adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மூன்று கிரகம் உச்சமாகியும் நன்றாக இல்லை….

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

எம். வேணு, சிங்கப்பெருமாள் கோவில்

கேள்வி:

எனது ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் உச்சம், இரண்டு கிரகம் ஆட்சி பெற்றும் மிகச் சாதாரணமாகவே வாழ்க்கை இருக்கிறது. நடைபெறும் அனைத்தும் எனக்கு தாமதமாகவே நடக்கிறது. 32 வயதில் திருமணமாகி ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தோம். பின்பு ஒன்று சேர்ந்து கடந்த ஒன்றரை

வருடகாலமாக தனிக்குடித்தனம் சென்று முறையான தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம்.

2018 மற்றும் 2019 இறுதியில் இரண்டு முறை என் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது. மருத்துவரீதியாக பல பரிசோதனைகள் செய்தும் குறை ஏதும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் மழலை எப்போது எங்களுக்கு மலரும்? உங்களுடைய சுபத்துவ, சூட்சுமவலு தியரிப்படி சனிபகவான் எனது ஜாதகத்தில் சுபத்தன்மை பெற்று இருப்பதால் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் 17 ஆண்டுகளாக டெக்னீசியன் எனும் அடிமை தொழில் செய்து வருகிறேன். பொருளாதார உயர்வு எப்போது வரும்? சுய தொழில் செய்யும் அமைப்பு இருக்கிறதா?

பதில்:

(கணவன் 7-4- 1984 அதிகாலை 1-51 குடியாத்தம், மனைவி 16-8-1991 காலை 10-31 மன்னார்குடி)

கிரகங்கள் உச்சம் பெற்றாலே நன்மையைச் செய்து விடும் என்றெல்லாம் ஜோதிடத்தில்

சொல்லப்படவில்லை. அவரவர்களுடைய ஞானத்திற்கு ஏற்பத்தான் ஜோதிடம் பிடிபடும்.

நீங்கள் தவறாகப் புரிந்து கொள்வதற்கு ஜோதிடம் பொறுப்பேற்காது. உங்களுடைய ஜாதகப்படி சுக்கிரன், வளர்பிறை சந்திரன், சனி ஆகிய மூன்று கிரகங்கள் உச்சம் அடைந்திருக்கின்றன. எந்த ஒரு ஜாதகத்திலும் சனி, செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களும் உச்சநிலையை அடைய கூடாது என்பதைத்தான் அடிக்கடி எழுதி வருகிறேன்.

தற்போது செவ்வாய் உச்ச நிலையை அடைந்து ஆட்சி பெற்ற சனியுடன் இணைந்திருக்கும் கொடூர அமைப்பால்தான் உலகம் முழுவதும் கொரோனா எனப்படும் கொடூரத்தைச் சந்தித்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது. உங்களுக்கு மகர லக்னமாகி லக்னாதிபதி சனி பத்தாம் இடத்தில் உச்சம் அடைந்து தனிப் புதனின் பார்வையைப் பெற்று குறைந்த அளவு சுபத்துவத்தை அடைந்திருக்கிறார். இந்த அமைப்பினால் நீங்கள் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் சனியின் காரகத்துவமான அடிமை வேலையினை 17 ஆண்டுகளாக செய்து வருகிறீர்கள். இதே சனி குரு, சுக்கிரன் ஆகிய மிகப்பெரிய சுபர்களின் தொடர்பை அடைந்து அதிக சுபத்துவத்தை அடைந்திருந்தால் இதே கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை அதிபராகவோ அல்லது விற்பனை உரிமையாளராக இருந்திருப்பீர்கள்.

சனி என்பது மிகவும் நிதானமாக பலனை தரக்கூடிய ஒரு மந்த கிரகம் என்பதால் சனியின் லக்னங்கள் மற்றும் சனி வலுப்பெற்று பிறந்தவர்களுக்கு அனைத்து விஷயங்களும் நிதானமாகவே நடக்கும், அது உங்கள் விஷயத்தில் மாறுவதற்கு வாய்ப்பில்லை. என்ன இருந்தாலும் ஜாதகத்தில் ராஜ யோகாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று வளர்பிறைச் சந்திரன் நல்ல நிலையில் இருப்பதால் உங்களுடைய பொருளாதார நிலைமை கடும் சிக்கலுக்கு உள்ளாகாமல் வாழ்நாள் முழுக்க அடிப்படைத் தேவைகளுக்கு பஞ்சமின்றி நன்றாகவே இருப்பீர்கள்.

பாபக் கிரகமான சனி பத்தாம் இடத்தில் உச்சம் பெற்று அவருக்கு வீடு கொடுத்த ராஜயோகாதிபதி மூன்றில் வலுப்பெற்று இருப்பது ஒரு நல்ல அமைப்பு.

அதைப்போலவே ஓரளவு சுபத்துவம் பெற்ற சனியின் தசையும் இன்னும் சில வருடங்களுக்கு பிறகு வருவது உங்களை வாழ்வின் பிற்பகுதியில் யோகநிலையில் இருக்கவே வைக்கும். மகர லக்னத்திற்கு சூரிய, சந்திர புக்திகள் யோகம் தராது என்பதன்படி மேற்கண்ட புக்திகள் நடந்த காலகட்டங்களில் உங்களுக்கு நிம்மதியற்ற சூழல்கள் குடும்பத்தில்

இருந்தன. இனி அது இருக்கப்போவது இல்லை. கணவன் மனைவி இருவரின் ஜாதகப்படி 2022ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே கையில் குழந்தை இருக்கும். குரு தசை நடப்பதால் குருவின் உயிர் காரகத்துவமான குழந்தை பிறந்த பிறகு உங்களுடைய வாழ்க்கை

மிகவும் மேம்பட்ட நிலையில் அமையும். வாழ்த்துக்கள்.

(14.04.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.