#astrologeradityagurujinewyearpalan
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு 2023-ம் வருடம் நற்பலன்கள் அதிகம் உள்ள வருடமாக இருக்கும். புது வருடம் பிறக்கும் பொழுதே உங்களுடைய ராசியை பார்க்கும் நிலையில். இயற்கை சுபரான குரு இருப்பது யோகம் தரும் ஒன்றாகும். அதனை விட மேலாக வருடத்தின் ஆரம்பத்திலேயே. சனி ஆறாம் இடத்தில் அமரப் போகிறார்.
பாபக் கிரகங்கள் மூன்று, ஆறு, பதினொன்றில் கோட்சார ரீதியில் அமர்ந்திருப்பது நன்மைகளைத் தரும் என்று நமது மூலநூல்கள் குறிப்பிடுகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் ஆறாமிட சனி அமைப்பு தற்போது கன்னிக்கு இருப்பது மேன்மைகளைத் தருகின்ற ஒரு நிலையாகும்.
கோட்சார கிரக அமைப்புகளின்படி இன்னும் மூன்று வருடங்களுக்கு கன்னி ராசிக் காரர்களுக்கு. உயர்வுகளை தரும் நிலை அமைகிறது. அடுத்து வரப் போகும் இரண்டு ஆண்டுகளும் நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமெனில், இந்த புது வருடத்திலேயே அதற்கான படிக்கட்டுகள் அமைய வேண்டும் என்பதால் இது, நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான அஸ்திவார நிலைகளை அமைத்து தருகின்ற ஆண்டாக இருக்கும்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். தொழில் முனைவோருக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.
கூட்டுத் தொழிலில் இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.
அலுவலகத்தில் புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளஉயர்வு கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார். பணியிட மனஅழுத்தம் விலகும். நான் உழைக்கிறேன், இன்னொருவர் பெயர் எடுத்துச் செல்கிறார் என்பது போன்ற குறைகள் அகலும்.
குடும்ப பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். குடும்ப வழக்குகளில். சமாதானம் ஆவீர்கள். குழந்தைகளுக்காக. விட்டுக் கொடுத்துப் போவீர்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.
இதுவரை மனதில் இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். சரியான வருமானம் இன்றி பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும்.
ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும். சிலருக்கு காதல் வரும். அது திருமணத்திலும் முடியும்.
சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி சுமுக நிலைமை பிறக்கும். கலைஞர்கள் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறுவீர்கள். இது வரை வராமல் இருந்த சம்பளப் பாக்கி இப்போது வரும். தொழிலாளர்களுக்கு நிர்வாகத்துடன் இருந்து வந்த கசப்புகள் நீங்கி புது வழி பிறக்கும். பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற. சமூக வலைத்தளங்களில் கன்னி ராசிக்காரர்கள் பிரபலம் ஆவீர்கள். இணையத்தின் வழியாக உங்களுக்கு வருமானமும் வரும்.
இழுபறியில் இருந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் சாதகமாக முடிவுக்கு வரும். வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. பெற்றோரால் விரயங்கள் இருக்கக் கூடும்.
பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு கடன் வாங்கியோ, லோன் போட்டோ, சொந்த வீடு அமையும். நகரங்களில் உள்ளவர்கள் பிளாட் வாங்குவீர்கள். நல்ல வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் நடக்கும். இதுவரை இருந்ததைவிட நல்லவீட்டிற்கு இப்போது மாறுவீர்கள்.
விவசாயிகளுக்கு இது மிகவும் நல்ல வருடம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு இந்த வருடம் லாபம் வரும். கலைஞர்கள் பொதுவாழ்வில் உள்ளவர்கள் மாணவர்கள் உள்ளிட்ட சகலருக்கும் நன்மை தரும் வருடம் இது.
உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் மிகப்பெரிய லாபம் அடைவீர்கள். பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கும் விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.
குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும்.
பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும், கௌரவமும் கிடைக்கும். உங்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற பலன்கள் இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.
எல்லாம் சரி….
இதுவரை சொன்னது எல்லாம் நல்லவைகளாகவே இருக்கிறதே. அப்படியானால் கன்னி ராசிக்காரர்கள் இந்த வருடத்திலேயே. வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் அடைந்து விடுவார்கள் போலிருக்கிறதே? சாதகமற்ற தன்மைகள் எதுவும் நடக்காதா? அந்த அளவுக்கு எல்லாம் நல்லபடியாகவே நடந்து விடுமா? என்று கேட்டால் மிக முக்கியமாக கன்னி ராசிக்காரர்களுக்கு ஒரு சாதகமற்ற பலனாக, முதல் நான்கு மாதங்களுக்கு எந்த ஒரு நிலையிலும் பேராசைப் படாதீர்கள். என்பதைச் சொல்லலாம்.
அதிலும் குறிப்பாக. பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவை ஏப்ரல் மாதம் வரை கன்னிக்கு கடுமையான இழப்புகளை தரும். ஆகவே. முறையற்ற வழிகள் அல்லது எதிர்பாராத அதிர்ஷ்டம் இவைகளை இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கு நீங்கள் நம்ப வேண்டாம். அது போலவே வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற சில நிலைகளும். முதல் நான்கு மாதங்களுக்கு கை கொடுக்காது.
ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலமாக தற்போது உங்களுக்கு சாதகமற்ற நிலையில் எட்டாம் இடத்தில் இருக்கும். ராகு, குருவின் இணைவால் சுபத்துவத்தை அடைவார் என்பதால் ஆறு, எட்டு ஆகிய இரண்டு. பாப வீடுகளும் நல்ல நிலையில் அமைந்து, அதன் பிறகு கன்னி ராசிக்காரர்களுக்கு. சில எதிர்பாராத அதிர்ஷ்ட நிலைகள் செயல்படத் துவங்கும்.
ஆகவே, முதல் நான்கு மாதங்களுக்கு கன்னி ராசியினருக்கு, வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற அமைப்புகள் கை கொடுக்காது. பங்குச் சந்தையில் கவனமாக இருக்க வேண்டும். பங்குச் சந்தையில் நஷ்டங்கள் வரும். நேர்மையற்ற வழிகளில். வரும் பணத்தை. எதிர்பார்க்க வேண்டாம். இதுதவிர்த்து, மற்ற விஷயங்களில். கன்னியின் முயற்சிகளுக்கு ஏற்ப. முழுவதுமான பலன்கள் கண்டிப்பாக இருக்கும்.
2023 உங்களுக்கு நல்ல ஆண்டுதான்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.