adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 17 (23.12.14)

எம். வாசுகி, திருப்பத்தூர்.

கேள்வி :
லக் சந் கே செவ்  சூ பு
 சனி ராசி  சுக்
 குரு ரா
கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மகளுக்கு திடீரென திருமண ஏற்பாடு செய்தேன். அவளுக்கு பொருத்தமில்லாத பையனுடன் திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்பு வீட்டை விட்டுச் சென்றுவிட்டாள். திரும்பி வருவாளா? அவளது எதிர்காலம் எப்படி இருக்கும்? ஊனமுற்ற என் கணவரும், நானும் சொல்ல முடியாத வேதனையில் இருக்கிறோம். நீங்கள் சொல்லும் பதிலில் தான் எங்களின் உயிர் இருக்கிறது.
பதில்:
மகள் அபிராமிக்கு மீன லக்னம் மீன ராசியாகி லக்னாதிபதி குரு எட்டில் மறைந்து ராகுவுடன் நெருங்கி இணைந்து, குடும்ப வீடான இரண்டில் இருக்கும் கேதுவை பனிரெண்டில் மறைந்த சனி பார்த்த ஜாதகம். தற்போது ஆறுக்குடைய சூரியனுடன் இணைந்து நான்கில் ஆட்சி பெற்ற களத்திர ஸ்தானாதிபதி புதனின் தசை செப்டம்பரில் ஆரம்பித்ததும் மகள் தான் விரும்பிய துணையுடன் சென்று விட்டாள்.
மீன ராசிக்கு கடந்த இரண்டு வருடங்களாக அஷ்டமச்சனி நடந்த போது மகள் சுய அறிவின்றி காதல் என்ற பெயரில் தன்னைத் தானே அசிங்கப்படுத்திக் கொண்டிருப்பாள். நடக்கும் தசாநாதன் புதன் பாதகாதிபதி என்பதால் அவள் தேர்ந்தெடுத்த பாதையில் அவள் துன்பங்களை அனுபவிப்பாள். ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்தாலே தவறான முடிவெடுத்து வாழ்க்கையைத் தொலைப்பார்கள்.
உங்கள் கணவருக்கும் மீன லக்னமாகி பாதகாதிபதி புதன் தசையில் அஷ்டமாதிபதி சுக்கிரனின் புக்தி நடப்பதால் உயிரை விட மேலான மானம் போன அமைப்பு நடந்தது.மீன லக்னத்திற்கு சுக்கிரன் வலுப் பெற்றால் தலை குனிவைத் தருவார். 2017-ல் சுக்கிர புக்தி முடிந்த பிறகு தான் மகள் சம்பந்தப்பட்ட நிம்மதிகள் உங்களுக்கு இருக்கும்.
பி. விஜயகுமார், செங்கல்பட்டு.
கேள்வி :
செவ் சந் குரு சுக்
ராசி  ல,சூ பு,கே
ரா
 சனி
ஒரு ஜோதிடர் நீ திருமணம் செய்தால் மனைவியிடம் பிரச்னை வரும். சந்தேகப்படுவாய் என்று கூறினார். அதிலிருந்து மனதில் நிம்மதியில்லாமல் போய் விட்டது. தூங்கி ஒரு வருடமாகிறது. நிம்மதியாக சாப்பிடக்கூட முடியவில்லை. ஏன் அந்த ஜோதிடரை பார்த்தோம் என்று மனஉளைச்சல் ஆகிவிட்டது. அந்த ஜோதிடர் சொன்னபடி நடக்குமா? திருமண வாழ்க்கை எதிர்காலத்தில் சந்தோஷமாக இருக்குமா?
பதில்:
கடக லக்னம் ரிஷப ராசி லக்னத்தில் சூரியன், புதன், கேது. ஆறில் சனி. ஏழில் ராகு.  பத்தில் செவ்வாய். பனிரெண்டில் குரு, சுக்கிரன்.
ராசிக்கு எட்டில் சனியும், லக்னத்திற்கு ஏழில் ராகுவும் அமர்ந்து சுக்கிரன் பனிரெண்டில் மறைந்ததால் திருமணம் தாமதமாகுமே தவிர மண வாழ்க்கை சந்தோஷமாகவே இருக்கும்.
லக்னாதிபதியும் உன் மனதிற்கு காரணமான வனுமான சந்திரன் உச்சம் பெற்றதால் உன்னால் எதிரியைக் கூட சந்தேகப்பட முடியாதே? பிறகு எப்படி மனைவியை சந்தேகப்படப் போகிறாய்? அதைவிட மனைவியைக் குறிக்கும் ஏழுக்கு அதிபதி சனிபகவானை சுபகிரகங்களான குரு, சுக்கிரன் இருவருமே பார்ப்பதால் சந்தேகப்படவே முடியாத குணவதியான பத்தினிதானே உனக்கு மனைவியாக அமைவாள்? அனுபவம் இல்லாத ஜோதிடர் சொன்னதை நம்பி ஏன் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறாய்? நிம்மதியாக தூங்கு.
