ஸ்டெல்லா, பாண்டிச்சேரி.
கேள்வி :
ராசி | சந்,சுக் ரா | ||
கே | ல,சூ குரு | ||
செவ் | பு சனி |
நான் ஒருவரை விரும்புகிறேன். அவர் என்னை விரும்பவில்லை. நான் தான் அவரை மூன்று வருடங்களாக விரும்பிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய விருப்பம் நிறைவேறுமா? அவர் என்னை ஏற்றுக்கொள்வாரா?
பதில்:
காதலிப்பதற்கு தைரியம் வேண்டும். ஓடிப்போவதற்கும் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் மனோபலம் இருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் சிம்ம லக்னமாகி லக்னாதிபதி சூரியன் லக்னத்தில் குருவுடன் அமர்ந்த யோக ஜாதகத்தை கொண்ட நல்ல பெண் நீ. பனிரெண்டில் சந்திரன் ராகுவுடன் இணைந்துள்ள சுக்கிரனின் தசை நடைபெறுவதால் மனம் அலைபாய்கிறது.
லக்னத்திற்கு இரண்டில் புதனுடன் சனி அமர்ந்ததால் உனக்கு தாமத திருமணம். ஆனால் பெற்றோர் பார்த்த திருமணம்தான். அடுத்த ஜூன் மாதம் முதல் லக்னாதிபதி சூரியனின் தசை ஆரம்பிக்க உள்ளதால் வாழ்வில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கி நல்ல கணவன் அமைந்து சுகமாக செட்டில் ஆவாய். கர்த்தர் உன்னை ஒரு போதும் கைவிடமாட்டார். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை நினைவில் கொள்.
டி.நாராயணபூபதி, செல்லூர்.
கேள்வி :
ரா | |||
குரு | ராசி | ல | |
செவ் | சூ | ||
சந் | சனி | சுக் | பு கே |
இறைவனுக்கு அடுத்தபடியாக நான் நம்புவது ஜோதிடத்தையும் ஜோதிடரையும் தான். பெண்ணிற்கு வரன்கள் வந்து பொருத்தம் இல்லாமல் தவிர்த்து விடுகிறது. உறுதியாக எப்போது அமையும்?
பதில்:
உங்கள் பெண்ணிற்கு சந்திரதசை, சுக்கிரபுக்தி சனி அந்தரத்தில் 14.11.2015 முதல் 18.2.2016-க்குள் திருமணம் நடைபெறும்.
சா. வேலவர், மதுரை - 7.
கேள்வி :
ரா | பு சுக் | சூ | |
குரு | ராசி | ||
சனி | |||
ல | சந் | செவ் கே |
குடும்ப வாழ்க்கை நன்றாக இல்லை. மனைவிக்கு உடல் நலக் குறைவு. கொழுந்தியாள் (மனைவியின் தங்கை) விதவையாக இருக்கிறார். உறவினர்களும், பெரியவர்களும் ‘‘நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று சொல்கிறார்கள். கிரக நிலை எப்படி உள்ளது?
பதில்:
65 வயதான ஒருவரிடம் கொழுந்தியாளை ‘‘நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று நீங்கள் சொல்லியிருக்கும் அர்த்தத்தில் எந்தப் பெரியவர்களும் சொல்லி இருக்க மாட்டார்கள்.
விருச்சிகம் லக்னமாகி ஏழாமிடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று எட்டிற்குடைய புதனுடன் சேர்ந்து லக்னத்தை பார்ப்பதால் வரும் கேள்வி இது. நடக்கும் புதன் தசை சனி புக்தியோடு உங்களின் துலாம் ராசிக்கு ஏழரைச்சனி நடப்பதும் எங்காவது உங்களுக்கு தலை குனிவை ஏற்படுத்த இப்படிபட்ட எண்ணங்களை தூண்டுகிறது.
ஏழரைச் சனியில் மனதை அலையவிடாமல் ஒழுங்காக பிழைப்பைப் பார்ப்பது நல்லது. கல்லுக்குள் இருக்கும் தேரையையும் ஆதரித்து காக்கும் பரம்பொருள் உங்கள் கொழுந்தியாளையும் ‘‘பார்த்துக் கொள்ளும்’’.
எல். ஐங்கரன், சென்னை.
கேள்வி :
ரா | சுக் | சூ செவ் | |
ராசி | பு | ||
ல குரு | |||
சந் | கே சனி |
மூலம் நட்சத்திரம் என்பதால் மகளுக்கு நல்ல வரன்கள் எல்லாம் போய்விடுகிறது. எப்போது திருமணம் நடக்கும்? எந்த மாதிரி பையன்? வேலை பார்ப்பவனா? வியாபாரியா? எங்கள் குடும்பமே தங்கள் பதிலை எதிர்பார்க்கிறது.
பதில்:
மகர லக்னம் தனுசு ராசி. லக்னத்தில் குரு, நான்கில் ராகு, ஐந்தில் சுக்கிரன், ஆறில் சூரியன், செவ்வாய், ஏழில் புதன், பத்தில் சனி.
மூலநட்சத்திரம் என்பதால் மட்டும் தடை இல்லை. ஏழில் புதன் அமர்ந்து அம்சத்தில் புதன் உச்சம் பெற்ற உங்கள் புத்திசாலிப் பெண்ணை பெரிய படிப்புகள் படிக்க வைத்திருப்பீர்கள். அதுவும் தற்போது நடந்து வரும் எட்டிற்குடைய சூரிய தசையுமே திருமணத்திற்கான தடைகள்.
ஏழுக்குடையவன் பனிரெண்டில் மறைந்து ஏழாம் வீட்டில் ஆறுக்குடையவன் அமர்ந்து ஏழாம் வீட்டிற்கு உச்சசனி பார்வை. ராசிக்கு ஏழில் செவ்வாய் என கடுமையான களத்திர தோஷம் அமைந்த உங்கள் பெண்ணிற்கு சூரியனும் செவ்வாயும் இணைந்து இருப்பதால் சூரியதசை இறுதியில் தான் திருமணம் ஆக வேண்டும்.
யோக ஜாதகம் என்பதால் இதுவரை திருமணம் ஆகவில்லை. 2015 ஜூலைக்கு பிறகு திருமணம் நடைபெறும். முறையான பரிகாரங்களை செய்யவும். மாப்பிள்ளையும் புத்திசாலியாக கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவராக இருப்பார்.
சிவஜெகநடேஷ், நாகர்கோவில்.
கேள்வி :
சூ குரு | பு | சுக் | |
ரா சந் | ராசி | ||
செவ் | கே | ||
சனி ல |
எனது ஜாதகத்தில் ஆறில் புதன் அமர்ந்துள்ளது. ஜோதிடம் படித்தும் இறுதித் தேர்வு எழுத முடியவில்லை. ஜோதிடத் துறையில் பி.எச்.டி. வரை படிக்கும் பாக்கியம் கிடைக்குமா?
பதில்:
ஒரு ஜாதகத்தில் புதன் வலுப்பெற்று சந்திர கேந்திரத்தில் இருந்தால் ஜோதிட அறிவு வரும். உங்களுக்கு தனுசு லக்னம் கும்ப ராசியாகி இரண்டில் செவ்வாய் உச்சம் பெற்றதால் வாக்குஸ்தானம் பலவீனம் அடைந்தது. எனவே ஜோதிட ஆராய்ச்சி எல்லாம் செய்வீர்கள். ஆனால் பலன் சொல்ல வராது.
லக்னத்தில் இருக்கும் சனியை ஐந்தில் சூரியனுடன் இணைந்த குருவும் ஏழில் இருக்கும் சுக்கிரனும் பார்ப்பதால் ஆன்மீக ஈடுபாட்டால் சிவவழிபாடு கோவில் திருப்பணி என்று இந்த இளம் வயதிலேயே ஆன்மீக ஞானத்துடன் இருப்பீர்கள். ஜோதிடம் கற்றுக் கொள்வது புதன் தசையில் கை கொடுக்கும். பி.எச்.டி முடிக்க முடியாது.
ஐ. ருக்மணி, வில்லிவாக்கம்.
கேள்வி :
சந் குரு | கே | செவ் | |
ராசி | ல சனி | ||
பு | |||
சூ | சுக் | ரா |
39 வயதாகும் என் மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆட்டோ ஓட்டுவதால் பெண் அமையவில்லையா? வேறு என்ன காரணம்? 62 வயது தாயாரின் வேதனைக்காக தயவு செய்து பதில் கூறவும்.
பதில்:
மகனுக்கு கடக லக்னம் மீன ராசியாகி லக்னத்தில் சனி அமர்ந்து ஏழாம் வீட்டை பார்ப்பதாலும் ஏழில் விரயாதிபதி புதன் அமர்ந்து ராசிக்கு எட்டில் ராகு இருப்பதாலும் இதுவரை திருமணம் ஆகவில்லை. மேலும் குடும்பாதிபதியான சூரியன் ஆறில் மறைந்து லக்னத்திற்கு இரண்டாம் வீட்டை செவ்வாய் பார்த்து ராசிக்கு இரண்டாம் வீட்டை சனி பார்த்ததும் குடும்பம் அமையாமல் தடை ஏற்படுத்தும் விஷயங்கள். அஷ்டமச்சனி முடிந்து விட்டதால் கடுமையான முயற்சிக்குப் பிறகு வரும் ஜூலை மாதத்திற்குள் திருமணம் நடக்கும்.
