adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
தனுசு: 2022 டிசம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

தனுசு:

தனுசு ராசிக்காரர்களின் ஏமாற்றங்களுக்கு தீர்வு வரப்போகிறது. கடந்த சில வாரங்களாகவே உங்களைச் சுற்றி நடந்து கொண்டிருக்கின்ற நல்ல மாற்றங்களை நீங்கள் அடையாளம் தெரியக்கூடிய மாதம் இது. அடுத்த வருடத்திலிருந்து உங்களை இருள்தன்மையில் வைத்திருந்த ஏழரைச்சனி முடியப்போவதால் வயதிற்கு ஏற்ற வகையில் வேலை, தொழில், வியாபாரம், சொந்த வாழ்க்கை போன்றவைகளில் உங்களுக்கு என்ன தேவையோ அது நடக்க இருக்கின்ற நல்ல மாதமாக டிசம்பர் அமையும். அனைத்து தரப்பு தனுசு ராசிக்காரர்களும் இனிமேல் கவலைகள் ஒழியப் போகிறீர்கள். உங்கள் முயற்சிகள் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதற்கேற்ற பலன்கள் அமையும் நல்ல மாதம் இது.


இதுவரை வேலை, தொழில் விஷயங்களில் செட்டில் ஆகாமல் இருப்பவர்கள் ஆறு மாதங்களில் நன்றாக இருக்கப் போவதற்கான அச்சாரம் நடக்கும். கொடுக்கும் வாக்குறுதியை இனிமேல் நல்லபடியாக நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியும். அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும், பேச்சினால் தொழில் செய்ய கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கும் நல்ல மாற்றங்கள் நடக்கக் கூடிய கால கட்டம் இது. அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இந்த மாதம் கூடுதல் நன்மைகளைத் தரும். அதிகாரப்பதவிகள் தேடி வரும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரிகள் ஏற்றம் பெறுவார்கள். பணவரவு நன்றாக இருக்கும். வியாபாரம் கண்டிப்பாக குறையாது. சுயதொழில், வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வாங்கும் கடன் முதலீடாகவோ அல்லது  முன்னேற்றத்திற்கு உபயோகமாகவோ இருக்கும்.

2,3,8,9,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 11ம் தேதி மதியம் 1:51 முதல் 14ம் தேதி அதிகாலை 2:32 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.