adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
விருச்சிகம்: 2023 புத்தாண்டு பலன்கள்

#astrologeradityagurujinewyearpalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023ம் வருடம் மிகவும் நல்ல பலன்களை செய்யும். கெடுபலன்கள் எதுவும் இந்த வருடம் துளியும் நடக்க வாய்ப்பில்லை. ஏனெனில் வருடத்தின் ஆரம்ப மாதங்களில் உங்கள் ராசியை யோகாதிபதி குரு பார்த்துக் கொண்டிருக்கிறார். அதோடு பாபர்களான ராகு, கேதுக்கள் 6,12 ல் இருப்பதும் விருச்சிக ராசிக்கு மிகவும் நல்ல அமைப்பு.


அர்த்தாஷ்டமச் சனி நிலையில் நான்காம் இடத்திற்கு சனி வருகிறாரே? எதுவும் கெடுதல்களைச் செய்து விடுவாரோ என்று பயப்படுபவர்களுக்கு, ஏற்கனவே ஏழரைச் சனியில் அவர் உங்களை பிழிந்து எடுத்து விட்டார் என்பதாலும், தற்போது கடன், நோய், எதிர்ப்பு எதுவும் உங்களுக்கு வராமல் தவிர்க்கின்ற கேடயமாக இந்த வருடம் முழுவதும் ஆறாம் இடத்தில் ராகு இருப்பதாலும் விருச்சிகராசிக்கு நன்மைகள் மட்டுமே இருக்கும்.

இந்த வருடம் முழுவதுமே உங்களுடைய ராசிநாதன் செவ்வாய். நல்ல நிலையிலேயே பெரும்பாலும் இருக்கிறார். ஆகவே, கடந்த காலங்களில் விருச்சிக ராசி. மிகப் பெரிய கஷ்டங்களை அனுபவித்து விட்டதாலும், எப்பொழுதும் ஒரு ராசிக்காரர் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்க மாட்டார் என்பதாலும், இந்த வருடம் முழுவதுமே. நல்ல திருப்பங்கள் உள்ள, பொருளாதார மேன்மையுடன், உங்களின் வயது, இருப்பிடம், தகுதிக்கு ஏற்றார் போல ஒவ்வொரு விருச்சிக ராசிக்காரர்களுக்கும் நன்மைகளைத் தருகின்ற வருடமாக இது இருக்கும்.

இளம் பருவத்தினருக்கு இந்த வருடம் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் இருக்கும். சிலர் இந்த ஆண்டு துவக்கத்திலேயே எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்தித்து அக்டோபர் மாதத்திற்குள்  வாழ்க்கையில் இணைவீர்கள். பருவ வயதினருக்கு. காதல் வரும். அது திருமணத்திலும் முடியும். எந்த துறையில் பயணிப்பது என்கின்ற தெளிவு இப்போது உங்களுக்கு வரும். இந்த வருடம் அறிமுகம் ஆகும் ஒருவர். வாழ்நாள் முழுக்க உறவாகவோ, நட்பாகவோ. தொடர்ந்து நீடிப்பார்.

சமூக வலைத்தளங்களில். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் நல்லவைகள் நடக்கும். குறிப்பாக. யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம், ஷேர் சாட்.மூலமாக புகழ் வரும். அதன் பின்னாலேயே வருமானங்களும் இருக்கும். இணையத்தை. விருச்சிக ராசிக்காரர்கள். மிகவும் லாவகமாக கையாண்டு வருமானம் பெறுவீர்கள்.

அனைத்து விருச்சிக ராசியினருக்கும் பொருளாதார மேன்மைகளும், பணத் தட்டுப்பாடு இல்லாத நிலைமையும் இருக்கும். வருடம் முழுவதும் கிரக நிலைகள் நன்றாக இருப்பதால் உங்களுடைய வாக்குறுதிகளை காப்பாற்ற இயலும். குறிப்பாக கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை செலுத்த முடியும். ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் நிறைவேற்றுவீர்கள்.

நீண்ட நாட்களாக திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில் சரியான நபர்கள் இல்லாமலோ இருப்பவர்களுக்கும், குடும்பத்தில் மூத்தவர்களாக பிறந்தவர்களுக்கும் அக்டோபர் மாதத்திற்குள் நல்ல செய்திகள் இருக்கும். குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.

அரசு ஊழியர்களுக்கு நன்மைகள் உண்டு. அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் நல்லபலன்கள் நடக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தேடி வரும்.

பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு தடைபடாது.

வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.

தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள்,  வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர்  போன்ற அனைத்துத் தரப்பினருக்கும்  இந்த வருடம்  நல்ல பலன்களைத் தரும்.

எல்லாவகையிலும் வருமானம் நன்றாக இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல்நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவார்கள்.

புனித யாத்திரை செல்வீர்கள். ஞானிகள், மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு காசி கயா ரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும் ஆன்மிக சுற்றுலாக்களும் உண்டாகும். தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு.

மகன் மகள்களால் இருந்து வந்த சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும். அவர்களுக்குத் தேவையான விஷயங்களை தாமதம் இன்றி செய்து கொடுக்க முடியும். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆனாலும் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதி நிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது.

பெண்களுக்கு தங்கம் மற்றும் வைரத்திலான கழுத்துநகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம் பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள்.

பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்து வந்த தடைகள் மாறி சொத்து விஷயங்களில் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். வருட ஆரம்பத்தில் ஏழு மற்றும் எட்டாமிடத்தில் செவ்வாய் இருந்தாலும் அவர் ராசிநாதன் என்பதால் கெடுதல் எதுவும் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் செவ்வாய், செவ்வாய்தான் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம்.

இதுவரை மனதில் இருந்துவந்த எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. இனம்புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இனிமேல் புது உற்சாகம் அடைவீர்கள். இதுவரை இருந்து வந்த கெட்ட விளைவுகள் இனி  இருக்காது.

இதுவரை உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீரும். புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும்.

மறைமுகமான வழிகளில் சிலருக்கு வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் மாற்றங்கள் இருக்கும். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

மொத்தத்தில் சில தடைகள் இருந்தாலும் கூட, விருச்சிக ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள், திட்டங்கள், கனவுகள் ஆகியவை நல்லபடியாக நடக்கப் போகும் வருடமாக இது இருக்கும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.