ஹேமா, பெரம்பூர்.
கேள்வி :
கே | |||
ராசி | சூ,பு சந் | ||
செவ் சுக் | |||
சனி | ல குரு | ரா |
எப்பொழுதுமே ஜாலியாக இருப்பேன். இப்போது வாழ்க்கை இருண்டது போல உள்ளது. உடம்பு படுத்துகிறது, உடன் பிறந்தவர்களால் வேதனை. எப்பொழுது விடிவுகாலம்?
பதில்:
துலாம் லக்னத்திற்கு ராகுபகவான் கெடுதல்கள் செய்யமாட்டார். அவர் பனிரெண்டாம் வீட்டில் கன்யா ராகுவாக இருப்பதும் நன்மைதான். ஆனால் சுயபுக்தி முடிந்த பிறகே நல்லவைகள் நடக்கும். 2017ம் ஆண்டு முதல் பிரச்னைகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை.
மயில், சென்னை.
கேள்வி:
ரா | ல,சூ சுக் | ||
ராசி | பு | ||
சந் | |||
குரு | கே | சனி செவ் |
ஒரு வருடமாக வேலையில்லை, அன்றாடச் செலவிற்கே மற்றவர்களிடம் கை ஏந்துகிறேன். நிம்மதி இல்லை. எப்பொழுது வேலை கிடைத்து கடன் அடையும்? சமுதாயத்தில் பேரும் புகழும் கிடைக்க வேண்டும் என்பது என் லட்சியம். நிறைவேறுமா? பத்திரிக்கைத்துறையில் ஆர்வம் இருக்கிறது. அதில் முன்னேற முடியுமா?
பதில்:
மிதுன லக்னம் சிம்ம ராசி, லக்னத்தில் சூரியன், புதன், சுக்கிரன், ஐந்தில் செவ்வாய், சனி, ஏழில் குரு, பனிரெண்டில் ராகு.
லக்னாதிபதி லக்னத்தில் வலுவாக உள்ளதாலும் லக்னத்தையும் ராசியையும் வலுப்பெற்ற குரு பார்ப்பதாலும் லட்சியம் நிறைவேறும். பத்திரிக்கைத்துறை ஏற்றதுதான். ஏப்ரல் மாதம் சந்திரதசையில் ஜீவனாதிபதி குருவின் புக்தி ஆரம்பிக்கவுள்ளதால் அதன் பிறகு வேலையின்றி இருக்க வாய்ப்பில்லை.
கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணைநல்லூர்.
கேள்வி:
மகனுக்கு ஏழரைச்சனி நடக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
பதில்:
சனி முடியும் வரை உங்கள் ஊரில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள் புரியும் கால பைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை தீபம் ஏற்றுவது அல்லது பழமையான பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் ராமதாசன் ஸ்ரீஅனுமனுக்கு நெய் தீபம் ஏற்றுவது நல்ல பரிகாரம்.
கே. கே. எஸ் சதாசிவம், கோவை – 6.
கேள்வி:
செவ் | சூ,சனி சுக்,கே | ||
சந் | ராசி | பு | |
குரு | |||
ரா | ல |
41 வயதாகும் எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? தடை நீங்க ஏதாவது பரிகாரம் உண்டா?
பதில்:
கன்னிலக்னம் கும்பராசி, நான்கில் ராகு, ஐந்தில் குரு, ஆறில் சந்திரன் ஏழில் செவ்வாய், பத்தில் சூரியன், சுக்கிரன், சனி பதினொன்றில் புதன்.
லக்னத்திற்கு ஏழில் செவ்வாய் அமர்ந்து அதுவே ராசிக்கு இரண்டுமாகி ராசிக்கு இரண்டு மற்றும் லக்ன ஏழாம் வீட்டை சனி பார்த்து லக்னத்திற்கு இரண்டாம் வீட்டை செவ்வாய் பார்த்த ஜாதகம். தோஷங்கள் கடுமையாக இருப்பதால் கந்தர்வராஜஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ளவும். நடக்கும் புதன்தசை சுக்கிரபுக்தியில் வரும் ஜூலை மாதம் குருப்பெயர்ச்சிக்கு பிறகு நிச்சயம் திருமணம் நடக்கும்.
மனைவியின் அஷ்டமச்சனி என்ன செய்யும்?
ஆர். சுப்ரமணியன், வடவள்ளி.