ஆர். டி. அபிராமி, கிருஷ்ணகிரி.
கேள்வி :
செவ்
ராசி  ல,கே குரு
சனி ரா
பு சுக் சூ சந்
நான் கடகலக்னம் விருச்சிகராசி. லக்னாதிபதி சந்திரன் நீசம் அடைந்துள்ளார். நான் சந்திரனுக்குரிய முத்தை அணிவதா? அல்லது ராசி அதிபதி செவ்வாய்க்குரிய பவளத்தை அணிவதா? இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரி கிரகங்களாக இருப்பதால் எதற்குரிய கல்லை அணிவது?
பதில்:
சந்திரன் இருக்கும் ராசிப்படி கற்கள் அணிவது தவறு. உங்களுக்கு ராசியான கல்லைத்தான் அணிய வேண்டும். அதன்படி பலமிழந்த லக்னாதிபதியின் கல்லை அணிவதே சிறப்பு. சந்திரனும் செவ்வாயும் நட்புக் கிரகங்கள் தான். ஒன்றுக்கொன்று எதிரிகள் அல்ல.
. தணிகைவேலு, சென்னை.
கேள்வி :
செவ்  குரு கே
பு ராசி
சூ  சந் ல
 சுக் ரா  சனி
எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. பெரிய சண்டையாக மாறிவிடுமா? பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா? சொந்த வீடு கட்ட யோகம் உண்டா? எப்போது?
பதில்:
சிம்ம லக்னம் சிம்ம ராசி. மூன்றில் சனி. ஐந்தில் சுக்கிரன் ராகு. ஆறில் சூரியன். ஏழில் புதன். எட்டில் செவ்வாய். பதினொன்றில் குரு, கேது.
ஏழுக்குடையவன் உச்சம் பெற்று ஏழாம் இடத்தில் சுபர் அமர்ந்து ஏழாம் இடத்தையும் ஏழுக்குடையவனையும் குரு பார்த்ததினால் அருமையான பெண்ணை மனைவியாகப் பெற்ற உங்களுக்கு இந்த அறுபது வயதில் சண்டை தேவையா?
மூன்று வருடங்களாக சனிதசை நடப்பதால் தேவையற்ற விஷயங்களுக்கு நீங்கள் தான் மனைவியை வம்புக்கு இழுப்பீர்கள். இந்த வயதிற்கு மேல் தான் மனைவியின் ஆதரவு ஒருவருக்கு கண்டிப்பாகத் தேவை. மனைவியின் பேச்சைக் கேட்டு நடந்து அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது. நல்ல பெண்டாட்டியின் பேச்சைக் கேட்பதால் ஒன்றும் குறைந்து போய் விட மாட்டீர்கள். நான்கிற்குடைய செவ்வாய் எட்டில் மறைந்து வீட்டிற்கு காரகனான சுக்கிரனும் ராகுவுடன் ஒரே டிகிரியில் அமர்ந்ததால் உங்கள் பெயரில் வீடு அமைய வாய்ப்பில்லை.
ஆர். செல்வகுமாரி, நாகர்கோவில்.
கேள்வி :
சூ,பு சுக் ரா
ராசி  சந்
குரு கே செவ் சனி
என் மகன் பெங்களூரில் வேலை செய்த போது ஒரு பக்தி இயக்கத்தில் சேர்ந்து கடுமையான சைவம் ஆகிவிட்டான். மூன்று வருடங்களுக்கு முன் சிங்கப்பூர் சென்று கூட வேலை செய்பவர்கள், தங்கி இருப்பவர்கள் அனைவரும் அசைவம் சாப்பிடுகிறார்கள் என்று திரும்ப வந்துவிட்டான். எங்களையும் அசைவம் சாப்பிட சம்மதிப்பதில்லை. எதிர்காலம் எப்படி? திருமணத்திற்கு பின் பக்தி மார்க்கத்தில் இருந்து வெளிவந்து விடுவானா?  
பதில்:
திருக்கணிதப்படி மகர லக்னம். நான்கில் சூரியன், புதன், சுக்கிரன். ஐந்தில் ராகு. ஏழில் சந்திரன். பத்தில் செவ்வாய் சனி. பதினொன்றில் கேது. பனிரெண்டில் குரு.
மகனுக்கு உச்ச சனி மற்றும் ஆட்சி பெற்ற குருவின் பார்வையைப் பெற்று கேதுவின் சாரத்தில் இருக்கும் புதனின் தசை என்பதால் அதீதமான ஆன்மீக ஈடுபாடு வந்துவிட்டது. ஏற்கனவே உச்ச வக்ர சனியின் தசை பத்தொன்பது வருடங்கள் அவருக்கு நடந்ததால் சிறுவயதிலிருந்தே அவருக்கு ஆன்மீகச் சூழல் தான் அமைந்திருக்கும்.
