சசிரேகா, மதுரை.
கேள்வி:
மணமாகி ஆறு ஆண்டுகளாகவே கணவரும் நானும் பிரிந்துதான் வாழ்கிறோம். ஆண்குழந்தை இருக்கிறது. அவருக்கு என்னையும், குழந்தையையும் கண்டாலே பிடிக்கவில்லை. டைவர்ஸ் கேட்டு கேஸ் கொடுத்திருக்கிறார். நாங்கள் ஒன்றுசேர வாய்ப்பு இருக்கிறதா? வழக்கு எனக்கு சாதகமாக அமையுமா? சில ஜோதிடர்கள் சேர வாய்ப்பு இல்லை என்று சொன்னதால் மனவேதனையோடு இருக்கிறேன். தாங்கள் துல்லியமாக கணித்துப்பலன் சொல்லும்படி கேட்டு கொள்கிறேன்.
பதில்:
துல்லியமாக கணித்துப் பலன் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு கணவர், குழந்தை பெயரை மட்டும் அனுப்பினால் நான் எப்படி அம்மா பதில் சொல்லுவது. ஜாதகங்களை இணைக்க மறந்து விட்டாயா? உங்கள் இருவருக்கும் ஜாதகங்கள் இல்லை என்றாலும் மகனுடைய பிறந்தநாள், நேரம், இடம் விவரங்களை அனுப்பு. உடனடியாக பதில் தருகிறேன்.
எஸ்.தங்கவேல், ஆச்சி ப் பட்டி.
கேள்வி:
சூ,பு கே | |||
ராசி | சுக் செவ் குரு | ||
சனி | |||
ரா | சந் | ல |
இரண்டு டிகிரி முடித்த எனது இளையமகன் சிறுவயதில் இருந்தே அதிக அளவில் ஆன்மிகக் கதைகள் படிப்பதும், மறைபொருள் ஆராய்ச்சி செய்வதும் யோகா, தியானம் போன்றவற்றில் ஆர்வமாகவும்இருக்கிறான். தற்போது தன்னைவிட ஒன்பதுவயது குறைந்த பெண்ணை விரும்புவதாக சொல்கிறான். ஆன்மிகத்தில் ஆர்வமாக இருந்தவன் காதல் என்று சொன்னது ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும் ஒன்பதுவயது வித்தியாசம் என்பதால் என் மனைவி கொஞ்சம் யோசிக்கிறாள். மேலும் பாதகாதிபதி குருஉச்சம் பெற்றுள்ளதும் திரிகோணத்தில் சனி இருப்பதும் நன்மை தருமா? சனிதசை இவனுக்கு எப்படி இருக்கும் ? அரசாங்க வேலை கிடைக்குமா?
பதில்:
(கன்னிலக்னம், துலாம்ராசி. ஐந்தில் சனி. பத்தில் சூரி, புதன், கேது. பதினொன்றில் சுக், செவ், குரு.)
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்து, ராசியை ஆட்சிவக்ர சனி பார்த்து பத்துவயதில் இருந்து உச்சகுருவின் தசை நடப்பதால் சிறுவயதில் இருந்தே மகன் ஆன்மிகத்தில் ஆர்வமாக இருக்கிறார். அடுத்து வரும் சனிதசையில் இதைவிட அதிகமான ஆன்மிக ஈடுபாட்டுடனும், தேடலுடனும் இருப்பார்.
தற்போது ஏழுக்குடைய உச்சகுருவின் வீட்டில் அமர்ந்து சுக்கிரனின் சாரம் பெற்ற ராகுபுக்தி நடப்பதால் மகன் காதல்வயப்பட்டு இருக்கிறார். அதேநேரத்தில் அவருக்கே இப்போதுதான் 24 வயது நடந்து ஒன்றும் தெரியாத 15 வயதுப் பெண்ணைக் காதலிப்பதாக சொல்வதால்தான் உங்கள் மனைவி யோசிக்கிறார்.
