adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 2 (26.8.14)

ஏ.என். செல்வராஜ்.

பெருந்துறை
கேள்வி:
பத்தாம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு நிறங்களை அறிய முடியாத வண்ணப்பார்வைக் குறைபாடு இருக்கிறது. அவனுக்கு உயர்நிலைக் கல்வி எந்த துறையில், என்ன வேலை என்று கூற வேண்டுகிறேன்.
குரு சனி ரா
ராசி
சந் சூ செவ்
கே  பு சுக்
பதில். விருச்சிகலக்னம், மகரராசி. ஏழில் அமர்ந்த குருவும் சனியும், பத்தாமிட செவ்வாயும் லக்னத்தைப் பார்க்கிறார்கள். ஒன்று பத்துக்குடையவர்கள் இணைவது நல்ல யோகம். அதோடு ராசிக்கும் உச்சம் பெற்ற புதனுக்கும் குருவின் பார்வை. மூன்று கிரகங்கள் திக்பலத்தில் இருப்பதும் வெகு சிறப்பு. இரண்டாமிடத்தோடு சம்பந்தம் பெற்ற ராகு கேதுக்களால் இப்போது வண்ணக் குறைபாடு பிரச்னை. இந்தக் குறை இருபத்தி மூன்று வயதில் ராகு தசை முடிந்ததும் நீங்கும்.
சூரியன் ஆட்சி பெற்று புதனும் வலுப்பெற்றதால் கம்ப்யூட்டர் கணக்குத்துறைகளில் படிப்பும், அரசுத்துறையில் அதிகாரம் செய்யும் வேலையும் அமையும். ராஜயோக ஜாதகம் என்பதாலும் அடுத்தடுத்து யோகதசைகள் நடக்க உள்ளதாலும் மகனைப் பற்றி கவலைப்பட எதுவும் இல்லை. மாறாக மகனால் பெருமைகள் இருக்கும்.
டி. செல்வராஜி.
ராசிபுரம். கேள்வி.
சூ பு செவ் சுக் ரா
ராசி
கே குரு  சந் சனி
என் மகனின் ஜாதகத்தில் அந்த தோஷம் இந்த தோஷம் என்று ஒவ்வொரு ஜோதிடரும் ஒரு மாதிரி சொல்லி திருமணமே நடக்காது என்று குழப்புகிறார்கள். நானும் என்மனைவியும் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம். இது என்ன தோஷம் ? திருமணம் நடக்குமா? எப்போது?
பதில்.
மகன் திலீப்குமாருக்கு கன்னிலக்னம் துலாம்ராசி. லக்னத்திற்கு இரண்டில் சனி உச்சம். எட்டில் செவ்வாய் ஆட்சி. அதாவது ராசியில் சனி. ராசிக்கு ஏழில் செவ்வாய். இருவரும் சமசப்தமமாக பார்த்துக் கொள்கிறார்கள். தாம்பத்திய சுகம் தரும் திருமணகாரகன் சுக்கிரன் செவ்வாயுடன் எட்டில் மறைந்து சனிபார்வை பெறுகிறார். விரயாதிபதி சூரியன் மனைவி ஸ்தானமான ஏழாமிடத்தில் நீசபுதனுடன் அமர்ந்ததால் களத்திர ஸ்தானமும் வலுவிழந்து, லக்னாதிபதியும் வலுவிழந்து கடுமையான தாரதோஷம் ஏற்பட்ட ஜாதகம். தற்போது ஏழரைச்சனியும் நடக்கிறது.
இத்தனை தோஷம் இருந்தாலும் ஏழாம் வீட்டை அதன் அதிபதி குருபகவான் மூன்றில் இருந்து நட்பு வலுப்பெற்று பார்ப்பதாலும் அவர் தற்போதைய தசாநாதன் சனிக்கு இரண்டில் இருப்பதாலும் கண்டிப்பாக திருமணம் நடக்கும். கவலை வேண்டாம்.
லக்னாதிபதி புதன் வலு இல்லாமல் இருப்பதால் ஜென்ம நட்சத்திரம் அன்று திருவெண்காடு சென்று வழிபட்டு அங்குள்ள மூன்று தீர்த்தங்களில் நீராடி அந்தக் கோவிலின் உள்ளே ஒன்றரை மணிநேரம் உங்கள் மகனை இருக்கச் செய்யவும். ஒரு சனிக்கிழமை இரவு எட்டுமணியில் இருந்து ஒன்பது மணிக்குள் கால் இழந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஊன்றுகோல் தானம் செய்யவும். வசதி இருந்தால் மூன்று சக்கர சைக்கிள் கொடுக்கலாம். ஒரு வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் அல்லது கஞ்சனூர் சென்று வழிபடவும். 2015ம் வருடம் ஆவணி அல்லது கார்த்திகையில் சனிதசை குருபுக்தி சுக்கிர அந்தரத்தில் திருமணம் நடக்கும்.
கே. சரவணபவன்
பனங்காடு சேலம்.
கேள்வி.
லக் கே சனி
 குரு ராசி  சந்
சூ சுக்
ரா செவ் பு
இருபது வருடங்களாக டைல்ஸ் வேலை செய்கிறேன். வேலைக்குச் சென்றால் சம்பளப்பணம் வருவதில்லை. சொந்தமாக செய்தால் பணம் பறிபோகிறது. இரண்டு பெண்குழந்தைகளின் எதிர்காலம் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பிரச்னைகளின் தீர்வுக்கு தங்களின் அருள்வாக்கினை எதிர்பார்க்கிறேன்..
பதில்.
மேஷலக்னம் கடகராசி. லக்னாதிபதி செவ்வாய் ஆறில் உச்சபுதனுடன் இணைந்து லக்னத்தைப் பார்க்கிறார். சூரியனும் சந்திரனும் ஆட்சி பெற்றிருக்க ஒன்பதுக்குடைய குருபகவான் லாபஸ்தானத்தில் இருக்கிறார். அம்சத்திலும் யாரும் கெடவில்லை.
பிரமாதமான யோகஜாதகம்தான். ஆனால் பிறந்ததிலிருந்து லக்னபாவிகளான சனி புதன்தசைகளும் தற்போது சுக்ரதசையும் நடக்கிறது. ஜாதகம் யோகமாக இருந்தாலும் யோகதசைகள் நடப்பில் இருந்தால்தான் யோகம். இல்லையென்றால் அவயோகம்தான். தற்போதைய சுக்கிரதசை வரும் ஆவணி மாதம் சுயபுக்தி முடிந்தபிறகு நன்மை செய்யும். இதுவரை நடந்த கெடுதல்கள் இனிமேல் இருக்காது.
புத்திர ஸ்தானாதிபதி சூரியன் ஆட்சியாக இருந்து, ஐந்தாம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் குழந்தைகளைப் பற்றி கவலைப்பட வேண்டி இருக்காது. சுக்கிரதசை நடப்பதால் பெண்பிள்ளைகளுக்குரிய கடமைகளை நல்லவிதமாக செய்வீர்கள். கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். இனி எல்லாம் நல்லவிதமாக அமையும்.
டி.பாலாஜி
மண்ணிவாக்கம், சென்னை.
கேள்வி.
1.9.2011 அன்று திருமணம் நடந்து மனைவிக்கு மூளைவளர்ச்சி இல்லையென்பதால் கடந்த மார்ச்மாதம் விவாகரத்து ஆகிவிட்டது. ஏழில் சுக்கிரன் இருப்பதால் அடுத்து திருமணம் நடக்குமா என்று பயமாக இருக்கிறது. ஆகுமா?
பதில்.
சந்
லக் ராசி  ரா
கே  சுக்
செவ்  சூ பு  சனி குரு
களத்திரதோஷ ஜாதகம் என்பதால் மீனராசியில் பிறந்த உங்களுக்கு அஷ்டமச்சனி ஆரம்பிக்க ஒருமாதம் இருக்கும்போது திருமணம் நடந்து அஷ்டமச்சனியிலேயே விவாகரத்தும் ஆகியுள்ளது.
கும்பலக்னமாகி எட்டில் சனியிருந்து அதுவே ராசிக்கு ஏழாமிடமாகி, ஏழில் சுக்கிரன் அமர்ந்து ஏழாம் அதிபதி சூரியன் நீசமாகி சூரியதசையில் திருமணம் நடந்து இப்போது சந்திரதசை நடப்பு. சனி மூன்றாம் பார்வையாக செவ்வாயையும் பார்க்கிறார்.
கும்பலக்னத்திற்கு சூரியசந்திர தசைகள் யோகம் செய்ய மாட்டார்கள். அதிலும் சந்திரன் கடுமையான எதிர்மறை பலன்களை செய்வார். அவர் குடும்ப வீடான இரண்டாம் வீட்டில் இருப்பதால் குடும்பம் அமைவதை தடை செய்வார். சந்திரனை குரு பார்ப்பதால் பரிகாரங்களுக்குப் பின் திருமணம் நடக்கும்.
ஜி.செல்வம்,
பாண்டிச்சேரி.
சுக் ரா
ராசி  பு சூ
கே சந் செவ் குரு சனி
கேள்வி.
முப்பத்தி இரண்டு வயதாகியும் என் மகளுக்கு திருமணம் நடக்கவில்லை. தோஷம் உள்ளதா? எப்போது திருமணம்?
பதில்.

கும்பலக்னமாகி எட்டில் சனி, ராசிக்கு எட்டில் சுக்கிரனும் ராகுவும், ஏழுக்குடைய சூரியன் ஆறில் மறைவு என தோஷ அமைப்புள்ள ஜாதகம்தான். விருச்சிகராசிக்கு ஏழரைச்சனியும் நடக்கிறது. ஜென்மநட்சத்திரத்திற்கு முதல்நாள் ஸ்ரீ காளஹஸ்தி சென்று இரவு தங்கி மறுநாள் ருத்ராபிஷேகம் செய்யுங்கள். அடுத்த வருடம் கண்டிப்பாக திருமணம் நடக்கும். கவலை வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *