adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 10 (28.10.14)

எம். சண்முகத்துரை, பாவூர்சத்திரம்.

ல சுக் பு சூ,செ குரு சந்
ராசி கே
ரா
சனி
 
கேள்வி :
நூறு வருட பழமையான பூர்வீக வீட்டில் வசிக்கிறோம். இடத்தை விற்று கட்டிய வீட்டை விலைக்கு வாங்கி குடியேற நினைக்கிறோம். எப்போது நடக்கும்?
பதில்:
மீனலக்னம் மிதுனராசியாகி லக்னாதிபதி குரு மூன்றாம் இடத்தில் அமர்ந்து உச்சசுக்கிரனுடன் பரிவர்த்தனை ஆகி இரண்டில் புதனும், மூன்றில் சூரியன் செவ்வாய், ஐந்தில் கேது, ஏழில் சனி அமர்ந்த ஜாதகம்.
தற்போது புதுவீட்டைக் குறிக்கும் நான்கிற்குடைய புதன்தசையில் யோகாதிபதி செவ்வாய் புக்தி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 24 முதல் 2016 ஜனவரிவரை நடக்க இருக்கிறது. புக்திநாதன் செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்து சுக்கிரன் உச்சம் பெற்றதால் அடுத்த வருடம் புதுவீடு வாங்கி குடியேறுவீர்கள்.
மா. கணபதி, மன்னார்குடி.
சனி கே
 குரு சந் ராசி செவ் சூ
 பு
 ரா  சுக்
கேள்வி :
இழைப்புப்பட்டறையில் வேலை செய்கிறேன். அடிக்கடி கையில் அடிபட்டு வேலைக்குப் போக முடியவில்லை. எவ்வளவு வருமானம் வந்தாலும் மிச்சம் என்பதே இல்லை. வீடு கட்டவும் முடியவில்லை. மாற்று வேலை செய்யலாமா? ஏதாவது தொழில் செய்தால் முன்னேற வாய்ப்புக்கள் இருக்கிறதா? நல்லவழி காட்டுங்கள்.
பதில்:
மிதுனலக்னம் கும்பராசியாகி லக்னாதிபதி மூன்றில் மறைந்து குருவும் சனியும் பரிவர்த்தனையாகி தர்மகர்மாதிபதி யோகத்தில் அமர்ந்து லக்னத்தையும், லக்னாதிபதியையும் குரு பார்த்த ஜாதகம். ஐந்தில் ராகு அமர்ந்து ஐந்திற்குடைய சுக்கிரன் நீசமாகி ஐந்தாம் இடத்தை நீசசெவ்வாயும், ஐந்துக்குடையவனை சனியும் பார்த்து பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுவிழந்த அமைப்பு.
மிதுனலக்னத்திற்கு தர்மகர்மாதிபதி யோகம் வேலை செய்யாது என்ற சந்திர காவிய விதிக்கு உங்கள் ஜாதகம் உதாரணம். பத்தில் சனி வக்ரமானதால் 76 வயதிலும் இழைப்புப்பட்டறையில் உழைப்பு. தற்போது பதினொன்றாம் இடத்தில் உள்ள கேதுதசை நடக்கிறது. வரும் ஜூலை மாதத்திற்கு பிறகு நல்ல மாற்றங்கள் உண்டாகி சேமிக்கும் அளவிற்கு வருமானங்களும் திருப்பங்களும் இருக்கும். ஜீவனாதிபதி குருவின் புக்தி நடப்பதால் ஜூலைக்கு மேல் இரும்பு சம்பந்தப்பட்ட சொந்தத்தொழில் செய்யலாம். மீதி இருக்கும் காலம் கஷ்டப்படாமல் இருப்பீர்கள்.
சேகர், வடலூர்.
குரு சந்,சனி
ராசி  ரா
கே சுக்
செவ் பு சூ 
 