மகன் ஜாதகப்படி சுக், செவ், குரு மூவரும் ஒரேடிகிரியில் ஒன்றாக இணைந்திருப்பதால் திருமணவாழ்விலும் தாம்பத்திய சுக ஆர்வத்திலும் குறைகள் இருக்கும். மகனுக்கு 28 வயதிற்கு மேல் திருமணம் செய்வதே சரியாக இருக்கும். பத்தாமிடத்தில் சூரியன் திக்பலத்துடன் ஜீவனாதிபதியுடன் இணைந்திருப்பதால் அரசுவேலை நிச்சயம் உண்டு. பாதகாதிபதி குரு நீச செவ்வாயுடன் இணைந்ததால் பாதகாதிபத்திய தோஷம் இழந்தார். திரிகோண சனி குருவின் பார்வை பெற்றதால் கெடுதல் செய்யமாட்டார்.
ஆர்.ரவிக்குமார், திருச்சி-8
கேள்வி:
பு | சூ | ல,செவ் சுக்,சனி | சந் |
ராசி | கே | ||
ரா | |||
குரு |
திருமணமாகி எட்டு வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. எப்போது எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்?
பதில்:
குழந்தை பாக்கியம் என்பது கணவனும், மனைவியும் இணைந்து பெறுவது. நீங்கள் மனைவியின் ஜாதகத்தை அனுப்பாமல் உங்கள் ஜாதகத்தை மட்டும் அனுப்பியுள்ளதால் என்னால் துல்லியமான பதில் சொல்ல முடியாது. அதே நேரத்தில் உங்களுக்கு ரிஷபலக்னமாகி குரு எட்டில் மறைந்ததும் புத்திர ஸ்தானாதிபதி புதன் நீசமடைந்ததும் ராசிக்கு ஐந்துக்குடைய சுக்கிரபகவான் செவ்வாய் சனியுடன் இணைந்ததும் புத்திரதோஷம் என்பதால் மனைவியின் ஜாதகமும் ஆராயப்படவேண்டும்.
எம்.விஜயநாத், காட்டு ப் புத்தூர்.
கேள்வி:
ரா | |||
சந் குரு | ராசி | சூ பு | |
சுக் ல | |||
செவ் | சனி | கே |
மகனுக்கு 30 வயதாகியும் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. எப்போது நடைபெறும்? தற்போது தனியார் ஆஸ்பத்திரியில் ரேடியோகிராபர் பணிபுரிந்து வருகிறான். அரசாங்க வேலை கிடைக்குமா?
பதில்:
மகன் ஜாதகப்படி லக்னத்தில் சுக்கிரனும், ஏழில் குருவும் அமர்ந்து இருவரும் சமசப்தமாக பார்த்து கொள்வதால் 2016-ம் வருடம்தான் அவருக்குத் திருமணவருடம். அரசுவேலைக்குரிய சூரியன் லக்னத்திற்கு பனிரெண்டிலும் ராசிக்கு ஆறிலும் மறைந்து சிம்மத்தை வலுப்பெற்ற சனி பார்ப்பதால் அரசுப்பணிக்குத் தடை இருக்கிறது. லக்னாதிபதி சூரியனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்யுங்கள்.
பி.விஜயகுமார், செங்கல்பட்டு.
கேள்வி:
செவ் | பு | சூ | |
குரு | ராசி | சுக் ரா | |
சனி கே | |||
சந் | ல |
மூத்தமகளுக்கு இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் நிச்சயத்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு ஜோதிட வார இதழில் தாங்கள் துலாம் லக்னத்திற்கு செவ்வாய்தசை வராமல் இருப்பது நல்லது என்று எழுதியிருந்ததை படித்தேன். எனக்கு இப்போது செவ்வாய்தசையில் சனிபுக்தி நடப்பில் உள்ளது. மேலும் கோட்சாரத்தில் என் ராசியில் செவ்வாய் ஆறுமாதம் இருக்கப் போகிறது. எனக்குப் பயமாக உள்ளது. குருஜி அவர்களின் மேலான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் கடிதத்தைப் புறக்கணித்து விடாதீர்கள்.
பதில்:
பத்திரிகைகளில் எழுதும் பொதுப்பலன்களை தன்னுடைய ஜாதகத்திற்குப் பொருத்திப் பார்த்து பயந்தால் ஜோதிடக்கட்டுரைகளையே எழுத முடியாது. உங்களுடைய பயத்திற்கு நடக்கும் செவ்வாய்தசை சனிபுக்தி காரணம் அல்ல. உங்களின் விருச்சிகராசிக்கு நடக்கும் ஜென்மச்சனிதான் காரணம். துலாம் லக்னத்திற்கு சனிபகவான் யோகர் என்பதாலும் உங்கள் ஜாதகத்தில் சனி ஆட்சிபெற்று சுக்கிரனின் பார்வை வாங்கி கேதுவுடன் இணைந்து சுபத்துவமும், சூட்சுமவலுவும் அடைந்திருப்பதாலும் தனது புக்தியில் நன்மைகளை மட்டுமே செய்வார். அதனால்தான் சனிபுக்தியில் மூத்தமகளுக்கு திருமணம் செய்து சந்தோஷத்தை அனுபவிக்க இருக்கிறீர்கள்.
ஜாதகப்படி லக்னத்தை குருவும், சனியும் பார்த்து ராசியை தனிப்புதன் பார்த்து சனிபகவான் ஆட்சி பெற்றதால் குழந்தைகள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து பேரன்,பேத்தி திருமணத்திற்கும் தீர்க்காயுளுடன் இருப்பீர்கள். சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருப்பதால் இப்போதிருக்கும் ஜோதிடஅறிவு அடுத்து வரும் ராகுதசையில் முன்னேற்றம் அடைந்து உங்கள் ஜாதகத்தின் உண்மை பலன்களை நீங்களே கணிப்பீர்கள்.
ரஜ்ஜுப் பொருத்தம் இல்லை என்றால் மண வாழ்க்கை அவ்வளவுதானா?
என்.மதன்குமார், குறிச்சி சுந்தராபுரம்.
கேள்வி:
ல செவ் | |||
ராசி | சுக்,கே குரு | ||
சந் | சூ பு | ||
சனி |
ரா | |||
சூ | ராசி | ||
ல,பு சுக் | |||
குரு | சந் | செவ் சனி |
குருஜி அவர்களே ... என் கதை வித்தியாசமானது. கணவன்-மனைவிக்குள் பிரச்னை என்றால்தான் விவாகரத்து வரை போகும். இங்கே எங்களுக்குள் எந்தவித பிரச்னைகளும் இல்லை. என் மாமனார் உங்கள் இருவருக்கும் ரஜ்ஜு பொருத்தம் இல்லை. நீங்கள் ஒன்று சேர்ந்தால் மிகவும் நீ கஷ்டப்படுவாய் என்கிறார். மனைவியும் வெகுளி என்பதால் அதை நம்புகிறாள். இந்தப் பொருத்தம் இல்லை என்றால் திருமண வாழ்க்கையே அவ்வளவுதானா? சேர்ந்து வாழ கோர்ட்டில் விண்ணப்பித்துள்ளேன். எங்களுக்குப் பிறந்த மகனின் கதி என்ன? எனக்கு இரண்டாவது திருமணம் உண்டா? அதேபோல என் மனைவிக்கு இரண்டாவது அமைப்பு இருக்கிறதா?
பதில்:
(கணவனுக்கு மகரலக்னம், விருச்சிகராசி, லக்னத்தில் புதன், சுக். இரண்டில் சூரி. ஐந்தில் ராகு. பத்தில் செவ், சனி. பனிரெண்டில் குரு. மனைவிக்கு ரிஷப லக்னம், மகர ராசி, லக்னத்தில் செவ். மூன்றில் சுக், குரு, கேது. நான்கில் சூரி, புதன். எட்டில் சனி.)
தமிழ்நாட்டில் மட்டும் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படும் பத்துப் பொருத்தங்களைப் பற்றி அடிக்கடி விளக்கம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். இந்தப் பத்துப்பொருத்தங்கள் என்பது பொதுவான ராசிபலன்களைப் போன்றவைதான். மூலநூல்களில் திருமணம் செய்வதற்கு இந்தப் பொருத்தங்கள் அவசியம் என்று வலியுறுத்திச் சொல்லப்படவில்லை.
பொருத்தங்கள் இல்லை என்றால் திருமணம் செய்யவேண்டாம் என்றும் குறிப்பிடப்படவில்லை. பின்னால் வந்தவர்களின் அனுபவத்தால் தொகுக்கப்பட்டு ஒரு அட்டவணையாக்கப்பட்ட பொதுப்பொருத்தங்கள்தான் இவை. மேலும் இவை நிச்சயமான ஒன்றல்ல. பொருத்தம் இல்லாத மற்றும் பார்க்கப்படாத எத்தனையோ தம்பதிகள் எந்தக் குறையும் இன்றி சுகமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
பத்துப் பொருத்தங்களைப் பார்ப்பதைவிட இருவரை இணைக்க ஜாதக அனுகூலப் பொருத்தம் பார்ப்பதே சரியானது. மேலும் பொருத்தங்கள் என்பது திருமணத்திற்கு முன்னால்தான் பார்க்கப்பட வேண்டும். மணமான பின் பார்ப்பதும் சரியாகாது. அதைவிட மேலாக தனக்குப் பேரன் பிறந்தபின்பு உங்கள் இருவருக்கும் பொருத்தம் இல்லை என்பதைக் கண்டுபிடித்த உங்கள் மாமனார் உங்களுக்குப் பேரன் பிறந்தபிறகு இதைக் கண்டுபிடித்திருக்கலாம். அவசரப்பட்டு விட்டார்.
சரி இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம். உங்களுக்கு விசாக நட்சத்திரம், மனைவிக்கு உத்திராட நட்சத்திரம் என்பதால் இருவருக்கும் ஜாதகப்படி ரஜ்ஜுப் பொருத்தம் இல்லை என்றாகிறது. பத்துப் பொருத்தங்களில் ஒன்றான இந்த ரஜ்ஜுப் பொருத்தத்திலேயே ஒருவருக்கு அவரோகணம், இன்னொருவருக்கு ஆரோகணம் என்றால் திருமணம் செய்யலாம் என்று விதிவிலக்கு இருக்கிறது. அதன்படி உங்களின் விசாகம் அவரோகணம், மனைவியின் உத்திராடம் ஆரோகணம் என்பதால் உங்களுக்கு இந்த விதிவிலக்கு பொருந்தும்.
ரஜ்ஜுப்பொருத்தம் இல்லையென்றாலும் மீறித் திருமணம் செய்தால் என்ன நடக்கும் என்று பார்த்தால் உங்கள் இருவருக்கும் உதர ரஜ்ஜு என்பதால் நீங்கள் திருமணம் செய்தால் புத்திரதோஷம் உண்டாகும் என்பது பலன். புத்திரதோஷம் என்றால் குழந்தை பிறக்காது அல்லது ஆண் வாரிசு இருக்காது என்று பொருள். ரஜ்ஜுப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்த உங்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்பதனாலேயே பத்துப்பொருத்தங்கள் ராசிபலன் போலப் பொதுவானவை என்று நான் சொன்னது உறுதியாகிறது.
உங்கள் குடும்பப்பிரிவினைக்கு மகனுக்கும் மனைவிக்கும் ராகுதசை நடந்து உங்களுக்கு ராகுபுக்தி நடந்து கொண்டிருப்பதும், உங்களுக்கு விருச்சிகராசியாகி ஏழரைச்சனியின் ஆதிக்கத்தில் நீங்கள் இருப்பது மட்டுமே காரணமாகும். 2017-ம் ஆண்டுவரை ராகுசந்திப்பும், ஏழரைச்சனியும் இருப்பதால் அதுவரை உங்கள் குடும்பம் இணையத் தடை இருக்கிறது.
ஜாதகப்படி உங்களிடமும் குறை இருக்கிறது. மகன் ஜாதகப்படி மிதுனலக்னமாகி ஒன்பதுக்குடைய சனி உச்சம்பெற்று தந்தையைக் குறிக்கும் சூரியன் அவருடன் இணைந்து நீசபங்கம் பெற்றதால் உங்கள் மகன் உங்களை விட்டுப் பிரிய வாய்ப்பு இல்லை. மனைவியின் ஜாதகப்படி எட்டில் இருக்கும் சனிபுக்தி நடப்பதால் தற்போதைய பிரிவு ஏற்பட்டிருக்கிறது. ஜாதகப்படி உங்கள் இருவருக்குமே இரண்டாம் திருமண அமைப்பு இல்லை. 2017-ம் இறுதியில் மனைவி, குழந்தையுடன் இணைவீர்கள்.
Sir can you check my horoscope name Jayabalan s/o Ramo.date of birth 05-05-1969.time 0220am.country singapore.thks
குருஜி அவர்களே
நான் ஒருபையனை விரும்புகிறேன்
அவருக்கு சதயம் நட்சத்திரம் கும்பராசி
எனக்கு துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
ரஜ்ஜு இல்லை என்கிறாற்கள்
திருமணம் செய்தால் பாதிப்பு உள்ளதா
பரிகாரம் உள்ளதா….