adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
சிம்மம்: 2022 டிசம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

சிம்மம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் சூரியனும், யோகாதிபதி செவ்வாயும் அதிர்ஷ்ட அமைப்புகளில் வலுவான நிலையில் இருப்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் யோகம் தருவதாகவே அமையும். குறிப்பாக மாதம் முழுவதும் ஐந்தில் புதன், சுக்கிரன் இணைவும், கேது மூன்றாம் இடத்தில் சுபத்துவமாக இருப்பதும் நன்மைகளைத் தரும். சிலருக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து லாபமும், வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் விருப்பத்திற்கேற்ப சம்பவங்கள் நடப்பதும் இருக்கும்.


ஐந்தாமிடத்தில் இணைந்து லாப ஸ்தானத்தை பார்க்கும் சுக்கிரனும், புதனும் பின்னடைவுகளை தடுத்து நிறுத்தி வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்களை தரும் என்பதால் டிசம்பர் மாதம் சிம்மத்திற்கு தொழில் விஷயங்களில் நல்லவைகளை தரும் மாதமாக இருக்கும். கடன் தொல்லைகளையும், வருமானக் குறைவையும், தொழில் சிக்கல்களையும் சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அது நிவர்த்திக்கப் படும். இளைஞர்களின் மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பணவரவும், உங்களால் வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும். நீண்ட நாட்களாக புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு கருவுறுதல் இருக்கும்.

வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ஓரளவாவது படிப்பில் அக்கறை இருக்கும். கலைஞர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். நீண்டநாளாக தரிசிக்க நினைத்திருந்த புனிதத்தலங்களை இப்போது தரிசிக்க முடியும். மகான்களின் ஆசி கிடைக்கும். சித்தர்கள் அடங்கிய ஜீவசமாதிக்கு சென்று வர முடியும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

5,6,7,11,12,13,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 1-ம் தேதி இரவு 11.45 மணி முதல் 4-ம் தேதி காலை 6.16 வரையும், மாத பிற்பகுதியில் 29-ம் தேதி காலை 5.55 முதல் 31-ம் தேதி காலை 11.47 வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இந்த தினங்களில் அறிமுகமாகும் ஒருவரின் மூலம் பின்நாட்களில் சிக்கல்கள் வரும் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.  

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.