லக்னத்திற்கு ஏழாம் இடமோ, ராசிக்கு ஏழாம் இடமோ பலவீனம் ஆகாததால் சுக்கிரனின் வீட்டில் இருக்கும் ராகுவின் புக்தியில் 2016-ம் ஆண்டு அவருக்கு திருமண அமைப்பு இருக்கிறது. ஆனால் அடுத்தடுத்து குரு, சனி பார்வையைப் பெற்ற சுக்கிரன், சூரியன் தசைகள் நடக்க உள்ளதால் திருமண அமைப்பு நீடிக்க தடை இருக்கிறது. லக்னத்திற்கு ஐந்தில் ராகுவும் ராசிக்கு ஐந்தில் கேதுவும் இருப்பதும் கடுமையான புத்திர தோஷம். ராகு புக்தியிலேயே வெளிநாடு செல்வார். மகன் வணங்கும் பகவான் கிருஷ்ணர் உங்கள் மனக் குறையைத் தீர்ப்பார்.
ஜி. செல்வம், மார்த்தாண்டம்.
கேள்வி :
குரு கே செவ்
ராசி  சந் சனி
 சூ பு சுக் ரா
2007-ல் திருமணம் நடந்து மனைவி மூன்று மாதமே வாழ்ந்தாள். விவாகரத்து பெற்ற பின் திருமணமே வேண்டாம் என்று இருந்த எனக்கு அம்மாவின் வற்புறுத்தலினால் ஆறு மாதத்திற்கு முன் திருமணம் நடந்து தற்போது இவளும் கோபமாகவும், முகத்தில் சந்தோஷம் இல்லாமலும் இருக்கிறாள். பிள்ளை வேண்டும் அல்லது டெஸ்டு பிள்ளை எடுக்கிறேன், ஆஸ்டலுக்கு போகிறேன் என்று கொடுமைப்படுத்துகிறாள். இவளுக்கும் வாழ விருப்பம் உள்ளதாக தெரியவில்லை. எனக்கு நிம்மதி உண்டா என்பதை குருஜி அவர்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
பதில்:
விருச்சிக லக்னம் கடக ராசி. இரண்டில் சூரியன், புதன். ஐந்தில் குரு. ஆறில் கேது. ஏழில் செவ்வாய். ஒன்பதில் சனி. பனிரெண்டில் சுக்கிரன், ராகு.
சுக்கிரன் இரண்டு டிகிரிக்குள் ராகுவுடன் இணைந்து லக்னத்திற்கு ஏழில் செவ்வாயும், ராசியில் சனியும் இருந்து லக்னத்திற்கு இரண்டில் எட்டிற்குடைய புதன் அமர்ந்து ராசிக்கு இரண்டாம் இடத்தை செவ்வாய் பார்த்து மனைவி ஸ்தானமும், குடும்ப ஸ்தானமும் பலவீனமான ஜாதகம்.
ஜாதகப்படி நீங்கள் கடுமையான கோபக்காரராகவும், பிறர் சொல்லை கேட்காத எதிர்மறை எண்ணங்களைக் கொண்ட பிடிவாதக்காரராகவும் இருப்பீர்கள். வாழ்க்கை என்பதே ஓரளவுக்கு அனுசரித்துப் போவதுதான். நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நினைக்கும் உங்களிடம் எந்த பெண்ணும் நிலைத்து வாழுவது கடினம். சுக்கிரன் கெட்டாலே நீடித்த தாம்பத்திய சுகம் கிடைக்காது. ஒரு பெண்ணை புரிந்து கொண்டு அவள் மனதுப்படி வாழ்க்கை நடத்த முயற்சி செய்யுங்கள்.
2017-ல் சூரியதசையில் இருந்து உங்களுக்கு நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். ஜென்ம நட்சத்திரம் அன்று மனைவியுடன் ஸ்ரீகாளஹஸ்தி சென்று ஒரு இரவு தங்கி அதிகாலை ருத்ராபிஷேகம் செய்யுங்கள். இன்னொரு ஜன்ம நட்சத்திர நாளில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கும் சென்று இறைவனிடம் மனமுருக வேண்டுங்கள். வாழ்க்கை நிலைக்கும்.
ஆர். முரளி மனோகரன், மதுரை.
கேள்வி :
ஒரே மகனை வெளிநாடு அனுப்பலாமா? எனக்கு விருப்பம் இல்லை. ஜோதிடச் சக்கரவர்த்தியின் வாக்கு அறிந்து செயல்பட விருப்பம்.
பதில்:

மார்ச் மூன்றாம் தேதியன்று உங்கள் மகன் வெளிநாட்டில் இருப்பார். ஜெயித்து வருவார். அனுப்புங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *