ஜோதிடர்கள் அனைத்தும் அறிந்தவர்களா…? (B-021)
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜிகைப்பேசி : 9768 99 8888பஞ்சமகா புருஷ யோகங்களைப் பற்றிய இந்த தொடர் கட்டுரைகள் பெரும்பாலான வாசகர்களைப் பாதித்திருக்கிறது என்பது எனக்குத் தினமும் வரும் தொலைபேசி அழைப்புக்களில் இருந்து தெரிகிறது. குறிப்பாக செவ்வாய், சனியைப் பற்றிய கட்டுரைகள் சரியான விதத்தில், சரியானவர்களைச் சென்றடைந்திருக்கின்றன என்பது எனக்குப் புரிகிறது.திருச்சிக்கு அருகிலிருந்து பேசிய ஜோதிடம் அறிந்த 84 வயது பெரியவர் வெங்கடேச சாஸ்திரிகளின் ஆசிர்வாதத்தை ஏற்று அவரின் பாதம் பணிகிறேன். ஆனால் அவர் எனக்கு அளித்த பட்டத்திற்கு நான் கொஞ்சமும் தகுதி இல்லாதவன்.நேர்மையான, எதையும் ஒளிக்காத, முழுமையான எழுத்து வாசிப்பவரை பரவசப்படுத்தும் என்பதற்கு என்னிடம் உரையாடிய அரசு அதிகாரி சென்னை அண்ணாநகர் மனோகரன், கும்பகோணம் மற்றும் சேலம் வாசகர்கள் நல்ல உதாரணம்.ஜோதிடம் எனும் மகா சமுத்திரத்தில் எனக்குத் தெரிந்தது வெறும் இரண்டு துளிகள் மட்டுமே. சித்தர்களின் வாக்குப்படியே ஒரு மனிதன் ஜோதிடத்தை முழுதாக அறிந்து கொள்வதற்கு அவனுக்கு இரண்டரை முழு ஆயுள் தேவைப்படும். அதாவது முன்னூறு ஆண்டுகள்...! (ஜோதிடப்படி ஒரு மனிதனின் முழு ஆயுள் 120 ஆண்டுகள்.)இதிலிருந்தே எந்த ஒரு மனிதனும் ஜோதிடத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது என்பதை அறியலாம்.ஜோதிடம் என்பது எதிர்காலத்தைக் காட்டும் ஒரு தெய்வீகக் கலை என்பதால் இதைப் பூரணமாக அறிந்தவன் ஜோதிடன் என்ற நிலையில் இருந்து மாறி கடவுளுக்கு அருகில் செல்வான்.நேற்றையும், இன்றையும், எதிர்காலத்தையும் தெரிந்தது இவைகளைப் படைத்த பரம்பொருள் மட்டுமே என்பதால் அதைத் துல்லியமாக அறிவது என்பது மனிதனால் முடியாத ஒன்று..!ஒரு மனிதனுக்கு நடக்கும் ஒரு சம்பவம் அல்லது அவன் செய்யும் ஒரு செயல் கிரகங்களால் நடத்தப் பெறுவது என்பதுதான் ஜோதிடத்தின் அடிநாதம். அதாவது கிரகங்களின் நகர்வுகளும், சில விதமான சேர்க்கைகளும்தான் பூமியில் நடக்கும் அனைத்தையும் நிகழ்த்துகின்றன என்பதே வேத