adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 15 (2.12.14)
பி. ஆர், பாண்டிசேரி.
கேள்வி :
செவ் சுக் சந் ரா
ராசி
சூ,பு குரு
சனி ல கே

கடந்த வருடம் என் மூத்த பெண்ணிற்கு திருமணம் முடிந்து அதேநாளில் பெண் வீட்டிற்கு மாலையும் கழுத்துமாக வந்த மாப்பிள்ளை எனக்கு ஆண்மை இல்லை என்று சொல்லி வீட்டை விட்டுப் போய்விட்டார். சொல்ல முடியாத வேதனையில் இருக்கிறோம். என் மகளுக்கு இன்னொரு திருமணம் நடக்குமா? அரசு வேலை கிடைக்குமா?

பதில்:
துலாலக்னம் மேஷ ராசியாகி லக்னத்திற்கு இரண்டில் சனி. அவரே ராசிக்கு எட்டிலுமாகி லக்னத்திற்கு ஏழில் ராகு. ஏழுக்குடைய செவ்வாய் ஆறில் மறைவு. களத்திரகாரகன் சுக்கிரன் ஆறில் மறைந்து செவ்வாயுடன் ஒரே டிகிரியில் இணைவு என கடுமையான திருமண தோஷம் உள்ள மகளுக்கு இதற்கு சரியான தோஷ அமைப்புள்ள ஜாதகத்தைதான் இணைத்திருக்க வேண்டும். அதில் நீங்கள் தவறி இருக்கலாம்.

புத்திரகாரகன் குருவும் நீசம் பெற்றுள்ளதால் புத்திரதோஷமும் உள்ளது. இதுபோன்ற ஜாதகத்திற்கு பொருத்தம் பார்ப்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும். முறையான பரிகாரங்களை செய்தீர்களா என்றும் தெரியவில்லை. முதல் திருமணம் இதுபோன்ற கோணலாக முடிந்து போனதே நல்ல பரிகாரம்தான். அடுத்த திருமணம் அஷ்டமச்சனி முடிந்த பிறகு அமையும். அந்த வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். பத்தாம் இடத்தை சூரியன் பார்ப்பதாலும் ராசிக்கு பத்தாம் இடத்தில் அவர் இருப்பதாலும் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும்.

எம். ஜெகன்நாத், வேலூர் - 9.
கேள்வி :
ரா
ராசி  சந்
குரு
பு சனி சூ கே செவ் சுக்

2007 ல் திருமணம் நடந்ததில் இருந்து என் மனைவி என்னோடு வாழ மறுக்கிறாள். கண்டாலே கோபப்படுகிறாள். நான் எந்த தவறும் செய்யவில்லை. யாருக்கும் என்னை கண்டால் பிடிக்கவில்லை. நான் நிம்மதியாக இல்லை. ஜோதிடர்களிடம் ஏதாவது சாபம் இருக்கிறதா என்று கேட்டும் யாரும் சரியாக பதில் சொல்லவில்லை. உங்கள் பதில்களை பார்த்து நிம்மதி அடைந்து எனக்கு வழி கிடைக்கும் என்று எழுதும் இந்தக் கடிதம் உங்கள் கைக்கு கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்.

பதில் :

மீன லக்னம் கடக ராசியாகி லக்னாதிபதி குரு நீசம், இரண்டில் ராகு, ஏழில் செவ்வாய் நீச சுக்கிரன். எட்டில் சூரியன். ஒன்பதில் புதன், சனி என கடுமையான தோஷம் உள்ள இந்த ஜாதகத்திற்கு 22 வயதில் திருமணம் செய்தது தவறு.

லக்னாதிபதி வலுவில்லை எனில் மனைவி சுகம் உள்ளிட்ட எந்த சுகத்தையும் அனுபவிக்க முடியாது. இந்த தோஷம் 33 வயதில் உங்களுடைய புதன் தசை குருபுக்தியில் விலகும். அதேபுக்தியில் குழந்தை பிறந்த பின்பு எதிர்கால வாழ்க்கை கவலைகள் இன்றி சந்தோஷமாக இருக்கும்.