கேள்வி:
சந் | சனி | கே | |
ராசி | |||
சூ,ரா குரு | பு சுக் | ல செவ் |
சனி | ரா | ||
சந் | ராசி | ||
குரு சுக் | |||
செவ் | பு கே | ல சூ |
பதில்:
உங்கள் மனைவிக்கு மீன ராசியாகி அஷ்டமச் சனி நடக்கிறது. உங்களுக்கு புதன் தசையில் ராகு புக்தி நடக்கிறது. ஒரு குடும்பத்தில் மனைவி மற்றும் குழந்தைகளில் யாருக்காவது அஷ்டமச் சனி நடந்தால் அது கணவனைப் பாதிக்கும். ஏனென்றால் நம்முடைய கலாச்சாரத்தின்படி ஒரு குடும்பத் தலைவியின் வட்டம் மிகவும் சிறியது. நம்முடைய பெண்கள் மிகவும் சுயநலமானவர்கள். அவர்களைப் பொறுத்தவரை யார் எக்கேடு கெட்டுப் போனாலும் என் கணவனும் குழந்தைகளும் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
எது நடந்தாலும் தாங்கிக் கொள்ளும் ஒரு மனைவியால் தன் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் ஏதேனும் ஒன்று என்றால் தாங்கிக் கொள்ள முடியாது. வெளிஉலகம் அறியாமல் கணவன், குழந்தைகள் என்ற குறுகிய வட்டத்திற்குள் குடும்பத்திற்காகவே வாழும் ஒரு குடும்பப் பெண்ணை அழவைக்க வேண்டும் என்றால் அவளுடைய கணவனுக்கு வேலை அல்லது தொழிலில் பிரச்னை ஏற்பட வேண்டும்.
பக்கத்தில் புரண்டு புரண்டு படுக்கும் கணவனைப் பார்த்தபின் எந்த மனைவிக்கு தூக்கம் வரும்? எனவேதான் இவளை எந்த இடத்தில அடித்தால் இவளுக்கு வலிக்கும் என்று தெரிந்தே சனிபகவான் அவள் கணவனின் நிம்மதியை இழக்க வைக்க கணவனின் தொழிலில் கை வைக்கிறார்.
நான்கு மாதங்களுக்கு முன் நீங்கள் எழுதிய கடிதத்திற்கு இப்பொழுதுதான் பதில் தர முடிந்திருக்கிறது. மனைவிக்கு அஷ்டமச்சனி முடிந்து விட்டதாலும் உங்களுக்கு ராகு புக்தி அடுத்த மாதம் முடியப் போவதாலும் வசந்தம் மீண்டும் வரும். இழந்தவை திரும்பக் கிடைக்கும். முக்கியமாக உங்கள் மனைவிக்கு இனிமேல் தூக்கம் இருக்கும்.
ஏ. ஆரோக்கியராஜ், நீடாமங்கலம்.
கேள்வி:
குரு | ல | கே | |
சூ செவ் | ராசி | ||
பு | சந் | ||
சுக் ரா | சனி |
என் மகன் லியோ வாசுதேவனின் எதிர்காலம் பற்றிக் கூறவும்.
பதில்:
ரிஷப லக்னம், சிம்ம ராசி, ஐந்தில் சனி. எட்டில் சுக்கிரன், ராகு. ஒன்பதில் புதன். பத்தில் சூரியன், செவ்வாய், பதினொன்றில் குரு.
குழந்தை லியோவின் ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் மூவரும் திக்பலம் பெற்றதும் இருபத்தி ஐந்து வயதிற்கு மேல் இவர்கள் மூவரின் தசையும் நடக்க போவதும் சிறப்பான அம்சங்கள். மேலும் சுக்கிரன், ரிஷபத்திற்கு ஆறுக்குடையவராகவே செயல்படுவார் என்பதால் அவர் எட்டில் மறைந்து அவருக்கு வீடு தந்த குரு பதினொன்றில் ஆட்சி பெற்றதும், ராஜயோகாதிபதி சனி சுக்கிரனை பார்த்ததும் வலுவான அம்சங்கள். குழந்தை நன்றாகப் படித்து அதிகாரம் செய்யக்கூடிய அரசாங்க உயர்பதவியில் இருப்பான்.
எஸ். ஏ. ராஜ்குமார், சேலம் – 15.
கேள்வி:
ரா | |||
ல,சூ பு | ராசி | ||
சுக் | |||
கே | சந் குரு | செவ் சனி |
சூ பு | சுக் சனி | கே | |
செவ் | ராசி | சந் | |
குரு | |||
ரா | ல |
ஜோதிடச் சக்கரவர்த்திக்கு வணக்கம். திருமணம் நடந்ததிலிருந்தே பிரச்னை. எப்பொழுது தீரும்? அல்லது கணவன் மனைவி பிரிவினை ஆகுமா? ஒரு ஆண்குழந்தை உள்ளது.
பதில்:
விருச்சிக லக்னம், கடக ராசி, இரண்டில் ராகு மூன்றில் குரு நான்கில் செவ்வாய், ஆறில் சூரியன், புதன், ஏழில் சுக்கிரன், சந்திரன்.
லக்னத்திற்கு இரண்டில் ராகுவும் ஏழில் சனியும் அமர்ந்து ராசிக்கு எட்டில் செவ்வாய் அமர்ந்து கடுமையான தாரதோஷம் ஏற்பட்ட ஜாதகம். என்னுடைய கணிப்புப்படி 33 வயதிற்கு மேல்தான் உங்களுக்கு திருமணம் நடந்திருக்க வேண்டும். அதற்கு முன்பு சிறுவயதில் திருமணம் நடந்திருந்தால்தான் இரண்டு அமைப்பு. ஆனால் என் கணிப்புப்படி உங்களுக்கு தாமத திருமணமாகவே ஆகியிருக்கும் என்பதால் பிரிவு வராது.
42 வயதில் இந்தக் கேள்வியைக் கேட்டால் இருக்கும் ஆண் குழந்தையை என்ன செய்வீர்கள்? ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்வீர்களா? ஒரு காலகட்டத்திற்கு பின்பு குழந்தைகளுக்காக வாழ்வதே நல்ல மனிதனின் வாழ்க்கை. தற்பொழுது உங்களுக்கு சுக்கிரதசை குருபுக்தி நடக்கிறது. இதில் மனைவியுடன் கருத்து வேற்றுமை அதிகரிப்பது ஜாதகபலன்தான். எந்த ஒரு மனிதருக்கும் சுக்கிர தசை குருபுக்தி அல்லது குருதசை சுக்கிர புக்தி நடந்தால் குடும்பத்தில் பிரச்னை வரத்தான் செய்யும். அடுத்து ஆரம்பிக்க இருக்கும் சனிபுக்தியில் பிரச்னை இன்னும் அதிகமாகலாம். மனைவிக்கு ஏழரைச்சனி முடிந்தவுடன் குடும்பத்திலும், தொழிலிலும் நிம்மதி இருக்கும்.
எ. செல்வகுமார், களரம்பட்டி.
கேள்வி:
கே | ல குரு | ||
சந் | ராசி | செவ் | |
சனி | |||
சூ,பு சுக் | ரா |
திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பிரம்மஹத்தி தோஷம் உள்ளதாக உள்ளூர் ஜோதிடர்கள் கூறுகிறார்கள் உண்மையா?
பதில்:
மிதுனலக்னம், கும்பராசி, லக்னத்தில் குரு, இரண்டில் செவ்வாய், மூன்றில் சனி, நான்கில் ராகு, ஏழில் சூரியன், புதன், சுக்கிரன்.
ஜாதகத்தில் ஒன்று நடக்காமல் போவதற்கு காரணம் சுலபமாக பிரம்மஹத்தி தோஷம் என்று சொல்லிவிடுவது வசதியாகப் போய்விட்டது. லக்னத்திற்கு இரண்டில் நீசவக்கிரம் பெற்ற செவ்வாயும், ராசிக்கு ஏழாம் வீட்டில் சனியும் எட்டாம் வீட்டில் ராகுவும் இருப்பது கடுமையான தோஷம். மேலும் தாம்பத்ய சுகத்தை தருபவரான சுக்கிரனும் ஏழாம் வீட்டில் அமர்ந்து சூரியனுடன் இரண்டு டிகிரிக்குள் இணைந்ததும் சுக்கிரனைக் குரு பார்த்ததும் தாமத திருமணத்திற்கான காரணங்கள்.
தற்பொழுது நடக்கும் சனிதசை, செவ்வாய் புக்தியில் திருமணத்திற்கு வாய்ப்பில்லை. அடுத்த ராகு புக்தியில் 2016 தை மாதம் திருமணம் நடக்கும்.
எஸ். பிரியதர்ஷினி, சென்னை
கேள்வி:
கே | ல | ||
ராசி | குரு | ||
ல | சூ சுக் | ||
சந் | செவ் | பு ரா |
மகனின் ஜாதகம் அனுப்பி உள்ளேன். படிப்பு, ஆயுள் எப்படி இருக்கிறது?
பதில்:
ரிஷப லக்னம் விருச்சி கராசி மூன்றில் குரு நான்கில் சூரியன், சுக்கிரன் ஐந்தில் புதன், ராகு, ஆறில் செவ்வாய், சனி.
மூன்று மாத குழந்தைக்கு ஜாதக பலன் அறிவதற்கு அதற்குள் என்னம்மா அவசரம்? குழந்தை ஜாதகப்படி லக்னாதிபதி திக்பலம் பெற்று எட்டுக்குடையவன் உச்சம் பெற்று சனியும் உச்சம் பெற்றதால் தீர்க்காயுள். நான்காமிடம் சுபத்துவம் பெற்று புதனும் உச்சம் பெற்றுள்ளதால் நன்கு படிப்பான்.
எனக்கு வேலை இல்லாமல் இருக்கேன் அய்யா…share market பன்னலாம …அது தான் என் ஆசை. எண் பெயர் சித்தார்த்தன் தனுசு ராசி மூலம் நட்சத்திரம்.. 09.06.1990 9.52 am…அரசியல் ஆர்வம் உள்ளது
எனக்கு சிம்மம் ராசி மனைவிக்கும் சிம்ம ராசி.இருவருக்கும் பூரம் நட்சத்திரம்.எங்களுக்குள் பிரிவு ஆகி உள்ளது நாங்கள் ஒன்று சேர்வோமா..