adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 2 A (26.8.14)
சனியைக் கும்பிடாதீர்கள்..!
எஸ்.எம்.ரவிக்குமார்,
சத்தியமங்கலம்.
கேள்வி:
சந்,சுக் ரா சூ சனி பு
ராசி
செவ்  குரு கே
நாற்பத்தி ஆறு வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. போகாத கோவில் இல்லை. கும்பிடாத தெய்வம் இல்லை. தினசரி கூலிவேலை செய்து வயதான தாய் தந்தையை பராமரித்துக் கொண்டு இருக்கிறேன். திருமணம் நடக்குமா? சொந்தமாக தொழில் செய்வேனா இல்லை கூலிவேலைதானா? மாலைமலரை தொடர்ந்து படிக்கும் நான் குருஜி அவர்கள் என்ன பதில் தந்தாலும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்...
பதில்:
சனி வலுப்பெற்றால் கூலிவேலைதான் எனும் என்னுடைய “பாபக் கிரகங்களின் சூட்சும வலுத்தியரி”க்கு உங்களின் ஜாதகமும் இன்னொரு உதாரணம்.
மகர லக்னத்திற்கு சனி வலுவிழந்து நீசம் பெற்று சூட்சுமவலு அடைந்திருந்தால் நல்ல சொகுசு வாழ்க்கை கிடைத்திருக்கும். ஆனால் இங்கு லக்னாதிபதி சனி நீசம் பெற்றதோடு மட்டுமின்றி உச்சசூரியனுடன் இணைந்து நீசபங்கமாகி உச்சபலம் அடைந்து விட்டார். வலுபெற்ற சனி லக்னத்தையும் ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தையும் பார்த்துக் கெடுத்து தனது காரகத்துவத்தின்படி உங்களை கூலி வேலை செய்ய வைக்கிறார்.
அடுத்து ஏழுக்குடைய சந்திரனும், களத்திரகாரகன் சுக்கிரனும் ராகுவுடன் இணைந்து பலவீனமானார்கள். ராசிக்கு இரண்டில் சனி வலுப்பெற்றும், லக்னத்திற்கு இரண்டாம் வீட்டை ஆட்சி பெற்ற பாதகாதிபதி செவ்வாய் பார்த்தும் குடும்பபாவமும் கெட்டது. தற்போது மகர லக்னத்திற்கு வரவே கூடாத உச்சம்பெற்ற அஷ்டமாதிபதி சூரியதசையும் அஷ்டமச்சனியும் நடக்கின்றன.
 
இப்பிறவியின் அனைத்துமே சென்ற பிறவியின் கர்மா என்றாலும் ஜோதிடனின் கணிப்பையும் மீறி அற்புதங்கள் நடத்த பரம்பொருளால் முடியும். சனிபகவானுக்கென உள்ள விஷேச திருத்தலங்களுக்கு செல்ல வேண்டாம். தோஷம் இன்னும் அதிகமாகும். தனித்த சந்நிதியில் உள்ள சனிபகவானின் முன் செல்ல வேண்டாம். சனியைக் கும்பிடாதீர்கள். பதிலாக உங்கள் ஊரில் உள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மனமுருக முறையிடுங்கள். அவர் தன் சீடனான சனியின் வலுவைக்குறைத்து உங்களுக்கு நல்வழி காட்டுவார்.
எஸ். கார்த்திகேயன்,
மாலைமலர் பிரியன்.
கேள்வி:
கே ல குரு
ராசி  சந் செவ்
 சனி
பு சூ சுக்  ரா
  முப்பத்தி ஏழு வயதாகியும் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. எப்போது நடக்கும்? எதிர்காலம் எப்படி? வெளிநாடு செல்வேனா? நல்லவேலை எப்போது?
பதில்:
மிதுனலக்னம் கடகராசியாகி லக்னத்தில் குருவும் ஏழில் புதனும் பரிவர்த்தனை பெற்ற யோகஜாதகம். லக்னத்திற்கு இரண்டில் நீசபங்க செவ்வாய். ராசிக்கு இரண்டில் சனி. களத்திரகாரகன் சுக்கிரன் ஆறில் மறைவு. ஐந்தாமிடத்தை சனி செவ்வாய் பார்த்து ஐந்துக்குடையவன் வலுவிழந்த பரிபூரண புத்திர தோஷமும் உடைய ஜாதகம்.
திருமணம் என்பதே சந்ததிவிருத்திக்குத்தான் என்பதால் புத்திரதோஷம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும். தற்போதைய சுக்கிரதசையில் சுயபுக்தியிலேயே திருமணம் நடக்கும். சுக்கிரன் பனிரெண்டுக்குடையவனாகி அந்த வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்வீர்கள். அடுத்த சூரிய சந்திர செவ்வாய் தசைகள் வெளிநாட்டு தொடர்பு கொண்டிருப்பதால் வெளிநாட்டிலேயே செட்டில் ஆவீர்கள். சுக்கிரதசை அனைத்து யோகங்களையும் செய்யும்.
பி. ஜெயராஜ்,
உள்ளகரம். சென்னை.
கேள்வி:
வீடு ராசியில்லை என்று சொந்த வீட்டை விட்டு விட்டு வாடகை வீட்டிற்கு எனது மகன் மருமகள் பேத்தியுடன் தனிக்குடித்தனம் சென்று விட்டான். மனைவியும் நானும் மட்டும் தனியாக இருக்கிறோம். திரும்ப வருவார்களா?
பதில்:
பேத்தியுடன் இருக்க முடியாத உங்களின் வேதனை எனக்குப் புரிகிறது. உங்கள் மகனின் ஜாதகத்தை மட்டும் பார்த்து இந்த விஷயத்தை நான் கணிக்க முடியாது. உங்கள் இருவர் ஜாதகத்திலும் மகனைப் பிரியும் அமைப்பு அல்லது ஏழரைச்சனி அஷ்டமச்சனி இருக்கலாம். அதையும் பார்த்தால்தான் தெளிவான பதில் சொல்ல முடியும்.
 