கேள்வி :
பத்து வருடமாக கணவனை பிரிந்து என் மகள், பேரன் எனது பராமரிப்பில் இருக்கிறார்கள். மருமகன் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ வாய்ப்புண்டா? அவர்களின் எதிர்காலம் எப்படி? 80 வயது தகப்பனாரின் வேதனையை சொல்லத் தேவையில்லை.
பதில்:
பேரன் ரிஷிகேசின் ஜாதகப்படி ரிஷபலக்னமாகி ஒன்பதிற்குடைய சனிபகவான் பனிரெண்டில் மறைந்து நீசம் பெற்றாலும் சனியுடன் சந்திரன், குரு இணைந்து சனி வக்ரம் பெற்று சனிக்கு வீடு கொடுத்த செவ்வாய் லக்னகேந்திரத்தில் ஆட்சி பெற்றதால் சனி நீசபங்க வலிமை பெற்று விட்டார். தந்தையைக் குறிக்கும் சூரியபகவானும் அவனது ஜாதகத்தில் அம்சத்தில் உச்சம் பெற்று இருப்பதால் அப்பாவை அவன் மறுபடியும் பார்த்தே ஆக வேண்டும்.
ஆனால் தற்போது அவனது மேஷராசிக்கு அஷ்டமச்சனி ஆரம்பிக்க இருப்பதாலும், பிரிந்து போன உங்கள் மருமகன் ரமேசுக்கு துலாம் ராசிப்படி ஏழரைச்சனி நடப்பதாலும் இருவரின் சனி முடியும் நேரத்தில் தகப்பனும் மகனும் இணைவார்கள். உங்கள் மகளின் ஜாதகமும், பிறந்த விபரங்களும் தவறாக இருப்பதால் இன்னும் துல்லியமாக பதில் சொல்ல முடியவில்லை.
சி. மு. மனோகரன், அம்மன் குளம், கோவை - 45.
சந் கே  குரு
ராசி செவ்
 ல சனி
சூ பு சுக் ரா
 
கேள்வி :
37வயதாகும் என் மகள் சங்கீதாவிற்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதை பாரம்பரிய ஜோதிட முறைப்படி விளக்கும்படி குருஜி அவர்களை பணிவுடன் கேட்கிறேன்.
பதில்:
சங்கீதாவிற்கு சிம்மலக்னம், மீனராசியாகி லக்னாதிபதி சூரியன் புதனுடன் இணைந்து நீசம். லக்னாதிபதிக்கும் கணவன் ஸ்தானமான ஏழாம் இடத்திற்கும் லக்னத்தில் உள்ள சனியின் பார்வை. தாம்பத்திய சுகத்தை கொடுப்பவனான சுக்கிரனும் நீசம். சுக்கிரன் நீசமானாலும் பரவாயில்லை பரிவர்த்தனையாகி இருக்கிறார். ஆனால் ராகுவுடன் நான்கு டிகிரிக்குள் இணைந்து முழுக்க பலவீனமாகி இருக்கிறார்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்தாலே வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய சுகங்களும், பாக்கியங்களும் சரியான நேரத்திற்கு கிடைக்காது என்பதை அடிக்கடி எழுதுகிறேன்.
உங்கள் மகளுக்கு லக்னாதிபதி சூரியனும், ஐந்திற்குடைய குருவும் ராகுவின் சாரத்தில் இருக்கிறார்கள். சுக்கிரனையும் ராகு பலவீனப்படுத்தி இருக்கிறார். திருமண தோஷங்கள் பெரும்பாலும் ராகுபகவானாலேயே ஏற்படுத்தப் படுகின்றன. சரியான நேரத்தில் திருமணம் அமைய ராகு தடை ஏற்படுத்துகிறார். கடந்த மூன்று வருடங்களாக உங்கள் மகளுக்கு அஷ்டமச்சனி வேறு. லக்னாதிபதியை நீச செவ்வாயும் குருவும் பார்ப்பதால் சூரியனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களையும் ராகுவிற்கான ப்ரீத்திகளையும் செய்தால் உடனடியாக பலன் உண்டு. தற்போது நடக்கும் சுக்கிரதசை ராகுபுக்தியில் புதன் அந்தரத்தில் நவம்பர் 30, 2014 முதல் மே 4, 2015க்குள் நிச்சயம் திருமணம் நடைபெறும்.
எதிரியை அழிக்க முடியுமா?
கோ. வீரமணி, ஜெயங்கொண்டம்.
ல,சுக் செவ் சந் ரா
சூ பு ராசி
குரு
சனி கே
கேள்வி :
நகராட்சியில் பணிபுரிந்து வந்தேன். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்ற காரணத்தால் சிலரின் நயவஞ்சகத்தால் திட்டமிட்டு லஞ்ச வழக்கில் சிக்க வைக்கப்பட்டு தற்போது தற்காலிக பணிநீக்கத்தில் இருக்கிறேன். வழக்கில் இருந்து எப்போது விடுபடுவேன்? மீண்டும் பணி கிடைக்க எந்தக் கடவுளை வணங்க வேண்டும்? எதிரிகளை அழிக்கும் பரிகாரம் என்ன?
பதில்:
மீனலக்னம் மேஷராசியாகி (இணைக்கப்பட்டுள்ள ஜாதகப்படி மேஷலக்னம் என்பது தவறு). லக்னாதிபதி குரு நீசமாகி ஒன்பதில் அமர்ந்த சனியின் பார்வையை பெற்று வலுவிழந்தும், ஆறுக்குடைய சூரியன் ஆறாம் வீட்டை பார்த்து வலுப்படுத்தியும், லக்னத்தில் செவ்வாயுடன் சுக்கிரன் உச்சம் பெற்ற ஜாதகம். தற்போது இரண்டில் உள்ள ஆறுக்குடைய சூரியனின் சாரம் பெற்ற ராகுதசையில் சுயபுக்தி நடக்கிறது.
நான் அடிக்கடி எழுதுவது போல ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்து ஆறு எட்டுக்குடையவர்கள் வலுப்பெற்றால் தாங்கமுடியாத எதிரிகள் தொந்தரவு இருக்கத்தான் செய்யும். ராகுதசை ஆரம்பித்ததுமே உங்களுக்கு வேலையில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும். வரும் சனிப்பெயர்ச்சியில் உங்களுக்கு அஷ்டமச்சனி ஆரம்பிப்பதும் சரியான நிலை அல்ல.
லக்னாதிபதி குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்யுங்கள். ஜென்மநட்சத்திரம் அன்று ஆலங்குடி சென்று வழிபட்டு கோவிலின் உள்ளே ஒன்றரை மணிநேரம் இருங்கள். ஒரு வியாழக்கிழமை குருஹோரையில் ஒரு யானைக்கு அதற்கு என்ன உணவு பிடிக்கும் என்று பாகனிடம் கேட்டு தெரிந்து கொண்டு உணவு அளியுங்கள். 16 வியாழன் தொடர்ந்து 16 லட்டு தட்சணாமூர்த்தி சன்னதியில் தானம் கொடுங்கள்.
உள்ளாடைகள் இனிமேல் மஞ்சள்நிறத்திலேயே அணியுங்கள். ராகுதசை முடியும் வரை வருடம் ஒரு முறை ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு ஸ்ரீகாளஹஸ்தி சென்று தங்கி அதிகாலை ருத்ராபிஷேகம் செய்யுங்கள். அடுத்த வருடம் ஆரம்பமாகும் குருபுக்தியில் மீண்டும் வேலையில் சேர்வீர்கள். எதிரிகளை அழிக்க சத்ருசம்ஹார ஹோமம் செய்ய வேண்டும்.
எஸ். பி. மோட்சானந்தம், சின்னாளப்பட்டி.
சூ,பு செ,சுக்
ராசி  ரா
கே
 சந் குரு சனி
 
கேள்வி :
ஒரே மகனுக்கு திருமணம் ஆகவில்லையே என்ற கவலையில் என் மனைவியும் ஆறு மாதத்திற்கு முன்பு மறைந்து விட்டார். பல்வேறு முயற்சி எடுத்தும் பலன் இல்லை. மூலம் நட்சத்திரம் என்று யோசனை செய்கிறார்கள். ஜோதிடர்கள் சொன்ன அனைத்து பரிகாரங்களும் செய்து விட்டேன். வரும் சனிப்பெயர்ச்சியில் அவனுக்கு ஏழரைச்சனி வேறு ஆரம்பமாவதை நினைத்து திருமணம் இன்னும் தடைப்படுமோ என்றும் கவலையாக இருக்கிறது. எப்பொழுது திருமணம் நடக்கும்? குருஜி அவர்களின் நல்வாக்கை வேண்டுகிறேன்.
பதில்:
மகன் பாலாஜிக்கு மீனலக்னம் தனுசுராசியாகி லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய், ஏழில் சனி என கடுமையான தாரதோஷமும். ராசிக்கு இரண்டில் கேது, எட்டில் ராகு என நாகதோஷமும் அமைந்த ஜாதகம். அதோடு ஆறுக்கும் எட்டிற்கும் உடைய உச்சசூரியனும் சுக்கிரனும் இரண்டாம் இடமான குடும்ப பாவத்தில் அமர்ந்து குடும்ப வீடும் கெட்டதால் இதுவரை திருமணம் ஆகவில்லை.
மூலநட்சத்திரம் என்பது இரண்டாம்பட்சம்தான். தோஷம் இருப்பதும் ஏழாம் இடத்திற்கு சுபர்பார்வை கிடைக்காததும் திருமணம் தாமதமாகும் அமைப்புகள். ஆயினும் லக்னாதிபதி ஏழில் அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பதால் தாமதமானாலும் நல்ல மனைவியும் சிறப்பான வாழ்க்கையும் அமையும்.

ஜாதகப்படி இதுவரை நீங்கள் முறையான பரிகாரங்கள் செய்திருக்க வாய்ப்பில்லை. முறையான பரிகாரங்களை தெரிந்து கொள்வதற்கும் பரம்பொருளின் அனுமதி வேண்டும். திருமணத்தையும் குழந்தை பாக்கியத்தையும் ஏழரைச்சனி தடை செய்யாது. பரிகாரங்கள் எழுத இங்கு இடம் போதாது. முறையான பரிகாரங்களுக்குப் பின் வருகின்ற மார்ச் மாதம் 25-ந்தேதிக்குள் திருமணம் நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *