adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மகரம்: 2022 டிசம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு ஒரே வார்த்தையில் இந்த மாத பலனை சொல்லி விடலாம். எல்லாம் தீரப்போகிறது. மன அழுத்தம் விலகப்போகிறது. கலக்கம் போகப் போகிறது. ஆரோக்கியம் கிடைக்கப் போகிறது. வீடு நிம்மதியாக இருக்கப் போகிறது. வேலை நல்லபடியாக அமைய போகிறது. தொழில் கை கொடுக்கப் போகிறது. காதல் மட்டுமே வாழ்க்கை என்று இருந்தவர்களுக்கு அதுவே வாழ்க்கையாகவும் ஆகப் போகிறது. மகரத்தினரின் வயதிற்கு ஏற்ற வகையில் அனைத்து நல்லவைகளும் நடக்கப் போகின்ற மாதமாக டிசம்பர் இருக்கும். கடந்த மூன்று வருடங்களாகவே உறவுகள், நட்புகளில் விரிசல்கள் ஏற்பட்டு வாழ்க்கையை புரிந்து கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு விடிவு வரப் போகிறது. பணத்தால் தொல்லைகளை அனுபவித்தவர்களுக்கு இனி பணம் கிடைக்கும்.


இதுவரை இருந்த வீண் செலவுகள் இனி மட்டுப்பட்டு வருகின்ற வருமானத்தை இனி ஓரளவிற்கு சேமிக்கவும் முடியும். நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் யாவும் இனிமேல் நடக்க ஆரம்பிக்கும். வேலை இல்லாதவர்கள் மனதிற்கு பிடித்த நல்லவேலை கிடைக்கப் பெறுவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. செட்டில் ஆகாத நடுத்தர வயது மகர ராசிக்காரர்கள் இந்த மாதம் முதல் படிப்படியாக நன்மைகள் நடக்க ஆரம்பித்து வாழ்க்கையில் நிலை கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரால் லாபங்கள் இருக்கும். நீங்கள் கேட்கும் பொருட்களை கணவரோ, மனைவியோ வாங்கி தருவார்கள்.

வழக்கு, கடன்தொல்லைகள், கடுமையான மனஅழுத்தம், குடும்பப் பிரச்சினைகள், குழந்தைகளால் வருத்தங்கள் போன்றவைகளில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் மகரத்தினருக்கு ஆறுதல் தரும் மாதம் இது. பெண்களுக்கு குறைகள் ஏதும் இல்லை. அம்மா வழி ஆதரவும் ஆசிகளும் உண்டு. பிள்ளைகளால் நல்ல விஷயங்களும், தொலைதூரங்களில் இருக்கும் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளும் கிடைக்கும். எல்லாம் சரி ஆனால் கடந்த மூன்று வருடங்களாக நீங்கள் பட்ட அவஸ்தைகள் சூ.. மந்திர காளி என்று இந்த மாதத்திலேயே முடிந்துவிடும் என்று நினைக்காதீர்கள். படிப்படியாக நீங்கள் இனிமேல் நன்றாக இருக்கப் போகின்ற அனைத்தும் இனி ஆரம்பிக்கும். பிறக்க இருக்கும் புத்தாண்டு உங்களுக்கு நல்லவைகளை மட்டுமே தரும்.

3,5,7,10,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 14 ம் தேதி அதிகாலை 2:32 முதல் 16ம் தேதி மதியம் 2:04 வரை சந்திராஷ்டம தினம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.