல்லவும். ஒரு அபலைத் தாய் …..
பதில்:
தனுசுலக்னம், மேஷராசி. நான்கில் குரு, ராகு. பத்தில் செவ்வாய். பதினொன்றில் சூரியன், புதன். பனிரெண்டில் சுக்கிரன், சனி. (6.11.87, 11.05 பகல். புதுக்கோட்டை)
தாயைக் குறிக்கும் நான்காம் வீட்டில் தாய் ஸ்தானாதிபதியோடு இணைந்து பனிரெண்டில் இருக்கும் சனியின் சாரம் வாங்கிய ராகுவின் தசை ஆரம்பித்த உடனேயே தாயைப் பிரிந்து மகன் சென்று விட்டார். ராகு கேந்திர கோண வீடுகளில் இருந்தால் தான் இருக்கும் பாவத்தைக் கெடுத்துத்தான் ஜாதகருக்கு பலன்களைச் செய்வார் என்ற விதிப்படி நான்காம் கேந்திரத்தில் இருக்கும் ராகு தாயைப் பிரிய வைத்தார்.
என்னுடைய கணிப்புப்படி உங்களுக்கு தற்போது ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கும். உங்கள் மகன் உங்கள் ஊருக்கு வடகிழக்கில் அறுநூறு கி.மீட்டர் தொலைவில் தெலுங்கு பேசும் ஊரில் நெருப்பு சம்பந்தப்பட்ட வேலை செய்கிறார். 2018 வருடம் மார்ச் மாதத்திற்கு மேல் உங்களிடம் நல்லபடியாகத் திரும்பி வருவார். அதற்கு முன் அவரைப் பற்றிய தகவல் கிடைக்கும்.
எம்.அப்துல்கனி , கடையநல்லூர்.
கேள்வி:
சுக்,கே சந்  ல,சூ சனி,பு
 குரு ராசி  செவ்
ரா
மாலைமலரில் செவ்வாய்தோறும் வரும் கேள்வி - பதில் நன்றாக உள்ளது. பிறந்தது முதல் இன்றுவரை உடல்நிலையாலும், பொருளாதாரத்தாலும் கஷ்டப்பட்டு வரும் எனக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும்?
பதில்:
மிதுனலக்னம், ரிஷபராசி. லக்னத்தில் சூரியன், புதன், சுக்கிரன், சனி. இரண்டில் செவ்வாய். ஆறில் ராகு. ஒன்பதில் குரு. (16.7.74, 4.15 காலை. நெல்லை).
பிறக்கும் பொழுது விரயத்தில் இருந்த சந்திரதசை. பத்துவயது முதல் மிதுன லக்னத்திற்கு வரக்கூடாத நீச செவ்வாய் தசை. பதினேழு முதல் நீசனின் வீட்டில் ஆறில் அமர்ந்த விருச்சிக ராகுதசை என நன்மை தராத தசைகளே நடந்ததால் இதுவரை கஷ்டம். ஆனால் தற்போது நடக்கும் குருதசையின் பிற்பகுதியில் இருந்து வாழ்க்கை திசை மாறி நல்ல பலன்கள் நடக்கத் துவங்கும்.
இளமையில் துடிப்பும், துணிவும் இருக்கையில் ஒருவர் கஷ்டப்படுவதில் தவறு இல்லை. முதுமையில்தான் சிரமம் கூடாது. உங்களுக்கு ஐம்பது வயது முதல் அந்திமகாலம் வரை நடக்க இருக்கும் சனி, புதன்தசைகள் மிகச்சிறந்த யோகத்தை செய்யும் என்பதால் வாழ்வின் பிற்பகுதியில் பரம்பொருளின் கருணையால் சகலமும் பெற்று அந்தஸ்து, கவுரவத்துடன் வாழ்வீர்கள்.

எஸ்.ஜெ.மனோஜ்குமார், சென்னை.

கேள்வி:
சுக்,ல செவ் பு சூ
 கே ராசி  குரு சந்
 சனி ரா
குருஜி அவர்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு ஆண்டாக தொழில் சரிவர நடக்கவில்லை. மிகவும் கஷ்டப்படுகிறேன். குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா என்று பயமாக இருக்கிறது. எதிர்காலம் உண்டா ?நகைத்தொழில் செய்கிறேன். வேறு செய்யலாமா ? இதுவே மேன்மை தருமா ? தயவுசெய்து பதில் தாருங்கள்.
பதில்:
மேஷலக்னம், கடகராசி. லக்னத்தில் சுக்கிரன், செவ்வாய். இரண்டில் சூரியன், புதன். நான்கில் சந்திரன், குரு. ஐந்தில் சனி, ராகு. (31.5.79, 3.55 அதிகாலை. சென்னை).
குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா என்று உளமாறக் கவலைப்படும் ஒரு குடும்பத் தலைவனை பரம்பொருள் ஒருநாளும் கைவிட்டதே இல்லை. உங்களின் கடகராசிக்கு கடந்த மூன்று வருடமாக தொழில் சரியில்லாமல்தான் இருந்தது. சென்ற வருடத்தோடு தொழிலைப் பாதித்த சனி விலகிவிட்டதால் இனிமேல் தொழிலில் எந்த குறையும் உங்களுக்கு வராது. குரு உச்சம் பெற்றதால் நகை தொழில் உங்களுக்கு சரியானதுதான். எதிர்வரும் காலங்களில் சூரிய, சந்திர தசைகள் வர இருப்பதால் எதிர்காலத்தை பற்றிக் கவலைப்பட ஒன்றும் இல்லை. நன்றாக இருப்பீர்கள்.
அன்பு அம்மா, சென்னை.
கேள்வி:
சனி ல ரா
ராசி
 சந் குரு
 செவ் சூ பு கே சுக்
உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக இருக்கும் ஐம்பதை நெருங்கும் என் மகனுக்கு முதல் திருமணம் முறிந்து விட்டது. இரண்டாவது திருமணம் நடக்குமா? குழந்தை பாக்கியம் உண்டா? வக்கீல் தொழிலில் வருமானம் இல்லை. நீதிபதி பதவி கிடைக்குமா? அரசியலில் ஈடுபடலாமா? அதன் மூலமாக எம்.எல்.ஏ., எம்.பி. பதவி கிடைக்குமா? உங்கள் தாய் கேட்பதாக நினைத்து உடனே பதில் கொடுங்கள்.
பதில்:
மேஷலக்னம், சிம்மராசி. லக்னத்தில் ராகு. ஐந்தில் குரு. ஆறில் சுக்கிரன். ஏழில் புதன். எட்டில் சூரியன். பத்தில் செவ்வாய். பனிரெண்டில் சனி. (25.11.67, 4.30 மாலை. சென்னை)
லக்னாதிபதி செவ்வாய் உச்சம் பெற்று சூட்சும வலு அடைந்த அடிப்படை வலு உள்ள யோகஜாதகம். பனிரெண்டில் சனிபகவான் சுபத்துவம் பெற்று வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் வக்கீல் பணி. இரண்டாவது மனைவியை குறிக்கும் சனி புக்தி தற்போது நடப்பதால் முயற்சி செய்தால் இந்த வருடமே திருமணம் நடக்கும். ஐந்தில் குரு அமர்ந்து ஐந்திற்குடையவன் எட்டில் மறைந்து கடுமையான புத்திர தோஷம் இருக்கிறது.

நடக்கும் ராகுதசை வீடு கொடுத்த செவ்வாய் உச்சம் பெற்று குருபகவான் பார்வை பெற்றதால் புதன் புக்திக்குப் பிறகு யோகம் செய்யும். சந்திர கேந்திரத்தில் சூரியன் அமர்ந்து ராசிக்கு பத்தாம் வீட்டையும் பார்த்து லக்னத்திற்கு பத்தில் செவ்வாய் இருப்பதால் அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும். அடுத்து நடக்க இருக்கும் குரு தசையில் உங்கள் மகனின் வாழ்க்கை மேன்மையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *