adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
தந்தை குடிப்பழக்கத்தை விடுவாரா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

சோ. சுரேஷ், கொடுமுடி.  

கேள்வி.  

எனது தந்தையார் சிறுவயதிலிருந்தே எந்த விதப் பொருளாதாரப் பின்னணியும் இன்றி, தனது கடின உழைப்பை மட்டும் மூலதனமாக கொண்டு உழைத்து, இன்று ஒரு பெரிய தேங்காய் வியாபாரியாக உயர்ந்துள்ளார். 30 வருடங்களாக தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். சமீபகாலத்தில் தொழில் முடக்கமாகி கடன் தொல்லையால் மதுபோதைக்கு அடிமையாகி விட்டார். என் தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்துவாரா? அவருக்கு இப்போது சிம்மலக்னத்திற்கு வரக்கூடாது என்று நீங்கள் சொல்லும் சனிதசை நடந்து கொண்டிருக்கிறது.  இந்த சனிதசை எப்படி இருக்கும்? இந்த தசையில் தொழிலை தொழிலை விரிவுபடுத்தலாமா? தேங்காயில் புதிய முயற்சியாக, தேங்காய் எண்ணெய், தேங்காய் பருப்பு, தேங்காய் ஏற்றுமதி செய்வதிலும், சரக்கு மோட்டார் வாகனம் வாங்கி வாடகைக்கு விடுவதிலும் அதிக ஆர்வமாக உள்ளார்.  மேற்கண்டவைகளை துணிந்து செய்யலாமா? சனி தசையில் என் தந்தை கோடிகள் சம்பாதிக்கும் அமைப்பு உள்ளதா? தனது இரு மகன்களால் என் அப்பாவிற்கு பெருமை உண்டா? இந்தக் கடிதத்தை எழுதும் நான் சூரியவம்சம் சரத்குமார் போல் தந்தைக்கு பிடிக்காத இளையமகன். நீங்கள் சொல்வது போல எனது ஜாதகத்தில் சூரியன் சனி இணைவு இருக்கிறது. இந்தக் கடிதம் உங்கள் கடைக்கண் பார்வைக்கு வர கடவுளை வேண்டுகிறேன். எங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு வழிகாட்டுங்கள்.

பதில்.  

(சிம்ம லக்னம், ரிஷப ராசி, 1ல் குரு, 2ல் கேது, 8ல் ராகு, 9ல் சனி, 10ல் சந், 11ல் சூரி, புத, சுக், செவ். 23-6-1968, 10:30 காலை, கொடுமுடி.)

ஒரு ஜாதகத்தில் எந்தக் கிரகம் அதிக சுபத்துவமாக இருக்கிறதோ அந்தக் கிரகத்தின் எண்ணங்களும், தொழில்களும் அமையும் என்கின்ற என்னுடைய சுபத்துவ- பாபத்துவ-சூட்சுமவலு கோட்பாட்டின் அடிப்படையில் உங்கள் தந்தையின் ஜாதகத்தில் சனி, குருவின் பார்வையில் அதிக சுபத்துவமாகி இருக்கின்ற காரணத்தால், உங்களுடைய தந்தை சனியின் காரகத்துவமான தேங்காய் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்.

ஆயினும் ஒரு கிரகம் சுபத்துவமாகி  அதனுடைய காரக தொழிலைக் கொடுத்தாலும் கூட, அக் கிரகம் யோகராக, அதனுடைய தசை யோக தசையாக இருக்குமாயின் மட்டுமே நல்லபடியாக இருக்கும் தசையில் ஒரு கிரகம் தன்னுடைய ஆதிக்கத்தை மட்டுமே தரும் என்பதன் அடிப்படையில் தற்போது 2020 முதல் நடந்து கொண்டிருக்கின்ற சனிதசை உங்களுடைய தந்தைக்கு மிகப்பெரிய யோக பலன்களை செய்யாது.  

அதிலும் குறிப்பாக சுயபுத்தி காலமான 2023 மார்ச் மாதம் வரை நல்ல பலன்களை சொல்வதற்கு இல்லை சனி தசை புக்தி போன்றவைகள் நடந்தாலே அல்லது ஏழரை அஷ்டம சனி அமைப்புகள் நடந்தாலே ஒருவர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் என்பது ஜோதிட விதி.  

2017 ஆம் ஆண்டு முதலே உங்களுடைய தந்தைக்கு தொழில் ரீதியாக நல்லவர்கள் இல்லை சனியின் முதல் ஒன்பது வருடங்களும் சரியாக இருக்காது எனவே இப்பொழுது தொழிலை விரிவுபடுத்த முயற்சிகள் சரியாக வராது 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு சனி தசை புதன் புக்தியில் ஓரளவு கடன்களை அடைக்க முடியும் அடைக்க முடியும்

அதைப்போலவே தந்தையின் குடிப் பழக்கமும் கொஞ்சம் குறையும் அதே நேரத்தில் முற்றிலுமாக அவர் குடிப்பழக்கத்தை விடமாட்டார் நீங்கள் சொல்லுகின்ற மோட்டார் வாகனம் என்பதும் சரக்கு மோட்டார் வாகனம் என்பதும் சனியின் இன்னொரு தொழில் என்பதால் சனி சார்ந்த அத்தனை தொழில்களிலும் அவருக்கு ஈடுபாடு இருக்கும்

ஆயினும் தொழில் முயற்சிகள் இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிறகு நல்ல பலனைத் தரும் மகன்களால் ஐந்தாம் அதிபதி லக்னத்தில் பலமாகி தன்னுடைய ஐந்தாம் வீட்டையே பார்ப்பதால் குரு சுக்கிர தொடர்புகள் ஐந்தாம் வீட்டிற்கு இருப்பதாலும் மகன்களால் அவருக்கு பெருமை உண்டு தான் அதாவது மகன்கள் இவரை விட நன்றாக இருப்பீர்கள் என்பது இவரது ஜாதகம் மூலம் தெரிய வருகிறது அதே நேரத்தில் உங்கள் ஜாதகத்தில் சூரியனும் சனியும் சேர்ந்து இருந்து பாவமாக இருக்குமாயின் தந்தையின் உறவு குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்காது 2023 ஏப்ரலுக்கு பிறகு குடும்பத்தில் பெரிய பிரச்சினைகள் இருக்காது வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 


தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.


குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


மாலை மலர்   நாளிதழில் குருஜி அவர்களின் பதில்களை பெற கேள்வியை அனுப்ப வேண்டிய தபால் முகவரி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008


இமெயிலில் கேள்விகளை அனுப்ப :-EMAIL ID : gurujianswers@gmail.com