நல்ல மார்க் எடுப்பேனா?
பா. தனலட்சுமி, திருச்சி.
கேள்வி :
செவ் சந் சனி குரு
 பு சூ ராசி ரா
கே,ல
பத்தாம் வகுப்பு படிக்கிறேன். பிறந்ததில் இருந்து தாத்தா, பாட்டி வீட்டில் வளர்கிறேன். பொதுத்தேர்வில் நல்லமார்க் எடுப்பேனா? பிற்காலத்தில் எப்படி இருப்பேன்?
பதில்:

மகரலக்னம் மீனராசியாகி லக்னத்தில் சுக்கிரன், கேது. இரண்டில் சூரியன் புதன். மூன்றில் செவ்வாய் நான்கில் குரு, சனி.

கடந்த மூன்று வருடங்களாக உனக்கு நடந்து வந்த அஷ்டமச்சனி முடிந்து விட்டதால் இதுவரை உனக்கு இருந்தவந்த சோம்பல், அசதி, படித்தவை மறந்து போகுதல் போன்ற அனைத்தும் இனிமேல் நீங்கி மிகவும் பிரமாதமாக படித்து நல்ல மதிப்பெண் எடுப்பாய்.
லக்னாதிபதி சனி நான்கில் நீசமாகி குருவுடன் இணைந்து சூட்சும வலுப்பெற்று பத்தாம் வீட்டை பார்ப்பதாலும் புதன் வலுவாக உள்ளதாலும் வருங்காலத்தில் சொல்லிக் கொடுக்கும் துறையில் இருப்பாய். அடுத்தடுத்து யோக தசைகள் நடைபெற உள்ளதால் எதிர்காலம் மிகவும் நன்றாக இருக்கும்.
வி. எம் சுந்தரம், வேளச்சேரி.
கேள்வி :
கே
ராசி  குரு
 சந்,சூ செவ்
ரா ல  சனி பு சுக்

எப்படிப்பட்ட மாப்பிள்ளை (மருமகன்) எனக்கு அமைவார்? சொத்து விற்று கையில் வரவேண்டிய பெரிய தொகை எப்பொழுது கிடைக்கும்? இல்லை கிடைக்காதா? குருதசை எப்படி இருக்கும்?

பதில்:
மருகன் எப்படி அமைவார் என்று உங்கள் மகள் ஜாதகத்தில் தான் பார்க்க வேண்டும். விருச்சிகம் லக்னமாகி புதன் ஆட்சி, உச்சம் பெற்று ஓரளவு ஜோதிட ஞானம் உள்ள உங்களுக்கு இது தெரியாதா என்ன?
நடக்கும் தசாநாதன் ராகு லக்னத்தில் அமர்ந்து செவ்வாயின் பார்வையை பெற்று எட்டுக்குடைய புதனின் சாரம் வாங்கியதால் பூமியை விற்றால் விரயமாகும். எனவே இப்போது விற்காமல் இருப்பது நல்லது. விருச்சிக லக்னத்திற்கு புதன் வலுப் பெற்றால் கொடுத்துக் கெடுப்பார். அடுத்து வரும் உச்சம் பெற்ற குருவின் தசை சூரியனும் சந்திரனும் சிம்மத்தில் ஒன்று சேர்ந்து தர்மகர்மாதிபதி யோகம் பெற்ற உங்களின் அந்தஸ்து கௌரவத்திற்கு பங்கமின்றி நன்றாகவே இருக்கும். ஆனால் குரு உச்ச சனியின் பார்வை பெற்று புதனின் சாரம் பெற்றதால் நிறைவு இருக்காது.
ஆர். கோபால், பல்லாவரம்.
கேள்வி :

குழந்தை வேண்டும் என்று மருத்துவம் பார்த்து வருகிறேன். பணம் தான் செலவாகிறது. எங்கள் ஜாதகம் நன்றாகத் தான் உள்ளது என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். குழந்தைக்காக ஏங்குகிறோம். பரிகாரம் செய்ய வேண்டுமா? பதிலுக்கு காத்திருக்கிறோம்.

பதில் :
செவ் குரு
ராசி  சந்
கே
 சனி ல சூ பு சுக்
ல கே ராசி சந் செவ்
 குரு,ரா சனி
 பு சுக் சூ
              கணவனுக்கு கும்ப லக்னம் கடக ராசியாகி புத்திரஸ்தானதிபதி புதன் ராகுவின் சாரத்தில் அமர்ந்து, புத்திரகாரகன் குருபகவான் ராகுவுடன் மூன்று டிகிரிக்குள் இணைந்து புத்திர தோஷம். ராசிக்கு ஐந்திற்குடைய செவ்வாயும் நீசம் பெற்றது இன்னும் பலவீனம். மனைவிக்கு துலாலக்னம் கடக ராசியாகி புத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்து புத்திரகாரகன் குரு எட்டில் மறைந்தது புத்திரதோஷம்.
இருவருக்குமே கடுமையான புத்திர தோஷ அமைப்புகள் இருப்பதாலும் இருவரின் ராசியும் கடக ராசியாகி தற்போது கோட்சாரத்தில் ராசிக்கு ஐந்தில் சனி இருப்பதாலும் இன்னும் இரண்டு வருடங்களுக்கு புத்திர பாக்கியம் தாமதமாகும். கணவரின் ஜாதகப்படி லக்னத்தில் இருக்கும் கேதுவை குரு பார்ப்பதால் கேது தசையில் சுக்கிர புத்தியில் 2017 இறுதியில் முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறக்கும்.
குழந்தையின் எதிர்காலம் என்ன?
பி. பிரேமா, சிவகங்கை.
கேள்வி :
கே சந்
ராசி குரு ல
சூ சுக்
செவ்  சனி பு ரா

எனக்கு 12.9.14 அன்று காலை 3.15 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. என்ன பெயர் வைக்கலாம்? குழந்தையின் எதிர்காலம் பற்றி கூறுங்கள்.

பதில் :
கடக லக்னம் மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரத்தில் குழந்தை சுப ஜனனம். அஷ்டமாதிபதி சனி உச்சம் பெற்று லக்னாதிபதி சந்திரன் பத்தாம் கேந்திரம் அடைந்ததால் ஆயுள் தீர்க்கம். இரண்டிற்குடைய தனாதிபதி சூரியன் ஆட்சி பெற்று ஐந்திற்குடைய செவ்வாயும் ஆட்சி பெற்று, ஒன்பதிற்குடைய குருபகவான் உச்சம் பெற்று ஒன்பதாம் இடத்தையே பார்த்தது நல்ல யோக அமைப்பு என்பதால் ராஜ யோகத்தில் பிறந்த குழந்தை என்று சொல்லுவேன். அம்சத்திலும் இவர்கள் வலுக்குறையாதது மிகச் சிறப்பு.
வித்தியாகாரகன் புதன் உச்சம் பெற்றதால் குழந்தை மிகச்சிறந்த புத்திசாலியாகவும் எதையும் எளிதாக கிரகித்து புரிந்து கொள்பவளாகவும் இருப்பாள். 25 வயதிற்கு மேல் சூரிய, சந்திர, செவ்வாய் மூன்றில் இருக்கும் ராகு, உச்ச குருவின் தசைகள் நடக்க இருப்பதால் பிரகாசமான எதிர்காலத்துடனும் பிரபலமாகவும் இருக்கக்கூடிய ஜாதகம்.

சூரியன் வலுப்பெற்று பத்தாம் இடமும் வலுவாக உள்ளதால் அரசுத் துறையில் உயர்ந்த அதிகாரியாக வருவாள். இந்தக் குழந்தையால் பெற்றவர்களுக்கு பெருமை இருக்கும். பெயர் வைப்பது உங்கள் இருவரின் உரிமை என்பதால் பெற்றவர்கள் இருவரும் மனமொத்து வைக்கும் பெயரே நல்லது. நியூமலாரஜி தேவையில்லை. எனது விருப்பம் என்று சொன்னால் பிறந்த நட்சத்திரமான அஸ்வினி என்ற பெயர் அழகு.

கே. சி. சிதம்பரம், கோவை.
கேள்வி :

மகள், மருமகன் ஜாதகம் இணைத்துள்ளேன். திருமணம் ஆன உடனேயே பிரச்னை ஏற்பட்டு எங்கள் வீட்டில்தான் இருக்கிறாள். பலமுறை பேசியும் பயன் இல்லை. இரண்டு பேருமே வாழ விருப்பமில்லை என்று உறுதியாக கூறிவிட்டதால் விவாகரத்து வரை வந்திருக்கிறது. இவர்கள் சேர்ந்து வாழ்வார்களா? அல்லது மகளுக்கு வேறு திருமணம் செய்யலாமா? உள்ளூர் ஜோதிடர் ஜாதகங்கள் பொருந்தவில்லை. இது வேண்டாம். 

மகளுக்கு இன்னொரு திருமணம் செய்யுங்கள் என்கிறார். நல்ல தீர்வை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
பதில் :
ரா
ராசி  சந்
குரு
 சூ சுக் ல,பு சனி  செவ் கே
குரு
ராசி
சந்
லக் சனி  சூ,பு சுக் செவ் கே

இன்றைய தலைமுறைக்கு திருமணம் என்பது விளையாட்டுக் காரியமாகிவிட்டது. கல்யாணமாகி ஓரிரு மாதங்களுக்குள் ஒருவரை ஒருவர் முழுமையாகத் தெரிந்து கொண்டு வாழ விருப்பம் இல்லை என்று உறுதியாக சொல்லி விட்டார்கள். பெற்றவர்கள் தான் பைத்தியக்காரர்கள்..

உங்கள் மகள், மருமகன் இருவருக்குமே விருச்சிக லக்னமாகி லக்னத்தில் சனி. எனவே இருவருக்குமே ஈகோ இருக்கும். இந்த ஈகோ தான் பிரச்னைகளுக்கு காரணம். பொருத்தமான ஜாதகங்கள் தான். மகளுக்கு ஐந்தாம் இடத்தில் ராகு அமர்ந்து ஐந்திற்குடைய குரு ஆறில் மறைந்து கடுமையான புத்திர தோஷம் ஏற்பட்டுள்ளதால் திருமணம் ஆகியும் குழந்தை பெற விடாமல் கிரகதோஷம் வேலை செய்கிறது.

இருவருக்குமே ஒரே லக்னமாகி ஏழரைச்சனி, அஷ்டமச்சனி அமைப்புகள் இல்லாததாலும் ஆறு, எட்டிற்குடையவன் தசை நடைபெறாததாலும் பிரிந்து போக வாய்ப்பில்லை. பிரிவது மகளுக்கு நல்லதல்ல. உங்கள் மகளுக்கு புத்திமதி சொல்லி மருமகனையும் நயந்து பேசி சேர்த்து வையுங்கள்.

எம். தங்கவேலு, கோவை - 39.
சந்
ராசி  சுக் ரா
கே  சூ,பு குரு
 செவ் ல சனி
கேள்வி :
 

நல்ல அரசுப் பணியில் இருக்கும் என் 34 வயது மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?

பதில்:

4-4-2015 இருந்து 24-10-2015- க்குள் நடக்கும்.

5 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 15 (2.12.14)

  1. My daughters date of birth is 16.11.1988. Time 1.12am.I have looking varan for my girl. Can i know when is the best timefor her to get married.my girl is born in singapore.

    1. வணக்கம்
      குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.

      ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
      வணக்கம்
      தேவி
      ADMIN

  2. My date of birth is june 7, 1991. Time 1.05 am
    Rasi- Pisces
    Star- utthratathi
    Can i know about my career?
    When will I get job? I am trying hardly..

    1. வணக்கம்
      குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.

      ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
      வணக்கம்
      தேவி
      ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *