adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 4 (16.9.2014)

கோ.முருகேசன்,

கவுந்தபாடி.
சந் ரா
ராசி
கே செவ் பு.சூ.சுக்
கேள்வி: 
என் மகன் சரவணனுக்கு எப்பொழுது திருமணம் ஆகும்.?
பதில்:
ரிஷபலக்னம் மிதுனராசி புனர்பூச நட்சத்திரமாகி லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் இருந்து அவரே ராசிக்கு ஏழிலும் இருக்கிறார். ராசியில் ராகு. எட்டில் இருக்கும் செவ்வாயை சூரியன், சுக்கிரன், புதன் குருவுடன் இணைந்துள்ள உச்சசனி பார்க்கிறார். மேலும் புத்திர ஸ்தானாதிபதி புதனும் புத்திரகாரகன் குருவும் நீசசூரியனுடன் இணைந்து அஸ்தமனம் பெற்றது கடுமையான புத்திர தோஷம்.  களத்திரகாரகன் சுக்கிரனும் சூரியனுடன் ஒரே டிகிரியில் இணைந்து அஸ்தமனமான நிலையில் ஏழுக்குடைய செவ்வாயும் எட்டில் மறைந்து ராகு கேதுக்களுடன் சம்மந்தம் பெற்றுள்ளார்.
புத்திரதோஷத்தை தவிர்த்து மற்ற கிரகங்களுக்கு முறையான பரிகாரங்களை செய்யுங்கள். புத்திரதோஷத்திற்கு மட்டும் திருமணத்திற்குப் பிறகே பரிகாரம் செய்யவேண்டும். 2016 - ம் ஆண்டு திருமணம் நடக்கும்.
கே. கணேசன்,
திருப்பத்தூர்.
சனி ரா குரு
ராசி  செவ் பு.சுக்
 சூ சந்
 கே
கேள்வி:
நடக்கும் குருதசையில் தொழில் முன்னேற்றம் இல்லை பல லட்சம் கடன் உள்ளது. இருபது வருடமாக ஜாதகம் பார்க்கிறேன். பரிகாரங்கள் செய்தும் வெற்றி இல்லை. என் எதிர்காலம் என்ன? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 
பதில்:
மகரலக்னமாகி சனி மூன்றில் இருக்க, புதன் சுக்கிரன் நீசசெவ்வாய் ஏழில் இருந்து லக்னத்தைப் பார்க்கிறார்கள். எட்டில் சூரியன், சந்திரன், இணைந்து அமாவாசையோகம். ஆறில் குரு மறைந்து பத்தில் உள்ள கேதுவைப் பார்க்கிறார். விரயாதிபதியான குருபகவான் ஆறில் மறைந்து சுயசாரத்தில் அமர்ந்து தனது விரய வீட்டையும் ஜீவனஸ்தானத்தையும் குடும்ப வீட்டையும் பார்த்து தசை நடத்துகிறார்.
பனிரெண்டாம் வீட்டை குரு பார்ப்பதால் முதல் எட்டு வருடங்களுக்கு கடுமையான தொழில் நஷ்டத்தையும், ஆறாம் இடத்தில் இருப்பதால் தசை முழுவதும் கடன் தொல்லையையும் தருவார். தற்போதைய குருதசை சுக்கிர புக்தியில் ஆறுதலாக சில நன்மைகள்  நடக்கும். காளிதாசரின் சொல்படி குருதசையில் சுக்கிரபுக்தியும் சுக்கிரதசையில் குருபுக்தியும் முழு நன்மைகளைச் செய்ய ஆட்டார்கள்.
குருதசையில் நீங்கள் எந்தத் தொழில் செய்தாலும் இறுதியில் கடனில்தான் முடியும். சனிதசையில் விறகுத்தொழிலை விரிவுப்படுத்தி லாபம் பார்க்க முடியும். சனிதசை முதல் எதிர்காலம் நன்றாகவே இருக்கும்.  இடமின்மை காரணமாக பரிகாரங்களை இங்கு எழுதுவதற்கு இயலாது.
    
விபரீத ராஜயோகம் வேலை செய்யுமா?
டி. கேசவன்,
கடலூர், OT.  
கே சந்
ராசி  ல
சுக்
சனி குரு பு,ரா செ,சூ
கேள்வி:
நீங்கள் மாலைமலரில் எழுதும் ராசிபலன்கள் எனக்கு மிகவும் சரியாக இருக்கிறது. தபால்காரராக இருக்கிறேன். குறைந்த சம்பளம். 35  வருடமாக போராட்டமான வாழ்க்கை. நடக்கும் சனிதசை யோகம் செய்யுமா? பொருளாதார வசதி, சொந்தவீடு உண்டா? எட்டாம் அதிபதி ஆறில் இருப்பது விபரீத ராஜயோகம் என்று சில ஜோதிடர்கள் சொன்னார்கள். இந்த யோகம் வேலை செய்யுமா? எப்போது?
பதில்:
கடகலக்னம் ரிஷப ராசியாகி லக்னத்தையும் லக்னாதிபதியையும் ஐந்தில் அமர்ந்த குருபகவான் பார்த்து லக்னாதிபதியும்  உச்சமான  ராஜயோக அமைப்புள்ள ஜாதகம்தான். ஆனால் என்னதான் ஜாதகம் யோகமாக இருந்தாலும் நடக்கும் தசைகளும் யோகத்தை எடுத்துச் செய்ய நல்ல முறையில் அமைய வேண்டும்.
இங்கே ராகு மூன்றில் அமர்ந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த உச்சபுதனுடன் அமர்ந்தது தவறு. ஒரு உச்சகிரகத்துடன் இணையும் ராகு நன்மைகளைத் தரமாட்டார். அதே ராகு அவருடன் இணைந்துள்ள தனாதிபதி சூரியனையும் யோகாதிபதி செவ்வாயையும் ஐந்து டிகிரிக்குள் சேர்ந்து கிரகணதோஷம் அடையச் செய்கிறார். எனவே ஒரு ஜாதகத்தின் மிக முக்கியமான இரண்டு பத்துக்குடையவர்கள் வலுவிழந்து போனார்கள்.
அடுத்து நடைபெற்ற குருதசை ஆறுக்குடையவனாகி எட்டுக்குடைய சனியின் சாரம் பெற்றதால் அதுவும் நன்மை செய்யவில்லை. தற்பொழுது நடக்கும் சனிதசையும் அஷ்டமாதிபதியாகி ஆறாம் வீட்டில் அமர்ந்து தசை நடத்துகிறார். விபரீதராஜயோகம் எல்லாம் கிடக்கட்டும். ஒரு கிரகத்திற்கோ அல்லது தசைக்கோ ஆறு எட்டு சம்பந்தம் ஏற்பட்டாலே அது நல்ல பலன்களை செய்யாது.
ஆறு எட்டு பனிரெண்டுக்குடையவர்கள் இணைந்தோ சம்பந்தம் பெற்றோ ஆறு எட்டு பனிரெண்டில் மாறி அமர்வதுதான் விபரீத ராஜயோகம். இப்படி ஒரு கிரகம் மட்டும் அல்ல. யோகம் என்றாலே இரண்டு கிரகங்களாவது சேர்வதுதான்.
உங்கள் ஜாதகத்தில் ஜீவனாதிபதி ராகுவுடன் கெட்டு உச்சபுதனுடன் இணைந்து புதன் வீட்டில் அமர்ந்ததால் தபால்காரர் பணியில் இருக்கிறீர்கள்.  தனாதிபதி கெட்டாலே பொருளாதாரநிலை போராட்டம்தான்.  சனிதசை சுக்கிர புக்தியில் சொந்த வீடு மனைவி பேரில் அமையும்.
கே. செல்லம்,
நாகர்கோவில்.
கேள்வி:
என் மகனுக்கு வரும் வரனெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி தட்டிப் போகிறது. எப்போது திருமணம் நடக்கும்?
பதில்:
சுப்ரமணியத்திற்கு மீனராசியாகி அஷ்டமச்சனி முடியப்போவதால்  வரும் ஜூலை மாதத்திற்குள் திருமணமாகி விடும். கவலை வேண்டாம்.

4 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 4 (16.9.2014)

 1. 25-08-1994,Dharmapuri, 7.40pm, What type of job? Can i government post? Marriage relation or other ?

  1. வணக்கம்
   குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.

   ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி

  1. வணக்கம்
   இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.

   ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி
   ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *