ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
வசந்தா சாம், கொழும்பு-6, இலங்கை.
கேள்வி.
குருஜி அவர்களுக்கு கோடானுகோடி வணக்கங்கள். நான் உங்களின் ரசிகை. இலங்கையில் வசிக்கிறேன். என் இளமைப் பருவம் ஓரளவு நன்றாகவே இருந்தது. ஒரு வங்கியில் 20 வருடம் பணிபுரிந்தேன். வங்கியில் மேனேஜராக இருந்த நிலையில் பிள்ளைகளை பார்த்துக் கொள்வதற்காக வேலையை ரிசைன் செய்துவிட்டு, வைத்திருந்த சேமிப்பினை ஒரு பைனான்ஸ் கம்பெனியில் முதலீடு செய்தேன். 2009-ல் அந்த கம்பெனி நஷ்டமடைந்து என் முழு பணத்தையும் இழந்தேன். அதிலிருந்து இன்றுவரை கஷ்டங்களையும், அவமானங்களையும் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். பிள்ளைகளின் படிப்புக்காக நிறைய கடன் எடுத்துள்ளோம். என்னால் திரும்பவும் தலை தூக்க முடியுமா? கடன்கள் எப்போது அடைபடும்? இந்தப் பிறவியில் எனக்கு சொந்த வீட்டில் வாழ அதிர்ஷ்டம் உள்ளதா? பிள்ளைகள் எப்படி இருப்பார்கள்?
பதில் .
(ரிஷப லக்னம், கும்ப ராசி. 3ல் செவ், ராகு, 9ல் சுக், சனி, கேது, 10ல் சந், 11-ல் சூரி, புத, குரு. 23-3-1963, பகல் 11-25, கொழும்பு)
என்னுடைய சுபத்துவ, பாபத்துவ, சூட்சுமவலு கோட்பாட்டின் அடிப்படையில், தலைமை அமைப்பைக் குறிக்கக்கூடிய சூரியன், குருவுடன் இணைந்து சுபத்துவமாக இருக்கின்ற நிலைமையில், ராசிக்கு இரண்டு பத்தாமிடங்களோடு குரு தொடர்பு கொண்டதால் வங்கித் துறையில் 20 வருடங்கள் பணி புரிந்திருக்கிறீர்கள்.
சனி தசையில், பாபத்துவம் பெற்ற செவ்வாய் புக்தியில் இருக்கும் பணத்தை தவறான கணக்கீட்டில் இழந்திருக்கிறீர்கள். இந்த நிலை வருகின்ற 2024 வரை நீடிக்கும். 2025 ஆம் ஆண்டு முதல் கடன்களை அடைக்க முடியும். தற்போது நடக்கின்ற தசாநாதன் புதன் நீச்சமாக இருந்தாலும் கூட குருவோடு சேர்ந்திருப்பதால் பெரிய கெடுதல்கள் எதையும் தந்து விடாது. அதே நேரத்தில் கொடுக்கின்ற அமைப்பில் புதன் இல்லை.
2026 -ம் ஆண்டு சுக்கிரனின் பார்வையைப் பெற்ற ராகு புக்தியில் உங்களுக்கு சொந்த வீடு கண்டிப்பாக அமையும். ஐந்தாம் அதிபதி புதன் நீச்சம் ஆனாலும், சுபத்துவமாகி புத்திர காரகன் குருவும் வலுப்பெற்று இருப்பதால் உங்களின் பிள்ளைகள் நிச்சயமாக நன்றாக இருப்பார்கள். கவலை வேண்டாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
மாலை மலர் நாளிதழில் குருஜி அவர்களின் பதில்களை பெற கேள்வியை அனுப்ப வேண்டிய தபால் முகவரி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008
இமெயிலில் கேள்விகளை அனுப்ப :-EMAIL ID : gurujianswers@gmail.com