பி. அசோகன், வெள்ளநாதன்பட்டி.
கேள்வி :
ரா | |||
சந் | ராசி | ||
செவ் | |||
பு,குரு சுக் | சூ கே | சனி | ல |
பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள நான் ஏழு வருடங்களாக பாக்கெட் பால் விற்பனை செய்து நஷ்டம் ஏற்பட்டு கடன்காரனாக உள்ளேன். பால் விற்பனைக்கு குடும்பத்தார் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். என்ன தொழில் செய்யலாம்? தாங்கள் சொல்லும் தொழிலை செய்ய தயாராக இருக்கிறேன்.
பதில்:
கன்னி லக்னம் கும்ப ராசி. இரண்டில் சனி, மூன்றில் சூரியன், நான்கில் புதன்-சுக்கிரன்-குரு, ஐந்தில் செவ்வாய், ஒன்பதில் ராகு.
பாலுக்கு உரியவனான சந்திரன் ஆறில் மறைந்ததாலும் சந்திரனின் வீட்டை ஆறு, எட்டிற்குடைய உச்ச செவ்வாய், சனி பார்த்ததாலும் உங்களுக்கு திரவ பொருட்கள் வியாபாரம் கடனைத்தான் தரும். அதே நேரத்தில் உங்களுக்கு வேறு என்ன தொழில் தெரியும் என்று சொன்னால்தான் என்னால் அதில் ஒரு தொழிலை செய்யுங்கள் என்று குறிப்பிட முடியும்.
பாலு, தக்கலை.
கேள்வி :
செவ் ல | |||
கே | ராசி | ||
சந் ரா | |||
சுக்,குரு சனி | சூ பு |
மூன்று பெண் குழந்தைகள். தொழில் முன்னேற்றம் இல்லை. ஒரு நாள் வியாபாரம் நடந்தால் 10 நாள் சும்மா இருக்க வேண்டிய நிலை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. அதிசயம், அற்புதம், அதிர்ஷ்டம் நடக்குமா? எப்படி மூன்று பெண்களையும் திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்ற பயம் வந்து விட்டது. முன்னேற்றத்திற்கு என்ன வழி என்பதை குருஜி தான் சொல்ல வேண்டும்.
பதில்:
மிதுன லக்னம் சிம்ம ராசி. லக்னத்தில் செவ்வாய். மூன்றில் ராகு. ஐந்தில் சூரியன், புதன். ஏழில் சுக்கிரன், குரு, சனி.
ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் மூன்று பேருக்கு ராகு தசை நடப்பதே உங்கள் மனக் கலக்கத்திற்கு காரணம். உங்களின் லக்னாதிபதி புதன் வலுவாக இருப்பதாலும் புத்திரஸ்தானதிபதி சுக்கிரனாகி கேந்திரபலம் பெற்று அம்சத்தில் ஆட்சி பெற்றுள்ளதாலும் புத்திரகாரகன் குருபகவானும் ஆட்சி பலத்துடன் இருந்து அடுத்து தசை நடத்த உள்ளதாலும் உங்கள் மூன்று பெண்களும் வாழ்க்கையில் குறைவின்றி நிறைவாழ்க்கை வாழ்வார்கள். அதை அவர்களின் ஜாதகங்களும் உறுதி செய்கிறது.
குடும்பத்தில் எவருக்கும் ஏழரைச்சனி அஷ்டமச்சனி இல்லாததாலும் தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடப்பதாலும் இனிமேல் வியாபாரம் நன்றாக நடக்கும். வருடம் ஒருமுறை ராகு தசை முடியும் வரை ஸ்ரீகாளகஸ்தியில் குடும்பத்துடன் ஒரு இரவு தங்கி ஜென்மநட்சத்திரம் அன்று ருத்ராபிஷேகம் செய்யுங்கள். சூலினி துர்காஹோமமும் குடும்பத்துடன் செய்து கொள்ள வேண்டும். இவைகளை முறையாக செய்தால் காளத்திநாதர் அற்புதங்களை நிகழ்த்துவார்.
ஆர். யுவராஜ், கல்பாக்கம்.
கேள்வி :
என்னுடைய ராசி விருச்சிகம். நட்சத்திரம் கேட்டை. மெடிக்கல் ஷாப்பில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு கடனாகி தற்போது வேலை செய்து வருகிறேன். மறுபடியும் மெடிக்கல்ஷாப் வைக்க ஆசைப்படுகிறேன். சொந்தமாக தொடங்குவதா? கூட்டு சேர்ந்து செய்யலாமா? அல்லது வேறு தொழில் செய்யலாமா?
பதில்:
சொந்தமாகவும் வைக்க வேண்டாம். கூட்டு சேர்ந்தும் வைக்க வேண்டாம். ஏழரைச்சனி முடியும் வரை வேலைக்குப் போகவும்.