adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
துலாம்: 2022 டிசம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

துலாம்:

உங்களில் 50 வயது தாண்டிய துலாம் ராசிக்காரர்களுக்கு கடன், நோய், எதிர்ப்புகள் பற்றிய கவலைகள் இருக்கக் கூடிய மாதம் இது. சிலருக்கு வேலை மாற்றங்கள் இருக்கும். அது இப்போது கசப்பானதாக தோன்றினாலும் கூட, அடுத்த வருடம் நீங்கள் நிலை கொள்ள வேண்டிய சில இடங்களுக்கு இப்பொழுது உங்களை நகர்த்தக்கூடிய நல்ல மாற்றங்கள்தான் நடக்கும். துலாம் ராசிக்காரர்கள் எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய மாதம் இது. சிலருக்கு தூர இடங்களுக்கான பயணங்கள் உண்டு, அவைகளால் உடனே லாபம் இல்லாதது போல தோன்றினாலும் கூட அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நீங்கள் நன்றாக இருக்க வேண்டிய சில நிலைகளை அது செய்யும்.


90 களில் பிறந்த இளைய பருவத்தினருக்கு நல்ல மாற்றம் இப்போது உண்டு.  2022ம் வருடம் அப்படி ஒன்றும் நல்லவைகளை செய்யவில்லை என்ற எண்ணத்தில் இருக்கக்கூடிய துலாம் ராசிக்காரர்களுக்கும் மாற்றங்கள் உண்டு. பிடிக்காத வேலையைச் செய்து கொண்டிருப்பவர்களுக்கு திறமைக்கேற்ற பிடித்தமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சமீபத்தில் இன்டர்வியூ சென்று வந்தவர்கள் நல்ல பதிலை அடைவீர்கள். பிள்ளைகளுக்கும், பெற்றவர்களுக்கும் தலைமுறை இடைவெளி வரும். பெரியவர்கள்தான் விட்டுக் கொடுத்து போக வேண்டி வரும். நீங்கள் உங்கள் தகப்பனாரிடம் வாழ்ந்த காலம் வேறு. தற்போதைய இளைஞர்களின் காலம் வேறு என்பதை உணர்ந்து கொண்டால் வயதான துலாம் ராசிக்காரர்கள் பிரச்னையை சுலபமாக சமாளித்து விடுவீர்கள்

செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். சகோதர சகோதரிகளுக்கு நீங்கள்தான் உதவி செய்யும்படி இருக்கும். என்னதான் அவர்களுக்கு செய்தாலும் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று  சொல்வதையும் கேட்க வேண்டியிருக்கும். கிரெடிட் கார்டு பேமண்ட் செலுத்த முடியாத நிலை உங்களில் சிலருக்கு உண்டு. அதற்காக கடன் வாங்குவீர்கள். அதிலும் சிக்கல்கள் வரும். வியாபாரிகளுக்கு தொழில் நன்றாக இருப்பது போல தோன்றினாலும் லாபம் இருக்கும். ஆரம்பம் கலக்கத்துடன் ஆரம்பித்தாலும் நிறைவு நன்றாகவே இருக்கும் கவலை வேண்டாம்.

1,2,5,6,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ம் தேதி மதியம் 3:30 முதல்  ஒன்பதாம் தேதி அதிகாலை 1:44 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் சொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.