பி .விஜய்சக்கரவர்த்தி,
சத்தியமங்கலம்.
கேள்வி:
ஐந்துமுறை அரசுவேலைக்கு தேர்வு எழுதியும் வெற்றி இல்லை. அரசு வேலை கிடைக்குமா?
ராசி  ரா
கே  ல
செவ் பு.சூ சந்  சுக்  குரு சனி
பதில்:
சிம்மலக்னம் விருச்சிக ராசி. நான்காம் வீட்டில் சூரியனும் சந்திரனும் புதனும் இணைந்து பத்தாம் வீட்டிற்குப் பார்வை. சந்திரன் நீசமானாலும் திக்பலம். சுக்கிரதசையில் சுயபுக்தி. ஏழரைச்சனி நடப்பதால் இதுவரை வெற்றி இல்லை.
கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற ஜீவனாதிபதி சுக்கிரன் தன் கேந்திர வீட்டிற்கு ஆறில் மறைந்து மூன்றில் ஆட்சி பெற்று குருவின் விசாக நட்சத்திரத்தில் இருக்கிறார். பத்தாம் வீட்டை இரண்டில் இருக்கும் குருவும் பார்ப்பதால் அடுத்த வருடம் சுக்கிரதசை சூரியபுக்தியில் நிச்சயம் அரசு வேலை உண்டு.

9 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 2 A (26.8.14)

  1. My son’s date of birth 22/02/1985 time of birth 10:43 AM Place of birth New York USA.
    He has masters in economic degree. He does not have a job for past 6 years. He worked some jobs with out pay. When he will get a job? Will he ever get a job. How is his future. I appreciate your reply.
    Thanks
    Worried
    Mom

    1. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.

      ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
      வணக்கம்
      தேவி
      ADMIN

  2. Dear guruji

    Birth date 4-11-1988
    இரவு 11.40
    சென்னை

    Lots of problems guruji , no education , problems with my mother , brothers and everybody .
    Pls show some remediez

    1. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.

      ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
      வணக்கம்
      தேவி
      ADMIN

  3. ஜாதகத்தில், செவ்வாய் இருக்கும் இடமானது எட்டாம் ம் வீடு – லக்னத்தில் இருந்து. அதே சமயம் சந்திரன் நின்ற ராசியிலிருந்து செவ்வாய் இருக்கும் இடமானது பன்னிரெண்டாம் வீடு.
    DOB : 14/09/1990
    Rameshkumar J
    Contact : 9789791545
    Birth time : 9.35 am
    Birth Palace : coimbatore

    1. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.

      ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
      வணக்கம்
      தேவி
      ADMIN

  4. DEAR GURUJI,
    DATE OF BIRTH: 11-05-1974
    TIME : 0855 A.M
    LOST MY PERMANENT JOB LAST YEAR. WROTE MANY EXAMS FOR BANK JOB. JUST FAILED BY 1 MARK. VERY UPSET. NO PERMANENT JOB NOW. PLEASE HELP ME.

    1. வணக்கம்
      குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.

      ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
      வணக்கம்
      தேவி
      ADMIN

  5. I am Mohan simmarasi pooram natchatthiram birth 12/03/1998 pls life detils message pannunga romba kadttamaa irrukku correctaana job illa so pls send me

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *