adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 26 (24.2.2015)

நஸிமாபேகம்திண்டுக்கல்.

கேள்வி :
சனி கே பு சூ சுக்
ராசி
 சந் செவ்
குரு ரா
மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாம் ஆண்டு படிக்கிறான்எதிர்காலம் எப்படி? வெளிநாடு செல்வானா? அரசுவேலை உண்டா?வசதி வாய்ப்புடன் இருப்பானா? திருமணம் எப்போது?
பதில்:
4-7-95, 11.28am, திண்டுக்கல்.
கன்னி லக்னம், சிம்ம ராசி, இரண்டில் ராகு, மூன்றில் குரு, ஏழில் சனி, ஒன்பதில் புதன், பத்தில் சூரியன், சுக்கிரன், பனிரெண்டில் செவ்வாய்.
மகன் முகமதுபாகிமிற்கு புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்று தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகி லக்னாதிபதியை குரு பார்த்த யோக ஜாதகம். எதிர்காலம் செல்வச்செழிப்புடன் இருக்கும். தொழில் வீட்டில் திக்பலம் பெற்ற சூரியன் ராகுவின் சாரத்தில் இருப்பதாலும். சூரியனே வெளிநாட்டைக் குறிக்கும் பனிரெண்டிற்கு அதிபதி என்பதாலும் அடுத்து சுயச்சாரத்தில் சரராசியில் இருக்கும் ராகுவின் தசை நடக்க உள்ளதாலும் வெளிநாட்டில் பணிபுரிவார்.
லக்னத்திற்கு ஏழிலும், ராசிக்கு எட்டிலுமாக சனி அமர்ந்து ராசிக்கு ஏழையும், லக்னத்திற்கு ஏழையும் செவ்வாய் பார்த்து இரண்டு எட்டில் ராகு, கேதுக்கள் சம்பந்தப்பட்டதால் திருமணம் தாமதமாக 28 வயதிற்கு மேல் நடக்கும்.
மு. ஆறுமுகச்செல்வி, திருநெல்வேலி - 7.
கேள்வி :
சுக் சூ பு  குரு
செவ் ராசி  ல கே
சனி ரா
 சந்
ஜாதகப்படி அரசுப்பணி கிடைக்குமா? எதிர்கால வாழ்வு எப்படி இருக்கும்? 
பதில்:
13-5-90, 10.45am, நெல்லை.
கடக லக்னம், தனுசு ராசி. ஏழில் சனி, ராகு. எட்டில் செவ்வாய். ஒன்பதில் சுக்கிரன். பத்தில் சூரியன், புதன். பனிரெண்டில் குரு.
பத்தாம் வீட்டில் உச்சம் பெற்ற சூரியன் திக்பலத்துடன் அமர்ந்து சூரியதசையும் ஆரம்பித்துள்ளதால் அரசுப்பணி நிச்சயம் உண்டு. தனுசு ராசிக்கு இப்போது ஏழரைச்சனி ஆரம்பித்துள்ளதால் சனி முடிந்த பிறகு எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும்.
எஸ். மூர்த்தி, நாகர்கோவில்.
கேள்வி :
ரா
ராசி
சந்
கே செவ் ல குரு சூ,பு சுக் சனி
கடன் பிரச்னை தாங்க முடியவில்லை. வீடும் கோர்ட் வழக்கில் உள்ளதுபிரச்னை எப்போது தீரும்? வீடு திரும்பக் கிடைக்குமா? கடனும் நோய்நொடியும் இல்லாத வாழ்க்கை அமைந்தாலே போதும். சொந்தத் தொழில் செய்யலாமா?
பதில்:
29-9-1982, 8.58am, நாகர்கோவில்.
துலாம் லக்னம், மகர ராசி. லக்னத்தில் குரு. இரண்டில் செவ்வாய். மூன்றில் கேது. பனிரெண்டில் சூரியன், புதன், சுக்கிரன், சனி.
அனுப்பியுள்ள ஜாதகத்தில் கன்னி லக்னம் என்று தவறாக கணிக்கப் பட்டுள்ளது. நீங்கள் துலாம் லக்னம். உங்கள் லக்னத்திற்கு வரக்கூடாத குரு தசை 2006 முதல் நடக்கிறது. ஒரு லக்னபாவியின் தசையில் கெடுதல்கள் நடக்க கூடாது என்றால் லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு லக்னாதிபதி சுக்கிரன் பனிரெண்டில் நீசம் பெற்று சனியுடன் இணைந்து சூரியனுடன் அஸ்தமனம் ஆகி புதனுடன் சேர்ந்துள்ளார்.
மேம்போக்காகப் பார்த்தால் சுக்கிரன் நீசபங்கம் அடைந்திருப்பதாக தோன்றினாலும் அவருடன் இருக்கும் உச்சபுதன் வக்கிரமாகிவிட்டதால் சுக்கிரனை நீசபங்கப் படுத்தும் வலு புதனுக்கு இல்லாமல் போனது.
2022-ல் குருதசை முடியும்வரை கடன் தொல்லைகள் இருக்கத்தான் செய்யும். தற்போது நடக்கும் குருதசை சுக்கிரபுக்தியில் வீடு சம்பந்தமான சாதகமான பதில் சொல்ல வழியில்லை. ஆனால் நான்காம் வீட்டில் ஒரு சுபக்கிரகம் திக்பலத்துடன் அமர்ந்திருப்பதால் வீடு கையை விட்டுப் போகாது. சனிதசையில் அனைத்தும் சரியாகி வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற துவங்குவீர்கள்.
அண்ணனுக்கு முன் தம்பிக்கு திருமணம் செய்யலாமா?
ஜி. மஞ்சுளா, வேலூர்.
கேள்வி:
ரா
 குரு ராசி  சந்
செவ்
பு  சுக் சூ கே
சுக்,பு குரு சூ
ல,ரா செவ் ராசி
 கே சந்
 சனி
              பி. ஈ முடித்த மூத்த மகன் அபுதாபியில் இருக்கிறான். இரண்டு வருடங்களாக பெண் பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. இளைய மகனுக்கு சொந்தத்தில் பெண் இருப்பதால் அவனுக்கு முதலில் முடிக்கும்படி சொல்கிறார்கள். செய்யலாமா? மூத்தவனுக்கு திருமணம் தள்ளிப்போகும் என்று ஜோதிடர்கள் சொல்வதால் மனச்சங்கடத்தில் இருக்கிறோம். நாங்களே செய்கின்ற பரிகாரம் ஏதாவது சொல்லுங்கள்..
பதில்:
27-10-1986, 7.24pm, வேலூர்.
20-6-1988, 11.45pm, வேலூர்.
பெற்றவர்களுக்கு இதைவிட சங்கடமான நிலைமை வேறு எதுவும் வேண்டாம்.
பெரியவனுக்கு ரிஷப லக்னம் கடக ராசியாகி லக்னத்திற்கு ஏழில் சனி ராசிக்கு ஏழில் செவ்வாய் உச்சம் சுக்கிரன் வக்கிரமாகி நீச சூரியனுடன் இணைவு என கடுமையான தாரதோஷ அமைப்பு இருக்கிறது. எனவே திருமணம் தள்ளிப் போகும். முறையான பரிகாரங்களை அவர் இந்தியாவிற்கு வரும் போது செய்யுங்கள். பரிகாரங்களை எழுத இங்கே இடம் போதாது.
சின்னவனுக்கும் கும்பலக்னம் சிம்மராசியாகி ராசிக்கு ஏழில் செவ்வாய் ராகு இருந்து ராசிக்கு இரண்டாமிடத்தை சனியும் செவ்வாயும் பார்த்து சுக்கிரன் வக்கிரமாகி குருவுடன் இணைந்த களத்திர தோஷ அமைப்பு இருக்கிறது. ஆனால் நடப்பு தசாநாதன் சந்திரன் சுக்கிரனின் பூரம் நட்சத்திர சாரம் வாங்கி ஏழாமிடத்தில் இருப்பதால் அடுத்த வருடம் சுக்கிரபுக்தியில் இருபத்தியெட்டு வயதில் திருமணம் நடக்கும்.
அதேநேரம் சந்திரன் ஆறுக்குடையவனாகி ஏழில் கேதுவுடன் செவ்வாய் பார்வையுடன் இருப்பதாலும் சுக்கிரன் வக்ரமானதாலும் திருமணத்திற்கு பிறகு நிம்மதியற்ற நிலை இருக்கும்.
மகேஸ்வரி, பொள்ளாச்சி.
கேள்வி:
குரு
 ரா ராசி  சூ
 பு,சுக்,ல செவ்,கே
 சனி சந்
எனது மகளுக்கு எப்போது திருமணம்? காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? எதிர்காலம் சிறப்பாக இருக்குமா?
பதில்:
10-8-1989, 6.50am, ஈரோடு.
சிம்ம லக்னம், துலாம் ராசி, லக்னத்தில் புதன், சுக்கிரன் செவ்வாய், கேது ஐந்தில் சனி, பதினொன்றில் குரு, பனிரெண்டில் சூரியன்.
குடும்பாதிபதி புதன் திக்பலம் பெற்று சுக்கிரனின் சாரம் வாங்கி இந்த வருடக் கடைசியில் தசை நடத்த உள்ளதால் புதன் தசை சுயபுக்தியில் 2016ல் மகளுக்கு இஷ்ட திருமணம் நடக்கும். ராசியையும் ஏழாமிடத்தையும் குரு பார்ப்பதால் அவரின் விருப்பப்படி பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும்.
எஸ். நமசிவாயம், திருச்சி.
கேள்வி
சுக்
ராசி  ரா பு
கே  குரு
 ல சந் செவ் சனி
என் மகனுக்கு மூலநட்சத்திரம் என்று முப்பது வயது முதலே பெண் பார்த்தும் திருமணம் நடக்கவில்லை. இப்போது முப்பத்தி ஐந்து வயதாகி விட்டது. திருமணம் எப்போது நடக்கும்?
பதில்:
21-8-1980, 3.50pm, சிவகங்கை.
தனுசு லக்னம், தனுசு ராசி, ஏழில் சுக்கிரன், எட்டில் ராகு புதன், ஒன்பதில் சூரியன் குரு, பத்தில் சனி.
உங்கள் மகனுக்கு மூலநட்சத்திரம் என்பதால் மட்டும் திருமண தடையில்லை. ஆறுக்குடைய சுக்கிரன் காரஹோ பாவநாஸ்தி அமைப்பில் ஏழாமிடத்தில் அமர்ந்து ஏழுக்குடைய புதன் எட்டில் ராகுவுடன் மறைந்து ஏழாமிடத்தை சனி பார்த்து கடுமையான தாரதோஷ அமைப்பு உள்ளதால் இதுவரை நடக்கவில்லை.
நடக்கும் சந்திரதசையில் குருபுக்தியிலேயே வரும் ஜூலைக்கு பிறகு கண்டிப்பாக திருமணம் நடக்கும். சனிபுக்தியில் குடுமபத்துடன் இருப்பார். ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் ஸ்ரீகாளஹஸ்தி சென்று ஒரு முழு இரவு தங்கி அதிகாலை ருத்ராபிஷேகம் செய்யுங்கள். காளத்தியப்பர் தடையை நீக்குவார்.
என் மகனுக்கு படிப்பே வரவில்லை. என்ன செய்வது?
எஸ். சித்ரா, திருச்சி.
கேள்வி:
சனி
கே ராசி
ல,செவ் சுக்,குரு சந் ரா
 சூ பு
எனது மகனுக்கு படிப்பே வரவில்லை. ஆர்வமும் இல்லை. முயற்சியும் இல்லை. அவனது கல்வி குறித்தும் பொதுவான எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலையாக உள்ளது. வரும் மார்ச்சில் அவனது பிளஸ் டூ தேர்வும் ஆரம்பிக்கிறது. குருஜி அவர்கள் அவன் ஜாதகத்தை பார்த்து அவனது உயர்வுக்கு வழி கூறிட வேண்டுகிறேன்.
பதில்:
19-12-1997, 10.01am, திருச்சி.
மகர லக்னம், சிம்ம ராசி, லக்னத்தில் செவ்வாய், சுக்கிரன், குரு, மூன்றில் சனி, எட்டில் ராகு, பதினொன்றில் புதன், பனிரெண்டில் சூரியன்
கல்விக்கு அதிபதி புதன் பாதகஸ்தானத்தில் வக்ரம். அவருக்கு வீடு கொடுத்த பாதகாதிபதி செவ்வாய் உச்சமாகி கல்விக்குரிய வீடான நான்காம் பாவத்தைப் பார்க்கிறார். அதோடு சிறு வயதில் வரக்கூடாத சுக்கிரதசையும் ஐந்து வயது முதல் நடந்து கொண்டிருக்கிறது.
மகர லக்னம் என்பதாலும் குருவும் சனியும் பரிவர்த்தனை பெற்றுள்ளதாலும் நுணுக்கமான மெக்கானிச வேலைகளில் உங்கள் மகனுக்கு ஆர்வம் இருக்கும். கழற்றி மாட்டும் வேலைகளை ஆர்வமுடன் செய்வார். பிளஸ் டூ முடித்ததும் அவருக்கு ஆர்வமுள்ள டிப்ளமா படிப்பில் சேருங்கள். ஒருபோதும் உங்களின் விருப்பத்தை குழந்தைகளின் மேல் திணிக்காதீர்கள்.
கல்வி நமக்கு ஒரு அடையாளம். அதுவே வாழ்க்கையல்ல. உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் அனைவரும் பத்தாவது கூடப் படிக்காதவர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். பள்ளியிறுதி வகுப்பு வரை செல்லாதவனிடம்தான் பத்தாயிரம் எம்பிஏக்கள் கைகட்டி நிற்பார்கள்.
படித்தவன் கல்வி கற்ற மமதையில் கவனத்தை பல வகையில் சிதற விட்டு சராசரி வாழ்க்கையில் இருப்பான். படிக்காதவனுக்கு தான் படிக்கவில்லை என்ற பயம் ஏற்பட்டு பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் மனதைச் செலுத்தி பணத்தை ஜெயிப்பான். தேர்ந்தெடுத்த ஒரே துறையில் ஈடுபாட்டுடன் செல்பவனே வெற்றியாளன். கல்வி இரண்டாம் பட்சம்தான்.

உங்கள் மகனுக்கு இருபத்தி ஐந்து வயதிற்கு மேல் பனிரெண்டில் மறைந்த சூரியதசை அதனையடுத்து எட்டில் இருக்கும் சந்திரதசை பிறகு நாற்பத்தியெட்டு வயது வரை உச்சம் பெற்ற பாதகாதிபதி தசை அதன்பிறகு எட்டில் உள்ள ராகுதசை அடுத்து நீச குருதசை என வாழ்க்கை முழுவதும் மறைவு ஸ்தானங்களை சுற்றியே நடக்கும் தசைகள் நடக்க உள்ளதால் வெளிநாட்டில் மெக்கானிச வேலையில் இருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *